வியாழன், 4 பிப்ரவரி, 2010

இயற்கை மருத்துவ முறை


புதுக்கோட்டை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துமே தற்போது இயற்கை மருத்துவ முறைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. இயற்கை மருத்துவத்தை பின்பற்றுவதால் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை என்பதுதான் இதற்கு காரணம். போகர், அகஸ்தியர் போன்ற சித்தர்களால் உருவான சித்தவைத்தியம் காலத்தால் முற்பட்டதாகும். இந்தியாவிலிருந்து தான் இதர நாடுகளுக்கு சித்த வைத்தியம் பரவியது.தமிழகத்தில் சித்த மருத்துவத்துக்கு தேவையான 148 அரிய வகை மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்மழை, கடும் வறட்சி போன்ற பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல், தொற்றுநோய் போன்றவற்றை முற்றிலுமாக குணப்படுத்தும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு.சிக்-குன்-குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவ்வகையான காய்ச்சல் தென்பட்டால் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. எட்டு அல்லது 12 நாள் தொடர்ந்து முறையான மருந்து சாப்பிட்டால் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தலாம்.
நன்றி : தினமலர் டிசம்பர் 18,2009 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

உணவின் அமிலத் தன்மையும், காரத் தன்மையும்...


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அவசரகதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடும் நமது வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. நாகரீகம் என்ற பெயரில் தின்பண்டங்கள்,  குளிர்பானம் என்று வாழ்க்கை முறையே இளம் தலைமுறையினரிடம் மாறி விட்டது.  சாப்பிடும் உணவைத் தேர்வு செய்யும் பழக்கம் நமக்கு வர வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்வுக்கு நல்ல ஆலோசனைகளை வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
உணவு வகைகளில் அமிலத் தன்மை கொண்டது என்றும் காரத் தன்மை கொண்டது என்றும் இரு வகைகளாய் பிரிக்கலாம். இவை இரண்டுமே மனிதனின் சராசரி வளர்ச்சிக்கு மிக முக்கியமானவைகள் ஆகும் நாம் உண்ணும் எந்த ஒரு உணவிலுமே இவை இரண்டும் உண்டு.

அமிலத் தன்மை கொண்ட பொருட்கள் பட்டியல்:

File:PH scale.png

இவை ஒன்றுக்கு ஒன்று முரண் ஆனது. ஆகவே உணவில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதாவது அமில வகை உணவு வகைகள் சாப்பிடும் போது கார வகை உணவு வகைகளை சாப்பிடக் கூடாது.  இப்படி ஒரு பழக்கம் இல்லாவிட்டால் அது தான் பிரச்சினை ஆகி நோயாய் மாறுகிறது.
உதாரணத்திற்கு, பழவகைகள் சாப்பிடும் போது தானிய வகை, பயறு, அசைவ உணவு சேர்க்கக்கூடாது.
பால் வகை உணவுகள் சாப்பிடும் போது சிற்றிக் அமிலத் (Citric Acid) தன்மை கொண்ட ஆரஞ்சு,  எலுமிச்சை கூடாது.
அசைவ உணவுக்கு பால்,  தயிர் சரியல்ல ஜீரணக் கோளாறு வர வாய்ப்பு அதிகம்.
பூசணி போன்ற நீர்வகை காய்களுடன் சிட்ரிக் அமில வகைப் பழங்கள் கூடாது.
முள்ளங்கிக்கு பால் வகை பொருட்கள், வாழைப்பழம் எதிரி.
அதிக புரோட்டீன் உள்ள முட்டையுடன் மீன்,  பால்,  பூசணி போன்றவற்றை சேர்த்து உண்ணுதல் உடல் நலக்கேட்டை வரவழைக்கும்.
பழைய சாதமுடன் சூடான சாதத்தைக் கலந்து சாப்பிடுவதும் சரியல்ல.
உணவு வகைகளை உடலுக்குள் தள்ளும் போது கவனமுடன் பார்த்து தள்ளாவிடில் அது நம்மை நோயில் கொண்டு தள்ளி விடும்.
உணவு உடலில் சென்றதும் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும் அவ்வாறு நிகழும் வேதியியல் மாற்றத்தைப் பொறுத்துத் தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது.
நன்றி: http://tconews.wordpress.com

கான்சர் பற்றிய முக்கிய கட்டுரை


நீண்டகாலமாக புற்றுநோய்க்கு(CANCER) கீமொதெரபீ(CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன். - RAFEEK AHMED.H - Dubai.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

 • 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
 • 2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
 • 3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
 • 4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritionaldeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.
 • 5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
 • 6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது
 • 7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள்,திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது
 • 8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.
 • 9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்புசக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
 • 10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
 • 11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
 • 12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
 • 13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனதுசக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.
 • 14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப்பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்றசெல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)
 • 15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான,ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
 • 16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

 • 1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
 • 2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal)பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
 • 3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவுசிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..
 • 4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில்வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும்உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.
 • 5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

  நன்றி: www.chittarkottai.com

ரத்தத்தின் காரத்தன்மை

சிறுநீர் வெளியேறுவதால் ரத்தத்தின் காரத்தன்மை காக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள கழிவு நீர் போக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள யூரியா, யூரிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களும் நச்சு கிருமிகளும் வெளியேற்றப் படுகின்றன.உடலில் இரத்தத்தின் அளவை மற்றும் வெப்ப அளவைச் சீராகப் பாதுகாத்து வைக்கிறது.

வெள்ளரிக்காய்


உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதில் வெள்ளரிக்கு இணையான காய் வேறு எதுவும் இல்லை. உலகம் முழுவதும் விளைந்தாலும் மேற்கு ஆசிய நாடுகளிலும் சீனாவிலும் இந்தியாவிலும் அதிகம் விளைகிறது. 100 கிராம் வெள்ளரியில் உள்ள சத்துக்கள்: நீர்ச்சத்து-96.3 சதம், மாவுச்சத்து-0.4 சதம், புரதம்-0.1 சதம், கொழுப்பு-2.5 சதம், நார்ச்சத்து-0.4 சதம், தாதுக்கள்-0.3 சதம், கலோரிகள்-18, கால்சியம்-10 மி.கி., பாஸ்பரஸ்-25 மி.கி., இரும்புச் சத்து-15 மி.கி., வைட்டமின் சி-7 மி.கி., பி.காம்ப்ளக்ஸ்-சிறிய அளவில். வெள்ளரியில் உள்ள தாதுப்பொருட்களே அதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாக அமைகின்றன. நம் உடலில் உள்ள நீர்கள் (ரத்தம், சிறுநீர்) அடிப்படையில் காரத்தன்மை உடையவை. இந்த காரத் தன்மை குறைந்து அமிலத்தன்மை அதிகமானால் பல நோய்கள் உருவாகும். வெள்ளரியில் உள்ள தாதுப்பொருட்களில் 64.05 சதம் காரத்தன்மை உள்ளது. மீதமுள்ள 35.95 சதம் அமிலத்தன்மை உடையவை. வெள்ளரியில் அதிகமாக உள்ள இந்த காரத்தன்மை நம் உடல் நீர்களின் காரத்தன்மையை பாதுகாப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. வயிற்றிலுள்ள அமிலத் தன்மையை குறைத்து வயிற்றுப்புண்ணை ஆற்றுகிறது. வாதக் கோளாறுகள், சிறுநீரக நோய், கற்கள், காலரா, சருமநோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. வெள்ளரியை தோலோடு உண்பது அதிக பயன்தரும். உபயோகிக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவேண்டும்

இயற்கை நலவாழ்வுச் சூத்திரம் - 1

ஆவதும் உணவாலே (இயற்கை உணவு)


அழிவதும் உணவாலே (சமைத்த உணவு)

நலவாழ்வு நற்சிந்தனை


உணவு

உணவுத் தூய்மை மனத் தூய்மையைத் தருகிறது. மனமானது உணவுச் சாரத்தின் புலப்படா நுணுக்கமான பொருளாகும். உணவு, பிரம்மச்சரியத்துடன் நெருங்கிய தொடர்புடையது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, தூய்மையாய் இருக்க வேண்டும் என்பதில் விழிப்புடன் இருந்தால் பிரம்மச்சரியத்தைக் கடைப் பிடிப்பது எளிதாகும்.  ஆத்மீகத்தை விழைபவர், தொடக்கத்தில் தம் உணவுக்கானவற்றைத் தேர்ந்தெடுப்பதில் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். சாத்வீகமான உணவைக் கொள்க. பசித்த போது மட்டுமே உண்ணுக.

-சுவாமி சிவானந்தா

வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும்

வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகு‌ம். மேலு‌ம், இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இ‌ல்லாம‌ல் எ‌ல்லா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் அவ‌ர்க‌ள். மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது. வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது. ஒரு ம‌னித‌ன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறு‌கிறா‌‌ன் எ‌ன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ‌நிறை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை, மேலு‌ம், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மரு‌ந்தாகவு‌ம் கூட வாழை‌ப்பழ‌ம் உ‌ள்ளது. எனவே ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் ‌‌தினமு‌ம் ஒரு வாழை‌ப்பழ‌த்தையாவது சா‌ப்‌பிடு‌ம் வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அ‌ந்த கால‌த்‌தி‌ல் அத‌ற்காக‌த்தானோ எ‌ன்னவோ வெ‌ற்‌றிலையுட‌ன் வாழை‌ப்பழ‌த்தை வை‌த்து‌க் கொடு‌க்கு‌ம் முறை கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களு‌க்கு‌த் தெ‌ரியாததா எ‌ன்ன? முத‌லி‌ல் மல‌‌ச்‌சி‌க்க‌ல் ‌வியா‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌னிதனை‌க் கா‌‌ப்பா‌ற்று‌ம் இய‌ற்கை மரு‌ந்து வாழை‌ப்பழ‌ம்தா‌ன். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது. நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடி‌த்தா‌ல் சோ‌ம்ப‌ல் போயே‌ப் போ‌ச்சு. மேலு‌ம், நெ‌ஞ்செ‌ரி‌ப்பு, உட‌ற் பரும‌ன், குட‌ற்பு‌ண், உட‌லி‌ல் வெ‌ப்ப‌நிலையை ‌சீராக வை‌க்கவு‌ம், மன அழு‌த்த‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது. புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் புகை‌ப்‌பிடி‌த்தலை ‌விடு‌‌ம்போது வாழை‌ப்பழ‌ம் அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌விடுபடலா‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்படு‌கிறது.
நன்றி: வெப்துனியா.காம்.

நோய்களுக்குக் காரணம் என்ன? இயற்கை மருத்துவ விளக்கம்

அண்மையில் இயற்கை மருத்துவ நிபுணர் ஏ.வி.ஜி.ரெட்டி அவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். நோய் வரும் காரணம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இயற்கை மருத்துவர் பீச்சாம்ப் பற்றி அவர் கூறினார்.
பீச்சாம்பும் லீயி பாஸ்டரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். நோய்கள் வருவதற்கு நோய்க் கிருமிகளே காரணம். நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் எனப்படும் எதிர் உயிரிகளை உடலுக்குள் செலுத்தினால் கிருமிகள் அழிந்துவிடு்ம், நோய் நீங்கும் என்பது லூயி பாஸ்டரின் தத்துவம். ஆனால் பீச்சாம்பின் தத்துவம் இதற்கு நேர் எதிரானது.
நோய்க்குக் கிருமிகள் காரணம் அல்ல. கிருமிகளை அழிப்பதால் மட்டும் உடல் நலம் பெற முடியாது. உண்மையில், உடல் கழிவுப் பொருள்களை அகற்றுவதற்காகவே கிருமிகள் உடலில் வந்து தங்குகின்றன என்றார் பீச்சாம்ப். உடலைக் கழிவுகளற்றுச் சுத்தமாக வைத்துக் கொள்வதே ஆரோக்கியத்துக்கான வழி என்றும், நோய் வராமல் இருப்பதற்கான வழி என்றும் அவர் கூறினார். அப்படியானால் நோய் வந்ததும், கழிவுகளை அகற்றும் பணியைத்தான் மருத்துவர் செய்ய வேண்டுமே தவிர, கழிவுகளை நாடி வந்த நோய்க்கிருமிகளைக் கொல்லும் முயற்சியில் இறங்கக் கூடாது என்றார் பீச்சாம்ப். சில உதாரணங்கள் மூலம் அவர் இதை நிரூபித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், என்ன நடந்ததோ மரத்தில் கட்டிவைத்து அவர் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாம் இன்னமும் எதிர் உயிரிகளை நம்பிக் கொண்டு கழிவுகளுடனும் கிருமிகளுடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அஜினோமோட்டோ : ஒரு தீமையின் வரலாறு!


குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோ மோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது. 


சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள், இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு மீறி தின்பர். 

‘இதையாவது பிரியப்பட்டு தின்கிறானே’ என்று ஆசை ஆசையாய் பலரும் இதை அவனுக்கு வாங்கிக் கொடுப்பர். 

சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த ‘நோஞ்சான்’ எக்கச்சக்கமான சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை. பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டாவால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவை தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் குண்டர்களாக மாறி விடுகிறார்கள். 

அஜினோ மோட்டோவானது இன்று இரண்டு ரூபாயிலிருந்து இருநூற்றி ஐம்பது ரூபாய்க்குகூட தரத்துக்கேற்ப விற்கப்படுகிறது. 

வெளிநாடுகள் பலவற்றில் அஜினோ மோட்டோ தடை செய்யப்பட, இந்திய விற்பனையாளர்கள் வருமானத்துக்குப் பயந்துபோய் இது தாவரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். ஒரு டன் திராட்சைப் பழங்களிலிருந்து ஒரு மில்லி கிராம் சயனைட்டை உற்பத்தி செய்யலாம் என்ற உண்மையைக் கூட இந்த வியாபாரிகளால் புரிந்து கொள்ள முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமே. 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட, அஜினோமோட்டோ நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் ‘MSG’ அதாவது மோனோ சோடியம் கலந்துள்ளது என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கை வாசகங்கள் கூட இன்று பொட்டலங்களில் இல்லாமலிருப்பது அந்த வியாபார நிறுவனங்களின் வெற்றியையும் அரசாங்கத்தின் அலட்சியத் தன்மையையுமே காட்டுகிறது. 

1920_ம் ஆண்டில் ஜப்பானிய டாக்டர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதே அஜினோமோட்டோ. 

இயற்கையாகவே சுவையில்லாத அஜினோ மோட்டோ பொரித்த, வறுத்த உணவுகளுடன் கலக்கும் போது புளிப்புச் சுவை ஏற்படுகிறது. 

22 வகையான அமினோ ஆசிட்களில் ஒன்றான க்ளூட்டமிக் ஆசிட்டிலிருந்து அஜினோ தயாரிக்கப்படுகிறது. 

பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் தங்கள் உணவு வகைகளின் சுவைகளில் ஒரு பிரத்யேகத் தன்மை இருப்பதாக பீற்றிக்கொண்டாலும், அதற்கான இரகசியங்கள் அஜினோ மோட்டோவில்தான் இருக்கிறது. சரியான அளவில் கலக்கக்கூடிய தேர்ந்த சமையல்காரர்களுக்கு சீக்கிரம் ப்ரமோஷன் உண்டு. 

பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்ற தன்மை, தலைவலி, வாந்தி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை அஜினோமோட்டோவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றனர். 


உயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உண்கின்றன. ஆனால், மனிதர்கள் இதிலிருந்து மாறுபட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காகவும், பலவித செயற்கை நிறமிகளையும் சுவையூட்டிகளையும் உணவில் சேர்த்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சமீப காலத்தில் அஜினோமோட்டோ என்னும் நச்சுப் பொருளை ஒரு செயற்கைச் சுவையூட்டியாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் வேதிப் பெயர் ‘மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono Sodium Glutamate) MSGஎன்பதாகும்.இந்த அஜினோ மோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துக்கள் இருந்த போதிலும், பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்ததால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும். இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ‘ஆர்குவேட் நுக்ளியஸ்’ என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும், அழற்சியையும், சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப்பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம் பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு ‘சைனா உணவக நோய்’ (CHINA RESTAURANT SYNDROM) என்று தனிப் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

புதிது புதிதாகக் கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி_450 என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன. ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி_450 நொதிகள் திணறுகின்றன. குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ போன்ற சுவையூட்டிகளும் பி_450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.

பரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் ‘சூப்’களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோ மோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் ‘டேஸ்ட் பவுடர்’ என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர். 

இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது. 

ஆனால், நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோ மோட்டோ கலந்திருப்பதை மறைத்து ‘added flavours’ என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள். 

பல்வேறு விளம்பரங்களில் அஜினோ மோட்டோ ஒரு தாவர உணவு என்றும் அதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். தாவரங்களிலும் உயிரைப் பறிக்கும் நச்சுத் தன்மை உண்டு என்பதே உண்மை.

ஆகவே, அஜினோ மோட்டோவை உணவுப் பொருட்களில் கலப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அதுவரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த நச்சுப் பொருள் கலந்த உணவு வகைகளை வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது


நன்றி குமுதம் ஹெல்த்ஆபத்தாக மாறும் அஜினோமோட்டா 

பதறவைக்கும் ஒரு பகீர் ரிப்போர்ட். 

உயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உண்கின்றன. ஆனால், மனிதர்கள் இதிலிருந்து மாறுபட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காகவும், பலவித செயற்கை நிறமிகளையும் சுவையூட்டிகளையும் உணவில் சேர்த்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சமீப காலத்தில் அஜினோமோட்டோ என்னும் நச்சுப் பொருளை ஒரு செயற்கைச் சுவையூட்டியாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும். 

''ஒரு ஸ்பூன் அஜினமோட்டோ சேருங்கள். பிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்றவற்றின் சுவை கூடி விடும். அதுமட்டுமல்ல, சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட, அஜினமோட்டோ கலந்த உணவு என்றால் சமர்த்தாகச் சாப்பிடுவார்கள்!'' என்று டி.வி.களிலும், நாளிதழ்களிலும் வெளிவரும் விளம்பரங்களால், அஜினமோட்டோ விற்பனை சூடுபறக்கிறது. பலவிதமான பாக்கெட்டுகளில் சாதாரண பெட்டிக் கடைகளில்கூட கிடைக்கிறது இந்த மாயப்பொடி. 

இப்படி அலற வைக்கும் விளம்பரங்களால் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் அஜினமோட்டோவுக்கு வேறொரு முகமும் உள்ளது. ''அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது'' என்று சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, அண்மையில் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு, எக்கச்சக்க பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

அஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோமோட்டோவைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகளுக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதற்கு பதில் அளித்து கடந்த 23-04-07 திங்கள்கிழமை அன்று பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் அளித்த அஜினமோட்டோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் மனோகரன் கூறியதாவது 

''எங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக, இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அஜினோமோட்டோ என்ற பெயரில் இதை விற்று வருகிறோம். வேறு நிறுவனங்களும் வேறுவேறு பெயர்களில் இதை விற்கின்றன. 

சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினமோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் செய்து இந்தியா முழுவதும் விற்கிறோம். 

'அஜினமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப் பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும்' என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது. அதன்பிறகு நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது. அஜினமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக்கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பும் 'இது பாதுகாப்பானது' என அங்கீகரித்துள்ளது! சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. 

எல்லா அஜினமோட்டோ பாக்கெட்களிலும், பன்னிரண்டு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளோம். தற்போது சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டதற்கிணங்க டி.வி. விளம்பரத்திலும் இந்த வாசகத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். அதுபோல் 'ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்' என்பதை 'ஒரு டீஸ்பூன்' என மாநகராட்சியின் உத்தரவின் பேரில் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலிலுள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது. நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம். இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது. கடைகளில், கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது. இந்தக் கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர்ச்சை ஓய்ந்துவிடும்'' என்றார் அவர். 

இந்த அஜினோ மோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துக்கள் இருந்த போதிலும், பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்ததால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும். இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் 'ஆர்குவேட் நுக்ளியஸ்' என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும். 

மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும், அழற்சியையும், சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப்பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம் பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு 'சைனா உணவக நோய்' (CHINA RESTAURANT SYNDROM) என்று தனிப் பெயரே சூட்டப்பட்டுள்ளது. 

''சோடியம் குளுட்மேட் (அஜினமோட்டோ) பற்றி எழுதுவதற்காக நாம் ஆய்வில் இருந்தபோது 'ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்' பற்றிய தகவலும் நம்மை அதிர்ச்யில் ஆழ்த்தியது, 

''இது பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது. பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் பொருட்கள் நம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால், இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும்!'' என்ற அதிர்ச்சிதான் அது, 

புதிது புதிதாகக் கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி_450 என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன. ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி_450 நொதிகள் திணறுகின்றன. குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ போன்ற சுவையூட்டிகளும் பி_450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன. 

சோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர். ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக்கூடாது என்று அமெரிக்க அரசு தடை விதித்தது. 

இந்த நிலையில், அஜினமோட்டோ நிறுவனம், மூன்று ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது. இப்போது இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்தப் பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி குற்றம் சாட்டியுள்ளது'' 

பரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் 'சூப்'களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோ மோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் 'டேஸ்ட் பவுடர்' என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர். 

இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள். 

மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது. 

ஆனால், நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோ மோட்டோ கலந்திருப்பதை மறைத்து 'added flavours' என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள். 

பல்வேறு விளம்பரங்களில் அஜினோ மோட்டோ ஒரு தாவர உணவு என்றும் அதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். தாவரங்களிலும் உயிரைப் பறிக்கும் நச்சுத் தன்மை உண்டு என்பதே உண்மை. 

ஆகவே, அஜினோ மோட்டோவை உணவுப் பொருட்களில் கலப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அதுவரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த நச்சுப் பொருள் கலந்த உணவு வகைகளை வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூகப்பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் விழிப்புணர்வுகளுக்காக ஊடகங்கள் மற்றும் இணையங்களில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. 

(மின்னஞ்சலுக்கு வந்த செய்தியை பதிவு செய்யப்பட்டுள்ளது)

ஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்


"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடுகளுக்கும் பொருந்துகிறது. இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.

படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள "பகீர்' தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது.

மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர். அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.

பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் "சிரப்'களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

எலும்பு பவுடர் உரம்: வெளிநாடுகளில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர். மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகியவற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும் என்பதால், அவற்றை தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.
ஆதாரம்: தினமலர் ஜனவரி 03,2010

மருத்துவம் பற்றி காந்தி கூறுவது.

மருத்துவம்: 

"நமது சமுதாயத்தில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் மருத்துவர்கள், நம்மை முற்றிலும் நிலைதவறி போகும்படி செய்து விட்டனர். 
நோய்கள் எவ்விதம் உருவாகின்றன? 
நிச்சயமாக நமது அசட்டையினாலோ அல்லது மிதமிஞ்சிய போகங்களினாலோ நோய்கள் உருவாகின்றன. 
நான் அளவுக்கு மிஞ்சி சாப்பிடுகிறேன். எனக்கு அஜீரணம் உண்டாகி, மருத்துவரிடம் போகிறேன். மருத்து கொடுக்கிறார்; குணம் அடைகிறேன். மறுபடியும் நான் அதிகமாக உணவு உட்கொள்கிறேன். மருத்துவரின் மருந்தையும் உட்கொள்கிறேன். 
ஆனால், முதல் தடவையிலேயே மருந்தை உட்கொள்ளாதிருந்தால், எனக்கு உரிய தண்டனையை அனுபவித்திருப்பேன். மறுபடியும் மிதமிஞ்சி உண்டிருக்க மாட்டேன். 
மருத்துவர் குறுக்கிட்டு, மிதமிஞ்சி நடப்பதற்கு உதவி புரிந்துள்ளார். 
மருத்துவர் தலையிடாமல் இருந்திருந்தால், இயற்கை தன் வேலையை செய்திருக்கும். 
என்னை நானே அடக்கியாளும் ஆற்றலும், எனக்கு உண்டாகியிருக்கும். 
-மகாத்மா காந்தி.

உணவே மருந்து - ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளி,00:00  IST
Top global news update 
லண்டன்:ரத்த உறைவை தடுக்கவும், ரத்த ஓட்டத்தை சீரமைக்கவும் உதவும் ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம், என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள ரோவெட் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஆசிம் தத்தா ராய் இது குறித்து குறிப்பிடுகையில்,"வயதானவர்கள் தங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி கொள்ள, தினமும் சிறிதளவு ஆஸ்பிரின் மருந்தை உட் கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக இந்த மருந்தை உட்கொள்வதால், வயிற்றில் புண் ஏற்பட்டு விடுகிறது. இதனால், சிலருக்கு வயிற்றில் ரத்தக் கசிவும் காணப்படுகிறது. நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியின் விதையில் உள்ள நிறம் மற்றும் வாசனையற்ற பிசுபிசுப்பான பொருள், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்தம் உறைவதையும் தடுக்கிறது. எனவே, ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம்' என்றார்.
இந்த கண்டு பிடிப்பை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில், தக்காளியின் இந்த பகுதியை தனியாக எடுத்து, பசை வடிவில் தயாரித்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தக்காளியின் இந்த பசை பகுதி சில பானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்
டிசம்பர் 26,2009

நமது கருத்து: இன்றைய மருத்துவம் மக்களுக்காக அல்ல பணத்துக்காக மட்டுமே, நம்மூர் இயற்கை உணவு மருத்துவத்திற்கு ஈடு இணை கிடையாது. நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தின் ஒரு (பெரும்) பகுதி நோய்க்காக செலவிடுகிறோம், இது நல்லதல்ல. உணவே மருந்து என்று நாம் காலம் காலமாக பின்பற்றி வந்த முறையை மழுங்க செய்தது மேற்கத்திய நாகரீக மோகம். நம் இயற்கை மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் அவர்கள் ஆராய்ச்சி செய்து அவர்களே சொன்னால் தான் நாம் ஏற்றுகொள்வோம் என்பது வேதனைக்குரியது. தற்போது மருந்துதான் உணவு என்கிற நிலையில் உள்ளோம். இனிமேலாவது உணவே மருந்து என்பதை உணர்ந்து திருந்த முயற்சிப்போமா?