சனி, 25 செப்டம்பர், 2010

20-06-2010-ஆடுதுறை


வணக்கம்.  நான் சென்னையில் தென்னக இருப்புப்பாதை அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாக பணி புரிகிறேன். இப்போது எனது வயது ஐம்பத்து நான்கு.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு மே மாதம் ஆடுதுறையில் நடைபெற்ற ஒரு வார இயற்கை மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்ற இனிய நினைவுகளை மீண்டும் நன்றியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு பின்னர் தற்போது உங்களிடையே எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கும் திரு மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் திரு இராமலிங்கம் ஐயா அவர்களுக்கும் அவர்கள் மூலம் இந்த வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறேன்.

கடந்த முறை முகாமில் கலந்து கொண்ட போது நான் சந்தித்த திருவாளர்கள் மெய்யப்பன்இராமலிங்கம்யோகி தி.ஆ.கிருஷ்ணன் மற்றும் மூ.ஆ.அப்பன் ஆகியோரின் தொடர்புகளும் மேலான வழிகாட்டல்களும் இன்றளவும் எனக்கு கிடைத்து வருகிறது என்பது பெருமைக்குரிய மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

உங்களிடையே இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு நான் எவ்வாறு எனக்கு ஏற்பட்ட ''நீரிழிவு நோயினை'' மருந்தின்றி குணமாக்கிக் கொண்டேன் என்பது பற்றி.

முன்னரே இயற்கை நலவாழ்வு பயிற்சி பெற்றிருந்தும் பணி மற்றும் கால மாறுபாடுகளின் காரணமாக என்னால் இயற்கை உணவினை தொடர்ந்து உண்டு வரஇயலாமல் போனது. எனினும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சந்தர்ப்பங்களில் யோகா பயிற்சி மற்றும் இயற்கை உணவுகளை மேற்கொண்டு வந்திருக்கிறேன். எனினும் பணி மும்முரம் காரணமாக ஏழு ஆண்டுகள் 2002 முதல் 2008 வரை இந்தியா முழுமையும் பயணம் செய்து நீண்ட நாட்கள் வெளியில் உணவு உண்ணவேண்டிய சூழ்நிலைகள் உருவானதால் எனக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னரே நான் உயர் இரத்த அழுத்தம்ஹைபர்டென்ஷன் போன்ற பாதிப்புகளால் இரயில்வே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று அங்கு தந்த ஆங்கில மருந்துகளை உண்டு வந்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக அதனுடன் சர்க்கரை வியாதியும் சேர்ந்து கொண்டது.  இரத்த பரிசோதனை செய்து கொண்ட போது கீழ்க் கண்ட அளவுகள் இருந்தன. 22-12-2007 - Blood Sugar (Fasting) 245 mgs/dl (Ref value: 70 to 100). அதன் பிறகு சித்தமருத்துவம் மேற்கொண்டேன். நிறைய லேகியங்கள்பொடிகள்கஷாயங்கள்உணவுக் கட்டுப்பாடுகள் மேற்கொண்ட பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது கிடைத்த அளவுகள்:
09-01-2008 -      Blood Sugar (Fasting) - 275 mgs/dl
         Blood Sugar (PP) - 469 mgs/dl

பிறகு எம்.வி. டையபெடிக் மருத்துவ மனையில் சென்று அங்கு பரிசோதனை செய்து கொண்டேன்.

02-02-2008        -  Blood Sugar (Fasting) - 217 mgs/dl
   Blood Sugar (PP) - 294 mgs/dl
என்று பரிசோதனை முடிவுகள் வந்தன.

அதன் பிறகு ஆங்கில மருத்துவத்தினை மேற்கொண்டேன். தொடர்ந்து ஒரு மாதம் மருந்துகள்உணவுக் கட்டுப் பாடுகள் கடைப் பிடித்த பின்னர் கிடைத்த பரிசோதனை முடிவுகள்

01-03-2008 -      Blood Sugar (Fasting) - 85 mgs/dll (Ref value: 70 to 100)
Blood Sugar ( P  P)    - 102 mgs/dl (Ref Value: 100 to 140)

மருந்துகளையும்உணவுக் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து வரவேண்டும் என்கிற ஆங்கில மருத்துவரின் அறிவுரை அடிப்படையில் நான் இரத்த அழுத்தத்துக்கும்சர்க்கரை நோய்க்கும் தொடர் சிகிச்சை மேற்கொண்டேன். ஆயினும் எனது உடல் உபாதைகள் குறைந்த மாதிரி தெரியவில்லை. Once a diabetic; always a diabetic. Once a heart patient; always a heart patient, என்று ஆங்கில மருத்துவர்கள் கூறிய சித்தாந்தம் எனக்கு அலுப்பு தட்டலாயிற்று.

ஏனெனில் மருந்துகளை உண்ணத் தவறி விட்டால் தொல்லைகள் அதிகமாக இருந்தன. சிகிச்சையின் போதும்உடல் வலிசோர்வு போன்றவை தொடர்ந்து இருந்தன. உடல் உஷ்ணக் கட்டிகள் போன்றவைகள் அடிக்கடி வந்து தொல்லை தந்தன. சிறுநீர்த் தாரை எரிச்சல் ஒரு தொடர் கதையாகவே இருந்தது.

ஆங்கில மருந்துகள் சிறுநீரகங்களில் கற்களை உண்டாக்கும் என்று வேறு கூறினார்கள். அதுவும் இன்றி தொண்ணூறு கிலோ எடையுடன் இருந்தேன். உணவைக் குறைத்தாலும்  இடர்ப்பாடுசாப்பிட்டாலும் இடர்ப்பாடு என்று இருதலைக் கொள்ளியாய் தவித்தேன்.

இந்த தொடர் தொல்லைகளில் இருந்து விடுபட எண்ணினேன். ஏற்கனவே மேற்கொண்ட இயற்கை உணவு முறைக்கு மாற முடிவு செய்தேன். கடந்த ஆண்டு மே மாதம் கும்பகோணத்தில் நடைபெற்ற இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்தேன். ஆனால் தேர்தல் பணிக்கு என்னை நியமித்ததால் அதில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று. பிறகு திரு யோகி.கிருஷ்ணன் அவர்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சந்தித்தேன்.

அவர் என்னிடம், ''நீங்கள் மீண்டும் தொடர்ந்து யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்இயற்கை உணவினை எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக சாப்பிடுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குணமடைதல் விரைவாக இருக்கும்'' என்றார். அவரது அறிவுரையின்படி யோகம்மற்றும் இயற்கை உணவு முறைகளை பின்பற்றினேன்.

கடந்த டிசம்பர் மாதம் திரு மூ.ஆ. அப்பன் அவர்கள் பழனியில் நடத்திய ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் கலந்து கொண்டேன்.

அப்போது முழு இயற்கை உணவு முறைக்கு மாறியது மட்டும் இன்றி ஆங்கில மருந்துகளை சாப்பிடுவதை அறவே நிறுத்தினேன்.

ஒருவார இயற்கை நலவாழ்வு முகாமில் பெற்ற நேரடி அனுபவங்களும்யோகி கிருஷ்ணன் மாஸ்டரிடம் பெற்று வரும் தொடர் யோகப் பயிற்சிகளும் எனக்கு இரத்த அழுத்தம்உடல் எடைமற்றும் சர்க்கரை வியாதிகளின் பிடியில் இருந்து முழு விடுதலை பெற்று தந்தன.

மேற்குறிப்பிட தொல்லைகளின் சிம்ப்டம்ஸ் என்னிடம் இருந்து முழுமையாக அகன்று விட்டன. ஆகையினால் நான் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்களை ஆலோசிக்காமல் ஆங்கில மருந்துகளை கடந்த டிசம்பரில் இருந்து நிறுத்தி விட்டேன்.

பின்னர் திருவாளர்கள் கிருஷ்ணன் ஐயா மற்றும் மெய்யப்பன் ஐயா இருவரும் என்னை மருத்துவ பரிசோதனை செய்துபார்க்கும்படி அறிவுறுத்தினார்கள்.

அதன் பேரில் இந்த ஆண்டின் ஏப்ரல்மேஜூன் மாதம் முதல் வாரத்தில் மேற்கொண்ட இரத்தம்மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் முடிவுகள் இதோ:

02-04-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 124 mg/dl
Urine Sugar: NIL
07-05-2010-  Blood Sugar (Fasting) - 97 mg/dl
Blood Sugar (PP) - 126 mg/dl
Urine Sugar: NIL
05-06-2010-  Blood Sugar (Fasting) - 87 mg/dl
Blood Sugar (PP) - 128 mg/dl
Urine Sugar: NIL

இப்போது முழு இயற்கை உணவு முறைகளை கடைப்பிடிக்கிறேன்.

வாரம் ஒரு நாள் உபவாசம்தொடர் யோகா பயிற்சிகள் என்னை ஆரோக்கியம் நிறைந்த ஒரு மனிதனாக மீட்டெடுத்து விட்டன.

வெய்யிலில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும் என்பார்கள் அதன் பொருளை முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

எனது நண்பர்கள் பலர் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து அவர்களும் யோகா/இயற்கை நலவாழ்வு முறைகளை பின்பற்றி பலன் அடைந்து வருகிறார்கள்.


நான் சொல்ல விரும்பும் செய்திகள்:
 • Once a diabetic, always a diabetic. Once a heart patient, always a heart patient எண்ணும் ஆங்கில மருத்துவ சித்தாந்தம் தவறானது.
 • உணவு மற்றும் வாழும் முறைகளிலும்எண்ணங்களிலும்சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுத்தாமல் வெறும் மருந்துகள் மூலமாக எந்த வியாதியையும் குணப் படுத்த முடியாது.
 • நான் எனது சர்க்கரை வியாதிக்கு இயற்கை நலவாழ்வியல் மூலம் குணம் பெற்ற போதுஎனது உடல் எடை குறைந்ததுஇரத்த அழுத்தம் நார்மல் நிலைக்கு வந்தது. அது மட்டுமின்றி எனக்கு பிறவியிலேயே இதயத்தில் எல்.வி.சி.டி எனப்படும் (Left Ventricular Conductivity Defect) குறைபாடு இருந்தது. அதன் காரணமாக யூரிக் ஆசிட் அதிகமாக இரத்தில் கலந்து போகும் தன்மையும் அதனால் எனது சிறுநீரகங்களுக்கு தொடர் தொல்லைகளும் இருந்ததன. யூரிசீமியா எனும் இந்த தொல்லைக்காக சிறுநீர்ப் பிரித்திகளை ஊக்குவிக்கும் மருந்துகளையும் சாப்பிட்டு வந்தேன். ஆனால் முழு இயற்கை உணவுக்கு மாறிய பின்னர் அந்த தொந்தரவும் என்னை விட்டு நீங்கி விட்டது. முன்னர் இந்த மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் சிறுநீர் போகும் இடத்தில் எரிச்சல் அதிகம் ஆகிவிடும். சில சமயம் இரத்தம் கூட வெளியேறும்.
 • ஆங்கில மருந்துகளால் ஏற்படுவன மோசமான பின்விளைவுகள். ஆனால் இயற்கை நலவாழ்வியலில் கிடைக்கும் குணம் பூரணமானது (holistic). ஒரு குறிப்பிட்ட வியாதியை மட்டுமின்றி உடல் முழுவதும் செயல்பட்டு நமக்கு தெரியாமல் இருக்கும் குறைபாடுகளையும் களைந்தெறியும் சக்தி இயற்கை நலவாழ்வியலுக்கு உண்டு என்பதை முழுமையாக நான் உணர்ந்தேன்.
 • அடுத்ததாகவும் நிறைவாகவும் நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. இயற்கை நலவாழ்வியல் உங்களை உங்களுக்கு ஏற்ற மருத்துவராக மாற்றுகிறது. மருந்தில்லா மருத்துவம் என்பதினால் செலவும் இல்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழம்காய்கறிகளை இயற்கையாக உண்பதினால் நமக்கு பொருளாதார அடிப்படையில்எரிவாயு (கேஸ்)மசாலா பொருட்கள்எண்ணை வகைகளுக்கான செலவுஉப்புசர்க்கரைபால் பொருட்கள் மீதான செலவுகள் குறைகின்றன.
 • நோய் இல்லாமல் செயல் படுவதினால் அலுவலுக்கு விடுப்பு எடுத்தல்அலுவல் நேரங்களில் சோர்வாக இருத்தல்மருத்துவ மனைகளில் மருத்துவருக்காக காத்திருத்தல்தேவையற்ற அறுவை சிகிச்சைகளை பெறும் பொருள் செலவில் மேற்கொள்ளுதல்நோய் வாய்ப்படுபவரை கவனித்துக் கொள்ளுபவருக்கு ஏற்படும் தொல்லைகள்மருந்துக்கான பெறும் பொருள் செலவும்பக்க விளைவுகள்பின்விளைவுகள் போன்றவற்றை முழுமையாக தவிர்க்கலாம். மக்களின் ஆரோக்கியத்துக்காக அரசுகள் பெருமளவில் பணத்தை செலவு செய்வதை தவிர்ப்பதன் மூலம் மத்திய மாநில அரசுகள் அப்பணத்தை மக்கள் நல பணிகளில் நல்ல வழிகளில் செலவிடலாம்.
 • நல்ல உடல்நல்ல மனம்நல்ல சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் பெருகினால் சமுதாயத்திற்கு அவர்களது பங்களிப்புகள் மேம்பட்டதாக இருக்கும். நாட்டின் உற்பத்தியும் கூடும். மக்களிடையே நற்சிந்தனைகள் வளர்ந்து போட்டி பொறாமை போன்றவைகள் அகன்றுசகோதரத்துவம்அன்பு போன்றவை பெருகும்.
எனது வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையை தந்திருக்கும் இயற்கை நலவாழ்வியலை பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்ள நல்வாய்ப்பை ஏற்படுத்தி தந்த திரு மெய்யப்பன் ஐயாவுக்கும்திரு.ராமலிங்கம் ஐயாவுக்கும்மற்றுமுள்ள சங்க நிர்வாகிகள் எல்லாருக்கும்மற்றும் இங்கே பெருவாரியாக குழுமி இருக்கும் உங்கள் எல்லாருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி பாராட்டி வணங்கி விடை பெறுகிறேன்.  நன்றி.  வணக்கம்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

  ஆயிரம் மடங்கு வேகத்தில் அழியும் இயற்கை: 
  6வது அழிவுக்கு ஆயத்தமாகும் பூமி.
  "ஒரு வினாடிக்கு ஒரு கால்பந்து மைதான அளவுள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன,' என ஓசோன் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஓசோன் தினம் மற்றும் பல்லுயிர்ச் சூழல் ஆண்டு சிறப்புக் கருத்தரங்கு குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர்க் கல்லூரியில் நடத்தப்பட்டது. கடந்த 1980களில் அன்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பதை விஞ்ஞானிகள் முதன் முதலில் கண்டறிந்தனர். இதன் வழியாக ஊடுருவி பூமிக்கு வரும் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களால் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்பட்டன. ஏர்கண்டிஷன் கருவியில் இருந்து வெளியேறும் குளோரோபுளோரோகார்பன்(CFC)தான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழக் காரணம் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.கடந்த 1984ல் மான்ட்ரீயல் நகரில் நடத்தப்பட்ட உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் 158 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று குளோராபுளோராகார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டதன் விளைவாக ஓசோன் ஓட்டை பெருமளவு அடைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஓசோன் பிரச்னையில் இருந்து தப்பித்த பூமி, இன்று புவி வெப்ப பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. பூமி தன்னுடைய 460 கோடி ஆண்டு வரலாற்றில் இதுவரை ஐந்து முறை மிகப்பெரிய பேரழிவுகளை சந்தித்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது ஆறாவது முறையாக மிகப் பெரிய பேரழிவை சந்திக்க பூமி தன்னை தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது; அதற்கான அறிகுறிகள் தற்போது தெரியத் துவங்கியுள்ளன.
  தற்போது பூமியிலுள்ள உயிரினங்கள் 1,000 மடங்கு வேகத்தில் அழிந்து வருகிறது; அடுத்த நூற்றாண்டில் 10 ஆயிரம் மடங்கு வேகத்தில் அழியும். ஐ. நா,. சபையின் இயற்கை பாதுகாப்பு குழு அறிக்கை படி, உலகில் உள்ள பறவை, பாலூட்டி, மெல்லுடல் வகை உயிரினங்கள், கடல் ஆமைகள் என பரவலாக உள்ள உயிரினங்களில் குறிப்பிட்ட சில வகை உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மேலும், 75 சதவீத உணவுத் தாவரங்கள், 25 சதவீத மீன் இனங்கள், 30 சதவீத கடல் பஞ்சுகள் தவிர ஒரு வினாடிக்கு ஒரு கால்பந்து மைதான அளவுள்ள காடுகள் உட்பட இயற்கை வளங்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன. 3,000 வகையான உணவுத் தாவரங்களில் தற்போது 150 வகை மட்டுமே பயிரிடப்படுகிறது. 8 அடி அகலமுள்ள உலகின் மிகப்பெரிய பூக்கள், இரும்பு கம்பியை விட பலமுள்ள வலை பின்னும் ஒரு வகை சிலந்தி என பல கீஸ்டோன் உயிரினங்களும் அழிவை எதிர்கொண்டு வருகின்றன. இயற்கைக்கு எதிரான மனிதர்களின் செயல் தான் இந்த பேரழிவுக்கு காரணம். மனித சமுதாயம் விழித்து கொள்ளாவிட்டால் இயற்கை வளங்களோடு, மனித வளமும் மறைந்து போகும்.

புதன், 22 செப்டம்பர், 2010

AVOID HEART SURGERY 
By attending,
Heart Life Style Training Programme, (H.L.T.P)
On
TOTAL REVERSAL OF HEART DISEASE
Conducted by Dr.Bimal Chhajer MD, Ex-Consultant Cardiologist, AIIMS, New Delhi, Founder and director of SCIENCE AND ART OF LIVING, HEALTH CARE FOUNDATION New Delhi.
On 29-9-2010 from 9:00am to 7:00pm at HOTEL PARK VIEW, No-125, Valluvarkottam high road, Nugambakkam, Chennai-600 034
 HLTP Fee Rs-3000/- Per Couple Includes Zero oil Breakfast, Lunch, Hi-Tea, Plus Course Manual.

FREE INTRODUCTORY LECTURE
By Dr. Sachin
Associate of Saaol Heart Research Foundation
24th Sept-Friday-ST-Antony’s Church, Marshalls rd, Pudupet,Chennai-600002-Timing-4:00pm-6:00pm
25th Sept-Saturday-flamingo Restaurant, 100ft, Bypass rd, (Opp Murugan Kalyana Mandapam)-Velacherry Chennai-600 042 Timing-4:00pm-6:00pm
26th Sept-Sunday-Adyar Anandha Bhavan Sweets & Snacks, No-367, (opp Vaishnavi college, Railway Gate, G.S.T.road, Chrompet, Chennai-600 047 –Timing-10:30am-12:30pm.         

Consultation by Dr.Bimal Chhajer, MD on 30-9-2010 for Appointments Contact-044-45011419.
                                 
For Details Contact:
Saaol Heart Centre
No-27/11, Soundarajan Street, T-Nagar,
Chennai-600017.Contact No-044-45011419, 9840292448.