வியாழன், 24 மார்ச், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி ஒன்றுஹோலிப் பண்டிகை வாழ்த்துக்கள்.

வசந்த காலம் இன்றில் இருந்து தொடங்குகிறது.

வாழி நலம் சூழ.. வலைப்பூ வாசகர்களுக்கு என் இனிய வணக்கம்.

மிக நீண்ட நாட்களாக பதிவுகளை இட இயலாத சூழ்நிலை.

இனி தொடர்ந்து பதிவுகள் வரும்.

இன்றைய சூழலில் பலவிதமாக நோய்கள், அவற்றிற்கு தீர்வுகள் என மனிதகுலத்தின் தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

பலவிதமாக மருத்துவ முறைகள் உலகில் உள்ளன. மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாக சித்த மருத்துவம் அறியப்படுகிறது. சித்தர்கள் கண்டுபிடிப்பான சிவாம்பு மருத்துவம் எனும் அமுரி மருத்துவம் அதில் ஒன்று. சிறுநீர் மருத்துவம் பற்றிய சில கட்டுரைகளை இணைய தளத்தின் வலைப்பூக்களில் இருந்து இங்கே வெளியிடுகிறேன். மூன்று பகுதிகளாக அவை வரும். இறுதிப் பகுதியில் சென்னையில் உள்ள ஒரு பெரியவர் பற்றி குறிப்பிட உள்ளேன். அவர் மூலமாக இந்த மருத்துவம் பற்றிய விவரங்களையும், வழிகாட்டல்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். அதுவரை சிறுநீர் மருத்துவம் பற்றிய செய்திகளை தொடர்ந்து படியுங்கள்.

வாழி நலம் சூழ.. 

நன்றி.


சிவாம்பு மருத்துவம் எனும் அமுரி தாரணை 
(சிறுநீர் மருத்துவம்)
பகுதி ஒன்று.சிறுநீர் மருத்துவம்

சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்-1

முதல் படி: சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்

சிறுநீர் சிகிச்சையை முதன்மைப்படுத்தும் ஒரு அறிவியல் வலைப்பூ. சித்தர்கள் முதல் நிறைய சான்றோர்கள் ஆதரித்த முப்பு மருத்துவம்சிவாம்பு மருத்துவம் அல்லது சிறுநீர் மருத்துவத்தின் மேன்மைகளைப் பரப்ப இவ்வலைப்பூ முயலும். கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட கட்டுரை:

RMR.இராஜசேகரன்
காரைக்குடி

சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்
ஆரோக்கியத்திற்கான அடிப்படை:
இன்றைய உலகில் மனித சமுதாயம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக வசதியான வாழ்க்கை பெற முடிகிறது. ஆனால் மனத்தளவில் நிறைவோஅமைதியோ அல்லது உடலளவில் ஆரோக்கியமோ இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. நவீன மருத்துவம்  வளர்ந்துள்ள இந்நாளில் ஏன் நோய்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது;  மருத்துவமனைகளின் எண்ணிக்கையும்,  மருந்துக் கடைகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது. 

மேலும் இன்று நாட்பட்ட நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாதோ என்ற நிலை உள்ளது. இதை நவீன மருத்துவமும் மறுப்பதாக இல்லை. நவீன மருந்துகளின் பக்க விளைவுகளையும்பின் விளைவுகளையும் யாரும் மறுப்பதற்கில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நோய்களைக் குணப்படுத்த வேண்டிய மருந்துகள்புதிய தீராத நோய்களுக்கு வழிகோலுவதுதான். அடுத்து நோய்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து கொண்டே போவதுதான். மனதைச் செம்மையாகவும்உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வழிகாட்ட பலவேறு யோகா மற்றும் ஆன்மிகப் பயிற்சிகள் தோன்றிக் கொண்டே இருந்த போதும்பெரிதாக பலன் கிட்டியிருப்பது போல் தோன்றவில்லை.

எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தபோதும்மன அமைதியும்உடல் ஆரோக்கியமும் இல்லையெனில் மகிழ்ச்சியான வாழ்க்கை எப்படி அமையும்அப்படியெனில் இதற்கு வேறு வழியே இல்லையா?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாண இக்கட்டுரை முயல்கிறது.

நமது ஆய்வை பரிணாமத்திலிருந்து துவக்குவோம். பரிணாமத்தைப் பொறுத்தவரை அறிவியலாருக்கும், ஆன்மிகத்தாருக்கும் ஒரு சில விஷயங்களில் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம். 

உயிர் என்பது சிற்றுயிர்களிலிருந்து பேருயிர்களாகப் பரிணமிக்கின்றது. விலங்கினங்கள் எளிய, சிக்கலற்றமகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டும் துன்பங்கள்துயரங்கள்கவலைகள் என்று அதிருப்தியான வாழ்க்கை வாழ்கின்றது. இது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மனித இனம் ஆறாம் அறிவைப் பெற்ற ஒரே உயிரினம் என்று பெருமை பேசுகிறோம்பரிணாமத்தில் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறோம். அப்படியிருக்க ஏன் இந்த துன்பமானதுயரமான வாழ்க்கை?

விலங்கினங்கள் நம்மை விட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றன. அவை இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. இயற்கையில் எப்படிக் கிடைக்கிறதோ அப்படியே உணவை உட்கொள்கின்றன. உணவை அவை மாற்றவோசீர்திருத்தவோருசி கூட்டவோ முயல்வதில்லை. ஆனால் மனிதனோ தனது பரிணாம வளர்ச்சி பெற்ற புலன்களால் இயற்கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தனது தேவைக்காகவோருசிக்காகவோ மாற்ற விரும்புகின்றான். சுருங்கச்சொன்னால் இயற்கையை வெல்ல மனிதன் விரும்புகின்றான். மனிதன் மாறுதல்களை விரும்புகின்றான். இவ்வாறாகமனிதனது வாழ்க்கை முற்றிலும் செயற்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. உணவை எடுத்துக் கொண்டால்உணவை வேறு பொருட்களுடன் சேர்த்துசமைத்துநிலைமாற்றி தனது ருசிக்கேற்ப அல்லது தேவைக்கேற்ப உண்ண விரும்புகின்றான். இதனால் உணவுப் பொருட்களின் குணாதிசயங்கள் சமயத்தில் முற்றிலுமாக மாறிவிடுகின்றன. மூலப் பொருட்களில் இருந்த குணங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இதுதான் மனிதனின் துன்பத்திற்கு மூல காரணமா?

பரிணாமத்தில் எல்லா உயிர்களுக்குமே புலன்கள், உள்ளுணர்வுகள், தேவைக்கேற்பவும், சுற்றுச் சூழலுக்கேற்பவும்காலத்திற்கேற்பவும் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை இயல்பாகவே பெற்றுள்ளன.

விலங்கினங்கள் இயல்பானஇயற்கையான வாழ்க்கை வாழ்கின்றன. வாழ்வை உள்ளபடி அவை எதிர்கொள்கின்றன. உணவைப் பொறுத்தவரை கிடைத்தவற்றைஎதையும் மாற்ற முயலாமல் அப்படியே உண்கின்றன. அவைகளுக்கு வியாதி என்பது சாதாரணமாக உண்டாவதில்லை. அப்படியே நோய்நொடி உண்டானாலும் தன்னை எப்படி குணப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவைகளுக்குத் தெரிந்திருக்கின்றது. அவை மருத்துவர்களையோ அல்லது வெளி உதவியையோ, பிறரது ஆலோசனையையோ நாடிச் செல்வதில்லை.

உலகின் பல்வேறு இடங்களிலும்பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த சான்றோரும்தத்துவ ஞானிகளும்மதத் தலைவர்களும் மனித வாழ்க்கைக்கு நிச்சயமான குறிக்கோள் இருக்கின்றது என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர். உன்னையே நீ அறிவாய்” என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்த இலக்கை அடையமனிதனுக்கு ஆறாம் அறிவு தேவைப்பட்டதுஅதனாலேயே பரிணாமம் நமக்கு ஆறாம் அறிவை வழங்கியுள்ளது. இந்த ஆறாம் அறிவால் உந்தப்பட்டுமனிதன் எல்லாவற்றிலும் காரண காரியத்தைத் தேடுகிறான். இப்பேரண்டத்தில் ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் கண்டிப்பாக உண்டு என்று உணர்கிறான். மனிதனுக்கு பரிணாமம் செயலாற்றும் வல்லமை கொண்ட இரு கரங்களைத் தந்துள்ளது. தனது அறிவையும்கரங்களையும் கொண்டு மனிதன் நுட்பமான கருவிகள்உபகரணங்கள்எந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளான். இவற்றைக் கொண்டு தனது தேவைக்கான பல புதிய புதிய பொருட்களை உருவாக்கவும் செய்கிறான். இது அவனது ஆறாம் அறிவால் கிடைத்த பேறு அல்லது சிறப்பு. எனவே அவன் எல்லாவற்றையும் வெவ்வேறு வகையாக மாற்றிப் பார்த்தால் என்ன என்ற எண்ணத்துடன் செயல்படுகிறான்.

இந்நிலையில் நோய்நொடிகள் தவிர்க்க இயலாதவை. விலங்கினத்தைப் பொறுத்தவரையில் துன்பம் விளைவிப்பவைதீங்கு விளைவிப்பவை ஆகியவற்றை தவிர்க்க அவைகளின் உள்ளுணர்வு வழிகாட்டுகின்றது. ஆனால் மனிதனுக்கு அவனது உள்ளுணர்வு வழிகாட்டஎச்சரிக்க தவறிவிட்டதோ என்று தோன்றுகிறது. இதை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்:

1. ஆடுகள் ஊமத்தைஎருக்கு போன்றவற்றை தின்றாலும் அவைகளுக்கு ஊறு நேர்வதில்லை.

2. சில பூச்சிகளின் வாழ்க்கையில் லார்வா என்றொரு பருவம் வருகிறது. இப்பருவத்தில் அவைகளுக்கு பார்க்கும் சக்தி இருப்பதில்லை. எனினும் அவை தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்துவேண்டிய இலை தழைகளை மட்டும் உண்டு உயிர் வாழ்கின்றன.

3. சாதாரணமாக சமையலுப்புவெங்காயம்புளிஇஞ்சிபூண்டுமிளகுகடுகுமிளகாய் போன்றவற்றை மனிதன் அப்படியே உண்பதில்லை. ஆனால் அவற்றை வேறுவேறு அளவில்வேண்டிய இடங்களில் தேவைக்கேற்ப உணவுடன் சேர்த்து உண்கின்றன. அவ்வாறு செய்யும் போது சுவை கூடிஏற்புடையதாக உணவு மாறுகின்றது.

4. இன்றைய நவீன யுகத்தில்நம் வாழ்வில் நாம் பல இரசாயனப் பொருட்களையும்தாதுக்களையும்உலோகங்களையும் கையாள நேர்கிறது. இவற்றில் பல நம் உடலினுள் சென்றுஅவற்றின் தன்மைக்கேற்ப விளைவுகளை உண்டாக்குகின்றன. கிட்டத்தட்ட நாம் உட்கொள்ளும் அனைத்துப் பொருட்களுமே நம் உடலிலும்மனிதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதை அனுபவரீதியாகப் பார்க்கிறோம். இத் தாக்கங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லைமாறுபடுகின்றன. மரபுக் கூறுகள், உடலமைப்புஉணவின் தன்மை, குணங்கள், எண்ணங்கள், சுற்றுச்சூழல், காலம், செயல்எந்தக் கட்டத்தில் மனிதன் வாழ்கிறான்அவனது பழக்க வழக்கங்கள், தனித் தன்மைகள் போன்றவற்றால் மாறுபடுகின்றன.

ஹோமியோபதி மருத்துவத்தின் பதார்த்த குண சிந்தாமணி (Materia Medica) யைப் படித்தால் பொருட்களின் தாக்கங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம் என்ற உண்மை எளிதில் விளங்கும். இத்தாக்கங்களின் தன்மையும்அளவும் மாறுபடுகின்றது. எனவே காரண காரிய விளக்கம் என்பது சிக்கலாகிறது. மேலும் பல சமயங்களில் இத் தாக்கங்கள் எளிதில் காணக் கூடியவையாகவோ அல்லது உணரக் கூடியவையாகவோ இருப்பதில்லை.

இப்போது நமக்கு இரண்டு வினாக்கள் எழுகின்றன: மனித இனத்திற்கு துன்பம் என்பது தவிர்க்க முடியாததாநம் பரிணாமத்தில் ஏதாவது கோளாறு இருக்கிறதா?

வல்லுனர்கள் இப்பேரண்டத்தில் நுட்பம்வரைமுறைஒன்றுக்கொன்று தொடர்பு (Pattern, Precision, Regularity) போன்றவற்றை எல்லாவற்றிலும் காண்கின்றனர். இது பரிணாமம் எவ்வளவு சரியாகநேர்த்தியாகச் செல்கிறதுஅதில் விபத்து என்றோ எதிர்பாராதது என்று எதையும் கூறுவதற்கில்லை என்ற பேருண்மையை உணர்த்துகிறது. இதை சிற்றுயிர்களிலும் விலங்கினத்திலும் கண்ணுறலாம். எனவே இது மனித இனத்திற்கும் பொருந்தாமலிருக்க காரணம் இல்லை. மேற்கண்ட இரண்டு வினாக்களுக்கும் பதில் இல்லை” என்பதே.

மனிதனின் துன்பங்களுக்கும்துயரங்களுக்கும் பரிணாமத்தைக் குறைகூறுவது என்பது சரியில்லைமுறையில்லை என்பது தெளிவாகிறது.

நோய்நொடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலைஅவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை பரிணாமம் வழங்காதிருக்க முடியாது. இந்த நோய் எதிர்ப்பாற்றலை மீறி நோய் வாய்ப்படும் போது எளிய முறையில் சீர் செய்துகொள்ள வழிமுறைகளையும், மருந்துகளையும் இயற்கை வழங்காதிருக்க முடியாது.

விலங்குகள் தங்கள் நோய்நொடிகளுக்கு மருந்துதேடி யாரிடமும் செல்வதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். மனிதனுக்கும் இது பொருந்த வேண்டும். அப்படியானால்அப்படி மருந்தைத் தேடஏதாவது வழி தெரிகிறதாஎங்கே மருந்தைத் தேடுவது?

மனம்புத்திபுலன்கள்உடற்கட்டுதிறமைகள் எப்படி எல்லாவற்றிலுமே மனிதன் விலங்குகளிடமிருந்து மாறுபடுகிறான். மனிதனின் துன்பத்திற்கான காரணங்களும், நிவர்த்திகளும் அவனது புலன்களிலேயே இருக்க வேண்டும். முரண்பாட்டுத் தத்துவத்தின்படி நோயின் காரணங்களும்அவற்றை குணப்படுத்தும் வழிகளும் இரண்டுமே – ஐம்புலன்கள் அறிந்ததாக இருக்கவேண்டும். தன்னையறிதலிலும் ஐம்புலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

ஒவ்வொரு உடல் உறுப்பும் இயற்கையின் பல சோதனைகளுக்குப் பின்னரே தேவைநோக்கம்சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. எந்த உறுப்பும் அனாவசியம் என்றோதேவையில்லை என்றோ கூறமுடியாது. இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம்: மரங்கொத்திப் பறவைக்கு அதன் இரை தேடும் தேவைக்கேற்ப நீண்ட அலகு அமைந்துள்ளது. மீன்கொத்திப் பறவை தன் இரையைத் தேடிக்கொள்ள ஆற்றல் மிக்க கண்களையும்செங்குத்தாகக் கீழே இறங்கிஇரையைப் பற்றிசெங்குத்தாக மேலெழும்பும் ஆற்றலையும் (Vertical Landing and Vertical Take-off) பெற்றுள்ளது. மீன்களுக்கு நீந்த ஏதுவான உடலமைப்பு உள்ளது. தவளைகள் நிலத்திலும்நீரிலும் வாழ்வனஅதற்கேற்ற உடலமைப்பை அவை பெற்றுள்ளன.

பெண் கங்காரு தன் குட்டியைச் சுமந்து செல்ல ஏற்றவாறு வயிற்றில் ஒரு பை போன்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இதை இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம். கங்காரு ஒரு மம்மல் (Mammal) – அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் இனத்தைச் சேர்ந்தது. அது மூன்றடி உயரம் வரை வளரும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாவித்தாவி வேகமாக குதித்துச் செல்லும். எனவேகுட்டிக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில்வயிற்றில் சுமக்கும் கரு சிதைந்துவிடும்அல்லது தூக்கிச் செல்லும் குட்டிக்கு ஆபத்து நேரிடலாம். கங்காருக்குட்டி தனது முதல் ஆறு மாதங்களை தன் தாயின் வயிற்றிலுள்ள பையிலேயே கழிக்கிறது. பால் சுரக்கும் உறுப்பும் அந்தப் பையிலேயே அமைந்துள்ளது. எனவே வெளியே வராமலேயே தாயின் வெளிப் பக்கத்திலுள்ள அந்தப் பையிலிருந்தே குட்டி பால் குடிக்க முடியும். இயற்கை எவ்வளவு நேர்த்தியாகபிரமிக்கும்படியாக செயல்பட்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

அடுத்து யானையை எடுத்துக் கொள்வோம். அதுவும் ஒரு மம்மல்தான். அதன் வடிவமைப்பும் வித்தியாசமாகசிறப்பாக இருப்பதைப் பார்க்கலாம். உயரமானமிகக் கனத்த, மிகப் பெரிய உடலமைப்பு. நினைத்துப் பாருங்களேன்: எளிதில், நீட்டசுருக்கமடிக்கஉறிஞ்சி வைத்துக் கொள்ளஏதுவான துதிக்கை மட்டும் இல்லையெனில் அது நீர் பருக எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும்! இயற்கை யானையின் வடிவையும்தேவைகளுக்கும் ஏற்ப வேண்டிய உறுப்புகளை படைத்துள்ளது.
இப்போது மனிதனை எடுத்துக் கொள்வோம். நான்கு கால் பிராணிகளிடமிருந்து பரிணமித்தவன் மனிதன். படுக்கைவாட்டிலிருந்துசெங்குத்தாக நிமிர நிமிர, முன்னங்கால்கள் இரண்டும் முன்னங்கைகளாகின. இந்த மாற்றத்தில் மனிதனின் கரங்கள் இரண்டும் எளிதாக அவனது பிறப்புறுப்பை அடையமுடியும். தன் உள்ளங்கையை ஒரு கோப்பையைப் போல் ஆக்கிக்கொண்டு திரவப் பொருட்களை கையிலேந்த முடியும். இதன் நோக்கம் என்ன?

தற்போது நாம் வேறு சில உயிரினங்களைப் பார்க்கலாம். சிங்கம், புலி, வரிக்குதிரை, குரங்குஆடுமாடுஓணான் போன்றவை தன் சிறுநீரைத் தானே பருகுகின்றன. மனிதனுக்கு உள்ளதுபோல் கோப்பை போன்ற உள்ளங்கை அமைப்பு இல்லாததால் அவை சிறுநீரை நேரடியாகவே சுவைக்கின்றன. குட்டி போட்டபின் குட்டியைச் சுற்றியுள்ள ஜவ்வை நாவினால் நக்கிச் சுவைக்கின்றன. குட்டி வெளிப்படுத்தும் சிறுநீரை அவை அருந்துகின்றன. தனது சிறுநீரை தானே நேரடியாக சுவைக்க இயலாத சில பிராணிகள் தனது இனத்தைச் சேர்ந்த மற்றவற்றின் சிறுநீரைச் சுவைக்கின்றன. நமக்கு இது விநோதமாகவோவித்தியாசமாகவோ படலாம். ஆனால் அவை இதை இயல்பாகச் செய்கின்றன. அவை தனது பிறப்பு உறுப்பையோ அல்லது தன் இனத்தின் மற்றையவற்றின் பிறப்புறுப்பையோ நுகர்கின்றனசுவைக்கின்றன. நாய்ஆடு மாடு போன்றவற்றைக் கவனித்தால் இவ்வுண்மை புரியும். இது ஏன்?

எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை மூன்று: உயிர் வாழவும்வளரவும் தேவையான உணவுவசிக்க உறைவிடம்மற்றும் இனப்பெருக்கம். ஆனால் விலங்குகளைப் போல் மனிதன் சிறுநீரைப் பருகுவதில்லை. மனிதனின் உடலமைப்பு தன் சிறுநீரைத் தானே நேரே பருக ஏற்றதாக இல்லை. அவனது உள்ளுணர்வும் சிறுநீரைப் பருக உந்துவதில்லை. மேலும்சிறுநீரை ஒரு கழிவாக மனிதன் கருதுவதாலும்அதன் மேல் ஒரு அருவருப்பு உண்டாகிவிட்டது.

தன் சிறுநீரைத் தானே பருகும் விலங்குகள் மனிதன் போல் நிறைய நோய் நொடிக்கு ஆளாவதில்லை. அப்படியெனில்சிறுநீரைப் பருகுவதற்கும்ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளதா

உடல்நிலை சரியில்லாதபோதோகாயடிப்பட்டபோதோ எருது தன் சிறுநீரை அடிக்கடி பருகுகிறது. சில தினங்களில் அவை உடல் மெலிய ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்கஅதன் கழுத்தில் ஒரு உலோக அல்லது மரக்கட்டை வளையத்தை பொருத்துகின்றனர். இது அது தன் சிறுநீரை பருக முடியாமல் தடுக்கும். இன்றைக்கும் கிராமங்களில் இதைக் காணலாம். ஏன் அது தன் சிறுநீரை பருகுகிறது என்ற கேள்வி எழுகிறது. வலிகாயடிக்கப்பட்டதாலான அதிர்ச்சி அல்லது மற்ற உபாதைகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவுமே இதைச் செய்கிறது. எனவே சிறுநீர் நோய் நொடிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்.

மற்ற விலங்குகளோடு சண்டையிடும் போது ஏற்பட்ட காயங்களையும்மற்ற உபாதைகளையும் தன் சிறுநீர் மூலம் சிற்றுயிர்கள் போக்கிக் கொள்வது அவற்றின் உள்ளுணர்வால். தன் குட்டிக்குத் தான் எப்படி உள்ளுணர்வால் பாலூட்டுகிறதோ அதைப் போல். எனவே மனிதனுக்கும் காயங்களையோஉடல் உபாதைகளையோமற்ற நோய் நொடிகளையோ போக்கிக் கொள்ள ஒரு வழி இருக்கவேண்டும்.

இக்கருத்தை மறுப்பவர்கள் கூறுவதுசிற்றுயிர்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பியுள்ளனஎனவே அவற்றிற்கு இது பொருந்தலாம். ஆனால் ஆறறிவு படைத்த, முன்னேற்றமடைந்த மனிதனுக்கு இது பொருந்தாது.

எவ்வுயிராயினும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆரோக்கியம் அடிப்படையான தேவை. மனிதனைத் தவிர அனைத்துயிர்களும் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளவும்நோய் வாய்ப்படும்போது குணப்படுத்திக் கொள்ளவும் தாமே வழி தேடிக் கொள்கின்றன. மனிதர்கள் நோயுறும்போது மற்றவரின் உதவியை நாடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன் நோயை தானே போக்கிக் கொள்ள முடியும்.

உள்ளுணர்வால் உந்தப்பட்டுகன்றுக்குட்டி தாயின் மாடு தேடி பால் குடிக்கிறது. ஆனால்மனித இனத்தில் தாய்தான் சேயின் குறிப்பறிந்து பாலூட்ட வேண்டும். குழந்தைக்கு அழ மட்டுமே தெரியும். தன் உணவைத் தானே தேடிக் கொள்ளும் உள்ளுணர்வு குழந்தையிடம் இல்லை. தாயுமே உள்ளுணர்வால் குழந்தைக்கு அமுதூட்டுவதில்லை. பட்டறிவினாலும்கற்றறிவினாலும் மட்டுமே அவள் செயல்படுகிறாள்.அதேபோல்நோய்நோடிக்கு மருந்து காண உள்ளுணர்வு உதவுவதில்லை.

விலங்குகள் (யானையைத் தவிர) நீரை நேரடியாகவே பருகுகின்றன. மனிதர்கள் நீர் பருக ஏதாவது ஒரு பாத்திரத்தை – டம்ளரை – பயன்படுத்துகின்றனர். ஆனால்தேவை வைக்கும்போது அவர்கள் தங்கள் கையினால் நீரையள்ளிப் பருக முடியும். சாதாரண நிலையில்கைகள் பிறப்புறுப்பின் அருகே நிலை பெறுகின்றன. எனவே சிறுநீரை கையில் எடுத்துப் பருகுவது என்பது எளிமையானது. அடிக்கடி நோய்நொடிக்கு ஆளாகும் விலங்குகளுக்கு அடிக்கடி சிறுநீர் பருகும் தேவை இருப்பதால் இவ்வாறு அமைந்திருக்கலாம்.

சிறுநீர் கழிவல்ல!
சற்று சிந்திப்போம். சிறுநீரை கழிவு என்பது சரிதானாஎந்த உயிரினமும் தன் கழிவைத் தானே உண்பதில்லை. விலங்குகள் தங்கள் சிறுநீரை பருகுகின்றன. எனவே அவை கழிவாக இருக்க முடியாது.

அறிவியலார் சிறுநீரை பகுத்து ஆராய்ந்து அதிலுள்ள நுண் பொருட்கள் பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளனர். அதன்படி சிறுநீரில் மனிதனுக்குத் தேவையான பத்தொன்பது தாதுஉப்புக்கள் உள்ளன. மனித ரத்தத்தின் ஒரு பகுதி தாய்ப்பாலாக மாறுகின்றதோஅது போல் ரத்தத்தின் ஒரு பகுதியே சிறுநீர். பால் எவ்வாறு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவோ அதுபோல் சிறுநீரும்.

பிறக்குமுன்னரே சிறுநீர் சிகிச்சை!
தாயின் கருவறையில் – பனிக்குடத்தில் – தாயின் வயிற்றில் வளரும் சிசு தன் சிறுநீரைக் கழிக்கிறது. அதில் ஒரு பகுதியைப் பருகுகிறது. இச்சுழற்சி சிசு வளர உதவுகிறது. இதை நவீன மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. எனவே பிறக்கு முன்னரே நாம் சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்கிறோம் என்பது தெளிவு.

சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள்
சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளதால்அது நோய்நொடிகளைத் தோற்றுவிக்கும் என்று நிறையப்பேர் கருதுகின்றனர். இது தவறான கருத்து என்பதை சுய சிறு நீர் சிகிச்சை (Auto Urine Therapy) எனும் ஆங்கில நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம் தெளிவாக்குகிறது. (குறிப்பு 4). தொண்ணூறு சதவிகிதத்தினரின் சிறுநீரில் எந்த விதக் கிருமியும் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.” மருத்துவர்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர். மீதியுள்ள பத்து சதவிகிதத்தினரின் சிறுநீரில் நுண்ணுயிர்கள் இருக்கிறது. அத்தகைய சிறுநீரைப் பருகினாலும் கெடுதல் நேராது. சொல்லப்போனால்நமது சுற்றுச் சூழலில், நாம் சுவாசிக்கும் காற்றில்நாம் உண்ணும் உணவில், நாம் பருகும் நீரில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. நமது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலால் இவற்றால் எந்தக் கெடுதலும் நேர்வதில்லை.

மேலும் நுண்ணுயிர்களால் நோய்கள் ஏற்படுகின்றன என்பதே சர்ச்சைக்குரிய ஒன்று. நோய் உண்டாக்குவதாகக் கூறப்படும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றியும்நமது எச்சிலிலும்நமது உடலின் பல பகுதிகளிலும் எப்போதுமே இருக்கின்றன. 

ஆனால் அவற்றால் நாம் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை. எதிருயிர்களைப் பயன்படுத்தாத ஆயுர்வேதம்ஹோமியோபதி மற்றும் யூனானி மருந்துகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன. 

அதேபோல் இயற்கை மருத்துவம்அக்குப்ரஷர்அக்குப்பஞ்சர்காந்த சிகிச்சை போன்றவற்றில் மொத்தமாகக் கிருமிகளை அழித்து நோயைக் குணப்படுத்துதல் என்ற கோட்பாடே கிடையாது. இருப்பினும்அவை பல நோய்களைக் குணப்படுத்துகின்றன.

ஆதாரம்: பரமரகசியம் வலைப்பூ: 
https://paramarakasiyam.wordpress.com/மூலிகைகள்/


இரண்டாவது பகுதியில் இது தொடர்பான இன்னொரு செய்தியைப் பார்க்கலாம்)

(தொடரும்)