செவ்வாய், 23 நவம்பர், 2010

இயற்கைப் பால்


பால் மற்றும் பால் பொருட்களால் மனித குலத்துக்கு தீங்குகள் தான் அதிகம். நன்மைகள் குறைவே. பால் கபத்தைப் பெருக்கும். இது சளியை அதிகப் படுத்தும். நம் பெண்மணிகள் குழந்தைகளுக்கு முலைப்பால் மட்டுமே தந்த பின்னர், இரண்டு வயதுக்கு மேல் பாலையோ, பால் பொருட்களையோ குழந்தைகளுக்கு தருவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாலில் இருக்கும் சத்துப் பொருளை கிரகிக்கும் என்சைம் மனித உடலில் (குழந்தைகளின் வயிற்றில்) இரண்டு வயதுக்குப் பின்னர் சுரப்பதில்லை. இயற்கையாகவே இது நேருவதைக் கொண்டு இரண்டு வயதுக்கு மேல் மனிதனுக்கு பால்/பால் பொருட்கள் தேவை இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

கபம் (சளி) மனிதனைக் கொல்லும் வியாதி. இதை பால் ஊற்றி வளர்க்கிறோம். பாம்புக்கு பால் ஊற்றி வளர்ப்பது போல. பாம்புக்கு எத்துணை பால் ஊற்றி வளர்த்தாலும் இறுதியில் பாம்பு  நஞ்சினைக் கக்குவது போல, பால் இறுதியில் கபமாக மாறி மனிதனுக்கு எமனாக மாறுகிறது என்கிறார் அர்னால்ட் எஹ்ராத் (Arnold Ehret) என்னும் மேலை நாட்டு உணவியல் ஆராய்ச்சியாளர். 

பாலுக்கு மாற்றாக நலம் பயக்கும் இயற்கை பாலை நாம் இல்லத்திலேயே அதிக செலவின்றி தயாரிக்கலாம். அவற்றை அருந்தலாம். நிறைய பயன்களை விளைவிக்கும் இயற்கை பால் தயாரிக்கும் முறைகளை கீழே காணலாம். 

முக்கியமான குறிப்பு: 
இங்கு விளக்கப்பட்டிருக்கும் இருக்கும் இயற்கை பால் எதையும் காய்ச்ச கூடாது. காய்ச்சினால் அதனை அருந்தும் குறிக்கோள் நிறைவேறாது. பச்சையாகத்தான் அருந்த வேண்டும். தேவைப் பட்டால் தேனீர் வடிகட்டியால் வடிகட்டி பின் அருந்தவும். 

இயற்கை பால் வகைகளை நலம் கூட்டும் மருந்து போல எண்ணி அருந்த வேண்டும். ருசிக்காக (விருந்து போல) அருந்துவது தேவையில்லை.

கோதுமைப் பால்
100 கிராம் கோதுமையை எடுத்து நன்கு கழுவி முளைக் கட்டவேண்டும்.  பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைத்து பால் எடுக்கவும். அத்துடன் தனியாக எடுத்த தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம்.

கொசுறு: சுவைக்கு தேன் சேர்த்தும் சாப்பிடலாம்.

பயன்கள்:
இது புற்று நோயை எதிர்க்க வல்லது.
உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும்.
வாதத்தை குணப்படுத்தும். சுரம் நீங்கும்.
மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
ஆண்களுக்கு உயிர் அணுவை பெருக செய்யும்.
பாக்டீரியா, வைரஸை எதிர்க்கும்.
வெள்ளை அணுக்களை பலப்படுத்தி அதிகரிக்க செய்யும்.

நிலக்கடலைப் பால்
நூறு கிராம் நிலக்கடலையை எடுத்து சுத்தம் செய்து முளை கட்டிய பிறகு அத்துடன் ஊறிய ஐந்து முந்திரி பருப்புகளையும் சேர்த்து ஒரு ஏலக்காயும் சேர்த்து மிக்ஸியில் போட்டு பால் தயார் செய்துக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இந்த நிலக்கடலை பாலினை காய்ச்ச கூடாது. மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் சாப்பிட வேண்டும்.

பயன்கள்:
இது செல்களின் வளர்ச்சிக்கும், புதுப்பித்தலுக்கும் மிகவும் உதவும். (Stem cell கிரியாவூக்கி), சிறுநீர் பையின் அழற்சியை குணமாக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்கும்.
கைகால் குறண்டல் குணமாகும்.
மலச்சிக்கல் நீங்கும்.

எள்ளுப்பால்
கொள்ளுப்பால் எடுத்தது போலவே இந்த எள்ளுப்பாலும் எடுக்கலாம். 100 கிராம் எள்ளை நன்கு சுத்தம் செய்து இரவு முழுவது தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து ஒரு ஈரமான துணியில் கட்டிவைத்து விட வேண்டும். துணி காயாமல் அடிக்கடி அதில் தண்ணீரை தெளித்துக் கொண்டு இருக்கவேண்டும். உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் பி1, வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலுக்கு வன்மையும், குருதி பெருக்கையும் உண்டாக்கும். எள்ளில் கருப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளுவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.. முளைத்த தான்யங்கள், பயறு வகைகள் முளைகாதவற்றைவிட பன்மடங்கு சத்துக்கள் அதிகம் உடையவை. எனவேதான் முளைக்க வைத்து பால் தயாரிக்க வேண்டும். இந்த முளைவிட்ட எள்ளுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து பால் தயாரிக்கவும். இந்த எள்ளுப்பால் சாப்பிட சிறிது கசப்பாக இருந்தாலும் உடலுக்கு மிகவும் நல்லது.

எள்ளு பற்றிய இரு முது மொழி உண்டு.
(1) இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு 
(2) வைத்தியனுக்கு கொடுபதற்கு பதில் வாணியனுக்கு கொடுக்கலாம்.

”எள்ளுமருத் தைக்கெடுக்கும் எறனலாந் திண்மைதரும்
உள்ளிலையைச் சேர்க்கும் உதிரத்தைத் – தள்ளுமிரு
கண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்
பண்ணுக் கிடர்புரியும் பார் ”

எச்சரிக்கை: இது மருந்தின் செயல்பாட்டை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் இந்த பாலை பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 
பயன்கள்: இது இரத்த சோகையை நீக்கும். ஹீமோகுளொபின் குறைவாக உள்ளவர்களும், மாதவிலக்கின் போது அதிகமாக உதிர போக்கு உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். சுவாச கோளாறுகள், ஆஸ்த்துமா உள்ளவர்கள் சாப்பிட்டால் கஷ்டம் குறையும். உடல் மெலிந்து ஒல்லியாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க அவர்களுக்கு உடல் எடை கூடும். உடலும் ஆரோக்கியம் பெறும்.

கொள்ளுப்பால்
இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன்படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உடலில் ஊளை சதை போடுவதற்கு, உப்புதான் மிக முக்கிய காரணம்  உப்பு நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

முளைவிட்ட கொள்ளு (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

எச்சரிக்கை: கர்பமாக உள்ள பெண்கள் கொள்ளுப் பாலை சாப்பிட கூடாது. 

ஞாயிறு, 21 நவம்பர், 2010

11.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.

பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 


பகுதி 11  தொடருகிறது:
  

ஈரமண்பட்டி
சுத்தமான மண், புற்று மண், செம் மண், களி மண்(உரமும், பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது) தண்ணீருடன் குழைத்து வைத்துக்  கொள்ள வேண்டும்.  ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 1/2  மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம்.  பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம், காய்ச்சல், தலை வலி, மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது.   சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.

ஈரத்துணிபட்டி
மேற் கூறியதை வெறும் பருத்தி துணியை தண்ணீரில் நனைத்தும் செய்யலாம். 

சூரிய ஒளிக் குளியல்
குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம்.  சுரிய ஒ:ளி நமக்கு  நிறைய ஆற்றலை வழங்குகிறது.  விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும், வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.
சூரிய ஒளியின் நன்மைகள்:
    (1) தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.

    (2) தோல் வியாதிகள் மிகவும் குறைவு.

    (3) கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.

    (4) காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும்.

சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில்  20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.

எண்ணெய் கொப்பளித்தல்
இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது.  இது தீங்கு  விளைவிக்காது.  நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும்.  பிறகு ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

செய்முறை:
சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.  1 ஸ்பூன் போதுமானது.  வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும்.  பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும்.  விழுங்கினால் தவறேதும் இல்லை.   ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது.  பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம்.  காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம்.  சவ்வூடு  பரவுதல் (ஆஸ்மாஸிஸ்) மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது. 

(தொடரும்)

நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.