உண்மை வயதும்,
ஆரோக்கியத்தின் வயதும்..
உங்களது நலம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் உங்கள் ஆயுளை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவை. உதாரணமாக புகை பிடிக்கும் வழக்கம் ஒருவரது ஆயுளை பல ஆண்டுகள் குறைத்து விடும்.
அது போலவே, மன அழுத்தம், சரியான உறக்கம் இன்மை, உணவு மற்றும் உடல் எடை போன்றவை ஒரு மனிதனின் ஆயுளை பாதிக்கின்றன.
நாற்பது வயது கொண்ட ஒருவர் புகைக்கும் வழக்கம் உடையவராக இருந்து, அவருக்கு மன அழுத்தமும் இருந்து, சரியான உறக்கமின்றி ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரமே உறங்குகிறார், மேலும் உடல் எடை அதிகம் கொண்டவராக இருக்கிறார் எனில், அவரது பிறந்த தேதியில் இருந்து கணக்கிடப்படும் வயது நாற்பது எனினும், அவரது தேக ஆரோக்கியம் நாற்பத்து எட்டு வயதுடையவர் போல இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இதற்கு ஆரோக்கியத்தின் வயது அல்லது உடலின் வயது என்று பேரிட்டு உள்ளனர். நமது பிறந்த தேதியில் இருந்து கணக்கிடப்படும் வயதும், நமது ஆரோக்கியத்தின் வயதும் ஒன்றாக இருந்தால் நீங்கள் நூறு சதவீதம் நலமாக இருக்கிறீர்கள் என்று பொருள்.
உங்கள் பிறந்த வயதும், உடம்பின் வயதும் என்ன என்று கண்டு பிடியுங்கள். இரண்டு வயதையும் ஒன்றாகவே வைத்திருக்க முயலுங்கள்.
இயற்கை நல வாழ்வியல் முறைகளை பின் பற்றி மேலே சொன்ன நலத்தை பெறுங்கள்.
வாழி நலம் சூழ.
வாழ்த்துக்கள்.