19. ஆரோக்கியம் ஆனந்தம்
(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்:
பகுதி 15: உண்ணா நோன்பு...
பகுதி 16: ஜீரண சக்தியை அதிகரிக்க...
பகுதி 17 : சிரிப்பும் ஆரோக்கியமும்...
பகுதி18 : ஏ.சி.வரமா? சாபமா?
மேலும் தொடர்கிறது....
37. சில இயற்கை உணவு குறிப்புகள்
(2) கேரட் ஜுஸ்: தேங்காய்+கேரட்+இஞ்சி(சிறிய துண்டு)
(3) இயற்கை சாக்லேட் பால்: தேங்காய்+பேரிச்சை மிக்ஸியின் உதவியுடன் இவைகளை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம். டின்னில் அடைக்கப்பட்ட பழரசங்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
(4) காய்கறி சாலட்: உப்பு குறைவாக+மிளகு பொடி+ எலுமிச்சை துளிகள். ஜீரகத்தூள், மல்லித்தூள் சுவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.
(5)பழ சாலட்: பழத்துண்டுகள்+தேன்
(6) பழம்+பேரிச்சை அரைத்து லட்டு போல பிடித்து அதற்கு மேல் முந்திரி+உலர் திராட்சை அழகுக்கு வைத்து குழந்தைகளுக்கு சத்துள்ள ஆகாரமாக கொடுக்கலாம்.
(7) பழரசம் : பழத்துண்டுகள் மிதக்க விட்டு கொடுக்கலாம்.
38. நமது குடும்பத் தேவைகளுக்கேற்பவும் கிடைக்கும்
பழங்கள், கொட்டைபருப்புகள், காய்கறிகளுக்கேற்பவும் நாமே பல வித உணவுகளை உருவாக்கலாம். உணவு தயாரித்த உடனேயே உண்டு விட வேண்டும். தாமதிக்காமல் உண்ணுவது நல்லது.
39. இயற்கை உணவு - சுருக்கமாக
உட்கொள்ள வேண்டிய உணவுகள்: தேங்காய், கொட்டை பருப்புகள் (முந்திரி, பாதாம், பிஸ்தா & வறுக்காதது), பேரிச்சை, வாழைப்பழம், சீசனுக்கு கிடைக்கும் எல்லா பழங்களும், பச்சை காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: அசைவ உணவு, முட்டை, பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடை, பனீர்(பால், பால் பொருட்கள்)
சமையலுணவில் குறைக்க வேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு:
தவிர்க்க வேண்டியது மாற்று உணவு
(1) சர்க்கரை வெல்லம், கரும்பு சர்க்கரை, கருப்பட்டி
(2) பொடி உப்பு கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய்
(4) மிளகாய் மிளகு
(5) புளி எலுமிச்சை
(6) கடுகு சீரகம்
(7) காபி, டீ லெமன் டீ, ப்ளாக் டீ, சுக்கு காபி, வரக் காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி அவல், சிகப்பரிசி (கைக்குத்தல் வகைகள்)
குறிப்பு: இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம், தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும். இவை இயற்கை உணவுகள் அல்ல. அவை தீமைகள் குறைவாக செய்யும்.
முதலில் 1 வேளை ஆரம்பிக்கவும். இரவு உணவாக ஆரம்பிப்பது நல்லது. (உடலுக்கு இயற்கை உணவை ஜீரணிக்க குறைந்த நேரமே போதும். எனவே நமது தூக்க நேரத்தில் மீதியில் உடல் கழிவுகளை வெளியேற்றும்.) ஜீரணக் கோளாறுகளும் குறையும். முடியாதவர்கள் காலை உணவாக ஆரம்பிக்கலாம். அளவு, கலோரி கணக்குகள் கிடையாது. பசி உணர்வு தோன்றுபோதெல்லாம் வயிறு நிறைய சாப்பிடலாம். தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம். கூறப்பட்டிருக்கும் இயற்கை சிகிச்சை முறைகள் கழிவுகளை பக்கவிளைவுகள் இல்லாமல் வெளியேற்றும்.
(ஆரோக்கியம், ஆனந்தம் தொடரும்)
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக