ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

சிகரெட் பிடிப்பது உடல்நலத்துக்கு தீங்கானது.

சிகரெட் பிடித்தால் புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.  சிகரெட் புகைத்தவுடன் புகையிலையில் உள்ள பாலி சைக்ளிக் அரோமேடிக் நைட்ரோ கார்பன் என்ற நச்சுப் பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 


இதை தொடர்ந்து சிகரெட் பிடித்த 15 முதல் 30 நிமிடங்களில் புற்றுநோய் தூண்டப்படுகிறது.  இதன்மூலம் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகிறது. நுரையீரல் புற்று நோயினால் உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இது தவிர 18 வகையான புற்றுநோய் ஏற்படவும் சிகரெட் காரணமாக உள்ளது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
-அஷ்வின்ஜி.