செவ்வாய், 26 ஏப்ரல், 2016

31-வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம் May 2016 கும்பகோணம்.

ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் 
அளிக்கும் 31வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.

உணவே மருந்து.
மருந்தே உணவு.

நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள்உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாகஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக  அஜீரணம்வாயு உபத்திரவம்மலச்சிக்கல்நெஞ்செரிச்சல்(அசிடிடி-Acidity) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன. 

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோகா மற்றும் இயற்கை நல வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும்குறைவற்ற செல்வத்தையும் தரும். 

ஒரு இனிய செய்தி:

கும்பகோணத்தில் வருகிற மே மாதம்  இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம், ஒரு வார காலம் நடைபெற உள்ளது. சிறந்த நல வாழ்வியல் முறைகளை தேர்ந்த நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.

இம்மாதம் 21.5.2016 முதல் 27.5.2016 வரை கும்பகோணம், கீழகொட்டையூரில் உள்ள வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமினை ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சியை கற்றுக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு நலமுடன் நோயின்றி வாழ உங்களை அன்போடு அழைக்கிறோம். 

தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் திரு.இராமலிங்கஅம், அவர்கள் முகாம் இயக்குனராக இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள். 

இயற்கை நலவாழ்வியல் அறிஞரும் மற்றும் யோகா பேராசான், யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர்திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம்சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர்நல்வாழ்வு நிலையம்தண்டரைப்பேட்டைமதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும்இயற்கை உணவுடன் வழங்கப்படும்.

இயற்கை வாழ்வியல் நெறியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

முகாம் துவக்கம்:21.5.2016 (சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவு: 27.5.2016(வெள்ளிக்கிழமை-பிற்பகல் நான்கு மணி வரை)

இடம்: வள்ளலார் தொடக்கப் பள்ளி
கீழகொட்டையூர், கும்பகோணம்
தஞ்சை மாவட்டம்.

பயிற்சிக் கட்டணம்: ஆடவர் ரூ.2600 /- மகளிர்: ரூ.24௦௦ 
மாணவ மாணவியர் (10லிருந்து 18 வயது வரை): ரூ.2200.

அணுக வேண்டிய முகவரி:

திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)
செயலர், 
ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம், 
14, அக்ரஹாரம்தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம்
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
அலைபேசி:9486768930

ஐம்பது பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். எனவே முகாமில் பங்கு பெறுவதற்கான அனுமதியினை முன்னதாக பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பி முன்பதிவு பெற்றுக் கொண்டு முகாமுக்கு வரவேண்டுகிறோம். முகவரி தருபவருக்கு முகாம் விவரத் தொகுப்பு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தகவல் தேவைப்பட்டால் காலை 8 மணி முதல் 9 மணி வரை அலைபேசி எண்: 9486768930 மூலம்  செயலரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

வாழி நலம் சூழ...