செவ்வாய், 14 டிசம்பர், 2010

17.  ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.
இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
பகுதி 15:      25.  உண்ணா நோன்பு:
பகுதி 16:      27. ஜீரண சக்தியை அதிகரிக்க
மேலும் தொடர்கிறது....
32.      சிரிப்பும் ஆரோக்கியமும்:
(1) புன்னகை இருக்க பொன்னகை எதற்கு?
(2) வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும், சிரிச்சா என்ன செலவா ஆகும்?
(3) சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.
(4) மனிதன் மட்டுமே சிரிக்க, சிந்திக்கக்கூடிய உயிரினமாகும்.
(5) சிரிப்பவர்களின் ஆயுள் அதிகம்
(6) சிரிப்பது முகத்திற்கு ஒரு நல்ல பயிற்சியாகும்.
(7) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

33. இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள்:
(1) வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
(2) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(3) உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
(4) நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும்.  நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக  வேண்டும்)
(5) உணவும் மருந்தும் ஒன்றே.
(6) அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
(7) கடவுள் கனிகளை படைத்தார்.  சாத்தான் சமையலை படைத்தான்.
(8) படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.
(9) பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே
(10) சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
(11) சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும். (ஜப்பானிய பொன்மொழி)
(12) சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார். (ஸ்பெயின் பொன்மொழி)
(13) 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை)  5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)
(14) வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும் (ஜெர்மன் பழமொழி).
(15) பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
(16) சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது. 
34.  இயற்கை குளிர் சாதனப்பெட்டி
பழங்களை புதிதாக இருக்கும் போதே சாப்பிட்டு விட வேண்டும்.  குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்துவது நல்லது அல்ல.  பழங்களை ஓரிரு நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் ஒரு எளிய முறையில் வாடாமல் வைக்கலாம். ஒரு அகலமான  பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.(அளவு தேவைக்கேற்ப) அதை மணலில் நிரப்பிக் கொள்ளவும்.  அதில் சிறிது நீர் தெளித்து மண்ணை  ஈரமாக்கவும்.  ஒரு மெல்லிய பருத்தி துணியை மணல் மேல் விரிக்கவும்.  இதற்கு மேல் காய்கறிகளையும் பழங்களையும் வைக்கவும். இது ஓரளவுக்கு  பழங்களை புதிதாக வைத்திருக்க உதவும். தண்ணீர் அவ்வப்போது மணல் மீது தெளித்து மணலை ஈரமாக வைத்துருக்கவும். கீரைகள், கருவேப்பிலை, கொத்தமல்லியை அதன் தண்டு நீரில் மூழ்குமாறு வைத்தால் ஒரு நாளைக்கு வாடாமல் இருக்கும்.  தேவையிருக்கும் பொழுது வாங்கி  உடனே உபயோகிப்பது நல்லது.  வீடுகளில் இடவசதி இருப்போர் பழமரங்கள் நட்டு வளர்க்கலாம்.  அலங்கார செடிகள் வளர்ப்பதற்கு பதிலாக கீரைகள், காய்கறிகளை தொட்டியில் வளர்க்கலாம்.  மொட்டை மாடியில் தோட்டம் போட்டு புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றை வளர்க்கலாம். 
 (தொடரும்)  
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.