சனி, 18 டிசம்பர், 2010

20.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
பகுதி 15:      உண்ணா நோன்பு...
பகுதி 16:      ஜீரண சக்தியை அதிகரிக்க...
பகுதி 17 :         சிரிப்பும் ஆரோக்கியமும்...
பகுதி 18 :         ஏ.சி.வரமா? சாபமா?
பகுதி 19 :    சில இயற்கை உணவு குறிப்புகள்
மேலும் தொடர்கிறது....

நிறைவுப் பதிவு.

40.  இயற்கை உணவு: உலக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு
(1) பழங்களை துணிப்பையிலேயே வாங்கிச் செல்லலாம். பிளாஸ்டிக்  பைகளை உபயோகிக்க தேவையில்லை.  பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில்  அடைக்கப்பட்ட உணவு பண்டங்களின் தேவை இருக்காது.  தேவை இல்லாவிட்டால் பிளாஸ்டிக் உற்பத்தி தானாகவே நின்று விடும்.
(2) கெட்டப் பழக்கங்கள் மறைந்து விடும்.
(3) அஹிம்சை தழைக்கும்.
(4) அமைதி நிலைக்கும்.
(5) ஜாதி, மத, இன, மொழி, நிற, தேச வித்தியாசங்கள் மறைந்து விடும்.
(6) ஒற்றுமை ஓங்கும்.
(7) மக்கள் தொகை பெருக்கம் இருக்காது.
(8) மூட பழக்க வழக்கங்கள் இருக்காது.
(9) பெண்கள் சமையலில் இருந்து விடுதலை பெறுவர்.
(10) கணவன் & மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள்.  அதனால் விவாகரத்துக்கள் குறைந்து விடும்.
(11) எரி பொருள் (எரி வாயு, விறகு) தேவை இருக்காது.  எனவே நாம் எரிவாயு இறக்குமதி செய்யத் தேவையில்லை.  அந்நிய செலாவணி  மிச்சமாகும்.  விறகிற்காக காடுகளை அழிக்கவும் தேவையில்லை.
கரியமில வாயு காற்றில் சமையல் மூலமாக கலப்பதை தடுக்கலாம்.
(12) பொருளாதாரம் முன்னேறும்.
(13) பஞ்சம் இருக்காது.
(14) தீ விபத்துக்கள் இருக்காது.
(15) வயல்வெளிகள் கனிகள் தரும் சோலைகளாக மாறிவிடும்.
(16) சோலைகளின் மூலமாக போதுமான மழையும் நிலத்தடி நீரும் இருக்கும்.
(17) மரங்களின் காய்ந்த சருகே அந்த மரங்களுக்கு இயற்கை உரமாகி விடும்.(செயற்கை உரங்களூம் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் தேவையி ருக்காது).
(18) மண் அரிப்பு மரங்களின் வேர்கள் மூலமாக தடுக்கப்பட்டு விடும்.
(19) மரங்களின் நிழல்கள் மூலமாக புவி வெப்பமடைதல் ’க்ளோபல் வார்மிங்’ தடுக்கப்பட்டு விடும்.
(20) மரங்களின் மூலமாக தூய காற்று கிடைக்கும்.
(21) குற்றங்கள் மறைந்து விடும்.
(22) உணவு கலப்படம் செய்ய முடியாது.
(23) உணவுப் பதுக்கல், கள்ள மார்க்கெட்டில் விற்பது இயலாது.  இயற்கை உணவு அழுகும் தன்மை உடையதால் பதுக்கல் செய்ய இயலாது.   மார்க்கெட்டில் தேவை உள்ளதே உற்பத்தி செய்யப்படும்.
(24) பிரச்சனைகள் இல்லாத உலகம் உருவாகும்.
(25) ஓருலகம், ஒரு இனம், ஒரு கூட்டாட்சி உருவாகும்.


41.        பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
               ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
               தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை

பழக்கங்கள் உருவான பிறகு அதை விடுவது மிகவும் கடினம்.  சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளவயதில் அவர்கள் விருப்பியதை எல்லாம்  வாங்கித் தருவார்கள்.  நடுத்தர வயது வந்த பிறகு அவர்கள் கட்டுப்பாடாக இருந்துக் கொள்ளட்டும் என்று கூறுவார்கள்.  இது ஒரு பெரிய  தவறாகும்.  இதனால் குழந்தைகள் ருசிக்கு அடிமையாகிறார்கள்.  அளவுக்கதிகமான உணவை குழந்தைகளுக்கு திணிக்காதீர்கள்.  அது மூளையின்  திறனை பாதிக்கும்.  அவர்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு கெடுதல் செய்கிறார்கள்.  கொஞ்சமாக கொடுத்தாலும்  சத்துள்ளதாக கொடுங்கள்.  நமது அன்பை உணவை திணித்து காட்ட வேண்டியதில்லை.  அவர்கள் உணவை மறுத்தால் பட்டினியாக இருக்கட் டும்.  ஒரு வேளை உணவு உண்ணாவிட்டால் பெரிய தவறேதும் இல்லை. நன்மையே.  நன்கு பசியான பிறகு அவர்கள் தானாக சாப்பிடுவார்கள்.   குழந்தைகள் ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை.  சுறுசுறுப்பாக இருக்கிறார்களா என்று தான் பார்க்க வேண்டும்.  புதிதாக திருமணம்  ஆனவர்களும் கர்ப்பிணி பெண்களும் தங்கள் உணவில் அதிகமாக பழங்களை சேர்த்துக் கொண்டு உடல், மன அளவில் ஆரோக்கியமான குழந் தைகளை பெறலாம்.  பெற்றோர்களும், ஆசிரியர்களூம் இந்த செய்தியினை ஆசிரியர்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.  கு ழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவழிக்கிறார்கள்.  எனவே அவர்கள் இயற்கை உணவு குறித்தும் அதன் நன் மைகள் குறித்தும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், கதைகள், பொம்மலாட்டம், விளையாட்டுகள், படக்காட்சிகள் மூலம் விளக்கலாம். நோயில்லா  ஆரோக்கியமான உலகம் வருங்காலத்தில் மலரும்.


42.        இக்கட்டுரையை வாசித்தவர்களுக்கு

மேற்கூறியவை சிலருக்கு நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று தோன்றலாம்.  ஆனால் தனி மனித மாற்றமின்றி சமுதாயத்தில்  எந்த மாற்றமும் ஏற்படாது.  இது வரை அதற்கு மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியுள்ளன.  சிறு துளி பெருவெள்ளம்.  எனவே சமுதாய மாற்றத்திற்கு இயற்கை உணவு, அக்குபிரஷர், தியானம் மட்டுமே உதவும்.  சமுதாயத்தில் உள்ள அத்தனை  தீமைகளுக்கும் சமைத்த உணவே காரணம்.  ஒரு தீமையை ஒழிக்க நாம் அது உருவாகும் ஆணி வேரை அழிக்க வேண்டும்.  மேலெழுந்த வாரியான  தீர்வுகள் ஒரு போதும் பயன் தராது.  
 
மதர் தெரஸா,  ''உலக அமைதி என்பது ஒருவரின் இல்லத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்''. 
 
உள்ள அமைதிக்கும், உலக அமைதிக்கும் பழங்களே உன்னத பலனை த ரும்.


இயற்கை உணவு குறித்த தங்கள் சந்தேகங்களை e-mail: lram12062000@gmail.com என்ற முகவரிக்கு  அனுப்பலாம்.

 43.       மனிதன்: பிரபஞ்சத்தின் மிக சிறந்த கோமாளி
மனிதனின் அடிப்படை தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம்
 
(1) உணவு: பழங்களூம் கொட்டைபருப்புகளும்
 
(2) உடை: உண்பது நாழி, உடுப்பது இரண்டே.
எனவே 2 உடைகள் போதுமானது.  பருத்தி செடியில் இருந்து அதற்கு தேவையான பஞ்சை பெற்றுக் கொள்ளலாம். அதை  இராட்டையின் மூலம் உடையாக்கிக் கொள்ளலாம்.  பெரிய பெரிய ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையிருக்காது.  துணிகளுக்கு  சாயம் ஏற்றுவதால் ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்கலாம்.
 
