சனி, 31 டிசம்பர், 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இனிக்கட்டும் 2012

இனிக்கட்டும் 2012
எண்ணமெல்லாம் சிறக்கட்டும்,
இதயமெல்லாம் இனிக்கட்டும்,
வாழ்வெல்லாம் வளம் பெறட்டும்.
இல்லங்கள் தோறும், 
உள்ளங்கள் தோறும்
மகிழ்ச்சி பொங்கட்டும்;
வளமை பெருகட்டும்.
உடல் நலமும், மன நலமும்,
ஆன்ம வளமும் 
பல்கிப் பெருகி செழிக்கட்டும்..
அன்பர்கள் அனைவருக்கும் 
எனது இதயம் நிறைந்த 
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வாழி நலம் சூழ...


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Happy New Year Greettings.


அஷ்வின்ஜி

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பழனி - கொடைக்கானல் யோகா-உடல் மன நலக்கலை முகாம் அழைப்பிதழ்.


மெய்த்தவம்.

மாநில அளவிலான உடல் நலக் கலை யோகா, தவம், இயற்கையோடு இணைந்த வாழ்வு முகாம் அழைப்பிதழ்.

நாள்: 26-12-2011 to 30-12-2011
(திங்கள் முதல் வெள்ளி வரை)

முகாமின் முக்கிய நிகழ்வுகள்
 • ஆத்ம விசாரத்தின் மூலம் உடல் உபாதைகளில் இருந்தும், மனச் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தெளிவு பெறச் செய்தல்.
 • ஆசனங்கள், பிராணாயாம, தியானம் மற்றும் இயற்கை நலவாழ்வியல் முறைகள் மூலம் நோயற்ற வாழ்வு வாழ பயிற்சிகள்.
 • மருத்துவ விளக்கங்கள் மூலம் உண்மை நிலையை அறிதல்.

விளக்க உரை நிகழ்த்துவோர்.
 • யோக உரையோகி நீ.ராமலிங்கம், செயலர், தமிழ்நாடு யோகாசனச் சங்கம், மதுரை.
 • மெய்த்தவம்:  மெய்த்தவ. திருச்செந்தில் அடிகள், சுவாமி தயானந்த குருகுலம்
 • இயற்கை விஞ்ஞானம்: கோ.சித்தர், இயற்கை விஞ்ஞானி, தஞ்சாவூர்.
 • இயற்கை நல உணவு: இயற்கை பிரியன் Er. இரத்தின சக்திவேல், சென்னை.
 • பிராண தத்துவம்: தவத்திரு நா. சின்னச்சாமி, இயற்கையாளர், தமிழ்நாடு இரும்பு வணிகம், பழனி.
 • மருத்துவ விளக்கம் அளிப்போர்
Dr.N.C.பேச்சிமுத்து, K.G.மருத்துவ மனை, பழனி.Dr.N.மணிமாறன், குழந்தை நல மருத்துவர், பழனி.Dr.B.ராஜேந்திரன், M.Acu, அக்குப்பங்ச்சர், கம்பம்.Dr. M.யோகலட்சுமி, அரசு மருத்துவர், பழனி.
 • நலம் தரும் யோகம்: A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), தணிக்கையாளர், இந்திய ரயில்வே, சென்னை.
 • யோக வாழ்வு: 
யோகாசாரியா R.முருகன், சுவாமி தயானந்தா குருகுலம்
S.முருகேசன், பழனி சேவா சங்கம்.
பயிலரங்கம்: தினமும் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை. நடை பெறும் இடம்: ஐஸ்வர்யா பர்ம், இரும்பு வணிகத் தோட்டம், அண்ணா நகர் பஸ் ஸ்டாப், கொடைக்கானல் சாலை, பழனி.

கருத்தரங்கம்தினமும் காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை. நடைபெறும் இடம்; சாய் சதன், சன்முகபுரம், உழவர் சந்தை அருகில், பழனி.
முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்:
குருகுலம் மாணவர்கள், சுவாமி தயானந்தா குருகுலம்,
7/176, லட்சுமிபுரம், பழனி.

வலைத்தளம்: www.yogapoornavidya.com
தொடர்புக்கு: 9894685500 and 9444171339

முகாமில் தங்கி பயிற்சி பெற வருவோர் கீழ்க்கண்ட பொருட்களை தவறாமல் முகாமுக்கு வரும்போது எடுத்து வரவும்.
 1. உறங்கும் போது கீழே விரித்துக்கொள்ளவும், போர்த்திக் கொள்ளவும் தேவையான பெட்ஷீட் மற்றும் கம்பளி போர்வை.
 2. குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான உல்லன்/கம்பளி குல்லா, சால்வை, மஃப்ளர் மற்றும் ஸ்வெட்டர், காதுகளை குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் கவசம், etc..
 3. யோகா பயிற்சி செய்ய உதவும் வகையிலான உடைகள். (Track suits, Tshirts, bermuda and Sports outfits) 
 4. நோட்டுப் புத்தகம் மற்றும் பேனா (குறிப்பெடுக்க)
 5. டார்ச் லைட் (மின்சாரம் இல்லாத போது உதவும்)
 6. ஸ்பூன், ஒரு சிறிய கத்தி (பழம் நறுக்க உதவும்)
 7. நகைகள் போன்ற ஆடம்பரமான மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் கொண்டு வரவேண்டாம்.
 8. மூன்று நான்கு மெல்லிதான டவல்கள் (towels) கொண்டு வரவும்.
 9. உங்களுடன் கொண்டு வர வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்று: - சூழ் நிலைக்கேற்றமாதிரி அனுசரித்துச் செல்லும் மனப்பாங்கு.
நன்றி. 

நேரில் சந்திப்போம்.

வாழி நலம் சூழ.. 

வெள்ளி, 16 டிசம்பர், 2011

Yoga Camp 2011 at Palani & Kodaikkanal.


Health is wealth; 


Health is happiness.Five Days Yoga Camp Starting on 26th December 2011. This Camp Consist of Yoga training, Medical Health Checkup, Accommodation, one day Visit to Kodaikanal, Healthy natural food and Lectures by eminent scholars on Inner Skill Development, Meditation, Nature Cure.


Venue:

Peaceful and natural environment. Swami Dayananda Gurukulam, Palani.


Benefits:

Body, Mind and Spirit,
Inner Skill Development
Meditation
Natural Foods.


Free health checkup:

Blood sugar, B.P. Weight and Height.


Registration:

on or before 23th December 2011.
Send Rs.1250/- by DD to R. Murugan payable at Palani.
or remit cash in Bank Account Detail :

                                   Deposit to: R.Murugan
                                   A/C No: 11161453897
                                   Bank: STATE BANK OF INDIA
                                  Branch: PALANI
                                   Branch Code: 0894 (SBI TO SBI) | 
                                   
(OTHER BANKs to SBI) SBIN0000894 

Email Us : contact@yogapoornavidya.com

For further details: Contact- A.T.Hariharan, Chennai. Cell: 94441-71339

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

யோக நலமே வாழ்வின் வளம் - சங்கப்ரக்ஷாலன க்ரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாம்..

நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, ஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக  அஜீரணம், வாயு உபத்திரவம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்(அசிடிடி) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன. 

நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோக வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும். 

யோகம் என்ற சொல் பல படிநிலைகளை கொண்டது. அஷ்டாங்க ஆசனம் என்று எட்டு அங்கங்களை கொண்டது. வெறும் ஆசனங்களை செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பிராணாயமம் மட்டுமே செய்வது அல்லது ஒரு தியான வகையை தொடர்ந்து செய்வது போன்றவை சிறப்பான பலன்களைத் தருவதில்லை. 

ஆசனம், பிராணாயாமம், பந்தம், கிரியை, முத்திரை என்று பல முறைகள் உள்ளன. இவற்றில் நல்ல பயிற்சி பெற்ற ஒருவர் செய்யும் தியானம் நல்ல பலன்களைத் தரும்.

முறையாக குருமுகமாக யோகாசனங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள், மேற்கண்ட முறைகளைப் பற்றியும், க்ரியாக்கள் எனப்படும் சுத்தம் செய்யும் வழி வகைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடம்பினுக்குள்ளே அமைந்திருக்கும் கருவிகளை சுத்தம் செய்ய க்ரியாக்கள் பெருமளவில் பயன்படுகின்றன.

கிரியாக்கள் பல உண்டு: ஜல நேத்தி, சூத்திர நேத்தி, சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா (லகு சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா), வாமன தவுத்தி (குஞ்சால் க்ரியா), பஸ்தி கிரியா, கபாலபாதி, த்ராடகா, அக்னிசாரக்ரியா என பலவகையான கிரியாக்கள் உள்ளன.

இவற்றை நன்கு கற்றுத் தேர்ந்த யோகா மாஸ்டர் மூலமாக பயில்வதே நல்லது.

எல்லோரும் எளிமையாக செய்து பயன் பெற ஜலநேத்தி கிரியா உதவுகிறது. ஜலநேத்தி பற்றி அறிய இங்கே சொடுக்கவும். அதைப்போலவே தங்கும் மலத்தால் ஏற்படும் தீமைகளை களைய அஹிம்சா எனிமா பயன்படுகிறது. அதைப்பற்றிய பதிவு இந்த தளத்தில் முன்பு வெளியானது. அஹிம்சா எனிமா பற்றிய விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்.  உடலை சுத்தப் படுத்தி, திரி தோஷங்கள் (வாத, பித்த, கபம்) சரியான விகிதத்தில் உடலில் இயங்கிட சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் பழங்காலத்திய யோகியர் வாழ்க்கை முறை உதவுகிறது.

குடலைக் கழுவி உடலை வளர் என்னும் முதுமொழியின் பயிற்சி வடிவமே சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா எனலாம்.

இரைப்பை, (சிறு-பெருங்) குடல்களை சுத்தப் படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், இரத்த சுத்திகரிப்புக்கும், இந்த கிரியா பயன்படுகிறது.

எளிமையான லகு சங்கப் பிரக்ஷாலனா செய்முறை:

காலையில் உணவு உண்பதற்கு முன்னதாக, தண்ணீர் கூட அருந்தாமல் வெறும் வயிற்றில் இந்த கிரியாவை செய்ய வேண்டும்.

உப்புக் கரைந்த இளம் சூடான தண்ணீரை இரண்டு கப்புக்களை குடித்து விட்டு, கீழ்க்கண்ட ஆசனங்களை செய்ய வேண்டும்:

தாடாசனம், திர்யக தாடாசனம், கடி சக்ராசனம், திர்யக புஜங்காசனம், உதாரகர்ஷானாசனா போன்ற ஆசனகளை செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு இந்த ஆசனங்களை செய்தல். மற்றும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு, இந்த ஆசனங்களை செய்தல். அதாவது மூன்று முறை செய்தல். பின்னர் குடித்த தண்ணீரை வெளியற்ற வேண்டும். இதற்கு சில கிரியாக்கள் உள்ளன.

முன்பே குறிப்பிட்டபடி தேர்ந்த யோகா மாஸ்டரின் உதவியுடன் இந்த கிரியாவை செய்தல் வேண்டும்.


ஒரு இனிய செய்தி:
இம்மாதம் (அதாவது டிசம்பர் இரண்டாயிரத்துப் பதினொன்று) இருபத்தெட்டு, இருபத்தொன்பது, முப்பது, முப்பத்தொன்று ஆகிய  தேதிகளில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ கயிலை மாமுனிவர் கலையரங்கத்தில் நான்கு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 


இந்த முகாமினை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம்,  நரசிங்கன்பேட்டை-609802)  ஏற்பாடு செய்துள்ளது.


நான்கு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.  


தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.


இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். முக்கியமாக பூரண சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் முழு வயிறு மற்றும் குடல் சுத்திகரணப் பயிற்சி இங்கே சொல்லித் தரப்படும். ஆர்வம் உள்ளவர்கள் சங்கப்ரக்ஷாலனக் கிரியாவை செய்யக் கற்றுக் கொள்ளலாம். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள யோகியர்களும், யோகினிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.


முகாம் துவங்கும் நாள் :28-12-2011 (பிற்பகல் இரண்டு மணிக்கு)
முகாம் நிறைவடையும் நாள்: 31-12-2011 (மாலை நான்கு மணிக்கு)


இடம்: ஸ்ரீ கயிலை முனிவர் கலையரங்கம், 
திருப்பனந்தாள் - 612504, 
தஞ்சை மாவட்டம்.


முகாம் கட்டணம்: ரூ.800 (எண்ணூறு) மட்டுமே.


கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்பது, முப்பத்துநான்கு, நாற்பத்துநான்கு, இருபத்தேழு, அறுபத்துநான்கு, இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர்  திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.


முகாம் பற்றிய விவரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.


திரு.இராமலிங்கஅம் அவர்கள்,
தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை 
தியாகராஜபுரம்,  
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம், 
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
கைபேசி: 94867688930
இல்லம்: 0435-2472816


வாழி நலம் சூழ...

செவ்வாய், 6 டிசம்பர், 2011

பழனி-கொடைக்கானலில் யோகா மற்றும் இயற்கை நல வாழ்வு முகாம்

பழனி-கொடைக்கானலில் 
ஐந்து நாள் யோகா-இயற்கை 
நலவாழ்வியல் முகாம்.

அவசரமான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் செயற்கை, வேகம் என்று வாழ்க்கை மின்னல் வேகத்தில் விவேகம் இல்லாமல் ஓடிக கொண்டிருக்கிறது. தவறான வாழ்க்கை முறை, எந்திரத்தனமான இயக்கங்கள், தவறான உணவுப் பழக்கங்கள் என்று எல்லாமே தவறாகிப் போன காலகட்டத்தில் எது சிறந்த வாழ்க்கை முறை? என்பதை ஐந்து நாட்கள் இயற்கை சூழலில் வாழ்ந்து பார்க்க விரும்புகிறீர்களா?


மனசுக்கு அமைதியும், உடலுக்கு புத்துணர்வும் தெம்பும் ஊட்டவல்ல பழனி-கொடைக்கானல் மலைச்சாரலின் எழில் சூழ்ந்த இயற்கை வனப்பகுதியில் இம்மாதம் இருபத்து ஆறாம் தேதி முதல் முப்பது தேதி வரை (From 26-12-2011 to 30-12-2011)யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடை பெற உள்ளது.


சலசலத்து ஓடிவரும் நதிப் பிரவாகம், விண்ணில் இருந்து கீழே வீழும் அருவிகள்,  சிலு சிலுவென வீசும் மாசற்ற காற்று, நகரத்தின் சந்தடி இல்லாத இயற்கை அன்னையின் அமைதியான மடியில் தலை சாய்ந்து நிம்மதி பெற்றிட, விண்ணின் சொர்க்கத்தை மண்ணில் இருந்து கொண்டே நவீனத்தின் கோரப் பிடியில் இருந்து விடுபட்டு இந்த ஐந்து நாட்களில் நீங்கள் பெறும் பயிற்சி, எதிர் வரும் ஆண்டுகளில் நோயற்ற வாழ்வுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். 

இந்தப் பயிற்சியின் போது கீழ்க்கண்ட பலன்களை பெறலாம்.
 • யோக ஆசனம்
 • பிராணாயாமம்
 • தியானம்
 • முத்திரைகள்
 • ஆற்றுக் குளியல்
 • மண் குளியல்
 • வாழை இலைக குளியல்
 • சூரிய ஒளிக் குளியல்
 • கண் பயிற்சி
 • ஷட்கிரியாக்கள்
 • ஆழ்நிலை தளர்வுப் பயிற்சி,
 • நலவாழ்வியல் பயிற்சிகளான ஆளுமை திறன் மேம்பாடு
 • உடல், மனம், ஆன்மா சிறப்பான விதத்தில் இயங்கிடத் தேவையான குறிப்புகள்
 • மருத்துவ பரிசோதனைகள் (இரத்த அழுத்தம், உடல் எடை, ரத்த சர்க்கரை போன்றவை)
 • தலை சிறந்த அறிஞர்களின் உரைகள்
 • மூன்று வேளையும் இயற்கை உணவு
 • ஒரு நாள் கொடைக்கானல் சுற்றுலா
 • கோடை மலைச்சாரலில் உள்ள ஒரு இயற்கையான சூழலில் ஒரு நாள் தங்குதல் 
 • பழனி திருக்கோவிலில் தரிசனம்
என பல வகையான அனுபவங்களைப் பெற்று வரவிருக்கும் புத்தாண்டில் புதுமையான புத்துணர்வு பெற்றிட இந்த முகாமில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  


பழனி கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள சுவாமி தயானந்த குருகுலத்தில் பயிற்சி நடைபெறும். 

கடந்த ஆண்டுகளில் இங்கே நடைபெற்ற முகாம்களின் போது பலர் பங்குபெற்று பயன் பெற்று மகிழ்ந்தார்கள். மிகக் குறைவான எண்ணிக்கையில் அனுமதி நடைபெறுவதினால் பயிற்சியின் போது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். 

பயிற்சிக் கட்டணம்:
மேலே குறிப்பிட்ட அனைத்து பயன்களையும் (தங்கும் வசதி உட்பட) பெற்றிட முகாமுக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1250/- மட்டுமே. உங்கள் வளமான வாழ்வுக்கு நீங்கள் செய்யும் சிறிய முதலீடு இது. (ஒருநாளைக்கு ரூ.250)

பணத்தை வங்கிக கணக்கில் செலுத்தலாம். வங்கிக கணக்கு எண்:
Deposit to: R.Murugan
A/C No: 11161453897
Bank: STATE BANK OF INDIA
Branch: PALANI
Branch Code: 0894 (SBI TO SBI) | 
(OTHER BANKs to SBI) SBIN0000894 

முக்கிய குறிப்பு:
டிசம்பர் 2011, இருபதாம் தேதி வரை முழுக்கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்வோருக்கே முகாமில் அனுமதி உண்டு.

SWAMY DAYANANDHA GURUKULAM
176, Laxmipuram,
Palani - 624601.
Tamilnadu, South India.
Phone: 91-04545-243779
Mobile: -91-9965358991, 98946 85500..
E-mail: contact@yogapoornavidya.com


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள :
திரு.யோகி R.முருகன், பழனி
செல் எண்:98946 85500
வலைத்தளம்:  yogapoornavidya.com
மின்னஞ்சல்: contact@yogapoornavidya.com

A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), சென்னை.
செல் எண்: 9444171339
www.frutarians.blogspot.com
email: ashvinjee@gmail.com

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

சமையல் எரிவாயுவுக்கு (கியாசுக்கு) குட் பை சொல்லுங்க...

கியாசிற்கு குட்பை சொல்லுங்க!
 செயலர் திரு வாசுதேவ், 
விவேகானந்தா கேந்திரா அபிவிருத்தி மையம், கன்னியாகுமரி. 
விலை உயர்வு, தட்டுப்பாடு, என்பதற்காக மட்டுமல்ல... ஒரு காலத்தில், இந்த சமையல் காஸ் இல்லாமல் போகப் போகிறது... ஒரு கட்டத்தில், அனைத்துப் எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு உண்டாகலாம். எதிர்காலத்தில், கியாசை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்று வழிமுறைகளைத் தேடிக் கொள்வதும் கற்றுக் கொள்வதும் காலத்தின் அவசியம். வீட்டில் மிச்சப்படும் காய்கறி மற்றும் உணவுக் கழிவிலிருந்தே, எரிவாயு உற்பத்தி செய்யலாம். அதற்காகவே, "சக்தி சுரபி' எனும், எரிவாயு கலனை எங்கள் மையம் உருவாக்கி உள்ளது. 

இதில், இரண்டு வகைகள் உள்ளன:
ஒன்று இடம் விட்டு இடம் பெயர்ந்து எடுத்துச் செல்லக் கூடிய வகையில், பிளாஸ்டிக் கலனால் ஆனது; 
சக்தி சுரபி (பிளாஸ்டிக் கலன்) நன்றி: vknardep.org
மற்றொன்று, நிலையானது; அது, சிமென்ட் கட்டுமானத்தால் ஆனது. கழிவுகளை உள்ளே செலுத்தும் குழாய், ஜீரணிப்பான், வாயு கொள்கலன், தண்ணீர் வெளியேறும் பாதை, உரம் வெளியே வரும் பாதை, இத்தனையும் சேர்ந்தது தான், சக்தி சுரபி. 

வேண்டாம் என, நாம் வீசி எரியும் சமையலறைக் கழிவுகள் மட்டுமே, இதற்குத் தீனி. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கலன் மூலம், ஒரு நாளைக்கு ஒரு கன மீட்டர் வாயுவை உற்பத்தி செய்யலாம். இது, நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்திற்கு போதுமானது. இந்த கலனை, நகர்ப்புறத்தில் உள்ளவர்களும் தாராளமாக அமைத்துக் கொள்ள முடியும். மாநகரம் அல்லாது, பிற நகரங்கள் மற்றும் கிராமங்களில் கால்நடை வளர்ப்பது சாத்தியமானது தான். அப்படி வளர்ப்பவர்களுக்கு, சாண எரிவாயு கலன் ஒரு வரப்பிரசாதம். 

