ஞாயிறு, 7 டிசம்பர், 2014

யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம். 26.12.2014 to 29.12.2014

இயற்கை உணவே அருமருந்து.
யோகநலமே வாழ்வின் வளம்.

உங்களுக்கு நீங்களே மருத்துவர்.
இந்நினைவகற்றாதீர்..

இனி வரும் நாட்களில் ஒரு உண்மையான மருத்துவர்
தம்மிடம் உதவி தேடிவரும் நோயாளிகளுக்கு உணவினை நெறிப்படுத்திக் கொள்வதன் மூலமாக நோயில் இருந்து விடுபடும் நலவாழ்வியல் வழிகளை மட்டுமே சொல்லித் தருவார்...

இயற்கை நலவாழ்வுயோகா மற்றும் பிராணாயாமமுத்ரா போன்ற தலை சிறந்த நலவாழ்வியல் முறைகளை கைதேர்ந்த முன்னோடி நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுப் பயன்பெற ஒரு அரிய வாய்ப்பு.

26.12.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 29.12.2014 (திங்கட்கிழமை) வரை சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளியில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமினை இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களிடையே பரப்பி வரும்முன்னோடி சேவை நிறுவனமான ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

முகாமில் நான்கு நாட்கள் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோக விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு நலவாழ்வுப் பயிற்சியை கற்றுத் தேறபயன் பெற ஒரு நல்வாய்ப்பு.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும்,  முன்னோடிகளுமாக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா, யோகா ஆசான் தி.ஆ.கிருஷ்ணன், பொறியாளர் மெய்யப்பன் ஐயா போன்ற மூத்த பயிற்சியாளர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மேலும் பல சிறப்புப் பயிற்சியாளர்களிடம் இருந்து  ஒரே குடையின் கீழ் யோக முறைகளைப் பற்றியும், இயற்கை வழியிலான நலவாழ்வியல் நுட்பங்களை  கேட்டறிய நல்வாய்ப்பு.  

யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர்திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம்சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர்,  நல்வாழ்வு நிலையம்,  தண்டரைப்பேட்டை,  மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும்இயற்கை உணவுடன் வழங்கப்படும். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள்: 26.12.2014 (பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 29.12.2014 (பிற்பகல் நான்கு மணி வரை)

இடம்: குமரகுருபரர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி,
திருப்பனந்தாள் - 612504,
தஞ்சை மாவட்டம்.

முகாம் நன்கொடை:
குறைந்த பட்சம் ரூ.1400/-

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து முகாமுக்கு வர: 9, 34, 44, 27, 64 இலக்கமிட்ட அனைத்து டவுன் பஸ்கள் ஆடுதுறை வழியாக திருப்பனந்தாள் செல்லும்.

சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில விரைவுப் பேருந்துகளில் பயணிப்போர் முகாம் நடைபெறும் இடமான திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் இருந்து இலக்கம் 20, 40 பேருந்துகள் மூலமாக முகாமுக்கு வரலாம்.

இந்த ஆண்டு மே திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

50 பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப் படுவார்கள். எனவே முன்பதிவினை முதலில் பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும்..

எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் CAMP REGN என டைப் செய்து உங்கள் பெயர் முகவரியுடன் 9486768930 என்ற அலைபேசி எண்ணுக்கு உங்கள் பதிவுகளை SMS (குறுஞ்செய்தி) அனுப்பிட வேண்டுகிறோம்.

முக்கிய அறிவிப்பு:
இந்த செல்பேசி எண் குறுஞ்செய்தி மூலம் பதிவு செய்ய மட்டுமே. மற்ற விசாரணைகளுக்கு இந்த அலைபேசியை அழைக்க வேண்டாம்...

முகாம் நெறியாளர்: 
திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)

இயற்கை நல ஆர்வலருக்கான சேவையில்..
வாழி நலம் சூழ...

புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளித் திருநாள் (Diwali-2014) நல்வாழ்த்துக்கள்... வாழி நலம் சூழ...தீப மங்கள ஜோதி நமோ நம 
வாழி நலம் சூழ...

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

அஷ்வின்ஜி(ஹரிஹரன்)
மற்றும் குடும்பத்தினர்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் - இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.


இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.

இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல்


கழிவுகளின் தேக்கம்தான் நோய்க்கு காரணம். கழிவுகளை நீக்கினால் ஆரோக்கியம் தோன்றும் என்பது இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை. இயற்கை மருத்துவம் என்பது பஞ்சபூதங்களை கொண்டு சிகிச்சை செய்வதுதான். அது மூலிகை மருத்துவமல்ல; சித்த மருத்துவமல்ல. ஆயுர்வேத மருத்துவமும் அல்ல.. .உடல் நலத்தை கூட்டிக் கொள்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒரே செயல் சரியான உணவு முறையே.. மருந்து சாப்பிடுபவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் மருந்துகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள படி வைத்தியம் செய்து கொள்வதற்கு முன்னர் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்க. (நூல் ஆசிரியரின் முன்னுரையில் இருந்து)
"உங்க கிட்ட 230 ரூபாய் இருக்கிறது. அதை நீங்கள் செலவு செய்தால் நான் அதற்கு கிட்டத் தட்ட 25% தள்ளுபடி தருகிறேன்" என்றால் ரூ.230/-ஐக் கொண்டு என்ன வாங்குவீர்கள்? நீங்கள் எதைவேண்டுமானாலும் வாங்குங்கள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. நீங்கள் அதே கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டால் “நான் ஒரு ‘ஆரோக்கியப் புதையலை’ வாங்குவேன்” என்று சொல்லுவேன். 

இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல் என்ற மிக அற்புதமான இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டி நூல் ஒன்றை மின்னியல் பொறியாளர் திரு.ஆ.மெய்யப்பன் அவர்கள் எழுதி அந்த புத்தகத்தை பாப்புலர் பப்ளிகேஷன் நிறுவனத்தார் ரூ.176/-க்கு வெளியிட்டிருக்கிறார்கள்.

இப்போதைக்கு ஆரோக்கியத்தை வாங்கணும்னு டாக்டர்களிடம் போனால் ஐநூறு ரூபாய்க்கு குறையாமல் ஃபீஸ் வாங்குகிறார்கள். பின்னர் பலவித உடற்பரிசோதனைகள், மருந்து செலவு என்று தொடர் செலவுகள். அடுத்த முறை அதே டாக்டரிடம்/பரிசோதனை மையம்/மருந்தகம் போனால் தள்ளுபடி எல்லாம் கிடையாது. எல்லாரிடமும் கால் கடுக்கக் காத்திருந்து விட்டு பின்னர் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டுத் தான் வெளியே வரணும்.

இந்தச் சூழலில் ஓர் அற்புதமான ஆரோக்கியப் புதையலை கண்டடைய உங்களுக்கு கிடைத்திருக்கும் மந்திரச் சாவி தான் இந்த நூல். பயனுள்ள பல விவரங்கள் அடங்கிய 288பக்கங்களில் ரூ.230/- பெறுமானம் உள்ள இந்த அற்புத வழிகாட்டி நூலை வெறும் ரூ.176/-க்கு நூல் அறிமுகச் சலுகையாக பதிப்பகம் உங்களுக்கு தருகிறது.

நூலாசிரியர்: பொறியாளர் அ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G.Diploma in Yoga. நூலாசிரியர் தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் ஒருவரான சிவசைலம் இராமகிருஷ்ணரின் வழி வந்த பல்வேறு இயற்கை நலவாழ்வியல் அறிஞர்களிடம் நெருங்கிப் பழகி இயற்கை நலவாழ்வியல் கலையினை ஐயம் திரிபறக் கற்று தேர்ந்தவர். யோகக் கலையில் ஆசானாக விளங்கும் நூலாசிரியர், நிறைய இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்களை நெறிப்படுத்திய அனுபவம் கொண்டவர். 

இயற்கை நலவாழ்வியல் கருத்துக்களை பரப்புரை செய்ய உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அற்பணித்துச் செயல்படும் நேர்மையாளர். செட்டிநாட்டுக்கே உரித்தான விருந்தோம்பல் பண்பு கொண்டவர்; நோயால் வாடும், வசதியற்ற இயற்கை நல வாழ்வில் ஆர்வமுள்ளோருக்கு கணக்குப் பார்க்காது செலவிடும் புரவலர். 

இத்தனை செய்திகளையும் தெரிந்து வைத்திருந்தாலும் எல்லா முகாம்களிலும் மற்ற முக்கிய பேச்சாளர்கள் நடத்தும் வகுப்பில் முதல் வரிசையில், முதல் மாணாக்கராக அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொள்ளும் பண்பாளர். 

எழுபதுக்கும் மேல் அகவைகள் கடந்த நிலையிலும் கடினமான யோகாசனங்களை அனாயாசமாக செய்து காட்டும் வல்லுநர். இவரது தொடர்பு எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் நடத்திய முகாமில் கலந்து கொண்ட போது கிடைத்தது. அந்த தொடர்பு எனக்கு இன்றளவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் யோகா வகுப்பில் நான் சேர்ந்த போது அவ்வகுப்பில் நூலாசிரியரும் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். 'ஐயா, நீங்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர். உங்களுக்கு எதற்கு இந்தப் பட்டயப் படிப்பு என்று வினவிய போது அவர் அளித்த பதிலில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் தெரிந்தது. கல்விக்கு வயது கிடையாது. ஆர்வமும், முயற்சியும் தான் என்பதை அன்று நான் அறிந்து கொண்டேன். தொடர்ந்து நான் எம்.எஸ்.சி (யோகா) பயின்ற போது தம்மிடம் உள்ள நல்ல நூல்களையெல்லாம் எனக்குத் தந்து உதவிய பாங்கினை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். நான் தயாரித்த தீசிசுக்கு அவர் அளித்த உதவிகளை எப்படி மறக்க முடியும்? அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவரது சேவைகளை கண்கூடாக அருகில் இருந்து பார்த்து வருபவன் என்ற வகையில் இந்த நூலை பற்றி அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.
     
இந்த நூலுக்கான செய்திகளை இவர் பல ஆண்டுகளாக திரட்டிச் சேர்த்திருக்கிறார். அதற்கான உதவிகளை செய்தவர்களை எல்லாம் நன்றி மறவாமல் அவர்களை இந்நூலின் துணை ஆசிரியர்களாக கவுரவப்படுத்தி இருக்கிறார். தனது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டங்களிலும் தான் பெற்ற நலவாழ்வியல் அனுபவங்களை, அதற்குக் காரணமானவர்கள் எல்லாரையும் இந்தப் புத்தகத்தில் மறவாமல் நினைவு கூர்ந்திருக்கும் இவரது நேர்மைப் பாங்கு போற்றற்குரியது.

இந்த நூலின் அனைத்துப் பக்கங்களில் உள்ள அரிய பல செய்திகளை உள்வாங்கி, அவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்தினாலே போதும். வேறு எந்த நூலையும் நீங்கள் கற்க வேண்டியதில்லை என்ற உறுதியினை நான் உங்களுக்கு அளிக்கிறேன். ஏனெனில் நூலாசிரியர் மட்டுமின்றி, இந்நூலின் மற்ற ஆசிரியர்களையும் நான் நேரில் கண்டு பழகி இருக்கிறேன். அவர்களிடம் நலவாழ்வியல் பயிற்சிகளைப் பெற்றிருக்கிறேன். துறை வல்லுனர்களை இந்த நூலின் ஆக்கத்தில் ஈடுபடுத்தி இந்த நூலில் செழுமை, கருத்து வளம் மேம்பட உழைத்திருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. தமிழகம் எங்கும் இயற்கை நலவாழ்வு முகாம்கள் நடக்கும் இடம், நடத்துபவர்களின் பெயர்கள், அமைப்புகளின் முகவரி, மற்றும் நலவாழ்வியல் அறிஞர்களின் முகவரிகள், தொடர்பு எண்கள் போன்ற செய்திகள் அனைத்தும் ஒரு நூலுக்குள்ளேயே ஒருங்கமைந்து இருப்பது உங்கள் வாழ்நாள் முழுதும் பயன் அளிக்கவல்லவை. 

இந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் உங்கள் வாழ்க்கைக்கு நலம் சேர்க்கும் பக்கங்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். நூலை முழுதும் ஊன்றிப் படித்து ஒவ்வொரு நடைமுறைகளையும் முயன்று பின்பற்றினால், அதன் பின்னர் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. இந்தச் செய்திகளை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களை நலவாழ்வுக்கு இட்டுச் செல்ல, நீங்களும் ஒரு நலவாழ்வியல் ஆலோசகராக சேவை செய்ய இந்த புத்தகம் உதவும்... மேலும் மற்றவர்களுக்கு இந்த நல்லதொரு அற்புதப் புதையலைப் பரிசளிப்பதின் ஒரு நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நீங்களும் பங்கெடுக்கும் ஒரு அற்புத நல்வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.  

நூல் விவரம்:

தலைப்பு: இயற்கை உணவில் ஆரோக்கியப் புதையல்

பக்கங்கள்: 288 (தரமான அச்சுக் கோர்ப்பு நேர்த்தியான கட்டுமானம்).

61 தலைப்புக்களில் அரிய செய்திகள்.

பதிப்பாசிரியர்; வி.சு.வள்ளுவன்

நூல் வெளியீடு/விற்பனையாளர்: 
பாப்புலர் பப்ளிகேஷன்ஸ், 
10/3, எத்திராஜ் தெரு, 
பத்மநாப நகர், 
சூளை மேடு, 
சென்னை – 94,

Mobile No.9787555182/9566063452
இது ஒரு சேவைச் செய்தி.

இயற்கை நல வாழ்வியல் ஆர்வலர்களின் நலவாழ்வுக்காக தொடர் சேவையில்... 

அஷ்வின்ஜி@ A.T.Hariharan, M.Sc (Yoga)
வாழி நலம் சூழ..

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

75000 பார்வைகள்
75000 பார்வைகளை இந்த வலைப்பூவில் பதித்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் இதய நன்றி.


வெள்ளி, 28 மார்ச், 2014

யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம்.

இயற்கை உணவே அருமருந்து.
யோகநலமே வாழ்வின் வளம்.

உங்களுக்கு நீங்களே மருத்துவர்.
இந்நினைவகற்றாதீர்..

இனி வரும் நாட்களில் ஒரு உண்மையான மருத்துவர்
தம்மிடம் உதவி தேடிவரும் நோயாளிகளுக்கு உணவினை நெறிப்படுத்திக் கொள்வதன் மூலமாக நோயில் இருந்து விடுபடும் நலவாழ்வியல் வழிகளை மட்டுமே சொல்லித் தருவார்...

இயற்கை நலவாழ்வு, யோகா மற்றும் பிராணாயாம, முத்ரா போன்ற தலை சிறந்த நலவாழ்வியல் முறைகளை கைதேர்ந்த முன்னோடி நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுப் பயன்பெற ஒரு அரிய வாய்ப்பு.

28.04.2014 to 04.05.2014 ஆகிய ஏழு நாட்களில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளியில் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமினை இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களிடையே பரப்பி வரும், முன்னோடி சேவை நிறுவனமான ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோக விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு நலவாழ்வுப் பயிற்சியை கற்றுத் தேற, பயன் பெற ஒரு நல்வாய்ப்பு.

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளுமாக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.

யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர், திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம், சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர், நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை, மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவங்கும் நாள்: 28.04.2014 (பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவடையும் நாள்: 04.05.2014 (பிற்பகல் இரண்டு மணி வரை)

இடம்: குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளி,
திருப்பனந்தாள் - 612504,
தஞ்சை மாவட்டம்.

முகாம் நன்கொடை:
ஆண்கள்: ரூ.2400 /-
பெண்கள் ரூ.2200/-
மாணவர்கள் ரூ.2000/-

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து முகாமுக்கு வர: 9, 34, 44, 27, 64 இலக்கமிட்ட அனைத்து டவுன் பஸ்கள் ஆடுதுறை வழியாக திருப்பனந்தாள் செல்லும்.

சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில விரைவுப் பேருந்துகளில் பயணிப்போர் முகாம் நடைபெறும் இடமான திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் இருந்து இலக்கம் 20, 40 பேருந்துகள் மூலமாக முகாமுக்கு வரலாம்.

கடந்த ஆண்டு மே திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் முகாம் இயக்குனரை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)
செயலாளர், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்,
தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு.

முன்பதிவுக்காக மட்டும் முகாம் இயக்குனரை அவரது இல்லத் தொலைபேசி 0435-2472816 எனும் எண்ணில் காலை எட்டு மணிமுதல் ஒன்பது வரையிலும், இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரையில் அழைக்கவும்.

முகாம் பற்றிய மற்ற விவரங்களுக்கு திரு.அ.மெய்யப்பன், (சென்னை) அவர்களை 9444323730 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாழி நலம் சூழ...

சனி, 15 பிப்ரவரி, 2014

தோப்புக்கரணம்-முன்னோர்கள் தந்த வரம்

நலமே வளம்
தோப்புக்கரணம்
முன்னோர்கள் தந்த வரம்.
இன்றைய யுகத்தின் பெரும் சவாலான அட்டென்ஷன் டிஃபிசியன்ஸி (Attention Deficiency) என்னும் கவனச்சிதறல் பிரச்சினைக்கான தீர்வு நம் முன்னோர்கள் தந்த அறிவியல் பூர்வமான வரம்.

இன்றைய உலகம் மிகவும் இயந்திரத்தனமாகி விட்டது. எல்லோரும் நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பெரியவர்கள் ஆயிரம் வேலைகளையும் ஆயிரத்தோரு சிந்தனைகளையும் மனதில் நிரப்பி அடுத்து என்ன அடுத்து என்ன என உழன்று திரிகிறார்கள்.

குழந்தைகளோ பாவம் படிப்பு படிப்பு என்று ஒரு பக்கம் ஓடி, படிப்பு மட்டும் போதாது; ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று விரட்டி அடிக்கும் பெற்றவர்களால் அடுத்து என்ன வகுப்பு அடுத்து என்ன என்று இடை விடாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லோரும் நித்தம் மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு நம்மை நிலை நிறுத்திக் கொள்ள நாமும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இப்படி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தில் வரும் ஓரு பெரும் வேகத்தடை-வழியில் கவனக்குறைவு.

எதையும் சாதிக்கும் சக்தி கொண்ட மனித மனம் கவனக் குறைவு பிரச்சனையை வியாதிப் பட்டியலில் சேர்த்து வகைப்படுத்தி வைத்துள்ளது. இந்தக் கவனக் குறைவுப் பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகள் மனதை உத்வேகப்படுத்தும் சில பயிற்சிகள் தியானம் இத்யாதி என்று பல வழிகளில் தீர்வு காண முயலும் நவீன உலகம் நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துச் சென்ற மிகவும் எளிமையான ஒரு பயிற்சி முற்றிலும் மறந்தே போய் விட்டது. குட்டிக் கரணம் போடும் குரங்கிலிருந்து வந்த மனிதனின் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆற்றல் பெறச் செய்யும் அந்த எளிய பயிற்சி தோப்புக் கரணம்.

நம் முன்னோர்கள் எதையும் காரணமில்லாமல் செய்யவில்லை. அன்றைய கால கட்டங்களில் குழந்தைகளுக்குப் படிப்பு சரியாக வராத போது அல்லது அவர்களின் கவனம் சிதறும் போது அந்நாளைய ஆசிரியர்கள் அவர்களை 50 அல்லது 100 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லிச் சரி செய்வார்கள். இன்று கல்வித்துறை ஆய்வாளர்களும் உளவியல் நிபுணர்களும் மருத்துவ நிபுணர்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பயிற்சியாளர்களும் கலைத் துறையைச் சேர்ந்தவர்களும் தோப்புக்கரணம் என்ற இந்த எளிய பயிற்சியை மூளையின் திறனை அதிகரிக்கும் பயிற்சியாகவே பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல் திறனை ஊக்கம் தந்து அதிகரிக்க இந்தத் தோப்புக்கரணத்தை 'சூப்பர் ப்ரெயின் யோகா' என்று பெயரிட்டுப் பயிற்சி செய்து வருகின்றனர். கவனக் குறைவு வியாதி கொண்ட சிறியவர்கள் பெரியவர்கள் அனைவருக்கும் சிறந்த தீர்வைத்தரும் பயிற்சி இந்தத் தோப்புக் கரணப்பயிற்சி என்று அடித்துச் சொல்கிறார் அமெரிக்காவின் ':யேல்' பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பு அணுவியல் மருத்துவ நிபுணர் யுகேனியஸ் ஆங்., இதைப் பல ஆய்வுகளைத் தந்து நிரூபிக்கிறார் அவர். தோப்புக்கரணம் நமக்கு நன்றாகவே தெரிந்த பயிற்சிதான் என்றாலும் அதை முறையாக எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம்.

1. இப்பயிற்சியைச் சூரியன் எழும் நேரத்தில் கிழக்குத் திசையை நோக்கி நின்று கொண்டு செய்வது சிறந்தது. (காலைச் சூரியனின் கதிர்கள் மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் குறிப்பாய் எலும்புகளுக்கும் மிக நல்லது.)

2. நேராக நிமிர்ந்து நில்லுங்கள். கால்களின் இடைவெளி உங்கள் தோள்பட்டையின் அகலத்திற்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். முதலில் இடது கையால் வலது காது மடலையும் பிறகு வலது கையால் இடது காது மடலையும் பிடிக்கவும். பிறகு நாக்கை மேலண்ணத்தோடு ஒட்டும்படி வையுங்கள். உங்கள் கட்டைவிரல் காது மடலின் பின்புறத்தில் இருக்கட்டும்
மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுத்து (வாய்வழியே அல்லமெதுவாகக் கீழே செல்லுங்கள். (நாற்காலியில் அமர்வது போன்ற நிலைக்கு)). கீழே சென்றவுடன் சில நொடிகளுக்கு மூச்சை இழுத்துப் பிடிக்கவும்.பிறகு மெதுவாக மேலே வரவும்மேலே வரும்போது மூச்சை வெளியேவிடவும்வாய் வழியே அல்ல.)

3. இதேமாதிரி 7 அல்லது 14 அல்லது 21 முறை செய்யவும். வலது கை மேலேயும் இடது கை கீழேயும், கட்டைவிரல் காதுகளின் பின்புறத்திலும், நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டியும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் முழுவதும் காலை மடித்து முட்டியை மடக்கிக் கீழே உட்காரும் நிலைக்குக் கீழே செல்லவேண்டாம். நாற்காலியில் உட்கார்ந்து எழுந்து கொள்வதைப்போலச் செய்தால் போதுமானதாகும்.
இந்த தோப்புக் கரணப் பயிற்சி மூலாதாரம் மற்றும் சுவாதிஷ்டான சக்தி நிலைகளிலிருந்து உயிர்ச்சக்தியை மேலெழுப்பி மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் அளவை, ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. காதுகளைப் பிடிப்பது, காது மடல்களில் இருக்கும் மூளைக்கான அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி, மூளைக்குச் சக்தியினை ஓட்டத்தை அதிகப் படுத்துகிறது. நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டி வைப்பதால் மேல் நோக்கிச் செல்லும் சக்தியின் ஓட்டம் தடையில்லாமல் சீராக இருக்கும். தோப்புக் கரணப் பயிற்சியைச் சில வாரங்களுக்குத் தொடர்ந்து செய்தால், நிச்சயம் பலன் தெரியும். சிறியவர் பெரியவர் என எல்லோருக்கும் தேவையான இந்த எளிய பயிற்சியைத் தொடர்ந்து செய்வோம். கவனக்குறைவு என்ற பிரச்சனையைக் களைவோம்.

செய்வோமே
தினமும் 14 செட் தோப்புக்கரணம் போடுவேன். என் சக்திநிலை, மனநிலையை மேம்படுத்துவேன்.

நன்றி.: விஜயலட்சுமி.ஜெ
இன்ஃபினி ஜனவரி (16-31 2014) இதழ்
Pictures: Courtesy: Google images.