புதன், 27 அக்டோபர், 2010

5. ஆரோக்கியம் ஆனந்தம்.
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
இரதி லோகநாதன், கோவை.

 11.  பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை

(1) சக்தி தரும் உணவுகள்: செவ்வாழை, பேரிச்சம்பழம், முந்திரி பருப்பு மற்றும் சாறுள்ள பழங்கள், பழச்சாறுகள்.
(2) தேங்காயை பச்சையாக உண்ணும் போது கொலஸ்ட்ரால் ஆகாது.  அதை சமைக்கும் பொழுது தான் கொலஸ்ட்ராலாக மாறுகிறது.  பச்சை  தேங்காயை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். அதில் எந்த தீங்கும் இல்லை.  உடலும் பருமன் ஆகாது.  மற்ற கொட்டை பருப்புகளுக்கும்  இதுவே பொருந்தும்.
(3) பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரைக்கு நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி) வராது.  
(4) உடல் பருமனுக்கு: உயரத்திற்கு தகுந்த எடை இயற்கை உணவில் தானாகவே வந்து விடும்.
(5) மெலிந்த உடலுக்கு: முளை கட்டிய பயிறு வகைகள் எடையை அதிகரிக்க உதவும்.

12. சைவ, அசைவ மற்றும் இயற்கை உணவிற்குள்ள வித்தியாசங்கள்
சைவ உணவிற்கும் இயற்கை உணவிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை  உணவு என்பது உணவை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது.  சைவ உணவு என்பது இயற்கை உணவை சமைத்து சாப்பிடுவது. 

சைவ/அசைவ உணவு                 இயற்கை உணவு

(1) கொல்லும் வலிமை               இழுக்கும் வலிமை
   (சிங்கம், புலி, சிறுத்தை)         (யானை)
 
(2) நீண்ட நேரம் வேலை            நீண்ட நேரம் சோர்வு
    செய்ய வலு இருக்காது           இல்லாமல் உழைக்கலாம்
 
(3) அஜீரணம் மற்றும் மலச்        அஜீரணம், மலச்சிக்கல்
    சிக்கல் இருக்கும்                     இருக்காது
 
(4) நோயற்ற வாழ்விற்கு             நோயற்ற வாழ்விற்கு
      உத்தரவாதமில்லை                உத்திரவாதம்
 
(5) வெறுப்பு                                     கருணை
 
(6) காமம்                                           காதல்                 
 
(7) பிடிவாதம்                                 வைராக்கியம்
 
(8) அமைதியின்மை                        அமைதி
 
(9) கோபம்                                      பொறுமை
 
(10) ஆடம்பரம்                              எளிமை
 
(11) உலக ஆசைகள்                      தெய்வீக ஆசைகள்
 
(12) கோழைத்தனம்                       கம்பீரம், தைரியம்
 
(13) சுயநலம்                                 பொது நலம்
 
(14) சோம்பேறித்தனம்                  சுறுசுறுப்பு
 
(15) சோர்வு                                   பலம்    
 
    இயற்கை உணவு நம் மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.  நம் குணங்களிலும் நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை காணலாம்.

13. இயற்கை உணவினால் நம் சுவாசத்தில் ஏற்படும் மாற்றம்
நம் சுவாசம் ஆழமாக ஆக நம் ஆயுட்காலம் அதிகரிக்கும்.  வேகமாக மூச்சு விடும் விலங்குகள் (எ.க நாய்) சிறிது காலமே வாழும்.  ஆனால்  ஆமை 300 வருடங்கள் வாழ காரணம் அதன் ஆழமான மூச்சே ஆகும்.  மனிதர்களாகிய நாம் நம் ஆயுட்காலத்தை நம் உணவை வைத்து தீர்மானி த்துக் கொள்ளலாம்.  ஆழமாக சுவாசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.  வேகமாக மூச்சு விடுபவர்கள் நோயாளிகளாக இருப்பார்கள்.

இயற்கை உணவு உண்ணும் போது நம் உடல் தூய்மை அடைகிறது. நம் உடல் தூய்மை அடைய அடைய நம் சுவாசமும் ஆழமாகும்.  இதனால் நாம் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சி மற்றும் கவலை அற்ற மனநிலையுடனும் வாழலாம். 

