வியாழன், 9 டிசம்பர், 2010

16.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.
 
இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
 
பகுதி 15: 25.  உண்ணா நோன்பு:
 
மேலும் தொடர்கிறது....

27. ஜீரண சக்தியை அதிகரிக்க
ஜீரணசக்தி குறைபாடுள்ளவர்கள் தினமும் 2 ஸ்பூன் இஞ்சி சாறு அருந்தலாம்.  ஜுஸ் எடுத்து ஒரு சிறு கிண்ணத்திச் வைத்து  சிறிது நேரம் (15 நிமிடம்) கழித்து அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.  (அடியில் வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருளை உண்ணக்கூடாது)  ஒரு ஸ்பூன் தேனுடன் அருந்த வேண்டும்.  அல்சர் நோயளிகளுக்கு இது தேவையில்லை.  அவர்கள் ஜீரகத்தை மெல்லலாம்.  மேலும் ஜீரகம், மிளகு,  கொத்தமல்லி விதைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரும் அருந்தலாம். (வெதுவெதுப்பாக).

28. சிறுநீரகநோயாளிகள்தண்ணீர் அருந்தலாமா?
சாறுள்ள பழங்களை மட்டுமே உண்டு வந்தால் சிறுநீரக நோயாளிகள் தாக உணர்வு தோன்றும் போது தண்ணீர் அருந்தலாம்.   சாறுள்ள பழங்களை மட்டுமே உண்பதால் தாக உணர்வும் கம்மியாகவே இருக்கும்.  கிட்னி பாயிண்டில் கைகளிலும், கால்களிலும் அக்குபிரஷர் அ ழுத்தம் கொடுக்கலாம்.  சர்க்கரையும், உப்பும் அறவே சேர்க்கக்கூடாது.சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் நிறைய தண்ணீர் கல் கரையும் வரை அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். உடலில் உள்ள  கால்சியத்தை கிரகித்துக் கொள்ளூம் தன்மை குறைவாக இருப்பதாலும் பால், பால் பொருட்களை அதிகமாக உண்பதாலுமே கற்கள் உண்டாகிறது.   இதற்கு அக்கு பிரஷரில் தைராய்டு மற்றும் கிட்னி பாயிண்டில் அழுத்தம் கொடுத்தால் விரைவில் குணம் அடையலாம்.  (மேலும் விவரங்களுக்கு நம்  நலம் நம் கையில் பாகம்1 & தேவேந்திர வோரா).  வாழைத்தண்டு ஜுஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவும்.  பழரசங்களை மட்டுமே அருந்தி வந் தால் விரைவில் குணம் கிடைக்கும். 
 
மண்பானையிலும், ஈயம் பூசப்படாத செம்பு பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள நீரை அருந்துவது நல்லது. துளசி இலைகளை த ண்ணிரில் போட்டும் அருந்தலாம்.

29. எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்?
இயற்கை உணவு உட்கொள்பவர்களூக்கு தண்ணீர் அருந்த அளவு பார்க்க வேண்டியதில்லை.  தாக உணர்வு தோன்றுபோதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்.  உடலை தூய்மைபடுத்த தினமும் 3-to-5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது சமையலுணவில் இருப்பவர்களுக்கே  பொருந்தும்.

30. இயற்கை உணவுக்கு மாறமனக்கட்டுப்பாடு பெறுவது எப்படி?
(1) அக்கு பிரஷர் செய்யவும்.  நாளமில்லா சுரப்பிகளிலும், பலவீனமான உறுப்புகளுக்குரிய பாயிண்டுகளிலும் அழுத்தம் கொடுக்கவும்.  நாளமில்லா  சுரப்பிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் எளிதில் மனஉறுதி பெற உதவும்.
(2) தியானம்.
(3) இயற்கை உணவு குறித்து தினமும் 2 பக்கங்களாவது படிக்கவும்.
(4) இயற்கை உணவு உட்கொள்பவர்களோடு தொடர்பு வைத்திருக்கவும்.

31.   மன ரீதியாக தயாராதல்
பள்ளிக்கு குழந்தைகள் செல்ல தயாராவது போல ஒருவர் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் முன்னர் மனரீதியாக தயாராக  வேண்டும்.  இந்த கட்டுரை இயற்கை உணவு பற்றி புரிந்து கொள்ள ஓரளவு உதவியாக இருக்கும்.  ஆர்வமுள்ளவர்கள் வலைதளம் மற்றும் புத் தகங்கள் மூலம் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிந்து கொள்ளலாம்.  மேலும் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிய தெரிய அவரால் தன்  உடலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பின் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை கவனிக்க முடியும்.  கழிவுகள் வெளியேற்றத்தை கண்டு  அஞ்ச மாட்டார்கள்.  எனவே நோயிலிருந்து குணமடைய இயற்கை உணவு உண்பவர்கள் இயற்கை உணவு குறித்து நன்றாக புரிந்து கொண்டு  மனரீதியாகவும் தயாராக வேண்டும்.  நோயாளிகளின் ஒத்துழைப்பு குணமடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயற்கை உணவு உட்கொள்பவர் எப்போதும் நேர்மறை எண்ணங்களையே மனதில் வைத்திருக்க வேண்டும்.  ’நான் குணமடைய  போகிறேன்’, ’நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்’ போன்றஎண்ணங்களை மனதில் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  இயற்கை  உணவு உண்பது குறித்து கேலி, கிண்டல் செய்வோரை விட்டு விலகி இருக்கவும்.  நன்றாக சிரிக்கவும்.  நன்றாக சிரிப்பவர்கள் எளிதில்  நோய்வாய்ப்படுவதில்லை.
(தொடரும்)
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

15.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.

பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 

பகுதி: 11. ஈரமண்பட்டி, ஈரத்துணிபட்டி, சூரிய ஒளிக் குளியல், எண்ணெய் கொப்பளித்தல் பற்றிய விளக்கங்களும், செய்முறைகளும். 

பகுதி 12 : ஸ்பேஸ் லா (வெளி விதி) மற்றும் தினசரி உணவில் தவிர்க்க/குறைக்க வேண்டிய சங்கதிகள்.


பகுதி 14: அக்கு பிரஷர்(ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?)

ஆரோக்கியம் ஆனந்தம் தொடர்கிறது......

பகுதி 15: 
 
 25.  உண்ணா நோன்பு:

ஸ்பெயின் பொன்மொழி: 100 வைத்தியர்களை அழைப்பதை விட ஒரு வேளை உணவை இழப்பது மேலானது.

ஸ்காட்லாந்து பொன்மொழி:தனக்கு நோய் உண்டாகும் வரை உண்ணும் ஒருவன் நோய் குணமாகும் வரை உண்ணாமலிருக்க வேண்டும்.

 
உண்ணா நோன்பு ஒரு உயரிய மருந்தாகும்.  அது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு தருகிறது.  பஞ்சத்தால் பட்டினியால் மரணம்  அடைபவர்களை விட பெருந்தீனீ உண்டு மரணம் அடைபவர்களே அதிகம்.  விலங்குகள் கூட உடல் நிலை சரியில்லையென்றால் உண்ணாவிரதம்  இருக்கும்.  மனிதன் மட்டுமே உடல் நிலை சரியில்லாத போதும் உண்டு உடலை சீரழிக்கிறான்.

26. உண்ணா விரதம் இருப்பது எப்படி?  
தாகம் எடுக்கும் போது தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.  இயலாதவர்கள் பழரசங்கள் அருந்தலாம்.  சிறிது உடல்நிலை  தேறிய பிறகு சாறுள்ள பழங்கள் (திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு) போன்ற பழங்களையும் பிறகு சதையுள்ள (ஆப்பிள்,  பப்பாளி) முதலிய பழங்களையும் உண்ணலாம்.  உடல் நிலை சீரான பிறகு கொட்டை பருப்புகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  உண்ணவிரதம்  இருக்கும் போது ஓய்வெடுப்பது அவசியம்.  காற்றோட்டமுள்ள இடங்களில் ஓய்வெடுப்பது நல்லது.  நம் ஆற்றலை உறிஞ்சும் வேலைகளான டிவி  பார்ப்பது, அதிகம் பேசுவது, இசை கேட்பது, அதிக தொலைவு நடப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.  நம் உடலுக்கு அது தன்னை  தானே சீர்படுத்தி கொள்ள தேவையான ஆற்றலை நாம் ஓய்வெடுத்து அளிக்க வேண்டும்.  
உண்ணாவிரதம் இருப்பதால் நம் உடலின் நச்சுத்தன்மை குறைகிறது. அதனால் நோய்களும் குணமடைகிறது.
ஆரோக்கியம் ஆனந்தம் தொடரும்....
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

14.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.

பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 

பகுதி: 11. ஈரமண்பட்டி, ஈரத்துணிபட்டி, சூரிய ஒளிக் குளியல், எண்ணெய் கொப்பளித்தல் பற்றிய விளக்கங்களும், செய்முறைகளும். 

பகுதி 12 : ஸ்பேஸ் லா (வெளி விதி) மற்றும் தினசரி உணவில் தவிர்க்க/குறைக்க வேண்டிய சங்கதிகள்.


ஆரோக்கியம் ஆனந்தம் தொடர்கிறது......

24.      அக்கு பிரஷர்(ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?)
இது நோய்கள் நீங்க கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் ஒரு முறையாகும்.  (இது அக்குபங்சர் கிடையாது. இதற்கு  ஊசியோ முறையான படிப்போ தேவையில்லை),  ஆனால் அக்குபிரஷர் மட்டுமே நோய்களை குணமாக்க போதுமானதல்ல.  இயற்கை உணவு  உண்பதே நோய் குணமாக அஸ்திவாரமாகும்.  

இயற்கை உணவும் உண்டு அக்கு பிரஷரையும் செய்து வந்தால் நோய் விரைவில் குணமடையும்.  உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலிருந்து வரும் நரம்புகளும் உள்ளங்காலில் மற்றும் உள்ளங்கையில் முடிவடைகிறது என்ற் உண்மையை கொண்டு அக்குபிரஷர் செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் நம் கைகளில் மற்றும் கால்களில் அழுத்தம் கொடுத்தால் ஒரு சிறிய மின்காந்த அலை எழும்பி பாதிக்கப்பட்ட  உறுப்பை சென்று அடைகிறது.  இதனால் பாதிக்கப்பட்ட பகுதி குணமடைய ஆரம்பிக்கிறது.

வலியுள்ள இடத்தில் அழுத்த வேண்டும் என்பது அக்குபிரஷரின் விதியாகும். பாதிக்கப்பட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் அழுத்தம் கொடுக்கும்  பொழுது நோயின் தன்மைக்கேற்ப வலி தெரியும்.  (இந்த வலி கொடுக்கப்படும் அழுத்தத்தை விட வித்தியாசமாக இருக்கும்.)  வலி அதிகமாக இ ருந்தால் அந்த உறுப்பு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.  அதற்கு பயப்படத்தேவையில்லை.  இயற்கை உணவு உண்டு அக்கு பிரஷரும் சரியாக செய்து வந்தால் நோயிலிருந்து விரைவில் விடுபடலாம்.

நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன.  அவையாவன:
 
(1)பிட்யுட்டரி
  (2)பீனியல்
  (3)அட்ரீனல்
  (4) பான்கிரியாஸ்
  (5) நாபிச் சக்கரம்
  (6) தைராய்டு
  (7) பாலியல் சுரப்பிகள் ஆகும்.

இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு,  தைரியம், கருணை, வைராக்கியம், பொறுமை, எளிமை, பொது நலம், சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர்.  இவை சரியாக செயல்படாவிட்டால் அதிக காமம், கோபம், பிடிவாதம், அமைதியின்மை, சிடுசிடுப்பு, ஆடம்பர பொருட்கள் மேல் மோகம், கோழைத்தனம், அதிக ஆசை, சுயநலம்,  சோம்பேறித்தனம், சோர்வு, தற்கொலை எண்ணம், திருடும் எண்ணம், கொடூரம், பயம் போன்றவற்றுடன் காணப்படுவர்.  எனவே மனரீதியான  பிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவு, தியானம் மற்றும் அக்குபிரஷர்(முக்கியமாக நாளமில்லா சுரப்பிகளில் எந்த சுரபி குறைபாடுடன் இருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்) செய்து வந்தால் வியக்கத்தக்க மாறுதல்களை காணலாம்.  குற்றவாளிகளை  கூட இந்த சிகிச்சை முறையால் திருத்தி விட முடியும்.

நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில் விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம்.  மேலும் சீப்பு, துணிகிளிப், ரப்பர் பாண்டு, மரக்குச்சி, துணி துவைக்கும் பிரஷ் கூட பயன்படுத்தலாம்.  இவைகளை கொண்டு நாம் டிவி  பார்க்கும் பொழுதும், கணினியில் வேலை செய்யும் பொழுதும், புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர்  கொடுக்கலாம்.  நாளமில்லா சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.  

மேலும் விவரங்களுக்கு 'நம் நலம் நம் கையில்’ என்ற தேவேந்திர வோரா அவர்கள் எழுதிய புத்தகம் உதவும்.  இந்த புத்தகம் நமது  பாரத பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் பாராட்டப்பட்ட புத்தகமாகும்.  அவர் 90 வயது வரை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.  இந்த புத்தகம் மேலும் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. பல்வேறு நோய்களுக்கு (கேன்சர், மூளைப் புற்று, எய்ட்ஸ், நீரிழிவு, இரத்த அழுத்தம் உட்பட) அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகள் புத்தக த்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.  இதை பார்த்து நாமே நமக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகளை கண்டுபிடிக்கலாம். 

கெட்டப் பழக்கங்களான புகை, புகையிலை, குடிப்பழக்கம், போதை மருந்து போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டிய பாயிண்டு களும் இந்த புத்தகத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.  நமக்கு நாமே டாக்டராகிவிடலாம்.  நமக்குரிய சிகிச்சையை நாமே முடிவு செய்து  கொள்ளலாம்.
 
ஆரோக்கியம் ஆனந்தம் தொடரும்....
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.