சனி, 18 டிசம்பர், 2010

20.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
பகுதி 15:      உண்ணா நோன்பு...
பகுதி 16:      ஜீரண சக்தியை அதிகரிக்க...
பகுதி 17 :         சிரிப்பும் ஆரோக்கியமும்...
பகுதி 18 :         ஏ.சி.வரமா? சாபமா?
பகுதி 19 :    சில இயற்கை உணவு குறிப்புகள்
மேலும் தொடர்கிறது....

நிறைவுப் பதிவு.

40.  இயற்கை உணவு: உலக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு
(1) பழங்களை துணிப்பையிலேயே வாங்கிச் செல்லலாம். பிளாஸ்டிக்  பைகளை உபயோகிக்க தேவையில்லை.  பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில்  அடைக்கப்பட்ட உணவு பண்டங்களின் தேவை இருக்காது.  தேவை இல்லாவிட்டால் பிளாஸ்டிக் உற்பத்தி தானாகவே நின்று விடும்.
(2) கெட்டப் பழக்கங்கள் மறைந்து விடும்.
(3) அஹிம்சை தழைக்கும்.
(4) அமைதி நிலைக்கும்.
(5) ஜாதி, மத, இன, மொழி, நிற, தேச வித்தியாசங்கள் மறைந்து விடும்.
(6) ஒற்றுமை ஓங்கும்.
(7) மக்கள் தொகை பெருக்கம் இருக்காது.
(8) மூட பழக்க வழக்கங்கள் இருக்காது.
(9) பெண்கள் சமையலில் இருந்து விடுதலை பெறுவர்.
(10) கணவன் & மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள்.  அதனால் விவாகரத்துக்கள் குறைந்து விடும்.
(11) எரி பொருள் (எரி வாயு, விறகு) தேவை இருக்காது.  எனவே நாம் எரிவாயு இறக்குமதி செய்யத் தேவையில்லை.  அந்நிய செலாவணி  மிச்சமாகும்.  விறகிற்காக காடுகளை அழிக்கவும் தேவையில்லை.
கரியமில வாயு காற்றில் சமையல் மூலமாக கலப்பதை தடுக்கலாம்.
(12) பொருளாதாரம் முன்னேறும்.
(13) பஞ்சம் இருக்காது.
(14) தீ விபத்துக்கள் இருக்காது.
(15) வயல்வெளிகள் கனிகள் தரும் சோலைகளாக மாறிவிடும்.
(16) சோலைகளின் மூலமாக போதுமான மழையும் நிலத்தடி நீரும் இருக்கும்.
(17) மரங்களின் காய்ந்த சருகே அந்த மரங்களுக்கு இயற்கை உரமாகி விடும்.(செயற்கை உரங்களூம் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் தேவையி ருக்காது).
(18) மண் அரிப்பு மரங்களின் வேர்கள் மூலமாக தடுக்கப்பட்டு விடும்.
(19) மரங்களின் நிழல்கள் மூலமாக புவி வெப்பமடைதல் ’க்ளோபல் வார்மிங்’ தடுக்கப்பட்டு விடும்.
(20) மரங்களின் மூலமாக தூய காற்று கிடைக்கும்.
(21) குற்றங்கள் மறைந்து விடும்.
(22) உணவு கலப்படம் செய்ய முடியாது.
(23) உணவுப் பதுக்கல், கள்ள மார்க்கெட்டில் விற்பது இயலாது.  இயற்கை உணவு அழுகும் தன்மை உடையதால் பதுக்கல் செய்ய இயலாது.   மார்க்கெட்டில் தேவை உள்ளதே உற்பத்தி செய்யப்படும்.
(24) பிரச்சனைகள் இல்லாத உலகம் உருவாகும்.
(25) ஓருலகம், ஒரு இனம், ஒரு கூட்டாட்சி உருவாகும்.


41.        பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
               ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
               தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை

பழக்கங்கள் உருவான பிறகு அதை விடுவது மிகவும் கடினம்.  சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளவயதில் அவர்கள் விருப்பியதை எல்லாம்  வாங்கித் தருவார்கள்.  நடுத்தர வயது வந்த பிறகு அவர்கள் கட்டுப்பாடாக இருந்துக் கொள்ளட்டும் என்று கூறுவார்கள்.  இது ஒரு பெரிய  தவறாகும்.  இதனால் குழந்தைகள் ருசிக்கு அடிமையாகிறார்கள்.  அளவுக்கதிகமான உணவை குழந்தைகளுக்கு திணிக்காதீர்கள்.  அது மூளையின்  திறனை பாதிக்கும்.  அவர்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு கெடுதல் செய்கிறார்கள்.  கொஞ்சமாக கொடுத்தாலும்  சத்துள்ளதாக கொடுங்கள்.  நமது அன்பை உணவை திணித்து காட்ட வேண்டியதில்லை.  அவர்கள் உணவை மறுத்தால் பட்டினியாக இருக்கட் டும்.  ஒரு வேளை உணவு உண்ணாவிட்டால் பெரிய தவறேதும் இல்லை. நன்மையே.  நன்கு பசியான பிறகு அவர்கள் தானாக சாப்பிடுவார்கள்.   குழந்தைகள் ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை.  சுறுசுறுப்பாக இருக்கிறார்களா என்று தான் பார்க்க வேண்டும்.  புதிதாக திருமணம்  ஆனவர்களும் கர்ப்பிணி பெண்களும் தங்கள் உணவில் அதிகமாக பழங்களை சேர்த்துக் கொண்டு உடல், மன அளவில் ஆரோக்கியமான குழந் தைகளை பெறலாம்.  பெற்றோர்களும், ஆசிரியர்களூம் இந்த செய்தியினை ஆசிரியர்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.  கு ழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவழிக்கிறார்கள்.  எனவே அவர்கள் இயற்கை உணவு குறித்தும் அதன் நன் மைகள் குறித்தும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், கதைகள், பொம்மலாட்டம், விளையாட்டுகள், படக்காட்சிகள் மூலம் விளக்கலாம். நோயில்லா  ஆரோக்கியமான உலகம் வருங்காலத்தில் மலரும்.


42.        இக்கட்டுரையை வாசித்தவர்களுக்கு

மேற்கூறியவை சிலருக்கு நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று தோன்றலாம்.  ஆனால் தனி மனித மாற்றமின்றி சமுதாயத்தில்  எந்த மாற்றமும் ஏற்படாது.  இது வரை அதற்கு மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியுள்ளன.  சிறு துளி பெருவெள்ளம்.  எனவே சமுதாய மாற்றத்திற்கு இயற்கை உணவு, அக்குபிரஷர், தியானம் மட்டுமே உதவும்.  சமுதாயத்தில் உள்ள அத்தனை  தீமைகளுக்கும் சமைத்த உணவே காரணம்.  ஒரு தீமையை ஒழிக்க நாம் அது உருவாகும் ஆணி வேரை அழிக்க வேண்டும்.  மேலெழுந்த வாரியான  தீர்வுகள் ஒரு போதும் பயன் தராது.  
 
மதர் தெரஸா,  ''உலக அமைதி என்பது ஒருவரின் இல்லத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்''. 
 
உள்ள அமைதிக்கும், உலக அமைதிக்கும் பழங்களே உன்னத பலனை த ரும்.


இயற்கை உணவு குறித்த தங்கள் சந்தேகங்களை e-mail: lram12062000@gmail.com என்ற முகவரிக்கு  அனுப்பலாம்.

 43.       மனிதன்: பிரபஞ்சத்தின் மிக சிறந்த கோமாளி
மனிதனின் அடிப்படை தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம்
 
(1) உணவு: பழங்களூம் கொட்டைபருப்புகளும்
 
(2) உடை: உண்பது நாழி, உடுப்பது இரண்டே.
எனவே 2 உடைகள் போதுமானது.  பருத்தி செடியில் இருந்து அதற்கு தேவையான பஞ்சை பெற்றுக் கொள்ளலாம். அதை  இராட்டையின் மூலம் உடையாக்கிக் கொள்ளலாம்.  பெரிய பெரிய ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையிருக்காது.  துணிகளுக்கு  சாயம் ஏற்றுவதால் ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்கலாம்.
 
(3) இருப்பிடம்: சிறு சிறு மண் வீடுகளும், பனை, தென்னை ஓலைகள் வேய்ந்த குடிசைகளுமே போதுமானது.  (பூகம்பங்கள் பெரிய கட்டிடங்கள்  மற்றும் பெரிய அணைகளாலேயே உருவாகிறது.  மனிதன் பூகம்பத்தை விட பூகம்பத்தினால் ஏற்படும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியே இறக்கிறான்.

மேற்கண்ட மூன்றுக்கும் நாம் இயற்கையை மாசு படுத்த வேண்டியதில்லை.  இயற்கை சுழற்சி சமநிலையில் இருக்கும்.  விஷங்களை  கக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை.  இவையே மனிதனின் தேவைக்கானவை.  மற்றவை மனிதனின் பேராசைக்கானவை.  நமது  பேராசையே நம்மை ஆயுதங்கள், பஞ்சம், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், சூறாவளி மூலமாக நம்மை அழிக்கிறது.


44. ஆவதும் அவனாலே(டெஸ்டுட்யூப்,க்ளோனிங்) அழிவதும் அவனாலே(ஆயுதங்கள்) என்ற நிலைக்கு வந்து விட்டான்.  அவன் ஒரே சமயத்தில் முட்டாளாகவும் அறிவாளியாகவும்  இருந்து வருகிறான்.  எனவே நமக்கு நாமே பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த கோமாளி மனிதன் என பட்டம் சூட்டிக் கொள்ளலாம்.  வேறு எந்த  உயிரினமும் நம்மோடு இந்த விஷயத்தில் போட்டி போட முடியாது.

    இந்த உலகத்தின் கடைசி மரம் வெட்டப்படும் முன் 
பணத்தை சாப்பிட, சுவாசிக்க முடியாது 
என்பதை மனிதன் உணருவானா?

நிறைவு.
அன்புள்ள நெஞ்சங்களே..

''ஆரோக்கியம் ஆனந்தம்'' என்கிற இந்த தொடரை இங்கே பதிப்பிக்க அனுமதி தந்தமைக்கு திருமதி ரதி லோகநாதன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனவரியில் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் இந்த பதிவுகளில் நீங்கள் படித்த விஷயங்கள் புத்தக வடிவில் கிடைக்கும். அனைவரும் வாங்கிப் படித்து, பின்பற்றவும். உங்கள் சந்ததியினரும் படித்துப் பயன் பெறும் வகையில் புத்தகத்தை அவர்களையும் படிக்கச் சொல்லவும். மற்றவர்களுக்கும் பரிசளிக்கலாம். வீடும் நாடும் பயனடைவதின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாத்து, இந்த பூமியையும் பாது காக்கலாம். 

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக