வியாழன், 31 மார்ச், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி மூன்று


அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் பற்றிய செய்திப் பகிர்வுகளின் மூன்றாம் பகுதியாக சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய 'சர்வ ரோக நிவாரணி' எனும் நூலில் இருந்து சில பகுதிகளை இங்கே காணலாம்.

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி மூன்று

சிறுநீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்

(இது நமது வாசகர் முரளிதரன்.கே நமக்கு அனுப்பி வைத்த பதிவு.. வாசகர்கள் பதிவில் கூறப்பட்டுள்ளவையை மருத்துவ ஆலோசனையின்றி நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)
சமீபத்தில் சர்வரோக நிவாரணி என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதை மூன்றாம் கோண வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்புத்தகத்தை தொகுத்தவர் சுவாமி பூமானந்தா அவர்கள்.
காட்டுபூனையின் மலமே வாசனைமிக்க புனுகு ஆவது போல், நம் சிறுநீரே நம் நோய்க்கு அருமருந்தாகிறது என்று தன் புத்தகத்தில் வலியுருத்திருக்கிறார். தினமும் 3 வேளை நாம் வெளியிடும் சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுகிறார்.

ருத்ரயாமளடாமர தந்திரம் என்ற புத்தகத்தில் சிவாம்பு கல்பம்என்ற அத்தியாயத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு சிவாம்பு என்னும் சிறுநீரின் மகிமையை உபதேசித்துள்ளார், ஆரோக்கியமான உடலிலிருந்து வரும் சிறுநீரில் உடலுக்குத் தேவையான போஷாக்குத் தாதுக்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்திருக்கிறது. ஆரோக்கியமானவனுடைய சிறுநீரில் பத்தொன்பது போஷாக்குத் தாதுக்கள் அடங்கிருப்பதாக கண்டுபிடுத்திருக்கிறார்கள். மனித உடலுக்கு மிகவும் போஷாக்குத் தரக்கூடிய, நன்மை தரக்கூடிய யூரியா அதிக அளவில் அதாவது 3400 மில்லி கிராம் சிறுநீரில் 1459 மில்லி கிராம் யூரியா இருப்பதாக கணடுபிடித்திருக்கிறார்கள். சிறுநீரை எதில் வேண்டுமானாலும் பிடித்து அருந்தலாம், மண்பாத்திரம் அல்லது தமிரப் பாத்திரத்தில் அருந்துவது மிகவும் நன்று. முத்ல், கடைசி தாரைகளை விட்டுவிட்டு நடு தாரையைப் பிடித்துப் பருக வேண்டும் என்பது உத்தமமான விதியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜைன மதத்தின் ஆச்சாரியரான பத்ரபாகு தன் மதத்தை ஏற்றுக்கொள்பவருக்கு, சிறுநீரை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்திருக்கிறார். ஜைனர்கள் உபவாச காலங்களில் சிறுநீரை உபயோகிப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சிறுநீரை உபயோகிப்பதால் நல்ல தேகாரோக்கியமுள்ளவராகவும், வியாதி இல்லாதவர்களாகவும் மட்டும் அல்லாமல், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மனதை ஒரு நிலையில் நிறுத்தவும் உதவுகிறது. யோக சாதனையில் எந்தவிதமான தடையும் இருக்காது என்றும் அவர் நூலில் எழுதியுள்ளார்.

உடலில் உள் பாகம், வெளிபாகத்தில் எல்லாவித வியாதிகளுக்கும் காலையில் தொடர்ந்து 9 தினங்களுக்கு சிறுநீர் குடித்தால் குஷ்டரோகங்களையும் போக்கி, உடலை ஆரோக்கியமடையச் செய்கிறது, சிறுநீரை லேசாக சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும் என்றும், கண்களைக் சிறுநீரினால் கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீக்கம் முதலியன அகன்று விடும் என்றும், ஜலதோஷம், பீனிசம் ஆகிய நோய்களும் சிறுநீர் அருந்துவதால் குணமடையும் என்று குறிப்பிட்டுள்ளார். சிறுநீரை உடலில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும் என்றும், சிறுநீர் கொண்டு கழுவுவதால், மூலவியாதி, வலி, எரிச்சல், நமைச்சல் குணமடையும் என்றும், சிறுநீரினால் உடலை மாலீஷ் செய்தால் தோல் சுத்தமாகவும், வழவழப்பாகவும் ஆகிவிடுகிறது.

சிறுநீரின் உபயோகம்:
இங்கிலாந்தில் ரசாயன நிபுணர்கள் சிறுநீரின் உப்பிலிருந்து சிறந்த குளிக்கும் சோப்புகள், விலையுயர்ந்த கிரீம் மற்றும் லோஷன் தயாரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

சிவாம்பு என்ற சிறுநீர் சிகிச்சையின் போது நோயாளி வேறு எந்தவிதமான மருந்தையும் பயன்படுத்தக் கூடாது. பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம், மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். சைவ உணவே சிறந்தது. பழம், பால், கீரை, காய்கறி வகைகள், அரிசி, கோதுமை, ராகி போன்ற சாத்வீக உணவே உட்கொள்ள வேணடும். சிறுநீருடன் சுத்தமான தண்ணீரை மட்டும் குடித்து அன்ன ஆகாரமின்றி அவருடைய உடல் நிலைக்குத் தக்கபடி 3 அல்லது 5 நாட்கள் வரை உபவாசமிருக்கவேண்டும். நோயாளியின் இரத்த ஓட்டத்தில் அழுத்தம் குறைந்திருந்தால் (Low Blood Pressure) இருதயம் பலவீனமாக இருந்தாலும் உபவாசம் இருக்கக் கூடாது என்றும், சிறுநீர் குடித்து, மாலீஷ் செய்து லேசான சைவ உணவை உட்கொள்ள வேண்டும். இருதய நோய் இல்லாதவர்கள், உபவாசத்தின் போது நாள் முழுவதும் எந்த ஆகாரமும் இன்றி, தான் கழிக்கும் சிறுநீரை மட்டும் அருந்த வேண்டும். மிகவும் முக்கியமான மந்திரம் என்னவென்றால், சிறுநீர் சிகிச்சை ஆரம்பிக்கும் முன் மனதைரியத்துடனும், மனத் துய்மையுடனும், பொறுமையுடனும் இந்தப் பிரயோகத்தை ஆரம்பிக்கவேண்டும். என்னுடைய சிறுநீர் என் நோய்களைப் போக்கி என்னை வளர்க்கக் கூடியது என்ற நினைவும், பக்தி சிரத்தையும், நம்பிக்கையும் இதனால் எந்த தீங்கும் இல்லை என்றும், நன்மையே என்ற எண்ணம் உண்டாக வேண்டும்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் சிறுநீர் குடிப்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல, பலயுகங்களாக ஞானிகளாலும், சித்தர்களாலும் கையாளபட்டு வந்திருக்கிறது. சிறுநீர் குடிப்பதால் நோய்களைக் குணப்படுத்தி தேக ஆரோக்கியத்தைப் பெறுவதுடன் அதை நிலையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.


வீடியோ இணைப்புக்கு:


அடுத்த பகுதியில் நிறைவு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக