வியாழன், 10 மார்ச், 2011

நலமோடு வாழ நலவாழ்வியல் குறிப்புக்கள்.

புதிய உலகம்.. (நன்றி: google images)


"It takes less water to produce a year's food for a pure vegetarian than to produce a month's food for a meat-eater."  (John Robbins)


உண்ணும் உணவில் கவனம் தேவை.
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை. 

எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.

கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

உடல் எடை:
இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.

பற்களுக்கு எளிது:
நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.

நோய் தடுப்பு:
மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம்அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.


செய்தி நன்றி:
வெப்துனியா இணைய தளம்.

வாழி நல சூழ.. 
பழங்கள், பச்சைக் காய்கறிகள் போன்ற இயற்கை உணவுகளை தொடர்ந்து நிறைய உண்டு வருபவர்கள் சைவ உணவுகளை (சமைத்த உணவுகளை) அளவு குறைவாக எடுத்துக் கொள்ளலாம். 
உங்களுக்கு நீங்களே பழங்களை பரிசளித்துக் கொள்ளுங்கள். 

இதன் மூலம் இன்னும் அதிகமான ஆரோக்கிய வாழ்வுடன், நோயற்ற வாழ்வும் வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக