ஞாயிறு, 9 டிசம்பர், 2018

உடல், மன, ஆன்ம நல புத்துணர்வு முகாம், பழனி (4 நாட்கள் : 24-12-18 to 27-12-18)


உடல், மன, ஆன்ம நல புத்துணர்வு முகாம், பழனி 
(4 நாட்கள் : 24-12-18 to 27-12-18)

நினைவூட்டுகிறோம்!!!
முகாமில் பங்கு பெற்று பயன் பெற 
உங்கள் பெயர்களை பதிவு செய்துவிட்டீர்களா?
பங்கு பெற்று பயன் பெறுக.

வலைப்பூ அன்பர்களின் 
வசதிக்காக இதனைச் 
சேவைச் செய்தியாக 
வெளியிடுவது:

அஷ்வின்ஜி
வாழி நலம் சூழ...

வியாழன், 22 நவம்பர், 2018

உடல், மன, ஆன்ம நல புத்துணர்வு முகாம். (நான்கு நாள் முகாம், பழனி) Dec 24 to 27, 2018


உடல், மன, ஆன்ம நல புத்துணர்வு முகாம்.
(நான்கு நாள் முகாம், பழனி)

இடம்: மெய்த்தவப் பொற்சபை
நேதாஜி நகர், திண்டுக்கல் சாலை, பழனி

நான்கு நாட்கள் 24-12-2018 to 27-12-2018
முகாம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

நன்கொடை ரூபாய் 1800 (தங்குமிடம், உணவு)

(குறிப்பு: மேற்கண்ட நன்கொடை முகாம் செலவுகளை நிர்வகிக்க மட்டுமே. சுற்றுலாவாக பழனியைச் சுற்றி அமைந்துள்ள அருவி/அணைக் கட்டு/பழனி ஆண்டவர் கோவில்/சித்தர்கள் சமாதி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், அந்த போக்குவரத்து மற்றும் நுழைவு போன்ற கட்டணங்களை முகாம் உறுப்பினர்கள் அவரவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்)

காலை
6-00 - 7-00       உடல் நலக்கலை ( யோகா)
7-00 - 7-30       மன மலர்ச்சி பயிற்சி
7-30 - 8-30        இடைவெளி
8-30 - 9-30       ஆன்மீக வகுப்புகள் மெய்ப்பொருள் காண்பது?
10-00 - 12-00    (மருத்துவக்குளியல்) மண் குளியல், எண்ணைக் குளியல், வாழையிலைக் குளியல்

நண்பகல்
12-30                   இயற்கை உணவு

பிற்பகல்  
1-30 -4-00            ஓய்வு

மாலை
4-00 -4-30           ஆன்மீக வகுப்பறை
5-00 - 700           பஜனை இசை (ஆன்ம இசைவு)

இரவு:
7-00                      தவம்
7-30                     இரவு உணவு
8-00                    குரு சங்கமம்


முகாம் பற்றிய மேலதிக விவரங்களுக்கும்
முகாம் முன் பதிவுக்கும் அழைக்கவேண்டிய தொடர்பு எண்கள்:

மெய்த்தவப் பொற்சபை ஆசிரமம் பழனி     9150302599
தவத்திரு மெய்த்தவம் அடிகளார், பழனி     9443312599 & 9952292862
யோகாச்சார்யா முருகன் ஜி, பழனி                9894685500

பங்கு பெற்று பயன் பெற அழைக்கிறோம்;  
ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரியப் படுத்தவும்.

புதன், 11 ஏப்ரல், 2018

ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.

ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் 
அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.

உணவே மருந்து.
மருந்தே உணவு.

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோகா மற்றும் இயற்கை நல வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும்குறைவற்ற செல்வத்தையும் தரும். 

ஒரு இனிய செய்தி:

கும்பகோணத்தில் வருகிற மே மாதம்  இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம், ஒரு வார காலம் நடைபெற உள்ளது. சிறந்த நல வாழ்வியல் முறைகளை தேர்ந்த நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.

இம்மாதம் 12.5.2018 முதல் 18.5.2018 வரை கும்பகோணம், கீழகொட்டையூரில் உள்ள வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமினை ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சியை கற்றுக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு நலமுடன் நோயின்றி வாழ உங்களை அன்போடு அழைக்கிறோம். 

இயற்கை நலவாழ்வியல் அறிஞரும் மற்றும் யோகா பேராசான், யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன் (நிறுவனர்திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம்சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர்நல்வாழ்வு நிலையம்தண்டரைப்பேட்டைமதுராந்தகம்-603306)  மற்றும் யோகா ஆசிரியர் திரு. அ.மெய்யப்பன், B.E, MBA, PG Diploma in Yoga, சென்னை மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும்இயற்கை உணவுடன் வழங்கப்படும்.

இயற்கை வாழ்வியல் நெறியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.

இடம்: வள்ளலார் தொடக்கப் பள்ளி
கீழகொட்டையூர், கும்பகோணம்
தஞ்சை மாவட்டம்.

பயிற்சிக் கட்டணம்: ஆடவர் ரூ.3300 /- மகளிர்: ரூ.3100
மாணவ மாணவியர் (10லிருந்து 18 வயது வரை): ரூ.2900.

முகாம் ஒருங்கிணைப்பாளர்.
அலைபேசி: 9486768930

முகாமில் பதிவு பெற விண்ணப்பம் தேவை எனில் 
செயலர், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், 
14, அக்ரஹாரம், தியாகராஜபுரம், 
நரசிங்கன்பேட்டை அஞ்சல், பின்: 609802
எனும் முகவரிக்கு எழுதி விவரத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

ஐம்பது பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். எனவே முகாமில் பங்கு பெறுவதற்கான அனுமதியினை முன்னதாக பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் மேற்கண்ட முகவரிக்கு 5.5.2018க்கு முன்பாக விண்ணப்பத்தினை அனுப்பி முன்பதிவு பெற்றுக் கொண்டு முகாமுக்கு வரவேண்டுகிறோம். 

முகவரி தருபவருக்கு முகாம் விவரத் தொகுப்பு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தகவல் தேவைப்பட்டால் காலை 8மணி முதல் 6மணி வரை அலைபேசி எண்: 9486768930  மூலம் முகாம் ஒருங்கிணைப்பாளரைத்  தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

வாழி நலம் சூழ...