4. ஆரோக்கியம் ஆனந்தம்.
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
7. இயற்கை உணவு உண்டால் நடப்பது என்ன?
நாம் இயற்கை உணவு உண்ணும் பொழுதோ அல்லது இயற்கை சக்திகளான மழை, சூரியன், சுத்தமான நீர், சுத்தமான காற்று போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் பொழுதோ நம் உடலில் சமைத்த உணவினாலோ அல்லது தீய பழக்க வழக்கத்தினாலோ உண்டான கழி வுகள் உடலில் இருந்து வெளியேறத் தொடங்குகிறது. அதனால் தான் பழங்கள் உண்ணும் போது சளி பிடிக்கிறது, வெயிலில் செல்லும் போது தலைவலியும் மழையில் செல்லும் போது காய்ச்சலும் வருகிறது. ஆனால் நாம் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும், வெயில், மழை ஒத்துக்கொள்ளாது என்று கூறி இயற்கையை விட்டு விலகி இருக்கிறோம். மருந்து மாத்திரைகளை உண்டு கழிவுகளை வெளியேறவிடாமல் உடலுக்குள்ளேயே அடக்கி உடல் நலனை மேலும் கெடுத்துக் கொள்கிறோம்.
8. கழிவுகளின் நீக்கம் எப்படி நடக்கும்?
இயற்கை உணவு உண்ணும் பொழுது நம் உடலில் இருந்து பல வகையில் கழிவுகள் வெளியேறத் தொடங்கு கிறது. அவற்றை கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. நம் உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுகிறது என நாம் மகிழ்ச்சி அடையவேண்டும்.
பல வகை கழிவுகள் வெளியேற்றம்
(1) தலைவலி(2) உடல் வலி
(3) சோர்வு
(4) தூக்கம்
(5) காய்ச்சல்
(6) தோல் வியாதிகள்
(7) வயிற்று போக்கு
(8) சளி, இருமல்
(9) நகங்களின் வழியாக
(10) உடல் துர்நாற்றம்
(11) வாய் துர்நாற்றம்
(12) வாந்தி
இவை அனைத்தும் நம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதன் அடையாளமே தவிர பயப்படத் தேவையில்லை. நோயாளியின் மன உறுதி, தைரியம். ஒத்துழைப்பு இவையே முக்கியமாகும். இயற்கை உணவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒருவர் நன்றாக புரிந்து கொண்டால் அது அவர் விரைவில் குணமாக உதவும்.
9. கழிவுகள் நீங்கும் பொழுது செய்ய வேண்டியது
கழிவுகள் நீங்கும் பொழுது இயன்ற அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.
தலை வலி
எனிமா எடுக்க வேண்டும். தலை வலி குறையும் வரை ஈரமண் பட்டி அல்லது ஈரத்துணிப் பட்டி தலையிலும் அடிவயிற்றிலும் போட வேண்டும். வாழை இலை குளியல், சூரிய ஒளி குளியல் உகந்தது. நீராவிக் குளியல் மழைக் காலங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் எ டுக்கலாம்.
உடல் வலி, சோர்வு, தூக்கம், சளி, இருமல் அதிக அளவு பழச்சாறுகள் (சாறுள்ள பழங்களான மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, நெல்லி, எ லுமிச்சை) எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு குடிக்கும் போது 5 சொட்டு+200 மி.மி. தண்ணீர் எனக் குடிக்க வேண்டும். பேரிச்சம் பழங்கள் நிறைய உண்ணலாம்.
எனிமா, ஈரத்துணிப்பட்டி, ஈரமண்பட்டி தலையிலும் அடிவயிற்றுலும் போடலாம். பழச்சாறுகள் நிறைய அருந்தலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால் இடுப்புக் குளியல் எடுக்கலாம்.
உடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றம்
இயற்கை உணவையே தொடர்ந்து கடைபிடிக்கவும். வாழை இலை குளியல், மண் குளியல் உகந்தது.
வாந்தி.
கல்லிரலில் உண்டாகும் வெப்பத்தினால் தான் வாந்தி ஏற்படுகிறது. சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் இளநீர் ஆகியவை குடித்து வந்தால் வெப்பம் தணியும். முழு ஓய்வு எடுக்க முடிந்தால் உண்ணா நோன்பு இருக்கலாம்.
தோல் வியாதிகள்
காய்கறி மற்றும் பழச்சாறுகளை தோலில் பாதிக்கப்பட்ட இடங்களில் போடுவது உகந்தது. சுத்தமான மண்ணையும் போடலாம்.
வயிற்றுப் போக்கு.
மாதுளம் பழச்சாறும் இளநீரும் நிறைய அருந்த வேண்டும். (அதிக அளவு பழம் வாங்க இயலாதவர்கள் பச்சை இலைச் சாறு (புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை,கீரை வகைகள்) சேர்த்துக் கொள்ளலாம்.) அதில் நெல்லிக்காயும் சிறிதளவு இஞ்சியும் சேர்க்கலாம்.
10. சிகிச்சையின் போது நினைவில் கொள்ள வேண்டியவை
(1) நோயாளி முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியுது அவசியம்.
(2) உறக்கம் வந்தால் நன்றாக உறங்க வேண்டும்.
(3) யோகா, மூச்சுப் பயிற்சிகள் தேவையில்லை.
(4) ஒரு நேரம் எனிமா எடுக்க வேண்டும்.
(5) ஜுஸ் பாஸ்டிங் (பழச் சாறு உண்ணா நோன்பு) இருந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
(6) வலி, காயம், வீக்கம் இருக்கும் இடத்தில் ஈரத்துணிப்பட்டி அல்லது ஈர மண் பட்டி போடலாம். பூச்சிக்கொல்லி மருந்தோ உரமோ போடாத சு த்தமான மண்ணா இருக்க வேண்டும். பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும் முல்தானி மிட்டி என்ற மண்ணையும் உபயோகப்படுத்தலாம்.
(7) சிகிச்சை எடுக்கும் பொழுது தேங்காய் மற்றும் இதர கொட்டை பருப்புகளை தவிர்க்கவும். ஆனால் உடல் நலம் தேறிய பிறகு கொட்டை பரு ப்புகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கொட்டைபருப்புகள் சேர்த்தாமல் வெறும் பழ உணவில் இருக்க கூடாது. நோயாளிக்கு பசி எடுக்க ஆரம்பித்த உடன் சிறிது சிறிதாக கொட்டை பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.
(8) அக்கு பிரஷர் சிகிச்சை கொடுக்கலாம்.
(9) இரவில் தூக்கமின்மையால் தவிப்பவர்கள் பாதத்தின் நடுவிரலின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுக்கலாம்.
(10) முழு இயற்கை உணவுக்கு எனிமா தேவையில்லை. நோயாளி ஒத்துழைத்தால் எடுக்கலாம்.
(11) நோயாளிகள் குளிராக உணர்ந்தால் ஈரமண் பட்டி, ஈரத்துணிப்பட்டி தேவையில்லை. அதற்கு பதில் சூடான அல்லது மிதமான சூட்டில் தண் ணீர் உபயோகிக்கலாம். உடலில் இருந்து வெப்பம் வெளியேறாதபடி கால்கள், கைகள், தலை, காதுகளை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும். கையுறைகள், காலுறைகள், ஸ்வெட்டர், போர்வை போன்றவற்றை பயன்படுத்தலாம். மொசைக், மார்பிள் போன்ற குளிர்ந்த தரையில் நடக்க காலணி உபயோகிக்க வேண்டும்.
(12) பசி இல்லா விட்டால் எலுமிச்சை சாறு மற்றும் எனிமா காலை, மாலை இருமுறை எடுக்கலாம்.
(ஆரோக்கியம், ஆனந்தம் தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக