சனி, 12 மார்ச், 2011

வணக்கம்.
இரத்தம் ஒரே நிறம் ஆனால் அதிலும் கூட குருதி பேதம் ஏன்? நான்கு வகையான இரத்த வகைகளுக்கும் ஏற்ற சரியான உணவு எது? என்னும் தலைப்பில் ஒரு இடுகையை முன்னர் (ஜூலை 2010) இட்டிருந்தேன். 
சுட்டி: http://frutarians.blogspot.com/2010/07/blog-post.html 

பின்னர் நேரம் கிடைக்காது போனதில் Dr.Peter J.D'Adamo எழுதிய  ''4 Blood Types, 4 Diets - Eat Right 4 your Type''அந்த ஆங்கிலப் புத்தகத்தை என்னால் தமிழாக்கம் செய்ய இயலவில்லை. வேறு ஒரு வலைப்பூவில் இது தொடர்பாக கிடைத்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது தமிழாக்கம் விரைவில் வரும். அதுவரை, இதனை படியுங்கள். நன்றி.

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?

ந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான்.

உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம், மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சைவ உணவு மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.சரி, எந்த இரத்த வகையினருக்கு எந்த மாதிரியான உணவு முறை பொருந்தும்  என்று பார்க்கலாம்.  அதாவது, இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண் தான் பொருத்தமாக இருக்கும் என்பார்களே..அது ஏன்? இரத்தத்தின் தன்மையை வைத்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.  ஆக.. இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத் தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம். 

'ஏ' பிரிவு இரத்த வகை

இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். 'ஏ' இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் 'லெக்டின்' என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.

'பி' இரத்த வகை

மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

'ஏ'பி' பிரிவு இரத்த வகை

இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

'ஓ' இரத்த பிரிவு

இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ், பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ், காலிபிளவர், கடல் உயிரினங்கள், அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இந்த விடயங்கள் ஒரு வேதியியல் மற்றும் சித்த மருத்துவம் தெரிந்த நண்பரின் ஆலோசனையில் பதியப்பட்டது. இங்கு குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாக நீங்கள் அறிந்தால் இங்கு குறிப்பிடப்படும் தகவலும் பொருந்துவதாகும். 
மற்றபடி இந்த தகவல் பொதுவானது என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். நன்றி.
வலைப்பதிவருக்கு நன்றி: http://greenindiafoundation.blogspot.com/2010/12/blog-post_25.html

இந்தப் பதிவினைப் பற்றி வாழி நலம் சூழ..வலைப்பூவின் கருத்து: 
அசைவ உணவுப் பழக்கம் உள்ளோர் முதலில் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள்; சைவ உணவு உண்போர் இயற்கை உணவுக்கு மாற்றும். ஏனெனில்,  இயற்கை நல வாழ்வியல் தத்துவப் படி உண்ணும் உணவே மருந்து ஆகிறது. இயற்கை உணவினை முறையான ஆலோசனைப்படி உண்பவர்கள் எந்த விதமான மருத்துவமும் பொருட்படுத்த தேவையில்லை.  திருவள்ளுவரின், "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு"' எனும் குறளின் படி, இயற்கை நலவாழ்வியலை பின்பற்றுபவர்கள் எந்த விதமான மருத்துவத்தையும் (ஆயுர்வேதம், சித்தம், யூனானி, ஹோமியோபதி, போன்ற மாற்று மருத்துவம் உள்பட) செய்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
வாழி நலம் சூழ.
அஷ்வின்ஜி.

வியாழன், 10 மார்ச், 2011

நலமோடு வாழ நலவாழ்வியல் குறிப்புக்கள்.

புதிய உலகம்.. (நன்றி: google images)


"It takes less water to produce a year's food for a pure vegetarian than to produce a month's food for a meat-eater."  (John Robbins)


உண்ணும் உணவில் கவனம் தேவை.
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை. 

எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

உடல் எடை:
இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.

பற்களுக்கு எளிது:
நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.

நோய் தடுப்பு:
மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம்அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.


செய்தி நன்றி:
வெப்துனியா இணைய தளம்.

வாழி நல சூழ.. 
பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகளை தொடர்ந்து நிறைய உண்டு வருபவர்கள் சைவ உணவுகளை (சமைத்த உணவுகளை) அளவு குறைவாக எடுத்துக் கொள்ளலாம். 
உங்களுக்கு நீங்களே பழங்களை பரிசளித்துக் கொள்ளுங்கள். 

இதன் மூலம் இன்னும் அதிகமான ஆரோக்கிய வாழ்வுடன், நோயற்ற வாழ்வும் வாழலாம்.

ஞாயிறு, 6 மார்ச், 2011

இதயத்திற்கும், ஈரலுக்கும் பலம் தரும் லிச்சி!

 • இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். 
 • பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.
 • லிச்சி பழம் இனிப்பான ரோஜா மலரின் வாசனை தரும். பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். 
 • ஈரல் உடலின் பல்வேறு விஷங்களால் நொந்து போயிருக்கும். லிச்சியின் பழச்சாறு இந்த விஷத்தன்மையை குறைத்து ஈரலுக்கு உரம் ஊட்டும். 
 • தாகத்தை தணிக்கும். 
 • இந்தோனேஷியாவில் இதன் விதைகளை குடல்சார்ந்த நோய்களை குணப்படுத்தவும், மலேசியாவில் நரம்பு நோய்களை சரிப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். 
 • இதன் பூக்களும், வேர்ப்பட்டையும் தொண்டையில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்க பயன்படுகிறது.
 • புகைபழக்கம், பாக்கு பழக்கத்தினால் தொண்டைப்பகுதியை ரணப்படுத்தியிருப்பவர்கள் லிச்சி பழங்களை உண்பது நலம். 
 • சீனாவில் பூச்சி கடித்து விட்டால் லிச்சி மரத்தின் இலைகளை சாறு எடுத்து பிழிந்து விடுகிறார்கள்.
 • லிச்சி பழத்தில் உடலின் கட்டுமான உணவு என்று சொல்லப்படும் புரதம் 1.1 கிராம், 
 • தோல்தடிப்பாயும், சொரசொரப்பாகவும் மாறும் தவளைசொறி நோயை கட்டுப்படுத்தும் தாவர கொழுப்பு 0.2 கிராம், 
 • இன்றைக்கு பலருக்கும் அன்றாட பணியில் சிக்கலை ஏற்படுத்தும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், கால்சியம் உடலில் சேர உதவும் பாஸ்பரஸ் 35 மிகி, உடல் வெளுத்து போவதை தடுத்து நிறுத்தும் இரத்த சிவப்பணுக்களின் கட்டமைப்புக்கு முக்கியமான இரும்பு சத்து 0.7 மிகி, 
 • நாக்கு வீங்குவது, சிவந்து பிளவுபடுதல், வாய்ஓரங்களில் வெடிப்பு உண்டாவதை தடுத்து நிறுத்தும் ரைபோபிளேவின் 0.06 மிகி, 
 • சளி உருவாகாமல் தடுத்து தலைசுற்றல், கிறுகிறுப்பை தடுக்கும் வைட்டமின் சி 31 மிகி, மக்னீசியம் 10 மிகி, பொட்டாஷியம் 159 மிகி, தாமிரம் 0.30 மிகி களோரின் 3 மிகி உள்பட எராளமான சத்துக்கள் லிச்சி பழத்தில் தாராளமாக உள்ளன.
 • அவ்வப்போது இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல்நலன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
நன்றி: http://greenindiafoundation.blogspot.com