வீட்டில் இரண்டு மாடு வளர்ப்பவர்கள் கூட, துணிந்து காசிற்கு குட்பை சொல்லி விடலாம் அல்லது அக்கம் பக்கம் யாராவது மாடு வளர்த்தால் கூட, சாணத்தை வாங்கிக் கொள்ளலாம். தினமும், 25 கிலோ சாணத்தை கலனுக்குள் செலுத்தினால், நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்திற்கு, ஒரு நாளுக்குப் போதுமானதாக இருக்கும். இதற்கு, அரசு மானியமும் இருக்கிறது! 
(நன்றி தினமலர் நாளிதழ் - 04-12-2011)

சக்தி சுரபி குறித்த மேலதிக விவரம் பெற இங்கே சொடுக்குக: விவேகானந்த கேந்திரா அபிவிருத்தி மையம் (கன்னியாகுமரி). மையத்தின் இந்த வலைதளம் சக்தி சுரபியை எப்படி உங்கள் இல்லத்தில் நிறுவுவது என்ற முழு விவரங்களையும் உங்களுக்கு அளிக்கிறது. சக்தி சுரபி இயற்கை எரிவாயு கலனை உங்கள் இல்லத்தில் அமைத்து பயன் பெற வேண்டுகிறோம். 


வாழி நலம் சூழ. 

புதன், 30 நவம்பர், 2011

தொடர்ந்து 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்; புதிய ஆய்வில் தகவல்


படம் நன்றி: கூகிள் இமேஜஸ்.

உணவை மாற்றினால் நீரிழிவை விரட்டலாம்.

தற்போது உலகம் முழுவதும் நீரிழிவு நோயினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவைகளை தவிர்த்து இந்த நோய் குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவர்கள் குறைந்த சக்தி (கலோரி) தரும் உணவு வகைகளை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய் குணமாகி விடும்.

இதன்மூலம் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது குறையும். இதன் மூலம் இருதயத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
(நன்றி: மாலை மலர் - 30.11.11)

ஒரு முக்கிய அறிவிப்பு: 
நானும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டவன் தான். உணவு முறைகளிலும், வாழ்வியல் முறைகளிலும் பெரும் மாற்றத்தை அனுசரித்து நீரிழிவு நோயின் கொடுமையான பிடியில் இருந்து விடுபட்டிருக்கிறேன். அதனை பற்றிய பதிவினை கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கிப் படிக்கலாம்.

உணவை மாற்றி, உன்னதமாய் வாழ அழைக்கிறேன்.

வலைப்பூ அன்பர்களுக்காக பதிவிட்டவர்: அஷ்வின்ஜி.

வாழி நலம் சூழ... 

செவ்வாய், 22 நவம்பர், 2011


இயற்கை உணவே
நோய் தீர்க்கும் மருந்து. 


குலசேகரன் பட்டினம் இயற்கை நலவாழ்வு மையத்தால்


இந்திய அரசு நிறுவனமான 
தேசீய இயற்கை மருத்துவக் கழகம்
(National Institute of Naturopathy-Pune)
ஆதரவுடன் நடத்தப்படும்

ஒரு வார இயற்கை நலவாழ்வியல் பயிற்சி 
மற்றும் சிகிச்சை முகாம்

நாள்:- 01-12-2011 to 07-12-2011


நடைபெறும் இடம்:
இயற்கை வாழ்வு நிலையம்
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்)
குலசேகரன் பட்டினம்
(வழி) திருச்செந்தூர், 
தூத்துக்குடி மாவட்டம்.பயிற்சிக் கட்டணம் ரூ.800/- ரூ. எண்ணூறு மட்டும்.
(மூன்று வேளை இயற்கை உணவு, தங்கும் இடம், 
பயிற்சி கட்டணம், நோய்க்கான ஆலோசனை, 
சிகிச்சை உள்பட) 

மேலும் விவரங்களுக்கு 
தொடர்பு கொள்ள:
திரு Dr. மூ.ஆனையப்பன்,
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )

9944042986, 9380873465

இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகிறேன்.
அஷ்வின்ஜி, சென்னை

Email: ashvinjee@gmail.com

வாழி நலம் சூழ.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

15. கனி இருப்ப... இயற்கை நலவாழ்வியல் சிந்தனைகள்.

வணக்கம். 

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் வல்லாரை எப்படி மூளையை போலவே காட்சி அளிக்கிறது. அதன் மருத்துவ குணங்கள் எவ்வாறு மூளையை பலமாக வைத்திருக்க உதவும் என்பதை படித்திருக்கிறோம். தொடர்ந்து சில கனி வகைகளை உண்பவர்களுக்கு ஏற்படும் நலம் குறித்து தொடர்ந்து படிக்கலாம். 

நன்றி.  

மனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.
நாம் எதை சாப்பிடுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்ற சொலவடைக்கு ஏற்றவகையில் நம் உணவு எந்த வடிவில் இருக்கிறதோ அந்த வடிவிலான நம் உடல் உறுப்புக்களுக்கு அவை வலிமை சேர்ப்பவையாக இருக்கின்றன என்பது ஆராய்ச்சி மூலமாக கண்டறிந்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். 


சில கனிவகைகளை கீழே காணலாம்.


1. காரட்டும், கண் விழியும்.
Courtesy: iStockphoto
காரட்டை பச்சையாக மென்று தின்பவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். காரட்டை குறுக்காக நறுக்கி வைத்துப் பார்த்தால் கண்ணின் கருவிழியில் உள்ளது போல தெரியும். காரட்டில் நிறைய விட்டமின்களும், ஆண்டி ஆக்சைடன்ட்களும் உள்ளன. விழித்திரைக் குறைபாடுகளை நீக்கும் தன்மை காரட்டுக்கு உண்டு என்கிறார் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த டாக்டர் சாசன் மௌலாவி.


2. வால்நட்டும், மனித மூளையும்.
Courtesy: iStockphoto
வால்நட்டில் நாம் காணும் மடிப்புக்களும், சுருக்கங்களும், மூளையை ஒத்திருக்கின்றன. இரண்டு பாகங்களை பிரிக்கும் பிரிவுகள் கூட மூளையை போலவே இருப்பதை காணலாம். இவை மூளைக்கான உணவு என்றே அழைக்கப் படுகின்றன. ஒமேகா த்ரீ பாட்டி ஆசிட்களை நிறையக் கொண்ட வால்நாட்களை மூளையின் வாழ்நாட்களை அதிகரிக்கும். ஆரோக்கியமான மூளையை பெற வால்நட்டுகளை விரும்பி உண்ணுங்கள்.


3. செலரியும், எலும்பும்:செலரியின் நீண்ட மெல்லிய தண்டுகள் மனித உடலின் எலும்பைப் போலவே காட்சி அளிக்கின்றன. எலும்புக்கு வலிமை சேர்ப்பவை செலரி என்பதில் ஐயமே வேண்டாம். எலும்பில் இருபத்து மூன்று சதவீதம் சோடியம் சத்து உள்ளது. செலரியிலும் சோடியம் அதே அளவில் இருக்கிறது என்பது வியப்பூட்டும் உண்மை. செலரியில் உள்ள சிலிக்கன் மூலக் கூறு எலும்பின் கட்டுமானத்தின் அடிப்படையாக விளங்கும் ஒன்று. செலரி சாப்பிடுவோருக்கு எலும்பு தொடர்பான தொல்லைகள் நீங்கும்.


4. அவாகேடோவும், கர்ப்பப்பையும்.

முட்டை பல்பை போல காட்சி அளிக்கும் கருப்பையும், அவேகாடோ பழமும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளவை. கருப்பை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட துணை புரிவது அவேகாடோ. ஃ பாலிக் ஆசிட் நிறைய கொண்ட அவேகாடோ உண்பதால் செர்விகள் டிச்பெப்சியா என்னும் குறைபாட்டை நீக்கலாம். இதன் மூலம் கருப்பை கான்சர் வராமல் பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார் எலிசபெத் சொமேர் எனும் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்.


5. சாத்துக்குடி பழமும், மார்பகமும்.


இரண்டும் பார்க்க ஒன்று போல  இருப்பதின் ரகசியம் லிமொனாயிட்கள் எனும் பொருள் சிட்ரஸ் வகை பழங்களில் நிறைந்திருப்பது தான். மார்பக புற்று நோயை வராமல் தடுக்கும் ஆற்றல சிட்ரஸ் வகை பழங்களுக்கு உண்டு.

6. தக்காளியும், இதயமும்.

தக்காளிப் பழத்தை குறுக்காக நறுக்கிப் பாருங்கள். அவற்றில் காணப்படும் அறைகள் இதயத்தின் உள்ளே உள்ள அறைகளைப் போன்றே இருக்கும். தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்னும் என்சைம் தக்காளியை உண்பதன் மூலம் இதய நோய்களை தடுத்துக் கொள்ளலாம் என்கிறார் எலிசபெத் சோமர். தக்காளியுடன் சிறிது தேனை கலந்து சாப்பிட்டால், லைகொபீன் சத்து பத்து மடங்காக உடலில் சேரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.7. இஞ்சியும், இரைப்பையும்.


வயிற்றுப் பொருமல் வந்தால் ஜிஞ்சர் பீர் சாப்பிட்ட அனுபவம் உண்டா? 


ஆம் என்று சொல்பவருக்கு இஞ்சியின் பெருமைகளை விளக்கவே வேண்டாம். குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கும் வல்லமையும், வயிற்றின் ஜீரணக் கோளாறுகளை நீக்கும் வல்லமையும், இஞ்சிக்கு உண்டு. இஞ்சியை உணவில் அளவாய் சேர்த்து வளமாய் வாழ்வோம்.


8. சர்க்கரை வள்ளிக் கிழங்கும், கணையமும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை பலர் மறந்தே போய் விட்டோம். இதனைப் பார்த்தால் கணையத்தை பார்க்க வேண்டாம். இரண்டும் ஒன்று போலவே காட்சி அளிக்கும். சர்க்கரை வெள்ளியில் உள்ள பீடா கராடின் கணையம் வயதாவதாலும், கான்சராலும் பழுது படாமல் காக்கும்.
ஆதாரம்: http://www.womansday.com

சமூக நலம் கருதி வெளியிட்டவர்: 

வாழி நலம் சூழ. 
அஷ்வின்ஜி.

சனி, 29 அக்டோபர், 2011

இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

வணக்கம்.


15000 Hits


கடந்த ஜூன் 2009லிருந்து ''வாழி நலம் சூழ..'' வலைப்பூ துவங்கியதில் இருந்து இன்று வரை 15000 பக்கங்கள் இந்த வலைப்பூவில் நலவாழ்வியல் ஆர்வலர்களால் படிக்கப்பட்டிருக்கின்றன. 

இயற்கை நலவாழ்வியல் பற்றிய செய்திகளை பதிப்பித்து வரும் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வரும் அன்பு உள்ளங்களுக்கு என் இதய நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன்.

தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். 

இயற்கை நலவாழிவியல் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஒரு சிறிய சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதை எண்ண எண்ண மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாழி நலம் சூழ..


அஷ்வின்ஜி.

புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி வாழ்த்துக்கள். அன்பு ஒளி பரவட்டும்.

தொடர்ந்து என்னை ஆதரித்து வரும் வலை உலக அன்பர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.


வாழ்க்கை வண்ண மயமாகட்டும்.
அன்பு ஒளி பரவட்டும்;
இன்ப நிலை நிலவட்டும்.

வாழி நலம் சூழ..

புதன், 19 அக்டோபர், 2011

14. கனி இருப்ப.... இயற்கை நல வாழ்வியல் சிந்தனைத் தொடர்.

அன்பர்களுக்கு என் வணக்கம். மிக நீண்ட நாட்களாக கனி இருப்ப தொடரை வெளியிட இயலாமல் போனது. இடையில் ஏற்பட்ட தொய்வுக்கு மன்னியுங்கள்.  இந்தத் தொடரில் இயற்கை நலவாழ்வியல் தொடர்பான சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். படித்தது, பார்த்தது, கேட்டது என பல செய்திகள்.

இவை என் வாழ்க்கை முறையை மாற்றிய செய்திகள். படிக்கும் உங்களுக்கும் பயன் தரலாம் என்ற நம்பிக்கையில் எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள் ''பாலகுமாரன் பேசுகிறார்" என்ற வலைப் பூவில் இயற்கை உணவினைப் பற்றிய அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இதனைப் படித்த போது அவற்றை உங்களிடையே பகிர ஆசைப்பட்டேன். பகிர்கிறேன்.தொடர்ந்து படியுங்கள். 

வாழி நலம் சூழ,,,

பால குமாரன் பேசுகிறார்.கற்றுக் கொண்டால் குற்றமில்லை; நல்ல உணவுப் பழக்கம்.

சமீபமாய் உணவு என்கிற விஷயத்தில் மிகப்பெரிய மாறுதல் தென்னிந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. எல்லா உணவு வகையிலும் விதவிதமான மசாலாக்கள் கலக்கப்படுகின்றன, ஒருவித வாசனை கலந்த காரம் கோதுமை ரொட்டியோடும், பன்னோடும் வெண்ணெய் வதக்கி புரட்டப்படுகிறது. வாசனை தலைமயிரைப் பிடித்து இழுக்க, ருசி கண் சொருக வைக்கிறது. சாலையோரத்தில் கும்பலாய் ஆண்களும், பெண்களுமாய் நின்று கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிட, என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று புரியாமலேயே சாப்பிட நேரிடுகிறது, மனசு உணவோடு ஒட்டவில்லை.....

உணவும் தவறு, உணவு உண்ணும் முறையும் பிசகு. இது இந்தத் தலைமுறையையே பலவீனமடையச் செய்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். எல்லாம் கிடக்க, இந்தக் கட்டுரை அஜீரணம் பற்றியோ என்று யாரேனும் அலுத்துக் கொள்ளலாம்.

உணவு ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது.
வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. 


நான் இடைவிடாமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அந்தப் பிரபலமான விரைவு உணவு என் யோசிப்பை எரிச்சலடையச் செய்து விட்டது. தொடர்ச்சியின்மை ஏற்பட்டு விட்டது. மிக உற்று கவனித்த போது, எதிர்மறையான யோசிப்பு எனக்கு ஏற்பட்டது. அதாவது, வயிற்றுப் பொருமலில் யோசிப்பு செம்மை திசைமாறி, வக்கிரமாக சிந்திக்க வைத்து விட்டது. 

விதண்டாவாதம் தொடர ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலபேர் கோபமடைவதும், ஆத்திரமடைவதும், அசூயை அடைவதும் உணவினால் தான் என்பது என் எண்ணம்.இந்த இயற்கை உணவு பற்றி ஏற்கனவே சில நண்பர்கள் சொல்லியிருந்தாலும், இதைப் பற்றி திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னவர் நண்பர் திரு சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். 

மூன்று வருடங்கள் முன்பே “ரொம்ப குண்டா இருக்கீங்க பாலகுமாரன். உடம்பு கனம் தாங்காம கால் அகட்டி நடக்கறீங்க, படியேறினா மூச்சு வாங்குது. அநியாயத்துக்கு சிகரெட் பிடிக்கிறீங்க. நீங்க ஒரு நல்ல ரைட்டர், ஆனா, உங்களைப் பத்தி கவலையா இருக்கு” என்று சொன்னார்.

அவர் சொன்ன உணவு அப்போதைக்கு சிரிப்பை தந்தது. கோஸ், முள்ளங்கி, கேரட் எல்லாவற்றையும் வெட்டி சமைக்காமல் உண்பது, பழரசம் அருந்துவது நவதானியம் போட்ட கஞ்சி குடிப்பது என்றெல்லாம் சொன்னார். தொடர்ந்த பழக்கத்தின் காரணமாகவும், பழக்கப்பட்ட உணவின் ருசி காரணமாகவும் எல்லா இடங்களிலும் சமைத்த உணவுதான் கிடைக்கிறது என்ற நிர்ப்பந்தம் காரணமாகவும், நான் சைதை துரைசாமியை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், இன்று அந்த உணவுக்கு மாறினேன். இதற்கு தூண்டுகோலாய் சினிமா டைரக்டர் வேலுபிரபாகரனும் நிறையப் பேசினார். மாதத்தில் பதினைந்து நாட்கள் சமைத்த உணவும், இன்னொரு பதினைந்து நாட்கள் சமைக்காத உணவும் எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். வயிறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கினார். 

விரைவு உணவால் ஏற்பட்ட மோசமான அனுபவத்தாலும் ஆரோக்கியத்தின் மீது ஏற்பட்ட ஆசையாலும், ஒரு நாள் இரவு இயற்கை உணவு என்று ஆரம்பித்தேன்.ஆனால், நான்கு நாட்கள் கடந்ததும் எண்ணெயும், மசாலாவும், வர்ணமும், வாசனையுமாய் இருந்த உணவு சர்வ நிச்சயமாய் விஷமென்று தெரிந்தது. அது படுத்தியபாடு நினைவிற்கு வந்தது. 

வீடு ரொம்ப வினோதமாய் என்னைப் பார்த்தது. 

“ஐயோ பாவம். உருளைக்கிழங்கு பொடிமாஸும், வெங்காய சாம்பாருமாக விரும்பி சாப்பிட்டு வந்தவன், என்ன பாவம் செய்தானோ, இப்படி பச்சைத்தழை தின்கிறான்”. 

“எல்லாவற்றையும் போட்டு ஒருகொதி வேகவைத்து உப்பும் மிளகும் போட்டுத் தரட்டுமா” என் வீட்டில் உன்னை பரிதாபமாய் பார்த்துக் கேட்டார்கள்.

நான் மறுத்துவிட்டு உண்ணத் துவங்கினேன். என் வீட்டை குஷிப்படுத்துவதற்காக ‘ம்மா’ என்று காளை போல் குரல் கொடுத்தேன், தலைகுனிந்து முட்டுவதாய் நடித்தேன். 

“பசுவுக்கு அகத்திக்கீரை, பாலகுமாரனுக்கு கோஸு கீரை” என் பிள்ளை புதுக்கவிதை எழுதினான். 

நொந்து கொள்ளத் துவங்கினால் சிறிய வார்த்தைகூட பெரிதாய் நோகடிக்கும். விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் மிகக்கடினமான விஷயமும் ஜாலியாகப் போகும். “நல்லாயிருக்குப்பா..சாப்பிட முடியாது” நான் சொல்ல, என் வீடும் என் தட்டில் கை வைத்தது. 

இன்னும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கப்பட்டன, பேசிக்கொண்டே சாப்பிட்டதில் உணவு போனவிதம் தெரியவில்லை. வயிறு நிரம்பிவிட்டது.

அன்று சமைத்த உணவை எல்லாரும் புறக்கணித்தோம். மறுநாள் காலை வயிறு துடைத்து விட்டது போல் சுத்தமாயிற்று. நார்ச்சத்து உணவு என்பதால், உடம்பு லேசானது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. 

டைரக்டர் வேலு பிரபாகரன் சொன்னதுபோல், உடைத்த பூண்டு ஐந்து பற்களோடு ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டேன். பொட்டுக் கடலையோடு பூண்டு சாப்பிட பூண்டின் காரம் தெரியவில்லை. மறுநாள் அதற்கு மறுநாள் என்று தினமும் இரவு வேளை மட்டும் நான் இயற்கை உணவை எடுத்துக் கொண்டேன். 

என் வீடும் அவ்வப்போது இதை மேற்கொள்கிறது.

எங்கு பார்த்தாலும் இந்த வழிநடைக் கடைகள். இடைவிடாது, அதில் குழுமும் மக்கள். அநேகமாய் இளைஞர்கள் ஒரு பெரிய கும்பலாய் உடம்பை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்ற பயம் எனக்கு வந்து விட்டது. 

உடம்பைப் பேணுதல் என்பதை இந்தச் சமூகம் சரியாக செய்யவில்லை என்று தோன்றுகிறது. விளையாட்டு சூரர்கள் யாரும் இல்லாது போனாலும் பரவாயில்லை, உற்சாகமான மக்கள் ஒரு தேசத்தின் பொக்கிஷம். 

உற்சாகமான ஜனங்கள் இவ்வளவு மசாலா சாப்பிடக்கூடாது. நாள் தவறாது நடைப்பாதையில் உண்ணக் கூடாது.நாள் முழுவதுமாய் இயற்கை உணவுக்கு மாற நாளாகும். ஆனால் ஒருவேளை நான் சமைக்காத உணவை உண்ணும்போதே உடம்பு வெகு ஆரோக்கியமாய் இருக்கிறது. 

“மனசு பத்திப் பேசற பாலகுமாரன், எதுக்கு உணவு பத்தி பேசறாரு?” உங்களில் சிலருக்கு இந்தக் கேள்வி வரக்கூடும். 

திருமூலர் திருமந்திரம் பாட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

வளர்த்தல் என்பதற்கு கெடுத்துக் கொள்ளாமலிருந்தால் போதும் என்கிற அர்த்தமும் சொல்ல வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே நச்சுப்புகை, காசு கொடுத்து விஷம் சாப்பிடவேண்டுமா? ஒரு வேளையாவது இயற்கை உணவை உண்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை கற்றுக் கொள்வது நல்லது. அது குற்றமில்லை.

நன்றி: கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே சொடுக்கவும். 
பாலகுமாரன் பேசுகிறார் வலைப்பூ

அன்புடன், 
அஷ்வின்ஜி
வாழி நலம் சூழ.