இதுகாறும் பொறுமையுடன் எனது கட்டுரையை படித்த அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். என்னுடன் முகாமில் கலந்து கொண்ட அன்பர்களின் அனுபவப் பகிர்தல் தொடங்குகிறது. பகிரச் சொல்லிக் கேட்டுக் கொண்டதும் உடனே பகிர்வை அனுப்பிய திரு.கே.நாகராஜனுக்கு என் இதய நன்றி. தொடர்ந்து தனது அனுபவப் பகிர்வை அனுப்பிய பங்களூரு இனியனுக்கு என்தன்பு நன்றி. அன்பர் கி.நச்சினார்க்கினியன் (பங்களூரு) தமது முகாம் அனுபவங்களை அவருக்கே உரித்தான பாணியில் தெளிதேன் தமிழில் பிழிந்து தருகிறார். தொடர்ந்து பருகி மகிழ அழைக்கிறேன்.
– கி. நச்சினார்க்கினியன்
(நல்லுடல் மற்றும் நல்மனம் விழைவோர்க்கோர் அறிமுகம்; தமிழறிஞர்க்கொரு பொழுதுபோக்கு, அவல், திருப்புதல்; மற்றையோர் தவிர்க்கவும்; என்னிடம் உள்ள முழு உரையைக் குறுக்கிப் பிற நண்பர்களின் உரையில் இயம்பிடாத சிலவற்றை மேற்கோளிட முயல்கின்றேன்; - நன்றி)
அன்புடையீர் வணக்கம்,
முன்னுரை
கற்பது கடினம். கசடறக் கற்பது மிகக்கடினம். கசடறக் கற்றதற்கேற்ப நிற்பது மிக மிகக்கடினம். அதனால் தான், எனக்கும் (இறை பயம் கொண்ட, சைவ உணவாளி, தீயப்பழக்கங்கள் ஏதுமில்லாத எனக்கும்!) சிறு உடலுபாதையின் ஆரம்ப நிலை. வழக்கமாய் அனைவரும் வியக்கும் வினா, புகை பிடிப்போரை விட, அசைவ உணவு உண்பவரை விட, குடிப்பழக்கம் உள்ளவரை விட, ... மற்றவர் ஏன் அதிகம் பாதிப்புள்ளாகின்றனர். அறிவுரைத்தனர் அன்புடையோர் ஆயிரம். நதிகள் (பாதை) வேறாயினும், சேருமிடமொன்றல்லவா?
சில வழிகளில் சென்றும் பார்த்தேன். பயிலும் வரை முயற்சி செய்துள்ளேன், பயனின்றி! எனக்குக் காண்பிக்கப்பட்ட புதிய வழி, இந்த இயற்கை உணவு முகாம். துவங்கும்பொழுதே சந்தேகம்! இருப்பினும், முயற்சி தரக்கூடிய மெய்வருத்தக் கூலிக்காய், பொன்செய்யும் மருந்தோடு, இவ்வழியில் கால் வைத்தேன். சுற்றுலா, அக்கரையின் பச்சை, இனிய உடலமைப்புக்களித்த உறுதிமொழி (உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகே), குறிஞ்சியும் முல்லையும் கொஞ்சும் இடம், ஓடும் நீர், கொட்டும் நீர் ஆகியவை என் இல்லத்தரசியையும் (இராதா இனியன்), இளவரசியையும் (நவீனா இனியன்), என் தமக்கை மங்கையர்க்கரசியின் மகள் செல்வி அபிதாவையும் கவரவே, நாங்கள் நால்வரும் பழனிக்குப் பயணித்தோம். எனக்கு இவற்றோடு நினைவுக்கு வந்தவை “நல்லாரைக் காண்பதுவும், அவர் சொல் கேட்பதுவும், அவர் குணங்கள் உரைப்பதுவும், அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே” என்றும் “நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று படித்த ஔவையாரின் பாடல்கள் தாம்.

முக்கியக் குறிக்கோள்
“இயற்கை உணவு”. ஒரு நாளில் உண்ணும் நேரம் மிகக்குறைவே, மீதி நேரத்திற்குப் பொழுது போக்க, இலவச இணைப்புகள் “யோகா - அறிமுகம்”, “மெய்த்தவம் - அறிமுகம்”, “இணையற்ற இதயங்கள்: இயற்கை விஞ்ஞானி, இயற்கைப் பிரியன், இயற்கைச் சாதனையாளர், இயற்கை மருத்துவர்கள் – அறிமுகம்” மற்றும் “என்னைப் போல் அறிய வந்த அரிய மாணவர்கள்–அறிமுகம். இவையோடு “இயற்கையோடும் – அறிமுகம்”. வயிற்றிற்கு உணவு, செவிக்குணவில்லாத போதென்பதால், அனைவருடைய விளக்க உரைகள் கொண்ட, அருமையான நாள்களில் நினைவில் நின்றவை, கீழ்க்காணுமாறு.
(பகிர்தல் தொடரும்)
(பகிர்தல் தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக