ஞாயிறு, 28 நவம்பர், 2010

12.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.


பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 

பகுதி: 11. ஈரமண்பட்டி, ஈரத்துணிபட்டி, சூரிய ஒளிக் குளியல், எண்ணெய் கொப்பளித்தல் பற்றிய விளக்கங்களும், செய்முறைகளும். 

ஆரோக்கியம் ஆனந்தம் தொடருகிறது....

20. ஸ்பேஸ் லா(வெளி விதி)

வெளி விதி என்ன சொல்கிறதென்றால் மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த இயற்கை உணவு மிகுதியாக கிடைக்கிறதோ அதை  உண்டு வந்தாலே போதும்.  வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை.  வேறு எந்த ஜீவராசிகளும் உணவை  இறக்குமதி செய்து உண்பதில்லை. அவைகள் அவை வசிக்கும் பகுதியில் என்ன உணவு கிடைக்கிறதோ அதையே உண்டு வாழ்கின்றன.  எதில்  புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்பு, விட்டமின்கள், உப்புகள் இருக்கிறது என பார்த்து உண்பதுல்லை.  ஆனால் அவை தங்களின் வாழ்நாளை  ஆரோக்கியமாகவே கழிக்கிறது.  இந்தியாவில் மிகவும் எளிதாக கிடைக்கும் தேங்காய், பேரிச்சை, வாழைப்பழம் இவற்றிலேயே வேண்டிய சத்துக்கள்  அனைத்து உள்ளன.  இவை வருடம் முழுவதும் எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும்.  மேலும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும்  உண்ணலாம்.  (மாம்பழம், சப்போட்டா, தர்பூஸ் போன்றவை). விலை அதிகமான பழங்களை வாங்க இயலாதவர்கள் தேங்காய்ப் பால்,  காய்கறிகளின் ஜுஸ்கள், கீரை(புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, பாலாக்கு) ஜுஸ்கள் பருகலாம்.  டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்,  புரதச்சத்து கொண்ட உணவுகள், ஆரோக்கிய பானங்கள் தேவையில்லை.  இயற்கை உணவு உண்டால் போதிய பலம் கிடைக்குமா என்ற  சந்தேகம் கொண்டவர்கள் வெறும் இலை தழைகளை மட்டுமே உண்டு வாழும் யானையையும் அது கொண்டுள்ள அபார வலிமையையும் நினைத்துப் பார்க்கவேண்டும். யானை வேற்று ஜீவராசிகளின் பாலையும் அருந்துவதில்லை. முட்டையையும் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை.

21. சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு

குறைக்க வேண்டியது - மாற்று உணவு
(1) சர்க்கரை குறைக்கவும். மாற்று:வெல்லம், கரும்பு சர்க்கரை கருப்பட்டி
(2) பொடி உப்பு 
குறைக்கவும். மாற்று:
 கல் உப்பு

(3)கரையாத கொழுப்பு குறைக்கவும். மாற்று: கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய்

(4) மிளகாய் குறைக்கவும். மாற்று: மிளகு
(5) புளி குறைக்கவும். மாற்று:எலுமிச்சை
(6) கடுகு குறைக்கவும். மாற்று:சீரகம்
(7) காபி,டீ   குறைக்கவும். மாற்று: லெமன் டீ, ப்ளாக் டீ, சுக்கு காப்பி, வரக்காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி குறைக்கவும். மாற்று: அவல், சிகப்பரிசி


இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம் தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.  இவை (முற்றிலும்) இயற்கை  உணவு அல்ல.  ஆனால் இவற்றினால் சிறிது தீமை குறைவு.

ஆரோக்கியம் ஆனந்தம் தொடரும்....
நன்றி: கோவை ரதி லோகநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக