வியாழன், 31 மார்ச், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி மூன்று


அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் பற்றிய செய்திப் பகிர்வுகளின் மூன்றாம் பகுதியாக சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய 'சர்வ ரோக நிவாரணி' எனும் நூலில் இருந்து சில பகுதிகளை இங்கே காணலாம்.

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி மூன்று

சிறுநீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்

(இது நமது வாசகர் முரளிதரன்.கே நமக்கு அனுப்பி வைத்த பதிவு.. வாசகர்கள் பதிவில் கூறப்பட்டுள்ளவையை மருத்துவ ஆலோசனையின்றி நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
சமீபத்தில் சர்வரோக நிவாரணி என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதை மூன்றாம் கோண வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்புத்தகத்தை தொகுத்தவர் சுவாமி பூமானந்தா அவர்கள்.
காட்டுபூனையின் மலமே வாசனைமிக்க புனுகு ஆவது போல், நம் சிறுநீரே நம் நோய்க்கு அருமருந்தாகிறது என்று தன் புத்தகத்தில் வலியுருத்திருக்கிறார். தினமும் 3 வேளை நாம் வெளியிடும் சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுகிறார்.

ருத்ரயாமளடாமர தந்திரம் என்ற புத்தகத்தில் சிவாம்பு கல்பம்என்ற அத்தியாயத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு சிவாம்பு என்னும் சிறுநீரின் மகிமையை உபதேசித்துள்ளார், ஆரோக்கியமான உடலிலிருந்து வரும் சிறுநீரில் உடலுக்குத் தேவையான போஷாக்குத் தாதுக்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்திருக்கிறது. ஆரோக்கியமானவனுடைய சிறுநீரில் பத்தொன்பது போஷாக்குத் தாதுக்கள் அடங்கிருப்பதாக கண்டுபிடுத்திருக்கிறார்கள். மனித உடலுக்கு மிகவும் போஷாக்குத் தரக்கூடிய, நன்மை தரக்கூடிய யூரியா அதிக அளவில் அதாவது 3400 மில்லி கிராம் சிறுநீரில் 1459 மில்லி கிராம் யூரியா இருப்பதாக கணடுபிடித்திருக்கிறார்கள். சிறுநீரை எதில் வேண்டுமானாலும் பிடித்து அருந்தலாம், மண்பாத்திரம் அல்லது தமிரப் பாத்திரத்தில் அருந்துவது மிகவும் நன்று. முத்ல், கடைசி தாரைகளை விட்டுவிட்டு நடு தாரையைப் பிடித்துப் பருக வேண்டும் என்பது உத்தமமான விதியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜைன மதத்தின் ஆச்சாரியரான பத்ரபாகு தன் மதத்தை ஏற்றுக்கொள்பவருக்கு, சிறுநீரை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்திருக்கிறார். ஜைனர்கள் உபவாச காலங்களில் சிறுநீரை உபயோகிப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சிறுநீரை உபயோகிப்பதால் நல்ல தேகாரோக்கியமுள்ளவராகவும், வியாதி இல்லாதவர்களாகவும் மட்டும் அல்லாமல், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மனதை ஒரு நிலையில் நிறுத்தவும் உதவுகிறது. யோக சாதனையில் எந்தவிதமான தடையும் இருக்காது என்றும் அவர் நூலில் எழுதியுள்ளார்.

உடலில் உள் பாகம், வெளிபாகத்தில் எல்லாவித வியாதிகளுக்கும் காலையில் தொடர்ந்து 9 தினங்களுக்கு சிறுநீர் குடித்தால் குஷ்டரோகங்களையும் போக்கி, உடலை ஆரோக்கியமடையச் செய்கிறது, சிறுநீரை லேசாக சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும் என்றும், கண்களைக் சிறுநீரினால் கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீக்கம் முதலியன அகன்று விடும் என்றும், ஜலதோஷம், பீனிசம் ஆகிய நோய்களும் சிறுநீர் அருந்துவதால் குணமடையும் என்று குறிப்பிட்டுள்ளார். சிறுநீரை உடலில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும் என்றும், சிறுநீர் கொண்டு கழுவுவதால், மூலவியாதி, வலி, எரிச்சல், நமைச்சல் குணமடையும் என்றும், சிறுநீரினால் உடலை மாலீஷ் செய்தால் தோல் சுத்தமாகவும், வழவழப்பாகவும் ஆகிவிடுகிறது.

சிறுநீரின் உபயோகம்:
இங்கிலாந்தில் ரசாயன நிபுணர்கள் சிறுநீரின் உப்பிலிருந்து சிறந்த குளிக்கும் சோப்புகள், விலையுயர்ந்த கிரீம் மற்றும் லோஷன் தயாரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

சிவாம்பு என்ற சிறுநீர் சிகிச்சையின் போது நோயாளி வேறு எந்தவிதமான மருந்தையும் பயன்படுத்தக் கூடாது. பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம், மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். சைவ உணவே சிறந்தது. பழம், பால், கீரை, காய்கறி வகைகள், அரிசி, கோதுமை, ராகி போன்ற சாத்வீக உணவே உட்கொள்ள வேணடும். சிறுநீருடன் சுத்தமான தண்ணீரை மட்டும் குடித்து அன்ன ஆகாரமின்றி அவருடைய உடல் நிலைக்குத் தக்கபடி 3 அல்லது 5 நாட்கள் வரை உபவாசமிருக்கவேண்டும். நோயாளியின் இரத்த ஓட்டத்தில் அழுத்தம் குறைந்திருந்தால் (Low Blood Pressure) இருதயம் பலவீனமாக இருந்தாலும் உபவாசம் இருக்கக் கூடாது என்றும், சிறுநீர் குடித்து, மாலீஷ் செய்து லேசான சைவ உணவை உட்கொள்ள வேண்டும். இருதய நோய் இல்லாதவர்கள், உபவாசத்தின் போது நாள் முழுவதும் எந்த ஆகாரமும் இன்றி, தான் கழிக்கும் சிறுநீரை மட்டும் அருந்த வேண்டும். மிகவும் முக்கியமான மந்திரம் என்னவென்றால், சிறுநீர் சிகிச்சை ஆரம்பிக்கும் முன் மனதைரியத்துடனும், மனத் துய்மையுடனும், பொறுமையுடனும் இந்தப் பிரயோகத்தை ஆரம்பிக்கவேண்டும். என்னுடைய சிறுநீர் என் நோய்களைப் போக்கி என்னை வளர்க்கக் கூடியது என்ற நினைவும், பக்தி சிரத்தையும், நம்பிக்கையும் இதனால் எந்த தீங்கும் இல்லை என்றும், நன்மையே என்ற எண்ணம் உண்டாக வேண்டும்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் சிறுநீர் குடிப்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல, பலயுகங்களாக ஞானிகளாலும், சித்தர்களாலும் கையாளபட்டு வந்திருக்கிறது. சிறுநீர் குடிப்பதால் நோய்களைக் குணப்படுத்தி தேக ஆரோக்கியத்தைப் பெறுவதுடன் அதை நிலையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.


வீடியோ இணைப்புக்கு:


அடுத்த பகுதியில் நிறைவு.


ஞாயிறு, 27 மார்ச், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி இரண்டு


பகுதி இரண்டு

பகுதி இரண்டுக்குள் செல்லுமுன்:

முற்காலத்தில் சித்தர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட இந்த மருத்துவமுறை இடையில் சுணக்கம் கொண்டிருந்தாலும், தற்காலத்தில் மீண்டும் மக்கள் மத்தியிலும், வெளி நாடுகளிலும் பெருமளவில் புகழ் பெற்றுவருகின்றது. 

சிறுநீர் மருத்துவம் பற்றிய திருமூலரின் திருமந்திரத்தில் அமுரிதாரணை எனும் தலைப்பில் ஐந்து பாடல்கள் உள்ளன. திருமந்திரத்துக்குள் அமுரி தாரணையைப் பற்றி காண்போமா?
--------------------------

(அமுரி - வீரியம்தாரணை - தரித்தல்அமுரிதாரணையாவது வீரியத்தை உடம்பில் தரிக்கும்படி செய்தல். குடிநீர்சிவநீர்வானநீர்ஆகாய கங்கைஅமுத நீர்உவரிதேறல்மதுகள்மலை நீர் என்பன வெல்லாம் அமுரியைக் குறிக்கும் பல சொற்களாம். சந்திரன் தூலத்தில் வீரியமாகவும்சூக்குமத்தில் ஒளியாகவும்பரத்தில் ஆன்மாவின் சாட்சியாகவும் உள்ளது - யோகசிகோ உபநிடதம் நீர்அமுரியைச் சிறுநீர் என்று கல்பநூல் கூறும். பரியங்க யோகத்தின் பின் இப்பகுதி அமைந்திருப்பதால் அப்பொருள் இங்குப் பொருந்துவது காண்க.)

845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.
பொருள் : உடம்பினின்றும் நீங்காமல் உறுதியைப் பயப்பதாகவுள்ள உணர்வு நீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் கீழ்ப்போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம். உப்பு நீரையுடைய கடலுக்கு அருகே தோண்டி எடுக்கின் நன்னீர் இருப்பது போன்று சிறுநீர் வாயிலுக்கு அருகே அமுரி இருக்கும் என்க.

846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே.
பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது இது காற்றுடன் கலந்து மேலேறும். எட்டு ஆண்டுகளில் மனம் கீழ்நோக்குதலைத் தவிர்த்து மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் - அமுரிஅமுதநீர் வளியுறு எட்டின் - பிராணவாயு.

847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.
பொருள் : அவ்வாறு அருந்தும் சிவநீரானது கீழேயுள்ள குறியை நெருக்குவதாலும் பிழிதாலாலும் அதன் தன்னை கெட்டு மேலேறும் உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த உரோமம் கறுப்பாகும் மாற்றத்தைக் காணலாம். நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.

848. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.
பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம். (கானல் உவரி - உப்பங்கழி நீர். வரைதல் - நீக்குதல்)

849. அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.
பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு வியப்பு. உடம்பில் மறைமுகமாகச் சென்று (உணர்வாகிய) இந்நீர் சிரசை அடையுங்காலத்துமிளகுநெல்லிப் பருப்புகஸ்தூரிமஞ்சள்வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும். இத்துடன் கடுக்காய்த் தூளும் சேர்த்தால்பஞ்ச கல்பம் என்பர்.

850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்
சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.
பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும்ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது
--------------------------------------------------------------------------------------
ஆதாரம்: தமிழ்க்கச்சேரி வலைப்பூ.
இணைப்பு: http://tamilkacheri.blogspot.in/2014/10/blog-post_6701.html
தொடரும் (பகுதி மூன்றில் மற்றொரு செய்தி)
அடுத்து வெளியாக இருக்கும் பகுதி மூன்றில் தவத்திரு பூமானந்தா அவர்கள் எழுதிய நூல் ஒன்றில் இருந்து சில பகுதிகளை காண இருக்கிறோம். மேலும் சென்னையைச் சேர்ந்த பெரியவர் திரு அ.மெய்யப்பன் அய்யா அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கப் போகிறோம்.