உணவு
உணவுத் தூய்மை மனத் தூய்மையைத் தருகிறது. மனமானது உணவுச் சாரத்தின் புலப்படா நுணுக்கமான பொருளாகும். உணவு, பிரம்மச்சரியத்துடன் நெருங்கிய தொடர்புடையது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, தூய்மையாய் இருக்க வேண்டும் என்பதில் விழிப்புடன் இருந்தால் பிரம்மச்சரியத்தைக் கடைப் பிடிப்பது எளிதாகும். ஆத்மீகத்தை விழைபவர், தொடக்கத்தில் தம் உணவுக்கானவற்றைத் தேர்ந்தெடுப்பதில் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். சாத்வீகமான உணவைக் கொள்க. பசித்த போது மட்டுமே உண்ணுக.
-சுவாமி சிவானந்தா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக