உ
மெய்த்தவம்.
மாநில அளவிலான உடல் நலக் கலை யோகா, தவம், இயற்கையோடு இணைந்த வாழ்வு முகாம் அழைப்பிதழ்.
நாள்: 26-12-2011 to 30-12-2011
(திங்கள் முதல் வெள்ளி வரை)
(திங்கள் முதல் வெள்ளி வரை)
முகாமின் முக்கிய நிகழ்வுகள்
- ஆத்ம விசாரத்தின் மூலம் உடல் உபாதைகளில் இருந்தும், மனச் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தெளிவு பெறச் செய்தல்.
- ஆசனங்கள், பிராணாயாம, தியானம் மற்றும் இயற்கை நலவாழ்வியல் முறைகள் மூலம் நோயற்ற வாழ்வு வாழ பயிற்சிகள்.
- மருத்துவ விளக்கங்கள் மூலம் உண்மை நிலையை அறிதல்.
விளக்க உரை நிகழ்த்துவோர்.
- யோக உரை: யோகி நீ.ராமலிங்கம், செயலர், தமிழ்நாடு யோகாசனச் சங்கம், மதுரை.
- மெய்த்தவம்: மெய்த்தவ. திருச்செந்தில் அடிகள், சுவாமி தயானந்த குருகுலம்
- இயற்கை விஞ்ஞானம்: கோ.சித்தர், இயற்கை விஞ்ஞானி, தஞ்சாவூர்.
- இயற்கை நல உணவு: இயற்கை பிரியன் Er. இரத்தின சக்திவேல், சென்னை.
- பிராண தத்துவம்: தவத்திரு நா. சின்னச்சாமி, இயற்கையாளர், தமிழ்நாடு இரும்பு வணிகம், பழனி.
- மருத்துவ விளக்கம் அளிப்போர்:
Dr.N.C.பேச்சிமுத்து, K.G.மருத்துவ மனை, பழனி.Dr.N.மணிமாறன், குழந்தை நல மருத்துவர், பழனி.Dr.B.ராஜேந்திரன், M.Acu, அக்குப்பங்ச்சர், கம்பம்.Dr. M.யோகலட்சுமி, அரசு மருத்துவர், பழனி.
- நலம் தரும் யோகம்: A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), தணிக்கையாளர், இந்திய ரயில்வே, சென்னை.
- யோக வாழ்வு:
யோகாசாரியா R.முருகன், சுவாமி தயானந்தா குருகுலம்
S.முருகேசன், பழனி சேவா சங்கம்.
பயிலரங்கம்: தினமும் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை. நடை பெறும் இடம்: ஐஸ்வர்யா பர்ம், இரும்பு வணிகத் தோட்டம், அண்ணா நகர் பஸ் ஸ்டாப், கொடைக்கானல் சாலை, பழனி.
கருத்தரங்கம்: தினமும் காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை. நடைபெறும் இடம்; சாய் சதன், சன்முகபுரம், உழவர் சந்தை அருகில், பழனி.
முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்:
குருகுலம் மாணவர்கள், சுவாமி தயானந்தா குருகுலம்,
7/176, லட்சுமிபுரம், பழனி.
வலைத்தளம்: www.yogapoornavidya.com
தொடர்புக்கு: 9894685500 and 9444171339
முகாமில் தங்கி பயிற்சி பெற வருவோர் கீழ்க்கண்ட பொருட்களை தவறாமல் முகாமுக்கு வரும்போது எடுத்து வரவும்.
- உறங்கும் போது கீழே விரித்துக்கொள்ளவும், போர்த்திக் கொள்ளவும் தேவையான பெட்ஷீட் மற்றும் கம்பளி போர்வை.
- குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான உல்லன்/கம்பளி குல்லா, சால்வை, மஃப்ளர் மற்றும் ஸ்வெட்டர், காதுகளை குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் கவசம், etc..
- யோகா பயிற்சி செய்ய உதவும் வகையிலான உடைகள். (Track suits, Tshirts, bermuda and Sports outfits)
- நோட்டுப் புத்தகம் மற்றும் பேனா (குறிப்பெடுக்க)
- டார்ச் லைட் (மின்சாரம் இல்லாத போது உதவும்)
- ஸ்பூன், ஒரு சிறிய கத்தி (பழம் நறுக்க உதவும்)
- நகைகள் போன்ற ஆடம்பரமான மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் கொண்டு வரவேண்டாம்.
- மூன்று நான்கு மெல்லிதான டவல்கள் (towels) கொண்டு வரவும்.
- உங்களுடன் கொண்டு வர வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்று: - சூழ் நிலைக்கேற்றமாதிரி அனுசரித்துச் செல்லும் மனப்பாங்கு.
நன்றி.
நேரில் சந்திப்போம்.
வாழி நலம் சூழ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக