ஞாயிறு, 7 நவம்பர், 2010

8.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 

 
பகுதி:1


பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 

பகுதி 7   சென்ற பகுதி:- வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.
 


மண் குளியல்

(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன்படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய  நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும்.  இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு  தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.

(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.

(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.

(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும்.  புண்களிலும் பூசலாம்.

(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.

(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். 

(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும்.  சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை.  மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து  மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.

(8) கழிவுகள் இம்முறையில் வெளியேறும்.  வியர்வைத் துளைகள் சுத்தமாகும்.  பிரஷ்ஷாக இருக்கும்.

(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன்  தரும்.

(10)  அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப்படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன்படுத்தலாம்.


(மற்ற இயற்கை குளியல் வகைகள் தொடரும்) 

நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக