வியாழன், 2 டிசம்பர், 2010

13.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.


பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 

பகுதி: 11. ஈரமண்பட்டி, ஈரத்துணிபட்டி, சூரிய ஒளிக் குளியல், எண்ணெய் கொப்பளித்தல் பற்றிய விளக்கங்களும், செய்முறைகளும். 

பகுதி 12 : ஸ்பேஸ் லா (வெளி விதி) மற்றும் தினசரி உணவில் தவிர்க்க/குறைக்க வேண்டிய சங்கதிகள்.


ஆரோக்கியம் ஆனந்தம் தொடர்கிறது......

22. சாறு உண்ணா நோன்பு (ஜுஸ்பாஸ்டிங்)

வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு உண்ணா நோன்பு இருக்கலாம்.  இதில் பழச்சாறுகள்  மட்டுமே அருந்த வேண்டும்.  
 
நன்மைகள்:   

(1) உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவு.  எனவே உடலின் ஆற்றல் முழுவதும்  கழிவுகள் வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.
 
(2)உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும். 
 
(3)சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் (திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழம் போன்றவை) அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால் உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது.

(4) மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர். 

23. சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை
    
(1) திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை.
    
(2) மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது  உகந்தது அல்ல.  அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே (நார்ச்சத்துடன்) உண்ண வேண்டும்.
    
(3) சாறு உண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியம் ஆனந்தம் தொடரும்....
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.


புதன், 1 டிசம்பர், 2010

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


ஏழு நாட்கள் நடைபெறும் 
யோகா இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம். 

இடம்: திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள கருங்குளம் என்னும் ஊரில் நடை பெறுகிறது. 


நாள்: 05-12-2010 to 11-12-2010 

வழங்குபவர்கள்:இயற்கை நல வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், 

முன் பதிவுக்கு தொடர்பு கொள்ள: திரு. மூ.ஆனையப்பன் (அமைப்பாளர்) 
9944042986, 9380873465 

நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.

----------------------------------------------------------------------------------

இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 


இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் 
விழிப்புணர்வு மூன்று நாள் முகாம். 


இடம்: இயற்கை வாழ்வு நிலையம் 
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்) 
குலசேகரன் பட்டினம் 
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். 


நாள்: 17-12-2010 to 19-12-2010 

வழங்குபவர்கள்:
இயற்கை நல வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், 

முன் பதிவுக்கு தொடர்பு கொள்ள: திரு. மூ.ஆனையப்பன் (அமைப்பாளர்) 
9944042986, 9380873465 

நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.

---

ஞாயிறு, 28 நவம்பர், 2010

12.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.


பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 

பகுதி: 11. ஈரமண்பட்டி, ஈரத்துணிபட்டி, சூரிய ஒளிக் குளியல், எண்ணெய் கொப்பளித்தல் பற்றிய விளக்கங்களும், செய்முறைகளும். 

ஆரோக்கியம் ஆனந்தம் தொடருகிறது....

20. ஸ்பேஸ் லா(வெளி விதி)

வெளி விதி என்ன சொல்கிறதென்றால் மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த இயற்கை உணவு மிகுதியாக கிடைக்கிறதோ அதை  உண்டு வந்தாலே போதும்.  வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை.  வேறு எந்த ஜீவராசிகளும் உணவை  இறக்குமதி செய்து உண்பதில்லை. அவைகள் அவை வசிக்கும் பகுதியில் என்ன உணவு கிடைக்கிறதோ அதையே உண்டு வாழ்கின்றன.  எதில்  புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்பு, விட்டமின்கள், உப்புகள் இருக்கிறது என பார்த்து உண்பதுல்லை.  ஆனால் அவை தங்களின் வாழ்நாளை  ஆரோக்கியமாகவே கழிக்கிறது.  இந்தியாவில் மிகவும் எளிதாக கிடைக்கும் தேங்காய், பேரிச்சை, வாழைப்பழம் இவற்றிலேயே வேண்டிய சத்துக்கள்  அனைத்து உள்ளன.  இவை வருடம் முழுவதும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.  மேலும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும்  உண்ணலாம்.  (மாம்பழம், சப்போட்டா, தர்பூஸ் போன்றவை). விலை அதிகமான பழங்களை வாங்க இயலாதவர்கள் தேங்காய்ப் பால்,  காய்கறிகளின் ஜுஸ்கள், கீரை(புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, பாலாக்கு) ஜுஸ்கள் பருகலாம்.  டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்,  புரதச்சத்து கொண்ட உணவுகள், ஆரோக்கிய பானங்கள் தேவையில்லை.  இயற்கை உணவு உண்டால் போதிய பலம் கிடைக்குமா என்ற  சந்தேகம் கொண்டவர்கள் வெறும் இலை தழைகளை மட்டுமே உண்டு வாழும் யானையையும் அது கொண்டுள்ள அபார வலிமையையும் நினைத்துப் பார்க்கவேண்டும். யானை வேற்று ஜீவராசிகளின் பாலையும் அருந்துவதில்லை. முட்டையையும் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை.

21. சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு

குறைக்க வேண்டியது - மாற்று உணவு
(1) சர்க்கரை குறைக்கவும். மாற்று:வெல்லம், கரும்பு சர்க்கரை கருப்பட்டி
(2) பொடி உப்பு 
குறைக்கவும். மாற்று:
 கல் உப்பு

(3)கரையாத கொழுப்பு குறைக்கவும். மாற்று: கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய்

(4) மிளகாய் குறைக்கவும். மாற்று: மிளகு
(5) புளி குறைக்கவும். மாற்று:எலுமிச்சை
(6) கடுகு குறைக்கவும். மாற்று:சீரகம்
(7) காபி,டீ   குறைக்கவும். மாற்று: லெமன் டீ, ப்ளாக் டீ, சுக்கு காப்பி, வரக்காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி குறைக்கவும். மாற்று: அவல், சிகப்பரிசி


இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம் தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.  இவை (முற்றிலும்) இயற்கை  உணவு அல்ல.  ஆனால் இவற்றினால் சிறிது தீமை குறைவு.

ஆரோக்கியம் ஆனந்தம் தொடரும்....
நன்றி: கோவை ரதி லோகநாதன்.

செவ்வாய், 23 நவம்பர், 2010

இயற்கைப் பால்


பால் மற்றும் பால் பொருட்களால் மனித குலத்துக்கு தீங்குகள் தான் அதிகம். நன்மைகள் குறைவே. பால் கபத்தைப் பெருக்கும். இது சளியை அதிகப் படுத்தும். நம் பெண்மணிகள் குழந்தைகளுக்கு முலைப்பால் மட்டுமே தந்த பின்னர், இரண்டு வயதுக்கு மேல் பாலையோ, பால் பொருட்களையோ குழந்தைகளுக்கு தருவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாலில் இருக்கும் சத்துப் பொருளை கிரகிக்கும் என்சைம் மனித உடலில் (குழந்தைகளின் வயிற்றில்) இரண்டு வயதுக்குப் பின்னர் சுரப்பதில்லை. இயற்கையாகவே இது நேருவதைக் கொண்டு இரண்டு வயதுக்கு மேல் மனிதனுக்கு பால்/பால் பொருட்கள் தேவை இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

கபம் (சளி) மனிதனைக் கொல்லும் வியாதி. இதை பால் ஊற்றி வளர்க்கிறோம். பாம்புக்கு பால் ஊற்றி வளர்ப்பது போல. பாம்புக்கு எத்துணை பால் ஊற்றி வளர்த்தாலும் இறுதியில் பாம்பு  நஞ்சினைக் கக்குவது போல, பால் இறுதியில் கபமாக மாறி மனிதனுக்கு எமனாக மாறுகிறது என்கிறார் அர்னால்ட் எஹ்ராத் (Arnold Ehret) என்னும் மேலை நாட்டு உணவியல் ஆராய்ச்சியாளர். 

பாலுக்கு மாற்றாக நலம் பயக்கும் இயற்கை பாலை நாம் இல்லத்திலேயே அதிக செலவின்றி தயாரிக்கலாம். அவற்றை அருந்தலாம். நிறைய பயன்களை விளைவிக்கும் இயற்கை பால் தயாரிக்கும் முறைகளை கீழே காணலாம். 

முக்கியமான குறிப்பு: 
இங்கு விளக்கப்பட்டிருக்கும் இருக்கும் இயற்கை பால் எதையும் காய்ச்ச கூடாது. காய்ச்சினால் அதனை அருந்தும் குறிக்கோள் நிறைவேறாது. பச்சையாகத்தான் அருந்த வேண்டும். தேவைப் பட்டால் தேனீர் வடிகட்டியால் வடிகட்டி பின் அருந்தவும். 

இயற்கை பால் வகைகளை நலம் கூட்டும் மருந்து போல எண்ணி அருந்த வேண்டும். ருசிக்காக (விருந்து போல) அருந்துவது தேவையில்லை.

கோதுமைப் பால்
100 கிராம் கோதுமையை எடுத்து நன்கு கழுவி முளைக் கட்டவேண்டும்.  பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைத்து பால் எடுக்கவும். அத்துடன் தனியாக எடுத்த தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம்.

கொசுறு: சுவைக்கு தேன் சேர்த்தும் சாப்பிடலாம்.

பயன்கள்:
இது புற்று நோயை எதிர்க்க வல்லது.
உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும்.
வாதத்தை குணப்படுத்தும். சுரம் நீங்கும்.
மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
ஆண்களுக்கு உயிர் அணுவை பெருக செய்யும்.
பாக்டீரியா, வைரஸை எதிர்க்கும்.
வெள்ளை அணுக்களை பலப்படுத்தி அதிகரிக்க செய்யும்.

நிலக்கடலைப் பால்
நூறு கிராம் நிலக்கடலையை எடுத்து சுத்தம் செய்து முளை கட்டிய பிறகு அத்துடன் ஊறிய ஐந்து முந்திரி பருப்புகளையும் சேர்த்து ஒரு ஏலக்காயும் சேர்த்து மிக்ஸியில் போட்டு பால் தயார் செய்துக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இந்த நிலக்கடலை பாலினை காய்ச்ச கூடாது. மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பிட வேண்டும்.

பயன்கள்:
இது செல்களின் வளர்ச்சிக்கும், புதுப்பித்தலுக்கும் மிகவும் உதவும். (Stem cell கிரியாவூக்கி), சிறுநீர் பையின் அழற்சியை குணமாக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்கும்.
கைகால் குறண்டல் குணமாகும்.
மலச்சிக்கல் நீங்கும்.

எள்ளுப்பால்
கொள்ளுப்பால் எடுத்தது போலவே இந்த எள்ளுப்பாலும் எடுக்கலாம். 100 கிராம் எள்ளை நன்கு சுத்தம் செய்து இரவு முழுவது தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து ஒரு ஈரமான துணியில் கட்டிவைத்து விட வேண்டும். துணி காயாமல் அடிக்கடி அதில் தண்ணீரை தெளித்துக் கொண்டு இருக்கவேண்டும். உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் பி1, வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலுக்கு வன்மையும், குருதி பெருக்கையும் உண்டாக்கும். எள்ளில் கருப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளுவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.. முளைத்த தான்யங்கள், பயறு வகைகள் முளைகாதவற்றைவிட பன்மடங்கு சத்துக்கள் அதிகம் உடையவை. எனவேதான் முளைக்க வைத்து பால் தயாரிக்க வேண்டும். இந்த முளைவிட்ட எள்ளுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து பால் தயாரிக்கவும். இந்த எள்ளுப்பால் சாப்பிட சிறிது கசப்பாக இருந்தாலும் உடலுக்கு மிகவும் நல்லது.

எள்ளு பற்றிய இரு முது மொழி உண்டு.
(1) இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு 
(2) வைத்தியனுக்கு கொடுபதற்கு பதில் வாணியனுக்கு கொடுக்கலாம்.

”எள்ளுமருத் தைக்கெடுக்கும் எறனலாந் திண்மைதரும்
உள்ளிலையைச் சேர்க்கும் உதிரத்தைத் – தள்ளுமிரு
கண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்
பண்ணுக் கிடர்புரியும் பார் ”

எச்சரிக்கை: இது மருந்தின் செயல்பாட்டை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் இந்த பாலை பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 
பயன்கள்: இது இரத்த சோகையை நீக்கும். ஹீமோகுளொபின் குறைவாக உள்ளவர்களும், மாதவிலக்கின் போது அதிகமாக உதிர போக்கு உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். சுவாச கோளாறுகள், ஆஸ்த்துமா உள்ளவர்கள் சாப்பிட்டால் கஷ்டம் குறையும். உடல் மெலிந்து ஒல்லியாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க அவர்களுக்கு உடல் எடை கூடும். உடலும் ஆரோக்கியம் பெறும்.

கொள்ளுப்பால்
இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன்படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உடலில் ஊளை சதை போடுவதற்கு, உப்புதான் மிக முக்கிய காரணம்  உப்பு நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

முளைவிட்ட கொள்ளு (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

எச்சரிக்கை: கர்பமாக உள்ள பெண்கள் கொள்ளுப் பாலை சாப்பிட கூடாது. 

ஞாயிறு, 21 நவம்பர், 2010

11.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.

பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 


பகுதி 11  தொடருகிறது:
  

ஈரமண்பட்டி
சுத்தமான மண், புற்று மண், செம் மண், களி மண்(உரமும், பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது) தண்ணீருடன் குழைத்து வைத்துக்  கொள்ள வேண்டும்.  ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 1/2  மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம்.  பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம், காய்ச்சல், தலை வலி, மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது.   சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.

ஈரத்துணிபட்டி
மேற் கூறியதை வெறும் பருத்தி துணியை தண்ணீரில் நனைத்தும் செய்யலாம். 

சூரிய ஒளிக் குளியல்
குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம்.  சுரிய ஒ:ளி நமக்கு  நிறைய ஆற்றலை வழங்குகிறது.  விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும், வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.
சூரிய ஒளியின் நன்மைகள்:
    (1) தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.

    (2) தோல் வியாதிகள் மிகவும் குறைவு.

    (3) கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.

    (4) காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும்.

சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில்  20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.

எண்ணெய் கொப்பளித்தல்
இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது.  இது தீங்கு  விளைவிக்காது.  நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும்.  பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

செய்முறை:
சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.  1 ஸ்பூன் போதுமானது.  வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும்.  பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும்.  விழுங்கினால் தவறேதும் இல்லை.   ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது.  பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம்.  காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம்.  சவ்வூடு  பரவுதல் (ஆஸ்மாஸிஸ்) மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது. 

(தொடரும்)

நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

சனி, 20 நவம்பர், 2010

நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்


பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம். அதாவது மானம், கல்வி, அறிவு, தவம், தாளாண்மை, பலம், வன்மை, தானம், முயற்சி, காதல் என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும். ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின் பத்துடன் பதினொன்றாக அரிய உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.


மனித வாழ்விலே சந்தோஷம் என்றாலே இனிப்பு என்பதே பொருள். ஆனால் அளவுக்கு மீறினால் அமர்தமும் நஞ்சு என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாறே இன்மையைக் கொடுக்கும் இந்த இனிப்பு நமது இரத்தத்தில் அதிகமாகும்போது அதுவே நமது உயிரைக் குடிக்கும் விஷமாக மாறுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.


நம் வயிற்றுப் பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும் சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறி இரத்தத்தில் கலக்கும்போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரை நமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen) சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிளைக்கோசன் குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டுமென்றால் நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.


நீரிழிவு நோய் இன்சுலின் அளவு குறைவதாலும் (Insulin Deficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின் சரிவர உபயோகப்படுத்தப் படாமல் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிHyperglycemia என்ற நிலை ஏற்படுகிறது. இதையே நாம் சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyaria)
2. அடிக்கடி சிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (Excesssive Thirst)
3. களைப்புத் தன்மை (Weakness)
4. எடை குறைவு (Weight Loss)
5. பசி அதிகரித்தல் (Increased appetite)
6. நாவறட்சி (Dry mouth)
7. காயம் ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.


நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்
ரெட்டினா பகுதி பாதிப்படைவதனால் கண் பார்வையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு டயபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) என்று பெயர். அதிகளவு சிறுநீர் கழிப்பதனாலும் சிறுநீரகங்களின் அதிகளவு செயற்பாட்டின் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு டயபடிக் நெவ்ரோபதி (Diabetic Nepropathy) என்று பெயர். இரத்தக்குழாய்கள் சுருக்கமடைவதினால் கை, கால் என்பனவற்றின் இழையங்களுக்குத் தேவையான போஷாக்குச் சரிவரக் கிடைக்கப் பெறாததினால் கலங்களுக்குத் தேவையான போஷாக்கின்மையால் கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதன் அறிகுறியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கறுத்தும் உணர்ச்சியற்றும் போகின்றன. இதுவே டயபடிக் கங்கரின் (Diabetic Gangrene) என்றழைக்கப்படுகிறது. இதனால் நாம் பாதிப்பேற்படும் உறுப்பை இழக்க வேண்டியும் வரலாம். இது மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய்கள் என்பனவும் ஏற்படவும் வாய்ப்புண்டு. அத்துடன் சர்க்கரை வியாதி கை, கால் நரம்புகள், எலும்புகளையும் பாதிக்கின்றன. இது டயபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) எனப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பிடிப்பு, வலி, எரிச்சல் மற்றும் மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தெரியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளை எடுத்த பின்னர் உணவு உட்கொள்ளத் தவறுவதும் அதாவது உண்பதில் நேரந்தவறாமை கடைப்பிடிக்கப்படாமையும், பயத்தினால் சர்க்கரையின் அளவை அளவிற்கு மீறிக் குறைப்பதும் கூட ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரையின் அளவு குறைந்தால் (Low Blood Sugar) மயக்கம், உடல் வியர்த்தல் போன்றவை ஏற்படும்.


இந்நிலையைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரையோ அன்றி இனிப்புகள் எதாவதோ கைவசம் வைத்திருத்தல் அவசியம். சர்க்கரைக் குறைவை கவனித்து நிவர்த்தி செய்யவிடின் மேலும் குறைந்து கோமா (Coma) நிலை ஏற்படும் அபாயம் உண்டு.

நமது உடலில் சர்க்கரை அதிகமானாலும் சரி, குறைந்தாலும் சரி பாதிப்பு நமக்குத்தான். எனவே நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூலிகைகள், உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொள்வதன் மூலம் எந்தவிதமான பின்விளைவுகளும் இன்றி நன்றாக வாழலாம் என்பது உறுதி.


தேவையான மூலிகைகள்
வேப்பிலை, வில்வம், அத்தியிலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, மாவிலை, வெற்றிலை எல்லா இலைகளையும் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதிலிருந்து இரண்டு தேக்கரண்டி தூள் எடுத்து நீரில் கலந்து காலை, மாலை இரவு உணவிற்கு முன்பாக உண்டுவர பலன் கிடைப்பது உறுதி.


உணவு முறைகள்
தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்தமல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடியளவு அவித்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் இயற்கை உணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போது சர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இயற்கையுணவுகளினால் இன்சுலின் இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும் பக்க விளைவுகளான பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.


சாதாரணமாகவே மனிதனாகப் பிறந்த எவரும் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் என்றும் நலமாக வாழலாம். 


கட்டுப்பாடு என்பது உணவில், உடலில், உணர்வில் என்று மூன்றிலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.


1. அதாவது முதலில் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதாவது சுயக்கட்டுப்பாடு (Self Control). தமக்கு வந்திருக்கும் நோயைப் பற்றியே சிந்தித்துப் பயந்து இன்னும் நோயை அதிகரித்துக் கொள்ளாது இது நோயே கிடையாது, இதை என்னால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என உணர்தல் வேண்டும். இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் தவிர்க்கப்படும்.


2. தம்மை உணரப் பழகிக் கொள்ள வேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் அன்றாடப் பழக்க வழக்கங்களில் ஒரு முறைப்பாட்டை உண்டாக்கிக் கொள்ளல் என்று பொருள். அதாவது Systematic எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது. இதில் மருந்து பாவிக்கும் முறைகள், உணவுமுறைகள் என்பன அடங்கும்.

3. தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளல்.


4. மனம் ஒரு குரங்கு. எனவே அதை அடக்கியாளப் பழகுதல், அதாவது எதையும் சாதிக்கும் ஆர்வம் நம்மை நாம் தன்னம்பிக்கைக்குள் தோய்ப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தன்னம்பிக்கையே எந்த ஒரு வெற்றிக்கும் உரமாக அமைகிறது. இதுவே நோயை வெல்வதற்குரிய சக்தியை வழங்குகிறது.


5. மனவுறுதி என்பது அதாவது எதையும் தாங்கக் கூடிய இதயம். அது இயற்கையாகவே நம்மிடத்தில் அமைத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.


இவையே நாம் நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். இத்தகு பயிற்சிகளை மேற்கொள்வதனாலேயே நாம் இந்த நோயிலிருந்து விடுபடும் உணர்வை (Relax) அடைவதோடு நோயிருப்பினும் நோயற்ற நூற்றாண்டு வாழ்வைப் பெற்றவர்களாவோம்.

ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நீரிழிவு நோய் வந்தாலும், அதனை ஒரு நோய் உபாதையாகக் கொள்ளாமல் நோயையே வென்று வாழ்வோமாக.


சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பும் பாதிப்பும்


இரத்தக் கொதிப்பு நோயை Silent Killer என்கிறார்களே அதன் காரணத்தைப் பார்ப்போம். 


டைபாய்டு, மலேரியாவைப் போல ரத்தக் கொதிப்பு 200/120 இருப்பவர் கூட சர்வ சாதாரணமாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவருடைய உடலில் விபரீத விளைவுகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கும். அது அவருக்குத் தெரியாது. முக்கியமாக ரத்தக் கொதிப்பினால் இதயம் வீங்கிவிடும். இதயச் செயலிழப்புக்கும் பாதை தரும். மூளையில் ரத்தக் குழாய் வெடித்து பக்க வாதம் வர வழிவகுக்கும். கண்களில் உள்ள விழித்திரையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பார்வை இழக்க நேரிடும். இதயத்தமனி ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி மாரடைப்பைத் துரிதப்படுத்தும்.


சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து அது சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். நீரிழிவு நோய்க்குரிய சிக்கல்களைத் துரிதப்படுத்தும். இத்தனை கொடிய விளைவுகளும் ஒரே நாளில் நிகழந்துவிடாது. சிறுகச் சிறுகத் தான் நிகழும். ஆனால் அது நோயாளிக்குத் தெரியாது. ஆகையினால் தான் இந்தப் பெயர். 


மேலே சொல்லப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்குத் தென்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. உடனடியாக அவர் தனது மருத்துவரை கலந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மாறாக நூற்றுக்கு நாற்பது பேருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சர்க்கரை நோய் இருக்கலாம். அவர்கள் வேறு ஏதாவது நோய்களுக்காக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் போது தான் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதையும் அறிய முடியும்.


ஆகையால் நடைமுறையில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பது ரத்தப் பரிசோதனைதான், குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் இந்த நோயை உறுதிப்படுத்தலாம். ரத்தச் சர்க்கரை அளவும் இதற்கு உதவும். உணவு உட்கொள்ளாத நிலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல் 120 மில்லி கிராம் சதவீதமும், உணவு உட்கொண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும்போது, சர்க்கரையின் அளவு 120 முதல் 160 மில்லி கிராம் சதவீதமும் இருக்க வேண்டும். இதற்குக் கூடுதலாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இருந்தால் அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது எனத் தீர்மானிக்கலாம்.


பொதுவாகவே இந்த சர்க்கரை நோய் என்பது, பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய் இருந்தால், தங்கள் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்பு 100 சதவீதம். இவை தவிர உடல் பருமனாக இருப்பது, உடற்பயிற்சி இல்லாதது, மனக்கவலை, உற்சாகமற்ற வாழ்க்கை முறைகள், தொடர்ச்சியாக ஏற்படும் தொற்று நோய்கள், அடுத்தடுத்து கருத்தரிப்பது ஆகிய காரணங்கள் சர்க்கரை நோய் ஏற்படுத்த வாய்ப்பாகும். அவற்றில் இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய், இன்சுலின் சாரா சர்க்கரை நோய் என்று இரு வகைகள் உண்டு. முதலாவது வகை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது வகையினர் தேவைப்படும் காலங்களில் மட்டும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம். மற்றபடி சர்க்கரை நோய் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டாலே போதும். அது கட்டுப்படுவதோடு பிற பிரச்னைகளையும் ஏற்படுத்தாது.


முக்கியமாக கொழுப்புச் சத்துள்ள உணவை குறைத்து உணவை கட்டுப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் அளவோடு உண்டு, தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்த பலனை அளிக்கும். உடற்பயிற்சியும் கூட முடிந்தால் காலை, மாலை என இருவேளைகளிலும் செய்தல் நல்லது.


உடல் எடையை உங்கள் வயதிற்கேற்ப கட்டுப்படுத்துங்கள். மனக் கவலைக்கு இடம் அளிக்காதீர்கள். பழங்களை சாப்பிடும்போது கூட ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, கொய்யா இவற்றில் ஏதாவது ஒன்றில் தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம். நாவின் ருசிக்கு ஆசைப்பட்டு அளவு கூடினால் ஆபத்துதான். பழங்களில் கூட வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை விலக்க வேண்டும். புரதச் சத்து உணவுகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம். சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு தினமும் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். இடைவேளை நேரங்களில் சுண்டல், காய்கறி சூப் சாப்பிடலாம். காபியில் சர்க்கரையை குறைத்தல், நார்ச்சத்துள்ள காய்கறிகள், இனிப்பு குறைந்த எந்த வகை உணவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றியுடன் பகிரப்படுகிறது: றொசாரியோ ஜோர்ஜ்யின் ''வளமான வாழ்விற்கு உணவே மருந்து.''