(3) இருப்பிடம்: சிறு சிறு மண் வீடுகளும், பனை, தென்னை ஓலைகள் வேய்ந்த குடிசைகளுமே போதுமானது.  (பூகம்பங்கள் பெரிய கட்டிடங்கள்  மற்றும் பெரிய அணைகளாலேயே உருவாகிறது.  மனிதன் பூகம்பத்தை விட பூகம்பத்தினால் ஏற்படும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியே இறக்கிறான்.

மேற்கண்ட மூன்றுக்கும் நாம் இயற்கையை மாசு படுத்த வேண்டியதில்லை.  இயற்கை சுழற்சி சமநிலையில் இருக்கும்.  விஷங்களை  கக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை.  இவையே மனிதனின் தேவைக்கானவை.  மற்றவை மனிதனின் பேராசைக்கானவை.  நமது  பேராசையே நம்மை ஆயுதங்கள், பஞ்சம், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், சூறாவளி மூலமாக நம்மை அழிக்கிறது.


44. ஆவதும் அவனாலே(டெஸ்டுட்யூப்,க்ளோனிங்) அழிவதும் அவனாலே(ஆயுதங்கள்) என்ற நிலைக்கு வந்து விட்டான்.  அவன் ஒரே சமயத்தில் முட்டாளாகவும் அறிவாளியாகவும்  இருந்து வருகிறான்.  எனவே நமக்கு நாமே பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த கோமாளி மனிதன் என பட்டம் சூட்டிக் கொள்ளலாம்.  வேறு எந்த  உயிரினமும் நம்மோடு இந்த விஷயத்தில் போட்டி போட முடியாது.

    இந்த உலகத்தின் கடைசி மரம் வெட்டப்படும் முன் 
பணத்தை சாப்பிட, சுவாசிக்க முடியாது 
என்பதை மனிதன் உணருவானா?

நிறைவு.
அன்புள்ள நெஞ்சங்களே..

''ஆரோக்கியம் ஆனந்தம்'' என்கிற இந்த தொடரை இங்கே பதிப்பிக்க அனுமதி தந்தமைக்கு திருமதி ரதி லோகநாதன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனவரியில் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் இந்த பதிவுகளில் நீங்கள் படித்த விஷயங்கள் புத்தக வடிவில் கிடைக்கும். அனைவரும் வாங்கிப் படித்து, பின்பற்றவும். உங்கள் சந்ததியினரும் படித்துப் பயன் பெறும் வகையில் புத்தகத்தை அவர்களையும் படிக்கச் சொல்லவும். மற்றவர்களுக்கும் பரிசளிக்கலாம். வீடும் நாடும் பயனடைவதின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாத்து, இந்த பூமியையும் பாது காக்கலாம். 

நன்றி.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

19.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.
இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
பகுதி 15:      உண்ணா நோன்பு...
பகுதி 16:      ஜீரண சக்தியை அதிகரிக்க...
பகுதி 17 :         சிரிப்பும் ஆரோக்கியமும்...

பகுதி18 :         ஏ.சி.வரமா? சாபமா?

மேலும் தொடர்கிறது....

37.    சில இயற்கை உணவு குறிப்புகள்
(1) இயற்கை பால்: தேங்காய் பால்.  வெல்லம், கருப்பட்டி, தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
(2) கேரட் ஜுஸ்: தேங்காய்+கேரட்+இஞ்சி(சிறிய துண்டு)
(3) இயற்கை சாக்லேட் பால்: தேங்காய்+பேரிச்சை மிக்ஸியின் உதவியுடன் இவைகளை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம்.  டின்னில்  அடைக்கப்பட்ட பழரசங்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
(4) காய்கறி சாலட்: உப்பு குறைவாக+மிளகு பொடி+ எலுமிச்சை துளிகள். ஜீரகத்தூள், மல்லித்தூள் சுவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.
(5)பழ சாலட்: பழத்துண்டுகள்+தேன்
(6) பழம்+பேரிச்சை அரைத்து லட்டு போல பிடித்து அதற்கு மேல் முந்திரி+உலர் திராட்சை அழகுக்கு வைத்து குழந்தைகளுக்கு சத்துள்ள ஆகாரமாக  கொடுக்கலாம்.
(7) பழரசம் : பழத்துண்டுகள் மிதக்க விட்டு கொடுக்கலாம்.


