சனி, 9 ஏப்ரல், 2011


சேவை செய்திகள்...

நோயின்றி வாழ...
மருந்தில்லா மருத்துவம்...

ஐந்து நாட்கள்
இயற்கை நலவாழ்வியல்
பயிற்சி முகாம்.

பயிற்சி நாட்கள்:

3.5.2011 மாலை நான்கு மணி முதல்
8.5.2011 மாலை ஐந்து மணி வரை.

இடம்: சங்கமம், பெருகமணி (திருச்சி அருகில்)

பயிற்சிக் கட்டணம்: ரூபாய் எழுநூறு மட்டுமே.

நூறு பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்க உள்ளதால்
முன்பதிவு செய்பவருக்கு மட்டுமே அனுமதி.

பதிவு மற்றும் மேலதிக விவரங்கள்
அறிய தொடர்பு கொள்ளவும்.

அஷ்வின்ஜி.
இயற்கை நலவாழ்வியல் ஆர்வலர்.
ashvinjee@gmail.com

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

முதுமைக்கு எளிதில் வைக்கலாம் முற்றுப் புள்ளி.

சொல்கிறார் முதியோர் மருத்துவத் துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டர் நடராஜன்:


பிற வயதினருடன் ஒப்பிடும் போது, வயதானவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கு வேறுபாடு உண்டு.

உடல் தளரும் போது, அதாவது, 70 வயதில், உடலில் குறைபாடுகள் ஆரம்பமாகும்.

மறதி, எலும்புகள் பலமிழப்பது, கீழே விழுந்து விடுவது, சிறுநீர் கட்டுப்படுத்த முடியாதது, உதிர்வாதம் என, பாதிப்புகளின் பட்டியல் நீளும்.

மற்ற வயதினரைப் போல், மாத்திரை, ஊசி போட்டு நோயை கட்டுப்படுத்துவதை விட, அவர்களின் சிகிச்சை முறையில், மாற்றம் தேவை. அவர்களிடம் மனம்விட்டுப் பேசி, பாதிப்பின் தன்மை அறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.

வயதானவர்கள் முடிந்தவரை, சொந்த பந்தங்கள் புடைசூழ இருப்பது அவசியம். தனிமையில் இருக்கும் போது, மனமும், உடலும் சோர்வடையும். அதனால், ஆன்மிக, இசைக் கச்சேரிகளில் மனதைச் செலுத்தலாம்.

வாரிசுகளுக்கு சொத்துக்களை உயில் எழுதி வைப்பதுடன், தனக்கும் சிறு சேமிப்பு வைத்துக் கொள்ள வேண்டும்; அதன் மூலம், தொடர் கவனிப்பு கிடைக்கும். உடல் சார்ந்த பிரச்னைகளைப் பொறுத்தவரை, குறிப்பாக, கோடை காலங்களில் தாகம் எடுக்கும் உணர்வு அதிகரிக்கும்.

பெரும்பாலான முதியோருக்கு, தண்ணீர் அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவு. இதன் காரணமாக ரத்த அழுத்தம் குறையும். தொடர்ந்து மயக்கம் வரும். நடந்து கொண்டிருந்தால், கீழே விழுந்துவிடுவர். ஒரு நாளைக்கு, இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தலாம்.

உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். குறிப்பாக, நார்ச்சத்து உணவுகள் நல்லது. எளிதில் செரிக்கும். புரதச் சத்துகளால், எலும்புகள் வலுப்பெறும்.

மூன்றுவேளை அரிசி உணவை தவிர்க்கலாம். மாறாக, அரைவயிறு உணவு, மீதம் தண்ணீர், காற்றுக்கு இடமளிக்க வேண்டும். இப்பழக்கத்தை, 50 வயதில் துவங்கினால், முதுமைக்கு எளிதில் வைக்கலாம் முற்றுப் புள்ளி.

நன்றி: தினமலர் ( ஏப்ரல் 08,2011)