ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி நான்கு


வாழி நலம் சூழ வலைப் பூவின் வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த மூன்று பகுதிகளில் நாம் முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுத தாரணை என்றெல்லாம் அழைக்கப்படும் சிறுநீர் மருத்துவம் பற்றி பல செய்திகளைப் படித்தோம். உலகளாவிய அளவில் சிறுநீர் மருத்துவம் பற்றிய ஆய்வுகள் நடை பெற்றுக் கொண்டு வருகின்றன. சிறுநீரில் இருக்கும் பொருட்களின் துணை கொண்டு அலோபதி மருந்துகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் Google தேடலில் Auto Urine Therapy (AUT) என தட்டச்சிட்டு தேடினால் சிறுநீரின் பயன்கள் பற்றிய லட்சக்கணக்கான பக்கங்கள் உலகளாவிய அளவில் காணக் கிடைக்கின்றன. அழகுச் சாதனப் பொருட்களில் சிறுநீரின் மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக றிகிறோம்.

தமிழ்நாட்டில் பலர் இந்த காசு செலவில்லாத, எளிய மருத்துவ முறையைப் பயன்படுத்தி சொரியாசிஸ் (Psoriasis), கான்சர் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற அலோபதியினால் நெடுங்காலமாக தீர்க்கமுடியாத நலக்கேடுகளுக்கு ஆரோக்கியத் தீர்வுகளைப் பெற்று வருகிறார்கள்.

இந்த வகையில் சென்னையில் வசிக்கும் ஒரு பெரியவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வதில் வாழி நலம் சூழ வலைப்பூ பெருமிதம் கொள்கிறது.

மின்பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., M.B.A., PGDip(Yoga) அவர்கள் சிறுநீர் சிகிச்சையில் வல்லுநர். யோகா ஆசிரியராகவும், இயற்கை நலவாழ்வியல் அறிஞராகவும் திகழும் அவர் இயற்கை நலவாழ்வியல் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.

திரு அ.மெய்யப்பன் எழுதிய நூல்கள்: 

மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் 

உயிர் காக்கும் உணவு மருத்துவம். 
 

இன்றளவிலும் சேவைகளில் முன்னோடியாகத் திகழும் மதுரை காந்தி சங்கத்தின் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவ அறக்கட்டளை போன்ற தமிழகத்தின் முன்னணி இயற்கை நல இயக்கங்களின் நிறுவன காலத்தில் இருந்தே உறுப்பினராகவும், அந்த அமைப்புக்களின் பலவேறு பதவிகளில் இருந்து கொண்டும் தளராத சேவை செய்து வருபவர். தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் Post Graduate Diploma in Yoga பட்டயம் பெற்றவர். புனேவில் உள்ள இயற்கை மருத்துவக் கழகத்தின் இயற்கை மருத்துவக் கல்வி  பயிற்சி பெற்றவர்,

இயற்கை நலவாழ்வு குறித்த புத்தகங்களை எழுதிய தமிழகத்தின் நலவாழ்வியல் முன்னோடி (சரஸ்வதி சங்கம் நிறுவனர்) தவத்திரு.பிக்ஷு சுவாமிகளின் அடிப்பொடி என தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்பவர். தமிழகத்தின் முன்னோடி இயற்கை நல வாழ்வியல் அறிஞர்களான, திரு.ம.கி.பாண்டுரங்கனார், சிவசைலம் மு.இராமகிருஷ்ணன் போன்றோரின் வழித் தோன்றல்களான

மு.ஆ.அப்பன் (குலசேகரப்பட்டினம்), திரு இர.இராமலிங்கம் (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்), திரு. ஸ்ரீராமுலு (காந்தி இயற்கை மருத்துவமனை, மதுராந்தகம்), யோகாகுரு திரு.தி.ஆ.கிருஷ்ணன் (திருமூலர் இயற்கை மருத்துவ அறக்கட்டளை) போன்றோருடன் இணைந்து செயல்படுபவர். தமிழகமெங்கும் இயற்கை நலவாழ்வியல் முகாம்களை நடத்திக் கொண்டு வருபவர்,

இயற்கை நலவாழ்வியல் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவரும், எழுபதுகளைத் தாண்டி சீரான ஆரோக்கியத்தை கொண்டிருப்பவருமான திரு அ. மெய்யப்பன் சிறுநீர் மருத்துவம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

தமிழ்நாட்டில் உள்ள ராசிபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிவானந்தரின் தெய்வீக வாழ்க்கைச் சங்கம், அமைப்பின் தலைவர் சுவாமி குரு பிரகாசானந்தா அவர்களை சந்தித்து சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய சர்வரோக நிவாரணி நூல் வாங்கச் சென்ற போது ராசிபுரத்தில்  சுவாமி குரு பிரகாசானந்தா அவர்கள் சிவாம்பு சிகிச்சை பற்றி சொன்ன நாளில் இருந்து சிவாம்பு அருந்தத் தொடங்கி விட்டேன். நான் 25 ஆண்டுகளாக தொடர்ந்து சிவாம்பு அருந்தி வருகிறேன். இயற்கை மருத்துவத்தையும் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு பல நூல்களைப் படித்த பிறகு ஓரளவு தெளிவு பெற்றேன். பெங்களூர் புரானி அவர்கள் சிறுநீர் நாற்றமடிக்காமலும் வெளிர் மஞ்சள் நிறமாகவும் இருப்பதற்கு யோசனை சொல்லியுள்ளார். இளநீர், நீர்மோர், தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரிக்காய் பார்லித்தண்ணீர் இவற்றை அருந்த வேண்டும். நாள் முழுவதும்  3லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும்.  தனக்குத் தானே வைத்தியம் செய்வதற்கும் செலவில்லாத  வைத்தியம் செய்வதற்கும் தீராத நோய்களிலிருந்து விடுதலை பெறவும் உதவுவது சிவாம்பு மருத்துவம். எளிய வைத்தியம். விருப்பு வெறுப்பு இல்லாமல் திறந்த மனத்தோடு சிவாம்புச் சிகிச்சையை முதலில் மஜாஜ் செய்வதில் தொடங்கிப் பிறகு அருந்தத் தொடங்கலாம். பலர்  பயனடைந்துள்ள போது அதை நாம் ஏன் செய்து பார்க்கக்கூடாது?  டாக்டருக்கும் பீஸில்லை. மருந்துக்கும் காசில்லை.

என்கிறார் திரு.அ. மெய்யப்பன் அவர்கள்.

சிவாம்புச் சிகிச்சை என்று அழைக்கப்படும் சிறுநீர் மருத்துவம் பற்றிய ஐயங்களுக்கு தீர்வுகளையும், நோய்களுக்கான ஆலோசனைகளையும் நீங்கள் விரும்பினால் இவரிடம் இருந்து பெறலாம் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்.

சென்னையில் வசிக்கும் திரு.அ.மெய்யப்பன் அவர்களது அழைபேசி எண்:9841667695 / 9444323730 

இந்தத் துறையில் பலர் புத்தகங்களை பல மொழிகளில் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவைகளில் சில புத்தகங்கள், குறிப்புக்கள், காணொளிகள், மின்னூல்கள் போன்ற வடிவில் உள்ளவை பற்றி அடுத்து வெளியாக விருக்கும் இத் தொடரின் இறுதிப் பகுதியில் காணவிருக்கிறோம்.

அடுத்த பகுதி. நிறைவுப் பகுதி.

வாழி நலம் சூழ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக