வெள்ளி, 27 ஜனவரி, 2012

20. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - இனியனின் அனுபவப் பகிர்வுகள்

இனியனின் முகாம் அனுபவ உரை தொடர்கிறது....


மூன்றாம் நாள் 28-12-2011. 


முதலில் அதிகாலை பள்ளியில் யோகாசனம். பின்னர் அனைவரும் சென்ற இடம் வரதமாநதி அணைக்கட்டு. இதுவரைகாலை யோகப்பயிற்சியின் போது மட்டும் கேட்ட குரல்இன்று இங்கு பதஞ்சலிக்குத் தொடர்ச்சியை அறிமுகம் செய்ய முயன்றது. ஆம், ‘ப் போல் வளை என்ற திரு.ஹரிஹரன்(அஷ்வின்ஜி)அவர்கள்தான் கற்றவற்றில் சிலவற்றை முகன் அமர்ந்து இன்சொல்” வழங்கினார்.


முயற்சிசெய்கைபயிற்சி என்று வரிசைப்படுத்தினார். கடைநிலைக்கு முன்னிலையான தியானம் செய்வது எவ்வளவு கடினமென்றும்அதை இப்பொழுது எல்லோரும் எளிதில் விற்று வருவதை உணர்த்தினார்.

இவ்விடம் கற்றது: ஐம்புலன்களின் அடக்கம் மற்றும் ஐம்புலன்களின் ஒடுக்கம் குறித்து விளக்கியது.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: உள்ளத்தனையது உயர்வாஒடுக்கமா?

பின்னர் யோகாச்சார்யா திரு முருகன் அவர்கள் யோகம் குறித்து தொடர்ந்தார். நம் மனம் அல்லது உணர்வு நிலைகள் மூன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளதை விவரித்தார். நாம் கேட்பவற்றில் சுமார் 15% மட்டுமே சரியாக அர்த்தம் கொள்ளப்பட்டுமனதில் பதிவதையும் விளக்கினார். மௌனவிரதம் இருக்க எண்ணியிருந்தோம்ஆனாலும் பலருடைய வேண்டுகோளின்படி நாங்கள் தியானம் செய்ய முயற்சித்தோம். திரு.முருகன் அவர்கள் மேற்பார்வையில்சில நிமிடங்கள் தியானம் செய்தோம் (செய்வோம்). இந்த அமைதியான சூழலிலேயே சில மணித்துளிகள் தியானம் செய்வது எவ்வளவு கடினமென்றுணர்ந்தோம். துறவிகள் ஏன் காட்டிற்கும்மலைக்கும் குடி(!)பெயர்ந்தனர் என்பது புரிந்தது. ஒரே நாளில்சாத்தியமாகா இக்கலைக்கு விலக்குசில இறையருள் பெற்றவர்கள் என்பதும் புரிந்தது. ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோம்.

இவ்விடம் கற்றது: எல்லாக் கலைகளில் சிறந்து விளங்கஒவ்வொன்றிற்கும் ஒரு குரு கண்டிப்பாக வேண்டும். இல்லையென்றால் இறையே குருவாக வேண்டும். எதிர் நிரல் நிரை அணி அமைந்த குறள் விலங்கொடு மக்கள் அனையர் ... கற்றாரோ டேனையவர்” அது கூறிய பொருளறிந்த எமக்குநம்பிக்கைக் கிடைத்தது குரு கிடைப்பார்யோகம் சாத்தியம்மக்களில் ஒருவனாகலாம்”.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: இயற்கை உணவு மட்டுமே எதிர்பார்த்து வந்த மாணவர்களுக்கு(அதுவும்குறைந்த எண்ணிக்கையுடைய ஒரு குழுவிற்கு)இத்தனை போதனைகள் அவசியம்தானாஇத்தனைப் பெரியவர்களின் அறிமுகம் தேவைதானாஅவர்கள் செலவழித்த பொன்னான நேரங்கள்அவர்களுக்கோ அல்லது மாணவர்க்கோ பயனளிக்கின்றனவாஏனைய மற்ற எல்லா முகாம்பயிற்சிகளும் செய்வதையே செய்கிறோமா?

பின்னர் மீண்டும் குடிலுக்கு வந்தபோது திரு ரமேஷ் அவர்களின் கைவண்ணம் கொண்ட வண்ண வண்ண இயற்கை உணவு வகைகள்விருந்தாய் அமைந்திருந்தது. உண்ட களைப்புக்குப் பின் சிறு ஓய்வு. அதன் பின்னர்திரு.திருச்செந்தில் அடிகளின் மெய்த்தவம்” குறித்த சில விளக்கங்கள். பிரணவ மந்திரத்திற்கும் ஒரு விளக்கம் தந்தார். சிறந்த தமிழ் நூல்கள்ஆங்கில நூல்கள் விவாதிக்கப்பட்டுப் பின் பட்டியலிடப்பட்டன. உலகத்தை இவ்வளவு பெரிதாகப் படைத்ததன் காரணம் ஒன்றும் நகைச்சுவையாய் குறிப்பிட்டார்திரும்பத் திரும்ப படிக்க வேண்டி பாடல்கள் தொகுப்பொன்றும் புத்தகமாய் வெளியிட விழைகின்றார்.

இவ்விடம் கற்றது: குலதெய்வ வழிபாடும்வாரத்திற்கொரு முறை நல்லெண்ணெய்க் குளியலும் தன்னைத் தான் அறிதலும்தன்னிலையில் தான் இருத்தலும் நன்று.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: இடும்பைக்கு இடும்பை படுப்பர் ஆகியஅடிகளாரும்யோகாச்சாரியாரும்தேரான்கண் தெளிவும்தெளிந்தான்கண் ஐயுறவும்விரும்பாதுபுல்லுக்கும் பொசியும் வண்ணம் அன்பீந்துஎங்களுக்கு ஆர்வம் ஈந்துநண்பென்னும் நாடாச் சிறப்பும் ஈந்ததுநாங்கள் செய்த நற்பலனாலா அல்லது அவர்கள்உலகமுய்யத் தங்கள் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியினாலாஅவர்கள் எங்களிடம் எதிர்பார்ப்பவை என்னென்ன?

ஓய்விற்காய்ப் பின்னர்பள்ளிக்குத் திரும்பினாலும்ஒரு துன்பச் செய்தியால்ஓய்வெடுக்க முடியாத நிலையில் என் குடும்பம் தவித்தபோதுஇரவிலும் தன் நம்பத்தகுந்த மாணவனுடன் (வாடகை வண்டி ஓட்டுனர்) எங்களை சென்னைக்கு வழியனுப்பிப் பின் அக்கறையாய் வினவுதல்கள் பல புரிந்தும்எங்களுக்காக இறை வழிபாடும் நடத்திய இவ்விருவருக்கும்நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். உபதேசித்தவர்களுக்கும்சந்தித்தவுடன்,  “நவில்தொறும் நூல்நயம் போலும்பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு”, என்பதற்கேற்ப நட்பு பாராட்டிய அனைவர்க்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம், “பெரிது பெரிது புவனம் பெரிது” எனத் துவங்கும் பாடல் முடிவது, “தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” என்றும்இனியதற்குரிய பாடலில் விளக்கியுள்ளதைப் போல், “ஏகாந்தத்தினும்ஆதியைத் தொழுதலினும்அறிவினர் சேர்தலினும்இனிதான அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே” எனக் குறிப்பிட்டுபடித்தோர் நேரத்திற்காகவும்பிழைகளிருந்தால் பொருத்துக் கொள்ளுமாறும் வேண்டி எல்லாரும் இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

முடிவுரை
மேற்கூறிய அறிமுகங்கள்உணர்த்தியவர்களின் பெயர்கள் (திரு.முருகன்திரு.திருச்செந்தில் அடிகள்திரு.சித்தர்திரு.இரத்தினசக்திவேல்திரு.சின்னச்சாமிதிரு.பேச்சிமுத்துதிரு.ஹரிஹரன்) இறைவன் அல்லது சமயக்குரவர் திருநாமங்களில் ஒன்றைப் பெற்றிருந்ததுஆச்சரியத்திற்குரிய ஒற்றுமையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. எனக்குரைத்த பொருள்கோள் எட்டே”, இருப்பினும் தமிழறிஞர்கள் மற்றும் பெண்கள்,  பேசியதிலிருந்து (அல்லது) எழுதியதிலிருந்து வேறு ஒரு முறையிலும் பொருள் கொண்டுகுறை காண்பதில் வல்லவர்கள்அவர்களின் கருத்துக்கள் எனக்குத் தெரிவிக்கப்பட்டால் இக்கட்டுரையில் குறைகளைவேன். என் சந்தேகங்களுக்குஉரையாற்றியவரிடமிருந்து விடை கிடைக்கும் (தொலைபேசியிலோ அல்லது ஒவ்வொரு ஐயத்திற்கும் ஒரு கட்டுரை வடிவிலோ) என்றறிந்தாலும்நேரில் கேட்டறியும் வாய்ப்புக்கு விழைகின்றேன். உலகநாதரின் உலகநீதி படிப்போர்க்கு (ஆம்வேண்டாம் வேண்டாம் என்று முடியும் வரிகள் தான்!) அவர் இறுதியில் உரைத்த பூலோகம் உள்ளளவும் வாழ” ஆசை வரும். முயல்க! முயற்சி திருவினையாக்குக.

தெரியாததுதனக்குத் தெரியாது எனத் தெரியாதவன் முட்டாள். -ஒதுங்கியிரு;

தெரியாததுதனக்குத் தெரியாது எனத் தெரிந்தவன் மாணவன். - சொல்லிக்கொடு;

தெரிந்ததுதனக்குத் தெரியும் எனத் தெரியாதவன் உறங்குகிறான். -எழுப்பிவிடு;

தெரிந்ததுதனக்குத் தெரியும் எனத் தெரிந்தவன் அறிவாளி. -பின்செல்.

பழைய அழகான ஆனால் ஆழமான ஆங்கில வாக்கியங்களை மேலும் அருமையாகத் தமிழ்ப்படுத்தப் பலரால் முடியுமெனினும் அதை இக்காலத்திற்கேற்ப கீழ்க்கண்டது போல் நேர்மறையாய் மாற்றலாமா?

தெரியாததுதனக்குத் தெரியாது எனத் தெரியாதவன் மாணவன். -சொல்லிக்கொடு;

தெரியாததுதனக்குத் தெரியாது எனத் தெரிந்தவன் உண்மையானவன். -பாராட்டிச் சொல்லிக்கொடு

தெரிந்ததுதனக்குத் தெரியும் எனத் தெரியாதவன் சுமைதாங்கி. - உதவிசெய்;

தெரிந்ததுதனக்குத் தெரியும் எனத் தெரிந்தவன் ஆசிரியன். -சொல்வதைக் கவனி;

ஐந்து நாள்களில் மூன்று நாள்களில் பெற்ற உடல்நலமனநல மற்றும் அறிவுப் பெருக்கம்இக்கட்டுரை எழுதி முடிக்கும் வரை 100% தொடர இயலாமல் போனாலும்குறைந்தது ஒருவேளைமுடிந்தால் இருவேளை என்று இயற்கை உணவை உண்டுகுறைந்தது இருபது நிமிடங்கள்முடிந்தால் ஒரு மணி நேரம் என்று யோகப் பயிற்சியும் செய்து, “கற்றபின் நிற்க” முயன்று பலன்பெறும்...

– தங்களன்புள்ள கி. நச்சினார்க்கினியன்.


இனியனுக்கு என் பதிலுரை:
இனிய நண்பர் இனியனுக்கு எனது பணிவான நன்றிகள். 


சிந்தனையை, தேடல்களைத் தூண்டி விடும் உங்களது கேள்விகளுக்கு விடைகள் எதையும் நான் இங்கே தரவில்லை. அவற்றை எனக்குக் கற்றுத் தரும் குருவாகக் கொண்டு எனது தேடல்களை துவங்கி விட்டேன். சுயஅனுபவம் கற்றுத் தராத பாடத்தையா எனது பதில்கள் சொல்லித் தந்து விடும்? என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கணமும் எனக்கு கற்றுத் தரும் குருவாய் வருகின்றன. தொடர் தேடல்கள் மூலம் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பதை மட்டும் இங்கே தங்களுக்கு எனது பதிலாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்படி பதில் கூறி தப்பித்தல் முயற்சியில் நான் ஈடுபடுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். Learn; Unlearn; Relearn எனும் மூன்று மந்திரச் சொற்களை நினைவில் கொள்ளுங்கள். மற்றுமொரு முகாம் சூழலில் மீண்டும் உங்களைச் சந்திக்க, உங்களிடமிருந்து நீங்கள் இதுவரை கற்றுக் கொண்டவற்றிலிருந்து கற்றுக் கொள்ளவிரும்பும் ஒரு மாணவனாய் நான் காத்திருக்கிறேன்.உங்கள் அன்புக் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். 


அன்பிற்கினிய நச்சினார்க்கினியனுக்கு என் இதயநிறை நன்றி.


(அடுத்து வரும் பதிவுகளில் முகாம் அனுபவங்கள் தொடர்கின்றன)


இனியனின் அனுபவப் பகிர்வுகளைத் தொடர்ந்து வரவிருப்பது எனது அன்பு நண்பர் திரு.கே.நாகராஜன் அவர்களின் அனுபவப் பகிர்வுகள். அவரது ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்த்து அவர் நம்முடன் பகிரவந்த உணர்வுகளை சிதைக்காமல் அப்படியே ஆங்கில மூலத்திலேயே அடுத்த பதிவில் வெளியிடுவேன். 


(பகிர்வுகள் தொடரும்)

வியாழன், 26 ஜனவரி, 2012

19. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - இனியனின் அனுபவப் பகிர்வுகள்

இனியனின் இனிய அனுபவப் பகிர்தல் தொடர்கிறது......


இரண்டாம் நாள் 27-12-2011, அதிகாலை யோக உடற்பயிற்சி. பின்னர் உரையாடல் ஆரம்பம். இயற்கைப் பிரியன் திரு இரத்தினசக்திவேல் அவர்களின் நகைச்சுவை சொற்பொழிவு. பாராட்டுதல்” பற்றித் தொடங்கி, “விரும்பிச் செய்தால் விருந்துஅஃதன்றேல் மருந்து” எனப் பகர்ந்து, “வணக்கம் செய்யும் விதங்கள்” பட்டியலிட்டுப் பின் உணவு வகைகளைப் பலவாறு பகுத்தறிவித்தார். கார/அமிலசூட்சும/உருவதிட/திரவ, +/-, பகல்/இரவுஆரோக்கிய/அல்லாத, ... உணவுகள் (சிரித்ததால் அனைத்தையும் குறிப்பெடுக்க இயலவில்லை) என்றும்அடுத்து கீரைகளின் வகைகளையும் விளக்கிப் பின்னர் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலையும் அளித்தார். கடைசியாய் சுற்றுப்புறமும் இயற்கையும்நாம் பயின்றதைத் தொடர விடாது” என்றும் நகையாடினார்.

இவ்விடம் கற்றது: மீதூண் விரும்பேல்”. ஓர் இயந்திரவியல் வல்லுனர், “குறைவற்ற செல்வத்தோடு”, மற்றவருக்கும் இரகசியத்தைத் தெரிவிக்க விழைந்துபுத்தகங்கள் வெளியிடுவது. உளர் எனினும் இல்லாரோடொப்பர் .. கற்ற செல சொல்லாதார்” என்பதை உணர்த்தியது. நாமும் தொடர்வோம்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: புத்தகங்கள்-உரைக்கு விளம்பரமாஉரை-புத்தகங்களுக்கு விளம்பரமாஇல்லை அறுசுவையில் இல்லாத நகைச்சுவைதான் அவருக்கு விளம்பரமா?

அடுத்துதிரு திருச்செந்தில் அடிகளின் உரை. தலைப்பு மன அழுத்தம் கட்டுப்படுத்துதல்”. சில உலகளாவிய நிறுவனங்கள்அடிகளின் உரை கேட்டுள்ளதை அறிந்தோம். உடன்தன் தாடி குறித்தும் விளக்கம் அளித்தார். அவர், “மன அழுத்தத்திற்கான” முக்கியக் காரணங்கள் எனக் குறிப்பிட்டவை:

அடிப்படை வசதிகளை குறைவறப் பெற்றாலும்மனிதனின் விருப்பங்கள் மேன்மேலும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. எல்லோரும் எல்லாவற்றையும் வாங்குவதையே விரும்புகின்றனர்கொடுப்பதை வெறுக்கின்றனர். விருப்புவெறுப்பு இல்லாததடைகளற்றகட்டுப்பாடற்ற அன்பு”, இன்று யாரும் செலுத்துவதில்லை. சரியான விருந்தோம்பல் இல்லை. இன்பமோதுன்பமோபகுத்தனுபவித்தல் இல்லை. அழுத்தத்தை வெளியிடத் தயக்கம். வெளியிடங்களில் இயல்பாயிருப்பதில்லை. சிரிப்புஅழுகை, (சாமியாட்டம்!) போன்ற செயல்கள் நன்மைக்கென்ற உணர்வில்லை. மன்னித்து மறக்கும் குழந்தைத் தனம் இல்லை. சினத்தை செல்லாவிடத்து அடக்கி அல்லிடத்துக் காண்பித்தல்,... உள பிற.

இவ்விடம் கற்றது: உருவகப்படுத்தப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட துயரமே மன அழுத்தம்” வரக் காரணம். சரியே! இதுவே மிக முக்கியக் காரணம்என்றுணர்ந்தேன். மன அழுத்தம்” வராமலிருக்கப் பழக வேண்டுவன: சிறு பதிலிறுத்தல் (தேவையற்ற/இணையான விளக்கங்கள் அல்லது எதிர் வினையேற்றும் சொற்கள் தவிர்த்தல்). ஆம். இதுவே மிகச் சரியான வழியென்றும் உணர்ந்தேன்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: ஒவ்வொரு வினைக்கும் சம அளவுள்ள எதிர்வினை உண்டு என்பது உலகறிந்த உண்மை. ஆனால்ஒருவர் நமக்குச் செய்த வினையை விட, நாம் செய்யும் எதிர்வினை எப்படி அதிகச் சக்தி பெறுகின்றது?

அடுத்துமருத்துவர் திரு பேச்சிமுத்து அவர்களின் அனுபவங்களும்புது வருடத்தில் இருந்து (2012) செய்யவிருக்கும் விவசாயப் பணிகளும். ஆம்மருத்துவர் ஒருவர் தன் சிறப்பான (பணம் கொழிக்கும்) தொழிலைத் தன் கொள்கைக்காகத் துறந்துமீண்டும் ஒரு விவசாயியாக செய்யவிருக்கும் ஓர் அவதாரம். அவர் கூறியவற்றில் சில: உடல் நலம் தரும் பண பலம்”; மனிதனின் வாழ் நாளில் 500 நாள்கள் தலைவலியில்(யால்) கழிந்து விடும்சாதாரண மருந்துகள் போதுமென்றாலும் நிறைய மருந்தெழுதாவிட்டால் நோயுற்றோர்க்குச் சந்தேகம் வரும் வைத்தியர் மீது; (நடநீர் அருந்து என்று) மருந்தே எழுதாதிருந்தால் அவ்வளவுதான் திரும்ப வரவே மாட்டார்கள்.

இவ்விடம் கற்றது: மலச்சிக்கலும் தலைவலிக்குக் காரணமாகும். ஜலதோஷமல்லாத இரண்டு நாள் காய்ச்சல் உடலுக்கு மிக நன்றுஏனெனில்உடல்தான் நலம் பெற தற்காப்பு நடவடிக்கையில் உள்ளது என்பதுணர வேண்டும்நல்ல காய்ச்சல் மருந்தென்றால் வெப்ப நிலை 99ல் இருந்து 100க்கு அதிகரிக்க வேண்டும்! சிறு உபாதைகளுக்கு உண்மையான மருத்துவச் செலவு 40 பைசா தான்சிறுநீரகக் கற்களுக்கு நீரும்சிறுநெருஞ்சி முள் அல்லது வாழைத் தண்டுவாழைப்பூவும் போதும்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: இந்தப் பணி (மன) மாற்றம் சுழன்றும் ஏர் பின்னதுலகம்” என்பதால் மற்றெல்லாம் தொழுதுண்டு” பின் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பா அல்லது நிலமென்னும் நல்லாள்” நகுவாளென்றா?

பின்னர்வாழையிலைக் குளியல் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமும்சென்றடையும் வழியும்செய்த முறைகளும் மற்ற நண்பர்கள் விரிவாக விவரித்துள்ளார்கள். ஆகவேஅதற்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குத் திரும்பிசிறிது நேர விளையாட்டிற்குப் பின்ஆரம்பித்தது திரு சின்னசாமி அவர்களின் நூறு சதவிகித இயல்பான தன்னிலை விளக்கம். வெகு சிலருக்கேசிறு(குருவருள்/இறையருள்)பொறி கொண்டுதன் மெய்யையே நெய்யாக்கிஅதைப் பெரிய நெருப்பாக மாற்றிகற்றறிந்துகடைப்பிடித்து (தனியாளாய் மூச்சடக்கல் பயிற்சி செய்வது)உதாரணமாய் விளங்குவதுசெய்தும் காண்பிப்பது சாத்தியமாகும். பஞ்ச சுத்தி” என்ற தலைப்பில் பேசத் தொடங்கினார். ஐந்து பூதங்களின் (நிலம்நீர்நெருப்புகாற்றுவான்) சுத்திகரிப்பு மற்றும் அவற்றின் சாரமாகவே அமைந்திருக்கும் உடலினைச் சுத்தம் செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினார். கந்தர் அனுபூதிபிராணயாமம் பற்றியும் விளக்கமளித்தார். நமக்குள் இருக்கும் இறை (இறைசக்தி)தனை நாம் காணஅதன் மேல் மூடியிருக்கும் மலமாசுகளை அகற்ற வேண்டும் என்றார். கிடைத்தற்கரிதான இம்மானிடப் பிறப்பின் பெருமையையும்ஞானமும் கல்வியும் நயந்து பின் தானமும் (மெய்த்) தவமும் செய்யத் தூண்டினார். கூட வருவது பாவமும் புண்ணியமும் என்றிருந்தோம்ஆனால்விரதமும் ஞானமும் கூடகூட வருமென்றார். குல தெய்வ வழிபாடு நன்றென்றார்.

இவ்விடம் கற்றது: திண்ணியர் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர். பிராணயாமம் செய்யும் முறை. பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக்கால்” என்பதற்கேற்ப உடலை மண்ணாக்காமல்பொன்னாக்க செய்ய வேண்டிய முயற்சி.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: ஒரு எம்.பி.ஏ உதவியாளர் இவருடன் இருந்திருந்தால்இவர் இணரூழ்த்தும் மலர்” ஆகியிருப்பாரோகுலதெய்வம் இருக்கமும்மூர்த்திகள்மும்மூர்த்திகளின் குடும்பங்கள்அவர்களின் அன்புப் பணியாளர்கள்குறுந்தெய்வங்கள் என்று எண்ணற்ற தெய்வங்களும்பல சித்தர்களும்குருக்களும் தம் சக்திகளை வெளியிட்டுப் பிரிவினைகளுக்கு வித்திடுகின்றனராரமணரை வியந்த சங்கராச்சாரியார்கள் இப்பொழுது உண்டானால்நன்றாயிருக்கும் அல்லவா?

இப்பொழுது நேரம் மாலை சுமார் 7:00மணி. நாங்கள் அமர்த்தப்பட்டது வேலன் விகாஸ் பள்ளியின் ஒரு வகுப்பறை. திரு திருச்செந்தில் அடிகள் எடுத்துக் கொண்ட தலைப்பு பிரபஞ்சம்”. இவ்வுலகம்இறையின் திருவிளையாடலா என்று ஆரம்பித்த அடிகளார் இன்பம்/துன்பம் குறித்து விளக்கினார். இறை சக்தியை தோற்றமும் முடிவும் இல்லாததென்றார். அறிவும் அத்தகையதே என்றார். உயிர் உடலோடு சேர்ந்து அறிவு என்று அறியாமை கொள்கின்றது”, “உயிர் உடலோடு சேர்ந்தவுடன்உடலைத் தானென்று எண்ணும்” என்றார். அறிவு எங்கும் வியாபிக்கும் வல்லமை பெற்றது. உதாரணமும் அளித்தார்: ஒரு பேருந்து இயக்குனரின் அறிவுமுழு பேருந்தின் அளவிற்கும்மற்ற வாகன ஓட்டிகளின் அறிவு அவ்வவ்வாகனத்தின் அளவையும் ஒத்திருக்கும் அல்லவாபின்னர் அறிவிற்கும் உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிட்டார். அறிவு நிரந்தரமானதானாலும் வலிதில்லை. உணர்ச்சி வலிதானாலும் நிரந்தரமில்லை”. தவம் என்பதுநம்முடைய சுகதுக்க உணர்ச்சிகளை நம்முள் புக அனுமதித்துப் பின் நம்மைக் கடந்து செல்லவும் அனுமதிப்பதாகும் என்றார். தன்னைத் தானே மூன்றாம் நபராய்ப் பார்க்கும் முறையை அறிவித்தார். நம் இயக்கமும் அறிவின்இறைசக்தியின் பதிவுகள் என்றார்.

இவ்விடம் கற்றது: தோன்றி மறையும் தன்மை இறைசக்திக்கும்அறிவுக்கும் இல்லை என்பது. ஆற்றல் மாறாக் கோட்பாட்டிற்கு ஒரு மறு பார்வை.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: கூட வருவதென்றால்மறுபிறப்பும்/மறப்பும் ஏன். புல்லாகிப் பூடாய்,... எல்லாப் பிறப்பும் வரக் காரணங்கள் பதிவுகள் மட்டும் தானா அல்லது அறிவின் பெருக்கமா? “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்பது தமிழிலக்கணம். ஐ மற்றும் ஔ விதி விலக்காஈருடல் மேல் ஓருயிர் ஒன்றும் பிற மொழியிலக்கணம் தவறாஉயிரணுவும் (உடலோடு?) மற்ற உயிரணுவும் (உடலோடு) சேர்ந்து புதிய உயிர்மெய் கொடுக்கும் விதம்தமிழிற்கில்லையா?
(பகிர்தல் தொடர்கிறது...)

புதன், 25 ஜனவரி, 2012

சேவைச் செய்தி:- ஏழு நாள் இயற்கை நலவாழ்வியல் முகாம்-குலசேகரன்பட்டினம்.


ஆரோக்கியம் நம் கையில் !
மருத்துவர்கள் கையில் அல்ல !!  


இயற்கை உணவே
நோய் தீர்க்கும் மருந்து. 


குலசேகரன் பட்டினம் இயற்கை நலவாழ்வு மையத்தால்


இந்திய அரசு நிறுவனமான 
தேசீய இயற்கை மருத்துவக் கழகம்
(National Institute of Naturopathy-Pune)
ஆதரவுடன் நடத்தப்படும்

ஏழு நாள் யோகா, 
இயற்கை மருத்துவச் சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம்


நாள்:- 29-01-2012 to 04-02-2012


நடைபெறும் இடம்:

ஞானியார் சமாதி,
குலசேகரன் பட்டினம்
(வழி) திருச்செந்தூர், 
தூத்துக்குடி மாவட்டம்.

தமிழ் நாடு.

மேலும் விவரங்களுக்கு 
தொடர்பு கொள்ள:
திரு Dr. மூ.ஆனையப்பன்,
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )

9944042986, 9380873645


இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகிறேன்.
அஷ்வின்ஜி, சென்னை

Email: ashvinjee@gmail.com

வாழி நலம் சூழ.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

18 பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம். அனுபவப் பகிர்வுகள்.


கடந்த பதிவில் முன்னுரை. இப்போது இனியனின் அனுபவ உரை..
பழனி பயிற்றுலா(25-12-2011 முதல் 30-12-2011)குறிப்புகள். -கி.நச்சினார்க்கினியன்
அனுபவ உரை..

நாம் அறிவோம், “கற்றது கைம்மண் அளவுகல்லாதது உலகளவு” என்று. அனைத்தும் கற்றிட ஆசையிருந்தாலும், “கல்வி கரையிலகற்பவர் நாள் சில”. இந்தப் புதிருக்குச் சரியான விடை கற்றிலன் ஆயினும் கேட்க”. ஆம்இதுவே சிறந்த குறுக்கு வழி, “கற்றலின் கேட்டலே நன்று”. கேட்டோம்கற்றிராதனவும்கற்றவைக்கு மற்றப் பொருளுரைகளும்.
பழனியில் 25-12-2011 மாலையில்முதலில் நாம் கண்டவர்திரு.ஹரிஹரன்(அஷ்வின்ஜி) அவர்கள். சந்தித்தவிடம் ஓர் உணவகம். ஆம்இரவுக்கு என்ன கிடைக்குமோவென்ற எண்ணத்தில் நாங்கள் சிற்றுண்டி முடித்திருந்தோம். இவருடன் வந்திருந்தவர் திரு.பிரேம். எங்களை அழைத்துக் கொண்டு சென்ற இடம் யோகாச்சார்யா திரு.முருகன் அவர்களின் இல்லம். பெங்களூரிலிருந்து காட்டிற்கு எனக் கூட்டி வந்து திரு.முருகன் அவர்களின் வீட்டிலேயே உறங்கி ஓய்வெடுக்க வைத்தனர். வீட்டின் உள்ளேயும்வெளியேயும் நாங்கள் கண்டது இறைவடிவங்கள். திசை நோக்கி கால் நீட்டும் பழக்கம்இங்கு பழனி மலை நோக்கி சிரம் வைத்து உறங்கினோம்.

இவ்விடம் கற்றது: தமிழில் உரையாட விழையும் உள்ளங்கள் உறைந்திருக்கக் கண்டதும்பாரதியின் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்கும்..இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் மெல்லத்தமிழினிச் சாகும் என்ற பேதையின்’ பெரும்பழி தீரும்” என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: தமிழில் இறைவணக்கம்யோகம் உண்டா?

முதல் நாள் 26-12-2011அதிகாலை குளித்தவுடன் எங்களுக்கு அன்புடன் வழங்கப்பட்டது உண்மையான தேனீர் (தேன்+நீர்). அங்கு அறிமுகமானோர் திரு நாகராஜன் மற்றும் திரு பாஸ்கர். கிளம்பிச்சென்ற இடம்பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு புளியமரத்துக் கொட்டகை. மின்சார வேலியுடன் கூடிய ஒரு பெரியத் தோட்டம். இங்கு நாம் அறிமுகம் உற்றது மெய்த்தவ திரு திருச்செந்தில் அவர்களுடன். இவரும் திரு முருகனைப் போல் வெள்ளையாடையுடன். (வெள்ளைக்கில்லைக் கள்ளச்சிந்தை!). பின்னர் இயற்கை உணவு தயாரிப்பதில் வல்லுனரான திரு ரமேஷ் அவர்களுடன் அறிமுகம். மற்றும் சில பயிலுனர்கள் (திருவாளர்கள் பன்னீர்செல்வம்பரிமளாதேவிபாஸ்கரன் மற்றும் செல்வன் ஹரி) அறிமுகம். திரு திருச்செந்தில் அடிகள் செய்த வேள்வியுடன் துவங்கியது இயற்கை உணவு முகாம்.

இவ்விடம் கற்றது: எந்த ஒரு செயலும் இறைவணக்கத்தோடு செய்தல் நலம் பயக்கும்,  வேள்வியென்றாலும் சரிஉணவுட்கொண்டாலும் சரி.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: உலகம் பழித்ததையொழித்த திரு திருச்செந்தில் அடிகள் முகச்சவரம் செய்யாதது ஏன்?


பின்னர்நாங்கள் சென்ற இடம் பழனியில் உள்ள சாய்சதன் அரங்கம். இங்கே திரு.கோ.சித்தர் அவர்களின் அருமையான உரை. முயற்சி திருவினையாக்கும் என்பதறிவோம். எதுவரை முயற்சிக்க வேண்டும் என்பதை எளிமையாய் விளக்கினார் முயற்சி: நம்மால் முடியும் வரை அன்றுநினைத்த குறிக்கோள் முடியும் வரை” என்று. உணவுக்கும் திணை கொடுத்தார் (உயர்திணைஅஃறிணை போல்)உயர் நிலைதாழ் நிலைநடுநிலை என்று. பயனளித்துத் தானாக வெளியேறும் நீர்காற்று உயர் நிலையாம். சிறு முயற்சியோடு செரிப்பவைகளான பழங்கள்கீரைகள் நடு நிலையாம். பெரு முயற்சி வேண்டுபவை மற்ற சமைத்த/சமைக்காத சைவ/அசைவ உணவுகள் எல்லாம் தாழ் நிலையாம். நாடிய நோய் தீரநோய் முதல் நாடுவோம்ஆம் தாழ் நிலை உணவு தான் அதுஎன்பதறிந்தோம்.

இறைவன் உயிர்களைப் படைத்த பொழுதே அவற்றிற்கான உணவையும் படைத்து முடித்திட்டான். அரிசி-எலிக்கும்கிளிக்கும் என்றார்பால்-(செரிக்கும் உறுப்புகள் முழு வளர்ச்சியுறாத) குழந்தைக்கென்றார்காய்கள்-குரங்குக்கும்தாவரங்கள்-ஆடு மாடுகளுக்கும்கிழங்கு-பன்றிக்கும்மாமிசம்-மற்ற விலங்குகளுக்கும் என்றார்ஆனால் மனிதன் மட்டும் செயற்கைச் சுவைக்கு (சமைத்த உணவிற்கு) மாற்றம் பெற்றதற்கு வருந்தினார். மனிதனுக்கேற்ற நடுநிலை உணவுகளுக்குப் பட்டியலிட்டார். ஒற்றைஇரட்டைகூட்டுச் சர்க்கரைக்கு விளக்கம் தந்துநீரிழிவு நோய்க்குக் காரணமும் கூறினார். கைக்குத்தல் அரிசிக்கும்நாட்டுச் சர்க்கரைக்கும் நன்றி பாராட்டினார். பெற்றோர் உணர்ந்திட்டப் பெயருக்கேற்றார் போல்பயனீந்தார். உரை கேட்டோர் சிலர் கேள்விகளுக்கும் விடை தந்தார். மறதிக்கும்உடல் சூட்டிற்கும்,  வாயுத்தொந்தரவுகளுக்கும்உடல் துர்நாற்றத்திற்கும்வேர்க்கடலை முதல் மற்ற பருப்புகள் உண்ணும் முறைக்கும் விளக்கமளித்ததும் பாராட்டத்தக்கது. படிக்கச் சொன்னது ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் புத்தகம். முயல்வோம்!

இவ்விடம் கற்றது: பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் உணவுகளைத் தவிர்க்க ஒரு பொறி. பனையடியில் பாலுண்டாலும்கள்ளுண்டாலும் ஒன்று என்பதற்கு மாற்றுப் பார்வை. (இரண்டு பேரும் குடிப்பழக்கத்திற்கு அடிமைகள் தான்).

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: குளிர் சாதனப் பெட்டியைப் பிணவறை என்றார். உபயோகிப்போர் மனம் வருந்தத்தான் செய்யும். உயிருள்ள அணுக்களையும் (இரத்தம் முதல்செல்கள் வரை) பல்லாண்டு பாதுகாக்கும் பெட்டிவிரைவில் அழியும்அழியப் போகும் பொருள்களையும் பாதுகாக்கும். அழிந்தவற்றையும் அதனுள் வைப்பதால்அதற்கு மட்டும் தான் (அழிந்த பொருள்களுக்கு மட்டும் தான்) என்றில்லை என்பதுஎன் எளிய கருத்து.

பின்னர் நாங்கள் கொட்டகைக்கு(தோட்டத்துக்கு)த் திரும்பினோம். மதிய இயற்கையுணவிற்குப் பின் சிறு ஓய்வு. நான்கு மணியளவில்யோகாச்சார்யா திரு முருகன் அவர்கள்நலம் தரும் யோகம் பயிற்றுவித்தார். யோகாவிற்குத் தயாராகும் முறைகள்ஆசனங்கள் செய்வித்துப் பின்னர் சூரிய நமஸ்காரம் செய்யும் முறையையும் சொல்லிக் கொடுத்தார். சிறுவன் ஹரிபிரகாஷ் அருமையாகச் செய்ததுடன்பெரியவர் கேட்கத் தயங்கும் (ஆனால் கேட்க விரும்பும்) சந்தேகங்களை எழுப்பியதும் பாராட்டத்தக்கது.

இவ்விடம் கற்றது: நோய்க்கு இடம் கொடேல்”; “பெருமை பெருமிதம் இன்மை” என்ற வரிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய திரு.முருகன் அவர்களின் எளிமையான தோற்றமும்நா நயமும்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: பெரும்பான்மையான நேரங்களில் திரு முருகன் அவர்கள் கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு பேசுவது பழக்கத்தினாலாகுறிப்பிட்ட காரணத்திற்காகவா? (அலுவலகத்தில் சில மேல்நாடுகளில் இப்பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டேன்).

சுமார் 4:30 மணியளவில்திரு.திருச்செந்தில் அடிகளின் பதஞ்சலி யோக சாஸ்திரம்” குறித்த விளக்கவுரை தொடங்கியது. துவக்கத்தில்இந்தியர்களின் அறிவைப் பாராட்டும் விதமாய்உயிர் துறந்தோரின் உடலைப் பாதுகாக்க மற்ற நாடுகளில் இருந்த பழக்கங்களைப் படம் பிடித்தார். திருவாசகத்திலேயே கூறப்பட்டக் கருத்துக்கள்இப்பொழுது மேல் நாடுகளில் புதிய வானியலுடன் ஆராய்ச்சி செய்யப்படுவதைத் தெரிவித்தார். சிறு அறிவு பெற்றவுடன் தோன்றும் ஆசைஅகங்காரம் வளரும் விதத்திற்கும்பின்னர் அவற்றை அழிக்கும் சிரமத்திற்கும்காரணங்கள் கூறினார். யமநியம விளக்கம் ஒரு ஆரம்பம். ஒவ்வோர் உடலணுக்களில் (செல்களில்) உயிர்இறை (அற்புத சக்தி) நிறைந்திருப்பதைச் சுட்டினார்.

இவ்விடம் கற்றது: மனதிற்குக் கடிவாளங்கள் அப்பியாஸம் மற்றும் வைராக்கியம். கற்க வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது திருக்கோவையார்” புத்தகத்தை. முயல்வோம்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: அற்புத சக்தி (இறைவன்) என்பதற்கு மெய்த்தவ விளக்கம் என்ன? “கல்மறமீண்டும் கல்” என்ற சொற்றொடருக்கான விளக்கம் என்ன? “அகங்காரம் அல்லாது தைரியம் தோன்றாது” என்ற புதுமைக் கருத்துக்கு விரோதமா?

பிற நண்பர்கள் குறிப்பிட்டது போல்பழனியாண்டவனின் இரு முகங்களும், “முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்றெண்ணிமுகம் நகநெஞ்சத்தகம் நகஅனைவரும் தங்க எதிரிலுள்ள வேலன் (பழனி முழுதும் முருகன் பெயர் சொல்லும்) விகாஸ் பள்ளி விடுதியில் அனுமதி பெற்றது மிகவும் பாராட்டத்தக்கது. 


விரைவில் அமையவிருக்கும் புதிய பயிலகம் மற்றும் தங்கும் வளாகம்அடுத்துப் பயிலவருவோர்க்கு ஒரு வரப்பிரசாதம்.
(பகிர்தல் தொடரும்)

திங்கள், 23 ஜனவரி, 2012

17. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம். அனுபவப் பகிர்வுகள்.


இதுகாறும் பொறுமையுடன் எனது கட்டுரையை படித்த அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். என்னுடன் முகாமில் கலந்து கொண்ட அன்பர்களின் அனுபவப் பகிர்தல் தொடங்குகிறது. பகிரச் சொல்லிக் கேட்டுக் கொண்டதும் உடனே பகிர்வை அனுப்பிய திரு.கே.நாகராஜனுக்கு என் இதய நன்றி. தொடர்ந்து தனது அனுபவப் பகிர்வை அனுப்பிய பங்களூரு இனியனுக்கு என்தன்பு நன்றி. அன்பர் கி.நச்சினார்க்கினியன் (பங்களூரு) தமது முகாம் அனுபவங்களை அவருக்கே உரித்தான பாணியில் தெளிதேன் தமிழில் பிழிந்து தருகிறார். தொடர்ந்து பருகி மகிழ அழைக்கிறேன்.

பழனி பயிற்றுலா (25-12-2011 முதல் 30-12-2011) குறிப்புகள்
– கி. நச்சினார்க்கினியன்

(நல்லுடல் மற்றும் நல்மனம் விழைவோர்க்கோர் அறிமுகம்தமிழறிஞர்க்கொரு பொழுதுபோக்குஅவல்திருப்புதல்மற்றையோர் தவிர்க்கவும்என்னிடம் உள்ள முழு உரையைக் குறுக்கிப் பிற நண்பர்களின் உரையில் இயம்பிடாத சிலவற்றை மேற்கோளிட முயல்கின்றேன்;    - நன்றி)

அன்புடையீர் வணக்கம்,

முன்னுரை
கற்பது கடினம். கசடறக் கற்பது மிகக்கடினம். கசடறக் கற்றதற்கேற்ப நிற்பது மிக மிகக்கடினம். அதனால் தான்எனக்கும் (இறை பயம் கொண்டசைவ உணவாளிதீயப்பழக்கங்கள் ஏதுமில்லாத எனக்கும்!) சிறு உடலுபாதையின் ஆரம்ப நிலை. வழக்கமாய் அனைவரும் வியக்கும் வினாபுகை பிடிப்போரை விடஅசைவ உணவு உண்பவரை விடகுடிப்பழக்கம் உள்ளவரை விட, ... மற்றவர் ஏன் அதிகம் பாதிப்புள்ளாகின்றனர். அறிவுரைத்தனர் அன்புடையோர் ஆயிரம். நதிகள் (பாதை) வேறாயினும்சேருமிடமொன்றல்லவா?


சில வழிகளில் சென்றும் பார்த்தேன். பயிலும் வரை முயற்சி செய்துள்ளேன்பயனின்றி! எனக்குக் காண்பிக்கப்பட்ட புதிய வழிஇந்த இயற்கை உணவு முகாம். துவங்கும்பொழுதே சந்தேகம்! இருப்பினும்முயற்சி தரக்கூடிய மெய்வருத்தக் கூலிக்காய்பொன்செய்யும் மருந்தோடுஇவ்வழியில் கால் வைத்தேன். சுற்றுலாஅக்கரையின் பச்சைஇனிய உடலமைப்புக்களித்த உறுதிமொழி (உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகே)குறிஞ்சியும் முல்லையும் கொஞ்சும் இடம்ஓடும் நீர்கொட்டும் நீர் ஆகியவை என் இல்லத்தரசியையும் (இராதா இனியன்)இளவரசியையும் (நவீனா இனியன்)என் தமக்கை மங்கையர்க்கரசியின் மகள் செல்வி அபிதாவையும் கவரவேநாங்கள் நால்வரும் பழனிக்குப் பயணித்தோம். எனக்கு இவற்றோடு நினைவுக்கு வந்தவை நல்லாரைக் காண்பதுவும்அவர் சொல் கேட்பதுவும்அவர் குணங்கள் உரைப்பதுவும்அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே” என்றும் நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று படித்த ஔவையாரின் பாடல்கள் தாம்.


முக்கியக் குறிக்கோள் 
இயற்கை உணவு”. ஒரு நாளில் உண்ணும் நேரம் மிகக்குறைவேமீதி நேரத்திற்குப் பொழுது போக்கஇலவச இணைப்புகள் யோகா - அறிமுகம்”, “மெய்த்தவம் - அறிமுகம்”, “இணையற்ற இதயங்கள்: இயற்கை விஞ்ஞானிஇயற்கைப் பிரியன்இயற்கைச் சாதனையாளர்இயற்கை மருத்துவர்கள் – அறிமுகம்” மற்றும் என்னைப் போல் அறிய வந்த அரிய மாணவர்கள்அறிமுகம். இவையோடு இயற்கையோடும் – அறிமுகம்”. வயிற்றிற்கு உணவுசெவிக்குணவில்லாத போதென்பதால்அனைவருடைய விளக்க உரைகள் கொண்டஅருமையான நாள்களில் நினைவில் நின்றவைகீழ்க்காணுமாறு.


(பகிர்தல் தொடரும்)