14. இயற்கை உணவு உண்ண ஆரம்பிப்பது எப்படி?
சமைத்த உணவிலிருந்து இயற்கை உணவிற்கு மாறுவதற்கு மிகுந்த மனஉறுதியும் சுயகட்டுப்பாடும் தேவை. முதலில் ஒரு வேளை  இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கலாம்.  (காலை சிற்றுண்டி அல்லது இரவு உணவை இயற்கை உணவாக உண்ணலாம்.) அளவு கிடையாது.   எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். பிறகு சிறிது காலம் கழித்து அதையே இரண்டு நேரமாக அதிகரிக்கலாம்.  பிறகு ஒரு நாள் முழு  இயற்கை உணவிற்கு மாறமுடியும்.  இதனிடையில் நாம் அசைவம், பால் மற்றும் பால் பொருட்களை விட சிறிது சிறிதாக முயற்சி செய்ய வேண் டும்.  இது சிறிய வியாதிகளுக்கு பொருந்தும்.  கேன்சர், சிறுநீரக பிரச்னை, இதய நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் முழு இயற்கை  உணவிற்கு உடனடியாக மாற வேண்டும்.

முதலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் போது சிறிது சிரமமாகவே இருக்கும்.  சமைத்த உணவை நினைத்தே நாக்கும்  மனமும் ஏங்கும். நம் முன்னோர்கள் பழங்காலத்திலேயே சமைத்து உண்டு வந்துள்ளார்கள்.  அது பழக்கமாக நம் ஒவ்வொரு செல்லிலும் பதிந்து ள்ளது.  அதனால் நாம் இந்த பழக்கத்தை விட்டு வெளியே வர பொறுமையாக முயற்சிக்க வேண்டும். முதலில் பசி போன்ற ஒரு சங்கட உணர்ச்சி  இருந்து கொண்டே இருக்கும். குடிகாரன் குடிக்கு அடிமையாகி உள்ளதை போல  மனித குலமே சமைத்த உணவுக்கு அடிமையாக உள்ளது.  அதனால் குடிப்பது நல்லது என்று யாரும் முட்டாள்தனமாக கூறமாட்டார்கள். மெதுவாக இயற்கை உணவிற்கு நம் உடல் பழகி விடும். சமைத்த  உணவின் மேல் உள்ள ஆசையை குறைக்க தியானம் உதவும்.

வருமுன் காப்பது நல்லது.  நமக்கு பிடித்த பழங்களையும் கொட்டைபருப்புகளையும் நிறைய உண்ணலாம்.  கொட்டை பருப்புகள்  கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  வெறும் பழங்கள் மட்டும் போதாது. சிறிது காலம் கழித்து நாம் உண்ணும் அளவு குறைவதை  காணலாம். ஆரோக்கியமான உடலுக்கு சிறிதளவு உணவே போதுமானது. 

15.  சாப்பிடும் முறை
மோனோ டயட் (ஒரு நேரத்தில் ஒரு உணவை சாப்பிடுவது) நல்லது.  பல விதமான பழக் கலவை அல்லது காய்கறிக்  கலவையாக (சாலட்) உண்ணாமல் ஒரு நேரத்தில் ஒரு பழத்தையோ அல்லது ஒரு கொட்டை பருப்பையோ மட்டும் உண்பது.

பல வித உணவுகளை கலந்து உண்ண வேண்டுமென்றால் முதலில் கொட்டைபருப்புகளை உண்டு பிறகு பழங்களை உண் ணவேண்டும். கலோரி கணக்குகள் தேவையில்லை.  நம் உயரத்திற்கு ஏற்ற எடை தானாக வந்து விடும்.

இயற்கை உணவை பொருத்த வரை அளவு தேவையில்லை.  நமக்கு பசி உணர்வு மறையும் வரை எவ்வளவு வேண்டுமானாலும்  உண்ணலாம்.  தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம்.  

இயற்கை உணவிற்கும் சமைத்த உணவிற்கும் ஜீரண முறை வேறுபடுவதால் இரண்டையும் ஒரே நேரத்தில் கலந்து உண்ணாமல் இருப்பது நல்லது.   அஜீரணக் கோளாறை தவிர்க்க உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும்.  நீரையும், பழச்சாறுகளையும் உமிழ்நீருடன் நன்றாக கலந்து குடிக்க வேண்டும். 

(தொடரும்) 
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.
வேண்டுகோள்: இந்த கொள்கைகள் பரவா உதவுங்கள். உங்கள் வாக்குகளை அளியுங்கள். நன்றி.

2 கருத்துகள்:

geethasmbsvm6 சொன்னது…

நல்ல கருத்துக்கள். கடைப்பிடிக்கிறது தான் கொஞ்சம் இல்லை, நிறையவே கஷ்டம்! :(

Ashwin Ji சொன்னது…

மெய்தான். நான் கூட கஷ்டப்பட்டுத் தான் ஆரம்பத்தில் கடைப் பிடித்தேன். இப்போது கொஞ்சம் சுலபமாக இருக்கிறது. :))))))
Ashwinji

கருத்துரையிடுக