சனி, 28 செப்டம்பர், 2013

இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்.

''இயற்கை உணவின் அதிசயம், 
ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்''

வாழி நலம் சூழ வலைப்பதிவை பின்பற்றும் அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி. 

இயற்கை நலவாழ்வியல் நெறியாளர், ஆராய்ச்சியாளர், இந்த நூற்றாண்டின் தமிழில் தலைசிறந்த இயற்கை நலவாழ்வியல் நூல்களை எழுதி வருபவர், பேராசிரியர் டாக்டர் மூ.ஆ, அப்பன் அவர்கள் தமது ஐம்பது ஆண்டு இயற்கை உணவுகள், நலவாழ்வுகள் குறித்தான தமது சொந்த அனுபவங்களைக் கொண்டு எழுதிய ''இயற்கை உணவின் அதிசயம், ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்'' எனும் ஒப்பற்ற ஆய்வு நூலை, இயற்கை உணவு விழிப்புணர்ச்சி மையம், பாப்புலர் பப்ளிகேசன்ஸ், சென்னை வெளியிட்டுள்ளனர்.

The Best Book For Natural Health. 50 years in Practical Research by Dr.Mu.Aa.Appan.

நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, புற்று நோய், ஹார்ட் அட்டாக், நரம்புத் தளர்ச்சி, தைராய்டு, உடற்பருமன், கொலஸ்ட்ரால், சுகப்பிரசவம், மூட்டுவலி, புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை நிறுத்த, ஆண்மைக் குறைவு போன்ற நூறு நோய்களுக்கு, இருநூறு விளக்கப் படத்துடன் தீர்வுகள் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. 

"இயற்கை உணவின் இருப்பிடமே ஆரோக்கிய வாழ்வின் பிறப்பிடம்" என்று கூறும் ஆசான் மூ.ஆ.அப்பன் அவர்கள் இந்த மருந்தில்லா மருத்துவ ஆய்வு நூல் எனது ஐம்பது வருட அனுபவ ஆராய்ச்சியின் அரிய பொக்கிஷம் என்கிறார்.

"இந்நூலில் உள்ள பயிற்சிகளின் மூலம் உங்கள் குடும்பத்தை நான் ஆரோக்கிய வாழ்வுக்கு அழைத்துச் செல்வேன் என்பது வார்த்தையல்ல; எனது வாக்குறுதி." (மூ.ஆ.அப்பன்)

"நீங்கள் இயற்கை உணவு மூலம் நோய்களில் இருந்து குணமடைய வேண்டும் என்பது மட்டுமல்ல, ஆயுள் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கையை நோயின்றி வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்." (மூ.ஆ.அப்பன்)

"ஆயுள் என்பது ஆண்டுகளில் இல்லை; நாம் வாழும் முறையில்தான் உள்ளது." (மூ.ஆ.அப்பன்)

288 பக்கங்களுடன், தரமான தாளில், எளிதில் படிக்கக் கூடிய அளவிலான எழுத்துருவில், தெளிவான யோகாசனப் படங்கள், மற்றும் இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் பற்றிய படங்களுடன் இந்தப் புத்தகம் மிக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்திய ரூபாய் 230 மதிப்பிலான இந்த நூலை அறிமுக சலுகையாக ரூ.176-க்கே தருவதற்கு நூல் வெளியீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். மூன்றாவது பதிப்பில் உள்ள பிரதிகளை வாங்குவதன் மூலம் சலுகை விலை பயன் பெறலாம்.

புத்தகத்தை படித்துப் பயன் பெறுவதோடு மட்டுமின்றி, உங்கள் அன்புக்குரிய உறவினர்கள், நண்பர்கள் வாழ்வின் முக்கிய தருணங்களில் பரிசளித்து மகிழ, அவர்களை வாழ்நாள் முழுவதும் மகிழ்விக்க தேவையான பயனுள்ள மருந்தில்லா மருத்துவமான இயற்கை நலவாழ்வியல் கருத்துக்களைத் தாங்கி இந்த அரிய வெளியீடு அமைந்துள்ளது.

புத்தகங்களை பெற அணுக வேண்டிய முகவரி :-

பதிப்பாசிரியர் (திரு. V.S.வள்ளுவன்)
பாப்புலர் புப்ளிகேஷன்ஸ், 
(இயற்கை உணவு விழிப்புணர்ச்சி மையம்), 
எண்:10/3, எத்திராஜ் தெரு, 
சூளைமேடு, 
சென்னை-600094

பதிப்பகத்தை தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:
9787555182 & 9566063452

மின்னஞ்சல் முகவரி:
popularpublications23@gmail.com

இயற்கை நலவாழ்வியல் ஆர்வலர்களின் 
வாழ்வு மேம்பாட்டுக்காக 
இந்த சேவைச் செய்தியை 
வெளியிடுபவர்:

'அஷ்வின்ஜி' 
A.T. ஹரிஹரன், M.Sc (Yoga), M.Sc(Yoga Therapy)
வாழி நலம் சூழ வலைப்பூ
09444171339 (Chennai, India)
Email: ashvinjee@gmail.com