புதன், 15 டிசம்பர், 2010

18.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.
 
இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
 

பகுதி 15:      உண்ணா நோன்பு...
பகுதி 16:      ஜீரண சக்தியை அதிகரிக்க...
பகுதி 17 :         சிரிப்பும் ஆரோக்கியமும்...
 
மேலும் தொடர்கிறது....

35.  ஏ.சி.வரமா? சாபமா?
ஏ.சி. ஒரு மிகப் பெரிய சாபமாகும்.  அது தேவையேயில்லை. நம் முன்னோர்கள் சமைத்த உணவு உண்டாலும் அவர்கள் நன்றாக  வெயிலில் வேலை செய்ததால் வியர்வை நன்றாக வெளியேறியது.  சுத்தமான காற்றும் அவர்களுக்கு கிடைத்தது.  எனவே அவர்கள் நோயில்லாமல் வாழ்ந்தார்கள்.  நாம் நீராவிக் குளியல், வாழையிலைக் குளியல் போன்றவற்றை வியர்வை நன்கு வெளியேற எடுக்கிறோம்.  ஆனால் ஏ.சி.  வியர்க்க விடுவதில்லை.  இதனால் நாம் தற்காலிகமாக சுகமாக உணர்கிறோம்.  ஆனால் இது மிகவும் கெடுதலானது.  எனவே நாம் நம்  அறைகளில் ஏ.சி. இல்லாமல் இருக்க முயற்சிப்பது நல்லது.  இயற்கைக்கு எதிராக இருக்கும் எதுவும் நமக்கு தேவையில்லை.  மேலும் நாம்  தொடர்ந்து இயற்கை உணவு உட்கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.  பிறகு ஏ.சி., பேன் போன்றவை இல் லாமலேயே நாம் ஏ.சி. யில் இருப்பதை போல உணரலாம்.  ஏ.சி. மற்றும் குளிர் சாதனபெட்டியில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள்  ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்கின்றன.  இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து (அல்ட்ரா வயலட் ரேஸ்) காக்கின்றன என்பதை நாம் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.

36. இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்
(1) உயரத்திற்கேற்ற எடை தானாகவே வந்து விடும்.  களைப்பில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய உடலுக்கு தெம்பு கிடைக்கும்.

(2) தோல் மிருதுவாகவும், இலாஸ்டிக் தன்மையுடனும் சுருக்கமில்லாமலும் இருக்கும்.  மற்ற முறைகள் ( உடற்பயிற்சி, ஜிம், உணவுக் கட்டுப்பாடு,ம ருந்து மாத்திரை மூலம் எடை குறைப்பது போல் இந்த முறையில் தோலில் சுருக்கங்கள் விழாது.

(3) கூந்தல் மென்மையாக இருக்கும்.

(4) அழகு க்ரீம்கள், ஷாம்பூ, எண்ணெய் போன்றவை தேவையிருக்காது.  தேவைப்பட்டால் ஏதாவது தானிய மாவு (பாசிப் பயிறு, கடலை மாவு)  போன்றவற்றை ஷாம்பூவுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.  வெந்தயத்தை 8 மணிநேரம் ஊற வைத்து அரைத்து ஷாம்பூவாக உபயோகிக்கலாம்.   கூந்தல் மென்மையாவதுடன் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.

சோற்று கற்றாழையை தோலை மிருதுவாக்கவும், கூந்தலுக்கு ஷாம்பூவாகவும் உபயோகிக்கலாம்.  கூந்தல் மென்மையாவதுடன் உடலும் கு ளிர்ச்சியாக இருக்கும். உள்ளிருக்கும் ஙுங்கு போன்ற பகுதியை நீரில் அலசி விட்டு உண்ணலாம்.  அது பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு களுக்கும், வெள்ளை படுதலுக்கும் ஒரு அரிய மருந்தாகும்.  இதை மிகவும் எளிதாக தோட்டங்களிலும், தொட்லிகளிலும் வளர்க்கலாம்.  மிகக் கு றைந்த அளவு தண்ணீரே போதுமானது.
 
(5) கண்கள் தெளிவாகவும் ஒளி விடக் கூடியதாகவும் மாறும்.
 
(6) நாக்கு வெள்ளை படலம் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
 
(7) உடல் இறகு போல இலேசாக இருக்கும்.
 
(8) உடல் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும்.  நாம் உடலை தூக்க வேண்டியதில்லை.
 
(9) நகங்கள் உடைவது நிற்கும்.  நகங்களில் வெள்ளை கோடுகள் விழாது.
 
(10) பற்கள் தற்போது உள்ளதை விட பலமடையும். ஈறுகளில் இரத்தம் வடியாது.
 
(11) பொடுகு மறைந்து விடும்.
 
(12) நல்ல இரத்த ஓட்டத்தினால் ஈறுகள் கருப்பு நிறத்தில் இருந்து இள சிகப்பு நிறத்திற்கு மாறும்.
 
(13) கருவளையங்கள் மறையும்.
 
(14) புத்தி கூர்மையடையும்.
 
(15) மூச்சு சீராகவும் ஆழமாகவும் இருக்கும். மூச்சு இரைக்காது.
 
(16) இளமையாக் காட்சியளிக்கலாம்.
 
(17) புண்களில் சீழ் பிடிக்காது.  வலியிருக்காது.  விரைவில் இரத்தம் உறைந்து விடுவதால் இரத்த இழப்பு இருக்காது.
 
(18) குரல் இனிமையாகவும் மென்மையாகவும் மாறும்.
 
(19) உடலின் உள், வெளி உறுப்புகள் அனைத்தும் ஆற்றலுடையதாக மாறும்.
 
(20) அடர் கருப்பு நிறத் தோல் செந்நிற கருப்பாக மாறும்.

(ஆரோக்கியம், ஆனந்தம் தொடரும்)
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக