இரத்தம் ஒரே நிறம் ஆனால் அதிலும் கூட குருதி பேதம் ஏன்?
நான்கு வகையான இரத்த வகைகளுக்கும் ஏற்ற சரியான உணவு எது?
நீண்ட நாட்களுக்கு பின்னர் இங்கே எழுதுகிறேன். அமர்நாத்-வைஷ்ணோதேவி புனித யாத்திரையில் இருந்து கடந்த வாரம் தான் இல்லம் திரும்பினேன். பயணம், இறைதரிசனம் அனைத்தும் நலமாய் இருந்தன.
சமீபத்தில் Dr.Peter J.D'Adamo என்பவர் எழுதிய ''4 Blood Types, 4 Diets - Eat Right 4 your Type'' என்கிற தலைப்பிலான புத்தகத்தை படித்தேன். இவர் ஒரு மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர். இவர் கண்டு பிடித்தது ஒரு சுவாரசியமான விஷயம். அதாவது மனித இரத்தம் O, A, B, AB என்று நான்கு வகைப் பட்டவை.
மனிதனின் இரத்தம் ஒரே நிறமாக இருந்தாலும் நான்கு வகையிலான குருதி பேதம் ஏன் வந்தது?
ஆரம்பத்தில் மனிதனுக்கு 'ஓ' வகை இரத்தம் மட்டுமே இருந்ததாம். பின்னர் 'ஏ' வகை இரத்தம் கொண்ட மனிதர்கள் உருவானார்களாம். அதன் பின்னர் மாறுபாடுகள் பல ஏற்பட்டு மனித இனத்தில் 'பி' வகை இரத்தமும் உருவாக ஆரம்பித்ததாம். ''ஏபி'' வகை இரத்தமெல்லாம் சமீப காலத்திய ரத்த வகைகள் என்று கூறுகிறார். அதற்கு மருத்துவரீதியான காரணங்களை தகுந்த மருத்துவ ஆதாரங்களுடன் விளக்குகிறார். அப்படிப்பட்ட ஒவ்வொரு வகை மனிதரும் எந்த வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும், எந்த வகைகளை தவிர்க்க வேண்டும், எந்த வகையான வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை மட்டும் தமிழாக்கம் செய்து வெளியிடலாம் என்று இருக்கிறேன். விரைவில் அந்த செய்திகளை உங்களிடையே பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக