வியாழன், 4 பிப்ரவரி, 2010

இயற்கை மருத்துவ முறை


புதுக்கோட்டை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துமே தற்போது இயற்கை மருத்துவ முறைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. இயற்கை மருத்துவத்தை பின்பற்றுவதால் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை என்பதுதான் இதற்கு காரணம். போகர், அகஸ்தியர் போன்ற சித்தர்களால் உருவான சித்தவைத்தியம் காலத்தால் முற்பட்டதாகும். இந்தியாவிலிருந்து தான் இதர நாடுகளுக்கு சித்த வைத்தியம் பரவியது.தமிழகத்தில் சித்த மருத்துவத்துக்கு தேவையான 148 அரிய வகை மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்மழை, கடும் வறட்சி போன்ற பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல், தொற்றுநோய் போன்றவற்றை முற்றிலுமாக குணப்படுத்தும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு.சிக்-குன்-குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவ்வகையான காய்ச்சல் தென்பட்டால் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. எட்டு அல்லது 12 நாள் தொடர்ந்து முறையான மருந்து சாப்பிட்டால் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தலாம்.
நன்றி : தினமலர் டிசம்பர் 18,2009 

2 கருத்துகள்:

Muruganandan M.K. சொன்னது…

இயற்கை மருத்துவத்தில் உங்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு நன்றி.
எதுவும் இயற்கையாக இருப்பது உடலுக்கும் மனத்திற்கும் நல்லது. நானும் அவ்வாறே விரும்புகிறேன்.
ஆனால் நாளாந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிவதையும், விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து நிருபிக்கப்பட்டவற்றையும் மட்டுமே நான் மற்றவர்களுக்கு சிபார்ச்சு செய்ய விரும்புகிறேன்.

Ashwin Ji சொன்னது…

பாராட்டுக்கு நன்றி டாக்டர்.
நீங்கள் சொல்வது நூறு சதமானம் சரியே.
அறிவியல் பூர்வமான சரியான மருத்துவ முறைகளையே சிபாரிசு செய்யவேண்டும் என்பதே சரியான அணுகுமுறை.
மீண்டும் இதய நன்றி.
அடிக்கடி வாருங்கள். தங்களின் கருத்துக்களைத் தாருங்கள்.
தங்கள் பதிவுகளை நான் எனது வலைப்பூவில் தங்கள் பெயருடன் வெளியிடலாமா? அனுமதிப்பீர்களா?

கருத்துரையிடுக