38.   நமது குடும்பத் தேவைகளுக்கேற்பவும் கிடைக்கும்
பழங்கள், கொட்டைபருப்புகள், காய்கறிகளுக்கேற்பவும் நாமே பல வித உணவுகளை உருவாக்கலாம். உணவு தயாரித்த உடனேயே உண்டு விட  வேண்டும்.  தாமதிக்காமல் உண்ணுவது நல்லது.
      
39.  இயற்கை உணவு - சுருக்கமாக
உட்கொள்ள வேண்டிய உணவுகள்: தேங்காய், கொட்டை பருப்புகள் (முந்திரி, பாதாம், பிஸ்தா & வறுக்காதது), பேரிச்சை, வாழைப்பழம், சீசனுக்கு  கிடைக்கும் எல்லா பழங்களும், பச்சை காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்: அசைவ உணவு, முட்டை, பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடை, பனீர்(பால், பால் பொருட்கள்)
 

சமையலுணவில் குறைக்க வேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு:
 
தவிர்க்க வேண்டியது        மாற்று உணவு
                   
(1) சர்க்கரை                         வெல்லம், கரும்பு சர்க்கரை, கருப்பட்டி
(2) பொடி உப்பு                      கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு   கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய்  
(4) மிளகாய்                                    மிளகு
(5) புளி                                                எலுமிச்சை
(6) கடுகு                                            சீரகம்
(7) காபி, டீ                          லெமன் டீ, ப்ளாக் டீ, சுக்கு காபி, வரக் காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி        அவல், சிகப்பரிசி (கைக்குத்தல் வகைகள்)
 
குறிப்பு: இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம், தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.  இவை இயற்கை  உணவுகள் அல்ல.  அவை தீமைகள் குறைவாக செய்யும்.
 
முதலில் 1 வேளை ஆரம்பிக்கவும்.  இரவு உணவாக ஆரம்பிப்பது நல்லது. (உடலுக்கு இயற்கை உணவை ஜீரணிக்க குறைந்த  நேரமே போதும்.  எனவே நமது தூக்க நேரத்தில் மீதியில் உடல் கழிவுகளை வெளியேற்றும்.)  ஜீரணக் கோளாறுகளும் குறையும்.  முடியாதவர்கள்  காலை உணவாக ஆரம்பிக்கலாம்.  அளவு, கலோரி கணக்குகள் கிடையாது. பசி உணர்வு தோன்றுபோதெல்லாம் வயிறு நிறைய சாப்பிடலாம்.   தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்.  கூறப்பட்டிருக்கும் இயற்கை சிகிச்சை முறைகள் கழிவுகளை பக்கவிளைவுகள் இல்லாமல்  வெளியேற்றும்.

(ஆரோக்கியம், ஆனந்தம் தொடரும்)
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை

புதன், 15 டிசம்பர், 2010

18.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.
 
இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
 

பகுதி 15:      உண்ணா நோன்பு...
பகுதி 16:      ஜீரண சக்தியை அதிகரிக்க...
பகுதி 17 :         சிரிப்பும் ஆரோக்கியமும்...
 
மேலும் தொடர்கிறது....

35.  ஏ.சி.வரமா? சாபமா?
ஏ.சி. ஒரு மிகப் பெரிய சாபமாகும்.  அது தேவையேயில்லை. நம் முன்னோர்கள் சமைத்த உணவு உண்டாலும் அவர்கள் நன்றாக  வெயிலில் வேலை செய்ததால் வியர்வை நன்றாக வெளியேறியது.  சுத்தமான காற்றும் அவர்களுக்கு கிடைத்தது.  எனவே அவர்கள் நோயில்லாமல் வாழ்ந்தார்கள்.  நாம் நீராவிக் குளியல், வாழையிலைக் குளியல் போன்றவற்றை வியர்வை நன்கு வெளியேற எடுக்கிறோம்.  ஆனால் ஏ.சி.  வியர்க்க விடுவதில்லை.  இதனால் நாம் தற்காலிகமாக சுகமாக உணர்கிறோம்.  ஆனால் இது மிகவும் கெடுதலானது.  எனவே நாம் நம்  அறைகளில் ஏ.சி. இல்லாமல் இருக்க முயற்சிப்பது நல்லது.  இயற்கைக்கு எதிராக இருக்கும் எதுவும் நமக்கு தேவையில்லை.  மேலும் நாம்  தொடர்ந்து இயற்கை உணவு உட்கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.  பிறகு ஏ.சி., பேன் போன்றவை இல் லாமலேயே நாம் ஏ.சி. யில் இருப்பதை போல உணரலாம்.  ஏ.சி. மற்றும் குளிர் சாதனபெட்டியில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள்  ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்கின்றன.  இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து (அல்ட்ரா வயலட் ரேஸ்) காக்கின்றன என்பதை நாம் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.

36. இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்
(1) உயரத்திற்கேற்ற எடை தானாகவே வந்து விடும்.  களைப்பில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய உடலுக்கு தெம்பு கிடைக்கும்.

(2) தோல் மிருதுவாகவும், இலாஸ்டிக் தன்மையுடனும் சுருக்கமில்லாமலும் இருக்கும்.  மற்ற முறைகள் ( உடற்பயிற்சி, ஜிம், உணவுக் கட்டுப்பாடு,ம ருந்து மாத்திரை மூலம் எடை குறைப்பது போல் இந்த முறையில் தோலில் சுருக்கங்கள் விழாது.

(3) கூந்தல் மென்மையாக இருக்கும்.

(4) அழகு க்ரீம்கள், ஷாம்பூ, எண்ணெய் போன்றவை தேவையிருக்காது.  தேவைப்பட்டால் ஏதாவது தானிய மாவு (பாசிப் பயிறு, கடலை மாவு)  போன்றவற்றை ஷாம்பூவுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.  வெந்தயத்தை 8 மணிநேரம் ஊற வைத்து அரைத்து ஷாம்பூவாக உபயோகிக்கலாம்.   கூந்தல் மென்மையாவதுடன் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.

சோற்று கற்றாழையை தோலை மிருதுவாக்கவும், கூந்தலுக்கு ஷாம்பூவாகவும் உபயோகிக்கலாம்.  கூந்தல் மென்மையாவதுடன் உடலும் கு ளிர்ச்சியாக இருக்கும். உள்ளிருக்கும் ஙுங்கு போன்ற பகுதியை நீரில் அலசி விட்டு உண்ணலாம்.  அது பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு களுக்கும், வெள்ளை படுதலுக்கும் ஒரு அரிய மருந்தாகும்.  இதை மிகவும் எளிதாக தோட்டங்களிலும், தொட்லிகளிலும் வளர்க்கலாம்.  மிகக் கு றைந்த அளவு தண்ணீரே போதுமானது.
 
(5) கண்கள் தெளிவாகவும் ஒளி விடக் கூடியதாகவும் மாறும்.
 
(6) நாக்கு வெள்ளை படலம் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
 
(7) உடல் இறகு போல இலேசாக இருக்கும்.
 
(8) உடல் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும்.  நாம் உடலை தூக்க வேண்டியதில்லை.
 
(9) நகங்கள் உடைவது நிற்கும்.  நகங்களில் வெள்ளை கோடுகள் விழாது.
 
(10) பற்கள் தற்போது உள்ளதை விட பலமடையும். ஈறுகளில் இரத்தம் வடியாது.
 
(11) பொடுகு மறைந்து விடும்.
 
(12) நல்ல இரத்த ஓட்டத்தினால் ஈறுகள் கருப்பு நிறத்தில் இருந்து இள சிகப்பு நிறத்திற்கு மாறும்.
 
(13) கருவளையங்கள் மறையும்.
 
(14) புத்தி கூர்மையடையும்.
 
(15) மூச்சு சீராகவும் ஆழமாகவும் இருக்கும். மூச்சு இரைக்காது.
 
(16) இளமையாக் காட்சியளிக்கலாம்.
 
(17) புண்களில் சீழ் பிடிக்காது.  வலியிருக்காது.  விரைவில் இரத்தம் உறைந்து விடுவதால் இரத்த இழப்பு இருக்காது.
 
(18) குரல் இனிமையாகவும் மென்மையாகவும் மாறும்.
 
(19) உடலின் உள், வெளி உறுப்புகள் அனைத்தும் ஆற்றலுடையதாக மாறும்.
 
(20) அடர் கருப்பு நிறத் தோல் செந்நிற கருப்பாக மாறும்.

(ஆரோக்கியம், ஆனந்தம் தொடரும்)
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

செவ்வாய், 14 டிசம்பர், 2010

17.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.
இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
பகுதி 15:      25.  உண்ணா நோன்பு:
பகுதி 16:      27. ஜீரண சக்தியை அதிகரிக்க
மேலும் தொடர்கிறது....
32.      சிரிப்பும் ஆரோக்கியமும்:
(1) புன்னகை இருக்க பொன்னகை எதற்கு?
(2) வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும், சிரிச்சா என்ன செலவா ஆகும்?
(3) சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.
(4) மனிதன் மட்டுமே சிரிக்க, சிந்திக்கக்கூடிய உயிரினமாகும்.
(5) சிரிப்பவர்களின் ஆயுள் அதிகம்
(6) சிரிப்பது முகத்திற்கு ஒரு நல்ல பயிற்சியாகும்.
(7) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

33. இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள்:
(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும்.  நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக  வேண்டும்)
(5) உணவும் மருந்தும் ஒன்றே.
(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
(7) கடவுள் கனிகளை படைத்தார்.  சாத்தான் சமையலை படைத்தான்.
(8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.
(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே
(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும். (ஜப்பானிய பொன்மொழி)
(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார். (ஸ்பெயின் பொன்மொழி)
(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை)  5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)
(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும் (ஜெர்மன் பழமொழி).
(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது. 
34.  இயற்கை குளிர் சாதனப்பெட்டி
பழங்களை புதிதாக இருக்கும் போதே சாப்பிட்டு விட வேண்டும்.  குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்துவது நல்லது அல்ல.  பழங்களை ஓரிரு நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் ஒரு எளிய முறையில் வாடாமல் வைக்கலாம். ஒரு அகலமான  பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.(அளவு தேவைக்கேற்ப) அதை மணலில் நிரப்பிக் கொள்ளவும்.  அதில் சிறிது நீர் தெளித்து மண்ணை  ஈரமாக்கவும்.  ஒரு மெல்லிய பருத்தி துணியை மணல் மேல் விரிக்கவும்.  இதற்கு மேல் காய்கறிகளையும் பழங்களையும் வைக்கவும். இது ஓரளவுக்கு  பழங்களை புதிதாக வைத்திருக்க உதவும். தண்ணீர் அவ்வப்போது மணல் மீது தெளித்து மணலை ஈரமாக வைத்துருக்கவும். கீரைகள், கருவேப்பிலை, கொத்தமல்லியை அதன் தண்டு நீரில் மூழ்குமாறு வைத்தால் ஒரு நாளைக்கு வாடாமல் இருக்கும்.  தேவையிருக்கும் பொழுது வாங்கி  உடனே உபயோகிப்பது நல்லது.  வீடுகளில் இடவசதி இருப்போர் பழமரங்கள் நட்டு வளர்க்கலாம்.  அலங்கார செடிகள் வளர்ப்பதற்கு பதிலாக கீரைகள், காய்கறிகளை தொட்டியில் வளர்க்கலாம்.  மொட்டை மாடியில் தோட்டம் போட்டு புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றை வளர்க்கலாம். 
 (தொடரும்)  
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.