செவ்வாய், 7 டிசம்பர், 2010

15.  ஆரோக்கியம் ஆனந்தம்

(இயற்கை நலவாழ்வியல் தொடர்)
தருபவர்: திருமதி இரதி லோகநாதன், கோவை.

முந்தைய பகுதிகளுக்கான இணைப்புக்கள் கீழே.
 
அறிமுகம். 
 
 
பகுதி:1

பகுதி: 2   

பகுதி: 3   

பகுதி: 4    

பகுதி: 5  

பகுதி: 6
 
 
பகுதி 7   வாழை இலைக் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி: 8  மண் குளியல் பற்றிய விளக்கங்கள்.

பகுதி:9  நீராவிக் குளியல், முதுகுத் தண்டுக் குளியல் மற்றும் இடுப்புக் குளியல் சிகிச்சை முறைகள்.

பகுதி 10  கண் குவளை, மூக்குக் குவளை, எனிமா குவளை போன்றவற்றின் பயன்களும், பயன் படுத்தும் செய்முறைகளும். 

பகுதி: 11. ஈரமண்பட்டி, ஈரத்துணிபட்டி, சூரிய ஒளிக் குளியல், எண்ணெய் கொப்பளித்தல் பற்றிய விளக்கங்களும், செய்முறைகளும். 

பகுதி 12 : ஸ்பேஸ் லா (வெளி விதி) மற்றும் தினசரி உணவில் தவிர்க்க/குறைக்க வேண்டிய சங்கதிகள்.


பகுதி 14: அக்கு பிரஷர்(ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?)

ஆரோக்கியம் ஆனந்தம் தொடர்கிறது......

பகுதி 15: 
 
 25.  உண்ணா நோன்பு:

ஸ்பெயின் பொன்மொழி: 100 வைத்தியர்களை அழைப்பதை விட ஒரு வேளை உணவை இழப்பது மேலானது.

ஸ்காட்லாந்து பொன்மொழி:தனக்கு நோய் உண்டாகும் வரை உண்ணும் ஒருவன் நோய் குணமாகும் வரை உண்ணாமலிருக்க வேண்டும்.

 
உண்ணா நோன்பு ஒரு உயரிய மருந்தாகும்.  அது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு தருகிறது.  பஞ்சத்தால் பட்டினியால் மரணம்  அடைபவர்களை விட பெருந்தீனீ உண்டு மரணம் அடைபவர்களே அதிகம்.  விலங்குகள் கூட உடல் நிலை சரியில்லையென்றால் உண்ணாவிரதம்  இருக்கும்.  மனிதன் மட்டுமே உடல் நிலை சரியில்லாத போதும் உண்டு உடலை சீரழிக்கிறான்.

26. உண்ணா விரதம் இருப்பது எப்படி?  
தாகம் எடுக்கும் போது தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.  இயலாதவர்கள் பழரசங்கள் அருந்தலாம்.  சிறிது உடல்நிலை  தேறிய பிறகு சாறுள்ள பழங்கள் (திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி, ஆரஞ்சு) போன்ற பழங்களையும் பிறகு சதையுள்ள (ஆப்பிள்,  பப்பாளி) முதலிய பழங்களையும் உண்ணலாம்.  உடல் நிலை சீரான பிறகு கொட்டை பருப்புகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  உண்ணவிரதம்  இருக்கும் போது ஓய்வெடுப்பது அவசியம்.  காற்றோட்டமுள்ள இடங்களில் ஓய்வெடுப்பது நல்லது.  நம் ஆற்றலை உறிஞ்சும் வேலைகளான டிவி  பார்ப்பது, அதிகம் பேசுவது, இசை கேட்பது, அதிக தொலைவு நடப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.  நம் உடலுக்கு அது தன்னை  தானே சீர்படுத்தி கொள்ள தேவையான ஆற்றலை நாம் ஓய்வெடுத்து அளிக்க வேண்டும்.  
உண்ணாவிரதம் இருப்பதால் நம் உடலின் நச்சுத்தன்மை குறைகிறது. அதனால் நோய்களும் குணமடைகிறது.
ஆரோக்கியம் ஆனந்தம் தொடரும்....
நன்றி: திருமதி இரதி லோகநாதன், கோவை.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அனைத்து தகவல்களும் சிறப்பாக இருக்கிறது.
இணையதளத்தின் Template எல்லா உலாவிகளிலும் சரியாக இல்லை அதை மாற்றினால் நன்றாக இருக்கும்.
நன்றி.
http://Naturalfoodworld.wordpress.com

Ashwin Ji சொன்னது…

அன்பின் ஐயா. பாராட்டுக்கு நன்றி. பிளாக் பற்றிய சரியான தெளிவான அறிவு எனக்கு இல்லாதினால், ஏதோ தெரிந்த வரை செய்து கொண்டிருக்கிறேன். இது பற்றிய தங்கள் வழிகாட்டல்கள் ஏதேனும் இருப்பின் நன்றி உடையவனாய் இருப்பேன். தயை கூர்ந்து என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்று தெரிவியுங்கள்.
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

கருத்துரையிடுக