புதன், 31 மார்ச், 2010

மகரிஷி க. அருணாசலம் - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - பகுதி 3

3

ஆரோக்கிய வாழ்க்கை எது ?

ஒருவர் மற்றொருவரைக் காணும்பொழுது ‘நலமா?’ என்று கேட்கின்றோம். அவரும் நலமே என்று பதில் அளிக்கிறார். அதன் பொருள் என்ன? மனிதனுக்கு பருஉடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்று உடல்கள் இருக்கின்றன. நமது புறக்கண்ணிற்குத் தோன்றுவது பருஉடல் ஒன்றேதான். எனினும் இப்பரு உடலின் உள்ளும் புறமுமாக மற்ற இரு உடல்களும் சுரந்தும் மறைந்தும் இருக்கின்றன என்பது சிந்திப்பவர்களுக்கு இலகுவில் புலப்படும் இந்த மூன்று உடல்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, ஒரேவழி உராய்தலின்றி இயங்குவதிலே நலவாழ்வு அமைந்துள்ளது.

நல்வாழ்வை ஆரோக்கியம் என்றும் சுகம் என்றும் கூறுகின்றோம். ஆரோக்கியம் தான் ஆக்க வாழ்விற்கு அடிப்படையானது. நலமற்ற விவசாயி தன்கு வேறு எத்தனை வசதிகளிருப்பினும் விளைவைப் பெருக்க முடியாது. எத்தனை நவீன இயந்திரங்கள் இருந்தபோதிலும் நலமில்லாத உழைப்பாளியால் தொழில் துறையில் நுகர்வுப் பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியாது. விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் வளர்ச்சி இருந்தபோதிலும் நலம் இல்லையேல் நம்மால் வாழ்க்கை இன்பங்களை அனுபவிப்பது இயலாததாகும். குடும்ப சமூக வாழ்க்கைகளையும் கூட செவ்வனே நடத்த முடியாது.

பொதுவாக, நோயின்மையே ஆரோக்கியம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் ஆரோக்கியத்திற்கு மூன்று பக்கங்கள் இருக்கின்றன. ஒரு பொருளுக்கு அகலம், நீளம், உயரம் என்ற மூன்று பக்கங்கள் இருப்பது போல ஆரோக்கியத்திற்கு உடல், மனம், சமூகம் என்ற மூன்று பக்கங்கள் உண்டு. உடற்குறை மனதைப் பாதிக்கும். மனநிலையும் உடலைப் பாதிக்கவே செய்யும். சமூகச்சூழல் இரண்டையும் பாதிக்கும். இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதுபோலவே ஆன்ம உணர்வும், உடலையும், மனதையும் மாற்றவல்லது.

மனிதர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க எண்ணி அரசுகள் மருந்தகங்களைப் பெரும் செலவில் நடத்துகின்றன. ஆனால் மனக்குறைவின் காரணமாகவும், சமூகச் சூழலின் போக்குகளாலும் மனிதனுக்கு சுகக் குறைவு ஏற்படுகிறது. சுகக்குறைவை நோயென நினைத்து ஒருவன் மருந்தகங்களுக்குச் சென்றால் பல பரிசோதனைகளுக்குப் பின்னால் உடலும், உடலுறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவே டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் பாவம்! அவன் என்ன செய்வான்? சோர்வும், பிணிநிலையும் அவனை வருத்துகின்றன. எல்லாம் சரியாய் இருக்கிறது. ஆனால் உடலால் உழைக்க முடியவில்லையே என்று வருந்துகின்றான். நவீன முறைகளில் இதனை மனநோய் என்று சொல்கின்றனர். சில சமயங்களில் இந்த மனநோய் உடலையும் சமூக வாழ்வையும் கூடப் பாதிக்கும். மனதிலே ஆரம்பித்தது இருதயநோயாக மாறுகிறது. மனநோய் நகர வாழ்வில் நாம் நாள்தோறும் காணும் உண்மை ஏதாவது ஒரு காரணத்தால் கோபம் உண்டாகிறது. இது மனதிலேதான் ஆரம்பிக்கிறது. முகம் சிவப்பதும், நாடி நரம்புகள் துடிதுடிப்பதும், நிலை தடுமாறி தாறுமாறாகப் பேசுவதும் கோபத்தின் விளைவுகளாகும். அது இதற்கு மேலும் சென்று எதிரில் உள்ளவர்களைக் கையிற் கிடைத்ததைக் கொண்டு அடித்து விபரீதமாகக் கொலையில் முடிவதைக்கூட நாம் கேட்டுள்ளோம். கோபத்தில் பித்தநீர் அமிலத்தன்மை அடைந்து உடல் அழற்சியினை ஏற்படுத்துகின்றது. அதனால் ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

திடீரென ஏற்படும் பயம், சிலசமயங்களில் இதயத் துடிப்பை நிறுத்தும் பயத்தால் உடம்பு நடுக்குறும். உணர்ச்சி மிகும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்கள் ஏற்படும். குருதியில் சர்க்கரையின் அளவுமிகுந்து ஏற்கனவே நீரழிவு நோயுள்ளவர்களாயிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். பயத்தால் வயிற்றோட்டம் உண்டாகலாம். சிறுவர்கள் பயமுறுத்தலுக்கு ஆளாகும்போது நடுநடுங்கி, நரம்பு தளர்ந்து சிறுநீர் கழிக்கின்றனர். எதிர்மறையான வெறுப்பு, திகைப்பு, பயம் போன்றவை உடலை உலரச்செய்து, குருதி குன்றி பலத்தை போலவே அன்பு, ஆதரவு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்லுணர்வுகள் உடலை வளர்த்து இன்ப வாழ்வைக் கொடுக்கும்.

சுகம் பிறரால் கொடுபடக்கூடியதல்ல. அதனை நாமேதான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இதற்கு வேண்டியவை எல்லாம் சுயஅறிவும், சரியான வழி நடத்தலுமேயாகும். தன்னுடைய சூழலுடன் இணைந்து வாழும் ஒருவன் எப்பொழுதுமே மகிழ்ச்சியுடனும், நலமுடனும் இருக்க முடியும். மாறிவரும் சமூக வாழ்வு மக்களின் உடல், மனவாழ்வினைப் பாதிப்பதைப் போலவே மக்களின் உடல் மனவாழ்வு சூழலையும் பாதிக்கும் இன்றைய மாறிவரும் தொழில் நுணுக்க வளர்ச்சி தனி வாழ்வையும், இல்வாழ்க்கையையும் பெரிய அளவில் மாற்றி உள்ளது. இயந்திரங்களால் கடின உழைப்பை நீக்கிக்கொள்ள வசதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பலர் பார்த்தையே பார்த்தும், செய்ததையே செய்தும் சலிப்படைந்து போயிருக்கிறார்கள். கூடிவிளையாடும் ஆடல், பாடல்களும், கூத்துகளும், திருவிழாக்களும் சிலரது வாழ்வில் புத்துணர்வு அளித்து மகிழ்ச்சியூட்டு-கின்றனவாயினும், நவீன வாழ்க்கை முறை எதிர்பாராத புத்தம் புதிய நோய்நொடிகளையும் உண்டு பண்ணி மனிதனை வேண்டாத பழக்கவழக்கங்களுக்கு ஆளாக்கியுள்ளன.

(இயற்கை வளரும்..)

திங்கள், 29 மார்ச், 2010

இயற்கை மருத்துவம் - மகரிஷி க.அருணாசலம். 2 அற்புதமான தானியங்கியாகிய இவ்வுடலில் சமநிலை ஏன் தவறுகின்றது?

2
அற்புதமான தானியங்கியாகிய இவ்வுடலில் சமநிலை ஏன் தவறுகின்றது?

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் சமநிலை தவற இடமிருக்காது. ஆனால் பெரும்பாலோர் இயற்கைக்கு முரணாக வாழ்கின்றனர். எனவே நோயின் பெருக்கம். சூரியனுடன் எழுந்து வேலைகளைக் கவனித்துப் பின் சூரியன் மறையும் போது ஓய்வு கொள்வது இயற்கை வாழ்வு. நல்ல காற்றோட்டம் இல்லாததும் இயற்கை ஒளியும் இல்லாததுமான செயற்கைச் சூழலில் நமது வேலைகள் நடக்கின்றன. நமது நடை, உடை, பாவனைகளும் இயற்கை அன்னையிடமிருந்து நம்மைப் பிரித்து வைப்பனவாகவே உள்ளன. எனவே போதுமான ஆகாயக்கூறு நமது உடலில் இல்லாதபோது வலியும், துன்பமும் ஏற்படுவது இயல்பே.

நமது உணவுப் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் செயற்கை மயமாக ஆகியுள்ளது. தேவையைக் கருதியில்லாமல் நாவின் சுவை கருதிச் சாப்பிடுகின்றோம். பசித்துப் புசிப்பதில்லை. காலம் கருதிச் சாப்பிடுகின்றோம். எந்த உணவு எந்தக் குறைவை நிறைவு செய்யும் என்ற அறிவும் நம்மில் மிகப் பெரும்பாலோருக்கு இல்லை. இயற்கை உணவின் இடத்தை செயற்கை உணவு பிடித்துக் கொண்டுள்ளது. பல தடவைகள் உண்கின்றோம். அவசர அவசரமாக உண்கின்றோம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. புதிய செயற்கைப் பானங்கள் பல பழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றால் உடம்புக்கு வேண்டாத அளவு சிலவகை உணவுகள் சேர்ந்து விடுகின்றது. வேறு சிலவகை இல்லாது போகின்றன. பயன் நோய் நிலை. இதனை நீக்க மருத்துவர்களையும் மருந்துகளையும் நாடுகின்றோம்.

நம்மீது உள்ள கருணையால் திருவள்ளுவர் நோயின்றி வாழ நமக்கு ஒரு எளிய வழி காட்டுகின்றார்.

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’.

பசித்துப் புசித்தலும் அற்றதறிந்து அருந்துதலும் இயற்கை வழி இயற்கையுடன் இயைந்து வாழவேண்டும் என்பது மருந்தில்லா மருத்துவமாகிய இயற்கை மருத்துவ தத்துவங்களில் அடிப்படையானது. இதனை அறிந்து கடைப்பிடித்தால் ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

உடலில் பஞ்சபூதங்களின் சேர்க்கை அதனதன் விகிதாச்சாரப்படி சமநிலையில் இருக்கும்போது நமது உடம்பு இருப்பதே நமக்குத் தெரியாது. சமநிலை தவறும் போதுதான் கையோ, காலோ, மூக்கோ, மார்போ இருப்பது நமக்குத் தோன்றுகிறது. இது ஆரோக்கியம் குறைந்த நிலை. ஆரோக்கியமாக இருக்கும் மனிதன் எப்போதும் ஆனந்தமாக இருப்பான். இதைத்தான் அன்றாட வாழ்க்கையில் நாம் இயற்கை விதிகளுக்கு முரணான பழக்கவழக்கங்களிலும், செயல்களிலும், சிந்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதனால் துன்பம் ஏற்படுகின்றது. இக்கோணல் வழியிலிருந்து திரும்பி நேர்மையான இயற்கை வழியில் சிக்கலற்ற எளிமையான பாதையில் செல்லும் இயற்கை வாழ்வின் ரகசியத்தைக் காட்டுவதே இயற்கை மருத்துவத்தின் குறிக்கோளாகும்.

(இன்னும் வரும்..)

வியாழன், 25 மார்ச், 2010

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?

இந்த கட்டுரை துணை எழுத்து என்னும் வலைப்பூவில் வெளியானது. வலைப்பூ உரிமையாளரின் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படுகிறது.

===========================================

ஏன் பிடி கத்தரிக்காய் வேண்டாம் ...?

சில மாதங்களாக இந்திய பத்திரிக்கைகள் விரட்டிக் கொண்டுள்ள பிடி கத்தரிக்காய்க்குப் பின்னால் உள்ள கதை மிக பெரியதும், ஆபத்துமானதும் ஆகும்.பிடி கத்தரிக்காய் என்பது Trans Genetic என்று சொல்லப்படும் மரபணு மாற்றப்பட்ட அல்லது மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் ஆகும்.கத்தரிக்காய் உடன் Cry1Ac என்ற மரபணுவை செலுத்தி இந்த வகை பிடி கத்தரிக்காய் உருவாக்கப்பட்டது.இந்த Cry1Ac என்ற மரபணு Bacillus thuringiensis என்ற, மண்ணில் காணப்படும் பாக்டிரியாவில் இருந்து பெறப்பது ஆகும்.

இந்த மாபெரும் சோதனையை 8 ஆண்டு காலமாக செய்து முடித்த இந்திய நிறுவனம் Maharashtra Hybrid Seeds Company Limited.(Mahyco). ஆனால், இது Monsanto என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து செய்த கண்டுபிடிப்பாகும்.

இந்த கதை தொடங்கியது சென்ற வருடம் அக்டோபரில்.Mayco தனது கண்டுபிடிப்பை Genetic Engineering Approval Committee (GEAC) of India விடம் சமர்பித்து, இந்தியாவில் இந்த பிடி கத்தரிக்காய் விதைகளை விற்பதற்கு அனுமதி வாங்கி விட்டது. எந்த ஒரு செயல் முறை நிரூபணமும் இல்லாத இந்த பிடி கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியது மிகப்பெரிய கொந்தளிப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

பொதுவாக மரபணு மாற்றப்பட்ட விதைகளினால் ஏற்படும் நன்மைகள் என்று சொல்லப்படுவதில், மிக முக்கியமானவைகள் - பயிர்கள், பூச்சிகளுக்கு எதிரான அதிகப்படியான எதிர்ப்பு சக்தியுடன் வளரும் மற்றும் பல மடங்கு அதிக விளைச்சல் தரும் என்பதேயாகும்.இந்தியளவில் ஆண்டு ஒன்றுக்கு 1000 கோடி ருபாய் வரை பூச்சிகளால் கத்தரிக்காய் விளைச்சலுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகிறது.எனவே இந்த பிடி கத்தரிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்ற மாயை அரசால் உருவாக்கப்பட்டது.

விவசாய துறை அமைச்சர் சரத் பவார் GEAC அனுமதி வழங்கிய பிறகு மத்திய அரசால் இதை ஒன்றும் செய்ய முடியாது என்று மிக சீரியஸ் ஆக காமெடி செய்து பின்னர் இது சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கவனிக்க வேண்டியது என்று சொல்லி ஒதுங்கி விட்டார்.

அதன் பின்னர்தான் இதன் கடுமையான விளைவுகளை சுற்று சூழல் ஆதரவாளர்கள் கத்தி கத்தி சொன்ன பிறகு மீடியாக்கள் விழித்து கொண்டு நாடு முழுவதும் இதன் வீரியம் தெரிய தொடங்கியது.

ஏன் இந்த பிடி கத்தரிக்காய்க்கு இவ்வளவு எதிர்ப்புகள்...?மரபணு மாற்றப்பட்ட உயிர்களில் அது கத்திரிக்காயை இருந்தாலும் காயத்திரியாய் இருந்தாலும், பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆவதர்க்கான சாத்திய கூறுகள் மிக அதிகம்.அதுவும் பிடித்தது பிள்ளையாரா இல்லை குரங்கா இன்று கண்டறிவதற்கே 40-50 வருடங்கள் ஆகலாம்.

அதாவது இப்போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பயிர் செய்து, விளைந்த கத்திரிக்காயை நாம் அவியல் வைத்து சாப்பிட்டு, பின் நமக்கு திருமணமாகி, நமக்கு ஒரு குழந்தை பிறந்து அவனுக்கோ அல்லது அவளுக்கோ 20 வயது ஆகும்போது, அவர்களுக்கு தீடீர் என்று வரும் வியாதிக்காக மருத்துவரிடம் செல்லும்போதுதான் அன்று அவியல் சாப்பிட்ட கத்திரிக்காயில் இருந்த பிரச்சனைகள் குறித்து உண்மைகள் வெளிப்படும்.

இந்த பிடி கத்தரிக்காய் மூலம் கிட்னி முதல் நுரையீரல் வரை பாதிக்க வாய்ப்பு உண்டு என்று சர்வதேச நாடுகள் அறிவித்த போதும் இதை GEAC எப்படி அனுமதித்தார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுப்பப்பட்டது.ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இந்த பிடி கத்தரிக்காய்யை தடை செய்து உள்ளது.

இந்த அனுமதிக்குப் பின்னால் GEAC விஞ்ஞானிகளுக்கும், அமெரிக்க நிறுவனமான Monsanto விற்கும் அமெரிக்க அரசின் தூண்டுதலினால் மிக பெரிய லாபி நடந்திருக்கக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டது.

GEAC இதற்கான அனுமதியை, விஞ்ஞானிகளின் வெறும் பேப்பர் நிரூபணங்களை வைத்து கொடுத்ததுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று.

இந்தியாவில் ஜனநாயகம் தோற்றுபோவது, இது போன்ற இடங்களில் தான்.ஒரு வேளை இது பெரிய பிரச்னை ஆக்கப்படாமல், நாடு முழுவதும் இந்த விதைகள் பயிரிடப்பட்டு நாம் அனைவரும் மரபணு மாற்றப்பட்ட அவியல் உண்டிருந்தால், நமக்கு அடுத்த சந்ததி கண்டிப்பாக அதற்கான விலையை கொடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும்.

நம்முடைய சமுதாய பொறுப்பின்மையும், சகிப்புத்தன்மையும் பல இடங்களில் காசாக்கப்படுகின்றன, சில இடங்களில் பல ஆயிரம் உயிர்களை பலி வாங்குகின்றன.

நம்மை சுற்றி நடப்பவற்றை நாம் கேள்வி கேட்காமல் கடந்து போவதால் தான், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நம்மை மிக சுலபமாக ஏமாற்றுகிறார்கள்.

அதிஷ்டவசமாக பிடி கத்தரிக்காய் விசயத்தில் அப்படி எதுவும் நடக்க வில்லை.ஆனால் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எவ்வளவோ முடிவுகள், நாள் தோறும் நம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு தான் வருகின்றன.அதை வெளியே கொண்டு வந்து தடுக்கும் திறமையும் உரிமையும் ஊடகங்களுக்கு மட்டுமே உள்ளன.
நன்றி: http://thunaiezhuthu.blogspot.com/2010/03/blog-post.html

புதன், 24 மார்ச், 2010

இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செய்முறைகளும்) - 1

இயற்கை மருத்துவம்
(தத்துவங்களும் செய்முறைகளும்)
- மகரிஷி க. அருணாசலம்

நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கென அமைந்தது. உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் உடம்பைப் போல மனித உடம்பும் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும் தன்மையது. நிலையற்ற தன் இயல்பைக் கண்ட மெய் ஞானியர் சிலரும், சித்தர்கள் பலரும் இதனை இழிவாகவே கருதியுள்ளனர். சைவ சமயக்குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் இதனை,

''பொத்தை யூன்கவர் புழுப்பொதிந்துளுத்தகம்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதி நின்றிடர் கடற்
கழித்தலைப் படுவேனை.''

என்று பாடுகின்றார். பிறரும் இதனைப் ‘புன்புலால் யாக்கை’ என்றும் காற்றடைத்த பை என்றும் கருதி அலட்சியம் செய்துள்ளனர். திருமூலர் போன்ற யோகியர் கூட ‘உடம்பினை முன்னம் இழுக்கென்றி'ருந்திருக்கின்றனர். அவர்கள் இவ்வுடம்புள்ளே ‘உத்தமன்’ இருப்பதைக் கண்ட பின்னரே 'உடம்பினை ஓம்பும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்து'ள்ளனர். ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பது இவர்கள் கண்ட உண்மை. 'ஊன் உடம்பு ஆலயம்' இதனை உரிய வகையில் போற்றிப் பேண வேண்டுமென்பது இவர்களது உறுதியான முடிவு.

மனித உடல் அற்புதமான இயந்திரம். இது புரதம், மாவுப் பொருள், சர்க்கரை, கொழுப்பு, தாது உப்புக்கள், தண்ணீர் முதலியவைகளாலும் ஓரளவு பலவித வைட்டமின்கள் சேர்க்கையாலும் ஆனது என்று புறக்கருவிகள் கொண்டு ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இந்தப் பொருள்கள் ரசாயன முறையில் கூடுவதாலேயே உயிரும் தோன்றுகிறது. அதற்கு தனியே இருப்புக் கிடையாது என்பது இவர்களது கூற்று. மெய்ஞானியர்களோ இதற்கு மாறாக இப்பொருள்களைக் கூட்டுவதே உயிர்தான் இவ்வுயிரைப் பலரும் பல பெயரிட்டு அழைக்கின்றனர். ஜீவன் என்றும், ஆத்மா என்றும், பிராணசக்தி என்றும் பலர் பலவாறாகக் கூறுகின்றனர். உடல் பஞ்ச பூதங்களாலானது என்பது இவர்கள் கண்டது பஞ்சபூதங்களே புரதம், சர்க்கரைப்பொருள், மாவுப் பொருள், கொழுப்பு, தாதுப்பொருள், வைட்டமின் முதலியவையாக உருவெடுத்துள்ளன. இப்பொருட்கள் எல்லாம் சேர்ந்து 30 சதவிகிதம்தான். உடம்பின் எடையில் எஞ்சிய எழுபது சதவிகிதமும் தண்ணீர் இது மட்டுமல்லாமல் காற்றும் ஆகாயமும் மனித யாக்கையை பிணைத்து வைத்து இயக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

திருவள்ளுவர் போன்றவர்கள் வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள். பஞ்சபூதங்களைத்தான் இவர்கள் முக்கூறிட்டுக் கூறுகின்றனர். ஆகாயமும் காற்றும் சேர்ந்து வாதமாகவும், சூடு, பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும், கபமாகவும் பெயரிடப்படுகின்றன. ஒன்றை ஐந்தாகவும், மூன்றாகவும் பகுத்துப் பேசுவது நமது மரபு. தத்துவங்களை முப்பத்தாறாகவும், தொண்ணூற்றாறாகவும் பேசுவதும் உண்டு. விரிதலும், சுருங்குதலும் வசதி கருதியேயாகும்.

உண்மை என்னவென்றால் நுண்மையிலும் நுண்மையான ஒன்றாகிய இம்முதற்பொருளின் தன்மை அல்லது குணம். அறிவும் ஆனந்தமும் உடையது என்று பருமையிலிருந்து உண்மைக்கு ஆழ்ந்த தியானத்தின் மூலம் சென்ற சித்தர்கள் கண்டு கூறுகின்றனர்.

இந்நுண் பொருளே தனது ஆற்றலினால் அருவப் பொருளாகவும், அருவுருவப் பொருளாகவும், உருவம் தாங்கிய பருப்பொருட்களாகவும் மலர்ந்துள்ளது. இதனைத் திருமூலர் திருமந்திரப் பாடல் ஒன்றில் தெளிவாக விளக்குகின்றார்.

'ஒன்றவன்தானே, இரண்டவன் இன்னருள்
மூன்றுள் நின்றனன், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச்
சென்றனன், தானிருந்தான் உணர்ந்து எட்டேன்’

இவ்வாறு மூலப்பொருளாகிய அவ்வொன்றே பலவாக உருவெடுத்துள்ளது.

இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, ரசம் முதலியவற்றின் கூட்டால் ஆனது இவ்வுடம்பு என்பது சாதாரண மக்களும் பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூடியது. இதனையே துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்ற அறுசுவைகளின் சேர்க்கையாலும் உண்டாவது எனலாம். துவர்ப்பும் புளிப்பும் வாதம்; உப்பும் கசப்பும் பித்தம்; இனிப்பும் காரமும் கபம் என முப்பொருளாகப் பிரிக்கலாம். இப்படி பிரித்தறிதல் உடல் ஓம்பலுக்கு உதவியாக இருக்கும்.

இந்த உடம்பு தன்னிறைவுடையது; தானியங்கி. இதனுள் நாம் உணவுப்பண்டங்களைப் போட்டால், அவற்றை உயிர் பண்டங்களாக்கி, உடல் வளர்ச்சிக்கும் வேலையால் உண்டாகும், குறைவை நிரப்புவதற்கும் உடல் தானே பயன்படுத்திக் கொள்கின்றது.

உடல் ஒரு அற்புத இயந்திரம். இதனைப் பார்த்தே பிற இயந்திரங்களும் ஆக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையாகாது. இது தனக்கு வேண்டிய பொருள்களைத்தானே உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பெரிய பாக்டரி. இதில் எத்தனையோ பிரிவுகள் இயங்குகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றுவதை எண்ணி எண்ணி வியப்பிலாழ்கின்றனர் அறிஞர் அனைவரும்.

பஞ்சபூதங்கள் அல்லது வாத, பித்த, கபம் என்னும் முப்பொருள்களும் சரியான அளவில் இருப்பதே ஆரோக்கியநிலை. இதில் ஏதாவதொன்று மிகுதியாகவோ, குறைவாகவோ இருப்பது நோயின் அறிகுறி. இதனைத்தான் திருவள்ளுவர் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்கின்றனர். இம்மூன்றின் சமநிலை தவறியபோது உடம்புக்குத் துன்பம் உண்டாகும். மிகுதியானதைக் குறைப்பதும் குறைவை நிறைப்பதும் ஆரோக்கியத்திற்கு வழிகோலும்.

(இயற்கை வளரும்...)

ஞாயிறு, 21 மார்ச், 2010

பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க!

அன்பர்களே. அமெரிக்க மோகத்தில் மேல்நாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டு உடல் நலத்தை இந்தியர்களாகிய நாம் கெடுத்துக் கொண்டு வருகிறோம்.
ஆனால் அமெரிக்கர்கள் நமது பாரம்பரிய உணவு வழக்கங்களே சிறந்தவை என்று இந்திய உணவு முறைகளை பின்பற்ற தொடங்கி விட்டார்கள். அவர்களது வியாபாரம் தடை படாமல் இருக்க பெப்சி, கோக், லேய்ஸ், குர்கூரே மற்றும் பர்கர், பீட்சா போன்றவைகளை நம்மிடையே மார்க்கெட் செய்கிறார்கள். கீழே வரும் கட்டுரை உண்மை நிலையை விளக்குகிறது.
====================================================

அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும், 'பர்கர்' வகை தான், 'ஹாட் டாக்ஸ்' என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர் தான் காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்த பின், இப்போது குழந்தைகளை இதன் பிடியில் இருந்து மீட்க பெற்றோர் போராடி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது, மதிய வேளையில் சாப்பிடும் உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால், உறைந்த கொழுப்பு உள்ள உணவு வகைகள் டிபன் பாக்சில் அதிகம் இடம் பிடிக்கின்றன; போதாக் குறைக்கு, 'ஹாட்டாக்ஸ்' பர்கரையும் குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவதால், பள்ளிப் பருவத்திலேயே ஒபிசிட்டிக்கு ஆளாகி விடும் ஆபத்து ஏற்படுகிறது; அதனால், புரோட்டீன், நார்ச்சத்துள்ள உணவுகளுக்கு மாற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதன் விளைவு, இப்போது அமெரிக்கர்கள் பலரும், நம்மைப் போல காய்கறி, பழங்களுக்கு மாறி வருகின்றனர்; கேக், ஐஸ்கிரீம், பர்கர், பிட்சா, கூல் டிரிங்ஸ்களை குறைத்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கான சத்துணவுகளை பட்டியலிட்டுள்ளது அமெரிக்க சுகாதார நலத்துறை. அதில் உள்ளவை—

* அரிசி, கோதுமை உட்பட தானிய வகை உணவு தினமும் முக்கியம்.
* சுகாதாரமான நொறுக்குத்தீனி பாப் கார்ன்.
* கேரட், வெள்ளரி, தக்காளி,வெங்காயம் கொண்டு தயாரிக்கப்பட்ட வெஜ் சாலட்.
* குழந்தைகளாக இருந்தால் பிசைந்த உருளைக்கிழங்கு உணவு.
* திராட்சை, பாதாம் உட்பட உலர்ந்த பழங்கள்.
* பழங்கள் அல்லது பழச்சாறுகள்.
* மீன், முட்டை, பால்.
* புரோட்டீன் தரும் சோயாபீன்ஸ்.
*வேர்க்கடலை போன்ற கடலை வகைகள்.
* பசலைக்கீரை உட்பட கீரை வகைகள்.


அமெரிக்காவில் உள்ள சராசரி மக்கள், தங்கள் வாழ்க்கை முறையை பல வகையில் மாற்றி வருகின்றனர். முந்தைய அதிபர் கிளின்டன், இந்தியா வந்தபோது, நம் திருமண, குடும்ப கலாச்சாரத்தை பார்த்து வியந்தார்.

அதுபோல, 'நான் ஒரு மகளை பெற்ற தந்தையாக கவலைப்படுகிறேன்; அவளை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்' என்று சமீபத்திய மாஜி அதிபர் புஷ் , இந்தியா வந்தபோது கூறினார்.

இப்படி அதிபர்கள் மட்டுமல்ல, சாதாரண அமெரிக்கர்களும், இந்தியாவை பார்த்து தான் தங்களை மாற்றி வருகின்றனர். குறிப்பாக, சத்துணவுகள் என்றால், இந்தியாவின் உணவுப்பழக்கம் தான் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் உணர்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் பல ஆண்டாக கொடிகட்டிப் பறந்த ஹாட் டாக்ஸ் என்ற பர்கர் உணவு வகை, இப்போது குட்டீஸ்களின் லஞ்ச் பாக்சில் இடம் பெறுவதில்லை. அதற்கு பதிலாக, பழங்கள் தான் இடம் பெறுகின்றன.
- எஸ்.ஏ.குருராஜ்
(நன்றி: தினமலர் மார்ச் 20,2010,12:56 IST)
***

புதன், 10 மார்ச், 2010

கூல்டிரிங்ஸ் குடித்தால் உடம்புக்குக் கெடுதி!


”என்ன வெயில்…என்ன வெயில்…அப்பா… வெயில் மண்டையைப் பிளக்குதே” என்றபடி நிழல் தேடி ஒதுங்கி, “அதைக் குடிக்க மாட்டோமா? இதைக் குடிக்க மாட்டோமா?’ என்று பரபரக்கிறவர்கள் அதிகம். கூல்டிரிங்ஸ், இளநீர், மோர், லஸ்ஸி என்று திரவ வடிவில் கிடைப்பதையெல்லாம் குடித்துவிட்டு அதன்பின்னும் தாகம் தணியாமல் தவிப்பவர்கள் பலர். “வெயில் இந்தக் கொளுத்து கொளுத்துதே, ரெண்டு மழை பேஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும்’ என்று கோடைமழைக்காகக் கனவு காண்பவர்கள் ஏராளம்.
கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க என்ன செய்வது? என்று மண்டை காய்ந்து நாம் ஒதுங்கிய இடம் சென்னை செயின்ட் தாமஸ் மருத்துவமனை. அங்கு சிறுநீரகவியல் துறை நிபுணரான டாக்டர் பழனி.ரவிச்சந்திரனைச் சந்தித்து நமது கேள்விகளை அள்ளி வீசினோம். அதற்கு அவர் அளித்த பதிலை இங்கே தருகிறோம்.
டாக்டர் பழனி.ரவிச்சந்திரன் மருத்துவம் எவ்வாறு வணிகமயமாகிவிட்டது என்பதை எளிய முறையில் விளக்கும் “பணநல மருத்துவம்’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“”மனித உடல் அடிப்படையில் காரத்தன்மை உள்ளது. அமிலத் தன்மை என்பது இதற்கு நேர்எதிரானது. நமது ரத்தத்தில் காரத் தன்மை இருக்கும். அதில் அமிலத் தன்மை அதிகரிக்கக் கூடாது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஜீரணம் ஆகும் போது ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இந்த அமிலத் தன்மையைக் குறைக்க நமது உடல் மூன்று விதங்களில் செயல்படுகிறது. மூச்சு விடுதலின் மூலமாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி அமிலத் தன்மையைக் குறைக்கலாம். இதற்கு ஆக்சிஜன் நிறைந்த நல்ல காற்று அவசியம். இரண்டாவதாக சிறுநீரின் மூலம் உடலில் சேர்ந்துள்ள அமிலத்தை வெளியேற்றலாம். மூன்றாவதாக வியர்வை மூலமாக அமிலத் தன்மையைக் குறைக்கலாம்.
நல்ல காற்று இப்போது அரிதான பொருளாகிவிட்டது. வாகனங்கள், தொழிற்சாலை புகைகள், கழிவுகளை எரிப்பது போன்றவற்றால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. நாம் மரங்களை வெட்டிவிட்டு அந்த இடங்களில் வீடுகளைக் கட்டிக்
குடிவந்துவிட்டோம். ஒரு மரம் என்பது ஒரு நுரையீரல் போல. மரங்கள் குறைந்து காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுவதும் குறைந்து விட்டதால் காற்று கெட்டுப் போய் விட்டது.
அடுத்து சிறுநீரிலும், வியர்வையிலும் அமிலம் வெளியாக வேண்டும் என்றால் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். முதலில் எல்லாம் நமது முன்னோர்கள் “சொம்பிலும் லோட்டாவிலும்’ தண்ணீர் குடித்தார்கள். நாம் டம்ளரிலும், அதைவிடச் சிறிய கப்பிலும் தண்ணீர் குடிக்கிறோம்.
வெயில் நேரத்தில் தாகத்தைத் தணித்துக் கொள்ள கூல்டிரிங்ஸ் குடிக்கிறோம். இந்த கூல்டிரிங்ஸில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. உங்கள் பாத்ரூமில் ஒரு பாட்டில் கூல்டிரிங்ûஸக் கொட்டிவிட்டு ஐந்து நிமிடம் கழித்துச் சுத்தம் செய்தால் ஆசிட் ஊற்றிக் கழுவியது போல நன்றாகச் சுத்தமாகிவிடும். இது மிகைப்படுத்திக் கூறப்படுவது அல்ல. எனவே பலரும் குடிப்பதுபோல வெயில் நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் தாகம் தணியாது. மேலும் உடலுக்கும் கெடுதி.
மினரல் வாட்டரிலும் அமிலத்தன்மை இருக்கவே செய்கிறது. எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் நமது முன்னோர் செய்தது போல நன்னாரி வேரைப் போட்டு ஊறவைத்து அருந்தலாம். சீரகத் தண்ணீரை அருந்தலாம். புளிப்பில்லாத மோர், இளநீர், பதநீர் போன்றவை வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றவை.
அடுத்து எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்பார்கள். அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்துக்கு அதிக வேலை தருவதாக ஆகாதா? என்று சந்தேகத்தைக் கிளப்புவார்கள். நமது சிறுநீரகங்கள் நாளொன்றுக்கு 30 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் ப்ராசஸ் பண்ணும் திறன் படைத்தவை. எனவே இதய நோய், சிறுநீரக நோய் போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் இல்லாதவர்கள் அவர்களால் குடிக்க முடிந்தவரை தண்ணீர் குடிக்கலாம். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.
தண்ணீர் குறைவாகக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இது ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்துவிட்டதைக் காட்டுகிறது.
அமிலத்தன்மை அதிகரித்தால் உடலில் கால்சியம் கரைந்து வெளியேறும். இதனால் கைகால் வலி, முதுகுவலி, உடல் வலி ஏற்படும்.
அமிலம் வெளியேறுவதற்கு இன்னொரு வழி, வியர்வை. உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் குறைந்துவிட்ட நாளில் வியர்ப்பது குறைவு. இப்போது பல அலுவலகங்களில், வீடுகளில் ஏஸியைப் பயன்படுத்துகிறார்கள். ஏஸி ரூமில் இருக்கும்போது வியர்க்காது. எனவே உடலிலிருந்து அமிலம் வெளியேறுவது குறையும். போதிய தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு
அதிகரிக்கும். பித்தபையில் கல், சிறுநீரகக் கற்கள், உடம்புவலி, முகத்தில் கறுப்பாக ஆதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
நீர்ச்சத்துள்ள பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல நிறமுள்ள பழங்கள், காய்கறிகள் உடலுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் தாது உப்புகள் அதிகம். மிளகாய் காரத்தன்மை உள்ளதால் உடலுக்கு நல்லது. ஆனால் அதை நேரடியாகச் சாப்பிட முடியாது. மோர் மிளகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் புளிப்பு. அமிலத்தன்மை உள்ளது. எனவே மாங்காயை கோடைக்காலத்தில் சாப்பிடக் கூடாது. மாங்காயை அதிலுள்ள புளிப்புப் போகும்படி பதப்படுத்திச் சாப்பிடலாம். ஆனால் மாம்பழத்தைச் சாப்பிடலாம். அதில் வைட்டமின்கள் அதிகம். ஆரஞ்சு, பப்பாளி போன்றவற்றைச் சாப்பிடலாம்.
உடைகளைப் பொறுத்தவரையில் தொளதொளப்பான பருத்தி ஆடைகள் சிறந்தவை. ஜீன்ஸ் அணிந்தால் வியர்வை அதிகமாகி பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புண்டு.
வெயில் காலத்தில் பூசுவதற்கென்று நிறைய சன்ஸ்கிரீன் லோஷன்கள், கிரீம்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அவற்றில் ஸிங்க் ஆக்ûஸடு, டைட்டானிக் ஆக்ûஸடு போன்றவை உள்ளதா எனப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தினால் கெடுதியில்லை. மெழுகு உள்ள கிரீம்கள்தாம் அதிகம் விற்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் வியர்வை தடைசெய்யப்படும். எனவே மெழுகு உள்ள கிரீம்களைத் தவிர்க்க வேண்டும். சில லோஷன்களில், கிரீம்களில் கற்றாழை சேர்க்கப்படுவதாக விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் கலக்கப்படும் கற்றாழையின் அளவு 1 சதவீதம்தான். எனவே அவற்றால் பெரிய அளவுக்குப் பயன்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம். சந்தனத்தைப் பூசிக் கொண்டு வெளியில் செல்ல முடியாது என்பவர்கள், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிட்டு சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.
மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். எத்தனையோ கோடைக் காலங்களை அவர்கள் பார்த்தவர்கள். ஆனால் அவர்கள் இயற்கையைச் சேதப்படுத்தாமல் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். நாம் பின்பற்றுவது மேற்கத்திய வாழ்க்கைமுறை. எல்லாம் வணிகமயமாகிவிட்டதால் லாபத்திற்காக மக்களுக்குத் தீங்குதரும் பலவற்றைத் தயாரித்து நன்றாக விளம்பரம் செய்து விற்கிறார்கள். அதன் கெடுதிகளை அனுபவிப்பது மக்கள்தான்”

நன்றி: http://bsubra.wordpress.com

செவ்வாய், 9 மார்ச், 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... பகுதி 9

தேவையில்லாத பசி எடுக்கிறதென்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதற்குக் கிடைக்கவில்லை என்று அர்த்தமாகும். உடம்பிற்குத் தேவையானது விட்டமின்களும் தாதுக்களும் என்று புரிந்து கொள்ளாமல் நோயாளி கூடுதலாக மாவுச் சத்து மிகுந்த பண்டங்களைச் சாப்பிட்டால் உடம்பு வழங்கும் சிக்னலை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றாகிறது. அதனால் இந்தப் பசி மீண்டும் மீண்டும் திரும்ப வருகிறது.

இந்தப் பசி இரு வகையானது.

1. உணர்வு மயமான பசி,

2. உடல் ரீதியான பசி.

1. உணர்வுமயமான பசி: நாம் சர்க்கரையும், கொழுப்புச் சத்தும் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பொழுது நம் உடம்பில் செரடோனின் என்ற ஹார்மோன் இருக்கிறது. அது சுரக்கும் பொழுது நமக்கு சந்தோஷம் அதிகரிக்கிறது. இதனால்தான் வருத்தமாக இருப்பவர்கள் அந்த நேரம் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார்கள். இப்படி ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குப் பதிலாக இந்த வருத்தத்திலிருந்து விடுபடுவதற்காக நாம் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது யாரேனும் நண்பரோடு பேசலாம். இப்படி செய்வதாலும் வருத்தம் குறைவதற்கு வாய்ப்புண்டு. பண்டிகை நாட்களிலும், கொண்டாட்டங்கள் நிகழும் நாட்களிலும் மக்கள் அதிகமாகச் சாப்பிடுவதுண்டு. இதற்குப் பரிகாரமாக பண்டிகை நாட்களுக்கு முன்பே 5 நாட்களுக்கு நல்ல சாப்பாட்டை நிறைய சாப்பிட வேண்டும். அப்படி செய்யும் பொழுது பண்டிகை நாளன்று அதிகமாக சாப்பிட முடியாது. மேலும் பண்டிகை நாளுக்கு அடுத்த நாளும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பண்டங்களை அதிகம் சாப்பிட்டு, அதே சமயத்தில் நிறைய தண்ணீரும் குடித்தால், பண்டிகையன்று சாப்பிட்டதெல்லாம் சீக்கிரம் வெளியேறிவிடும்.

2. உடல் ரீதியான பசி: ஒருவருடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது சர்க்கரை மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் வேகமாக ஏறுகிறது. ஆனால் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ அதே வேகத்தில் பின்னர் இறங்கியும் விடுகிறது. அதற்குப் பரிகாரமாக நிறைய நார்ச்சத்தையும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களையும், ப்ராக்கோலி மற்றும் பழவகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகளை குடிப்பதற்குப் பதிலாக காய்கறி சாற்றை சாப்பிடுவது நல்லது.

நன்றி: www.abolishdiabetes.com

ஞாயிறு, 7 மார்ச், 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... பகுதி 8

ஊட்டத்திற்காகச் சாப்பிடும் கூடுதல் பண்டங்கள்

இவற்றை சாப்பிடுகின்றவர்களுடைய அடிப்படை உணவு ஊட்டம் மிக்கதாகவும் அவர் நன்றாக உடற்பயிற்சி செய்பவராகவும், இருந்தால்தான் இந்தக் கூடுதல் தின்பண்டங்கள் உதவியாக இருக்கும். அடிப்படை ஊட்டம் போதுமானதாக இல்லாத பொழுது இந்தக் கூடுதல் தின்பண்டங்களால் பயனில்லை.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தால் அவர் முதலில் அந்த நோயை எதிர்க்கக்கூடிய சக்தியைக் கொடுக்கின்ற உணவை உட்கொள்வது நல்லது. அதற்கும் மேல் கூடுதலாக ஊட்டமயமான தின்பண்டங்களை சாப்பிட்டால் பலனிருக்கும். பொதுவாகவே நம்முடைய பிரதான உணவு ஊட்டமயமானதாக இருந்தால் நமக்கு வேண்டிய விட்டமின்களும், தாதுக்களும் அதிலேயே நிறைய கிடைக்கின்றது. அப்பட்சத்தில் நாம் கூடுதலாக சாப்பிடவும் தேவையில்லாமல் போகிறது.

உணவு விருப்பம்
சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் நிறைய கெமிக்கல்ஸ் நிறைந்த மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதால் நமக்குத் தேவையில்லாமல் பசி எடுக்கிறது. இந்த கூடுதல் பசியை அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தக் கூடுதல் பசி எப்படி உண்டாகிறது என்று பார்ப்போம். ஹார்மோன்களுடைய நார்மல் பேலன்ஸ் கெட்டுப் போவதால் இந்த கூடுதல் பசி வருகிறது. உதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது நோயாளிக்கு பசி எடுக்கிறது. இந்தப் பசியை தவிர்ப்பதற்காக அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிடுகிறார். இதன் காரணமாக தற்காலிகமாக அவருடைய ரத்தத்தில் சக்தி அதிகரிக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது மீண்டும் எனர்ஜி லெவல் குறைகிறது. அவர் மீண்டும் சர்க்கரை சாப்பிட்டால் மீண்டும் இம்மாதிரியேதான் நிகழும். அப்பட்சத்தில் இதற்கு முடிவு இல்லாமல் போகிறது. ஆகவே இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் நோயாளி நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.

(நலம் தொடரும்...)

புதன், 3 மார்ச், 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... பகுதி - 7

பகுதி - 7
உணவின் தரம்:
இயற்கை உணவு மற்றும் செயற்கை உணவு: பூச்சி மருந்து அடிக்காமலும், கெமிக்கல் உரங்களை பயன்படுத்தாமலும் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவு இயற்கை உணவாகக் கருதப்படும். பூச்சி மருந்து மற்றும் கெமிக்கல் உரங்களுடைய உதவியுடன் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவைவிட, இயற்கையாக தயாரிக்கப்படும் உணவில்தான் அதிக விட்டமின்களும், தாதுக்களும் உள்ளன என்று நிரூபணமாகி உள்ளது. இயற்கை உணவை வாங்குவது செலவு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஒத்துவராது என்றால் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழம், காய்கறிகளை வாங்குபவர்கள் அவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவிவிடுவது நல்லதாகும்.

கேன்களில் விற்கப்படும் பழங்கள் அதிக சர்க்கரை கொண்டிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இம்மாதிரி கேன்களில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் சூப் வகைகள் ஆகியவற்றில் சோடியம் அதிகமாக இருக்குமென்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லதாகும்.

உணவுப்பண்டங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள்:

கொழுப்புச் சத்து உடம்பில் அதிகம் சேருவது கெடுதல் என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் அதற்காகக் கொழுப்புச்சத்தை உணவிலிருந்து முற்றிலும் அகற்றுவதும் தவறாகும். தகுந்த அளவில் கொழுப்புச்சத்தை நாம் உட்கொள்வது உடம்பிற்கு நல்லது. நல்ல கொழுப்புச்சத்தை நாம் மீன்வகைகள், தாவர எண்ணெய் கள் மற்றும் தானியங்கள் கொட்டைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

கொலஸ்ட்ரால் அதிகமாக உடம்பில் சேர்ந்தால் நம் உடம்பிற்கு நல்லது இல்லை என்றாலும் சரியான அளவில் சாப்பிடும் பொழுது அது நமக்கு நல்லதுதான் செய்கிறது. கொலஸ்ட்ரால் நம்முடைய ஈரலில் தயாரிக்கப்படுகிறது. நம்முடைய உடம்பில் உள்ள செல்களுக்கு அது ஒரு திண்மை வழங்குகிறது. கொலஸ்ட்ரால் கூடுதலாக இருக்கும் பொழுது நம்முடைய ரத்தக் குழாய்களை அடைக்கிறது என்றாலும் அளவோடு அது இருக்கும் பொழுது இதயத்தை பாதிக்கக்கூடிய தனித்து சுதந்திரமாக இயங்கும் ப்ரீ ராடிகல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆக்ஸிஜன் கூறுகளின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது.

கொழுப்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதைப் பற்றி மக்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்டிருப்பதைப் போல் கார்போஹைட்ரேட் மாவுச் சத்துள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது பற்றியும் அச்சம் எழுந்துள்ளது. மாவுச் சத்தை அறவே தவிர்ப்பது என்பதும் சரியில்லை. தேவையான அளவிற்கு நாம் காய்கறிகள், தானியங்கள், பழவகைகளை சாப்பிடவில்லை என்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை கிடைக்காது போய்விடும். இவை பற்றாக்குறையானால் நாளடைவில் உடம்பில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமானவை என்று வர்ணிக்கப்படும் உணவுகள்:

தற்பொழுது மார்க்கெட்டில் நிறைய உணவுப் பண்டங்கள் ஆரோக்கிய மானவை என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இப்படிச் சொல்லப்படுகின்ற பல உணவு வகைகள் உண்மையில் உடம்பிற்கு நல்லவையில்லை. விளம்பரதாரர்கள் நம்மை அப்படி நம்ப வைக்கிறார்கள். கீழ்கண்ட உணவுப் பண்டங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

1. செயற்கை இனிப்புகள்: இந்த இனிப்புகளுடைய கலோரி மதிப்புகள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை ஆர்வமாக உட்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த இனிப்புகள் நம்முடைய பசியைத் தூண்டிவிடுகின்றன. இந்த வகை இனிப்புகள் பல சாதாரண டேபிள் சர்க்கரையுடன் குளோரினை கலப்பதால் உண்டாக்கப்படுகின்றன. பிர்ச் மரத்தின் பட்டையில் இருந்து எடுக்கப்படும் சைலீட்டால் என்ற இயற்கையான சர்க்கரை இந்த செயற்கை இனிப்புகளைவிட நம் உடம்பிற்கு நல்லது. ஏனென்றால் சைலீட்டால் சாப்பிடும் பொழுது நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு வேகமாக ஏறுவதில்லை.

2. அஸ்பிரின்: டாக்டர்கள் வலியை குறைப்பதற்கும், இதயத்தின் பாதுகாப் பிற்கும் நம்மை அஸ்பிரின் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால் அஸ்பிரின் சாப்பிடுவதால் நம்முடைய வயிறு புண்ணாகி வெந்து போகக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே அஸ்பிரினுக்குப் பதிலாக மீன்எண்ணெய் மற்றும் இஞ்சியைச் சாப்பிட்டால் நாம் விரும்பும் பாதுகாப்பு நம் இதயத்திற்குக் கிடைக்கும்.

3. பாட்டில் ஜுஸ்: இந்தப் பழச்சாறுகளில் சர்க்கரை மிகவும் அதிகமாக இருப்பதால் பழச்சாறை சாப்பிட்டவுடன் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக ஏறுகிறது. கச்ண்ஞுதணூடித்ச்டிணிண முறையில் பதப்படுத்தப்பட்ட பழங்களிலிருந்துதான் இந்த பாட்டில் ஜுஸ் செய்யப்படுகிறது. இப்படி கச்ண்ஞுதணூடித்ச்டிணிண செய்யும் பொழுது இந்தப் பழங்களிலுள்ள விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவையெல்லாம் வீணாகிப் போகின்றன.

4. பாட்டில் குடிநீர்: மினரல் வாட்டர் பாட்டில் என்று விற்கப்படுகின்ற இந்த குடிநீர் பாட்டில்கள் இவைகளை விற்கும் கம்பெனிகள் சொல்வதைப் போல கிருமிகள் இல்லாமல் இருக்கும் என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆகவே அவரவர் வீட்டில் அணுதச்ஞ்தச்ணூஞீ வைத்துக் கொண்டு அதிலிருந்து வடிகட்டி பெறப்படும் குடிநீரை குடிப்பது நல்லது.

5. கால்சீயம் மாத்திரைகள்: கால்சீயம் கார்பனேட் கலந்துள்ள இந்த மாத்திரைகள் ண்ஞுணிணீணூணிணூணிண்டிண் என்ற எலும்பு மெலிவு நோயை தவிர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. ஏனென்றால் இந்த மாத்திரைகளில் காணப்படும் கால்சீயம் நாளைடைவில் நம் உடம்பில் சேர்ந்து சிறுநீரகத்தில் கல்லாக மாற வாய்ப்புள்ளது. நம்முடைய வழக்கமான உணவிலேயே நிறைய கால்சியம் இருப்பதால் நாம் இப்படி செயற்கை கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடத் தேவையில்லை.

6. சீரியல்: கடைகளில் விற்கப்படும் ஓட்ஸ் சீரியல் போன்றவைகளெல்லாம் மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்டவையாகும். அதே சமயத்தில் செயற்கை விட்டமின்களும் அதில் கலந்துள்ளன. மேலும் இப்படிப்பட்ட சீரியல்களில் சர்க்கரை அதிகமாகவும், இயற்கை விட்டமின்களும், நார்ச்சத்துக்களும் குறைவாகவும் இருக்கும். ஆகவே உண்மையிலேயே ஊட்டம் மிக்க காலை உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் இந்த சீரியல்களுக்குப் பதிலாக முழுமையான தானியங்களால் செய்யப்பட்ட சீரியல்களை உணவாக உட்கொள்ள வேண்டும்.

7. பால்: பால் மூலம் நமக்கு நிறைய கால்ஷியம் கிடைக்கிறது என்றாலும் நாம் பாலை அதிகமாக உட்கொண்டால் நம் உடம்பில் மக்னீஷியம் சேருவது தடைப்படும். அது நமக்கு நல்லதில்லை. ஏனெனில் மக்னீஷியம் நம் உடம்பிற்குத் தேவையான ஒரு ஊட்டமாகும். கச்ண்ஞுதணூடித்ச்டிணிண செய்யும் பொழுது பாலில் உள்ள கேசின் என்ற பால் புரோட்டீன் கெட்டுவிடுகிறது. அது கெடுவதால் உடம்பிற்குத் தேவையான என்ஸைம்கள் மற்றும் விட்டமின்கள் ஆ-6 மற்றும் ஆ-12 ஆகியவற்றையும் சேர்த்துக் கெடுக்கிறது. மேலும் கச்ண்ஞுதணூடித்ச்டிணிண செய்யும் பொழுது பாலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து போகின்றன. ஆகையால் நமக்கு கால்ஷியம் வேண்டுமென்றால் பாலுக்குப் பதிலாக சார்டின் மீன்களிலிருந்தும், கொட்டைகளிலிருந்தும் பெற்றுக் கொள்வது நல்லது.

8. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு: இந்த உணவுப் பண்டங்களில் சர்க்கரை குறைவாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் உடம்பைப் பாதிக்கக்கூடிய கார்ன்ஸிரப், ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் சோடியம் ஆகியவை கலந்திருக்கும். உண்மையில் சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனிப்பட்ட உணவுப் பண்டங்கள் கிடையாது. உணவுப்பண்டங்களை விற்கின்ற கம்பெனிகள் மக்களை கவருவதற்காக இப்படி போலியான விளம்பரங்களை செய்கின்றன.

9. அடைக்கப்பட்ட உணவுகள்: இவைகளும் அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளாகும், இவற்றிலெல்லாம் கார்ன்ஸிரப்பும், ஹைட்ரஜன் கலந்த எண்ணெயும் சேர்ந்திருக்கும். இவைகளை சாப்பிடுவதால் நமக்கு பசி அதிகம் உண்டாகி இதன் காரணமாக மேலும் அதிகமாக சாப்பிடுவோமே யொழிய உண்மையில் இவைகளால் நமக்கு நல்லது நிகழ்வதில்லை. இவைகளையும் உணவுக் கம்பெனிகளின் ஏமாற்று வேலையாகக் கருத வேண்டும்.

10. குறைந்த மாவுச்சத்து ஈடிஞு: இவைகளும் நம் உடம்பிற்கு நல்லதில்லை. ஏனென்றால் நல்ல கார்போஹைட்ரேட் மற்றும் கெட்ட கார்போஹைட்ரேட் என்று தரம்பிரித்து இந்த உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படுவதில்லை.

11. டையட் சோடா : இந்த சோடாவில் உள்ள பாஸ்பரஸ் என்ற கெமிக்கல் நம் உடம்பிற்கு கெடுதல் என்பதால் சாதா சோடாவைவிட எந்த வகையிலும் நல்லதில்லை என்றாகிறது. மேலும் உள்ள கெமிக்கல்கள் நம்முடைய பசி உணர்வை மிகவும் தூண்டிவிடும். இதன் காரணமாக நாம் முன்பைவிட அதிகமாகச் சாப்பிட நேரிடும்.

12. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால் குறைந்த பண்டங்கள்: இவை எல்லாமே மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைவாகவும், நம் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய கெமிக்கல் அதிகம் கொண்டதாகவும் இருக்கும். குறைந்த மாவுச்சத்து என்றால் கலோரியும் குறைந்து விட்டதாக அர்த்தமில்லை. கொழுப்புச்சத்து குறைந்த பண்டங்கள் அதே சமயத்தில் சர்க்கரை அதிகமாகக் கொண்டிருப்பதால் இந்த சர்க்கரை நம்முடைய உடம்பில் கொழுப்பாக மாற்றப்படுவதால் இதுவும் நல்லதில்லை என்றாகிறது. இவற்றை உட்கொள்ளும் பொழுது இவை கூடுதலாக இன்சுலின் சுரப்பதற்குக் காரணமாகின்றன.

13. மாற்று கொழுப்புச்சத்து இல்லாத உணவுப் பண்டங்கள்: சில உணவுப் பண்டங்களில் இப்படியொரு முத்திரை குத்தி இருந்தாலும் அதனால் மாற்று கொழுப்புச் சத்து இல்லையென்றோ, ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இல்லை என்றோ அர்த்தமில்லை. ஒரு கரண்டி அளவிற்கு எடுத்துக் கொண்டால் அதில் 0.4 அளவிற்கு மாற்று கொழுப்புச் சத்து இருந்தால்தான் நாம் உண்மையில் மாற்று கொழுப்புச் சத்து இல்லை என்று சொல்லலாம். கச்ஞிடுடிணஞ் உள்ளிருக்கும் உணவுப் பண்டங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் தான் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இருக்கின்றதா இல்லையா என்று தெரியும்.

14. பீட்ஸா: பீட்ஸா உலகம் முழுவதும் பாப்புலராகி விட்டது. ஆனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது. ஏனென்றால் பீட்ஸாவிலுள்ள இடஞுஞுண்ஞுஇல் ஹைட்ரஜன் கலந்து கொழுப்புச் சத்து இருக்கிறது. அதிலுள்ள கறியிலுமிருக்கிறது. அதிலுள்ள கோதுமையில் மாவுச்சத்தும் அதிகமாக உள்ளது. ஆகவே, அசைவ பீட்ஸாவைவிட சைவ பீட்ஸாவை சாப்பிடுவதே நல்லது.

15. சோடா: சோடா பாப்புலரான பானமாக இருந்தாலும் அதில் நிறைய சர்க்கரை இருக்கிறது. மேலும் அதில் பாஸ்பரஸ் உள்ளது. இந்த பாஸ்பரஸ் கால்சியம் உடம்பில் சேர்வதைத் தடுக்கிறது. இதன் காரணமாக உடம்பில் அமிலத் தன்மை அதிகமாகிறது. 12 அவுன்ஸ் சோடா பாட்டிலில் 10 டீஸ்பூன் அளவிற்காவது சர்க்கரையிருக்கும். அது 120 கலோரிக்குச் சமமாகும்.

16. சர்க்கரையில்லாத தின்பண்டங்கள்: சர்க்கரையில்லாத திண்பண்டங்களில் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் பசியைத் தூண்டும் மறைமுகமான சர்க்கரை பொருட்கள் உள்ளன. இவற்றின் காரணமாக நம் உடலில் கூடுதல் கொழுப்புச் சத்து சேருகிறது.

17. விட்டமின் மாத்திரைகள்: இந்த மாத்திரைகளில் விட்டமின் அளவு குறைவாகவுமிருக்கும். ஆகவே, இவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் விட்டமின் ஊட்டச்சத்து குறைவாகத்தானிருக்கும். ஆகவே இவற்றிற்குப் பதிலாக இயற்கையாக நமக்கு விட்டமின் தரக்கூடிய உணவு பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.

18. தயிர்: மோர்க்குழம்பு செய்யும் பொழுது தயிரிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் எல்லாம் அழிந்துவிடுகின்றன. ஆகவே இப்படிச் செய்யாமல் இயற்கையான தயிரை சாப்பிடுவது நல்லது.
(நலம் தொடரும்...)

செவ்வாய், 2 மார்ச், 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... பகுதி 6

பகுதி 6
சாக்லேட்:
சாக்லேட்டில் கஃபின் என்ற கெமிக்கல் இருக்கின்றது. அதன் காரணமாக சாக்லேட் சாப்பிடும் பொழுது நமக்கு ஓர் உற்சாகம் கிடைக்கின்றது. இது நாளடைவில் நமக்கு ஒரு விடமுடியாத பழக்கமாக மாறலாம். வெள்ளை சாக்லேட் மற்றும் பால் சாக்லேட்டுகள் சுகர் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை. ஆனால் கறுப்பு நிறச் சாக்லேட் ஆன்டி-ஆக்ஸைடண்ட் திறன் கொண்டது. ஆகவே நாம் பால் சாப்பிடுவதற்குப் பதிலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடுவது நல்லது.

காபி:
காபி தற்போது மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது. இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கப்பிற்கு மேல் நாம் காபி குடிக்கும் பொழுது நம்முடைய இன்சுலின் அளவு அதிகமாகி அதன்மூலம் நம் உடம்பில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரெகுலராக நாம் குடிக்கின்ற காபியைவிட சிக்கோரி, வேர்கனன், பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கோரி காபி மிகவும் நல்லது. சிக்கோரி காபியில் கஃபின் குறைவாக உள்ளது. அதே சமயத்தில் நம் ஈரலையும் பலப்படுத்தக் கூடியது. சோயா பீனிலிருந்து தயாரிக்கப்படும் சோயா காபியும் கஃபின் இல்லாமல் இருக்கின்றது. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் காபிச் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் காபியை நாம் ரேஷி என்றழைக்கப்படும் காளானுடன் சாக்லேட் கலந்து சாப்பிட்டால் அது நம்முடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் பச்சை நிற டீயில் கஃபின் குறைவாக உள்ளது என்பதால் ரெகுலர் காபியைவிட பச்சை நிற டீ நல்லது.

உணவு தயாரிப்பு:
நம் உடம்பிற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுதும் நாம் சரியான முறையில் அதை சமைக்காவிட்டால் அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் எல்லாம் வீணாகிப் போகின்றன. உதாரணமாக ஆப்பிளை நாம் பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தெல்லாம் நமக்கு வீணாகாமல் அப்படியே கிடைக்கின்றன. ஆனால் அதை நம் பழச்சாறாக மாற்றும் பொழுது, அதிலுள்ள நார்ச்சத்தையெல்லாம் நாம் இழக்க நேரிடுகின்றது. தவறான சமையலின் காரணமாக மற்ற உணவு வகைகளும் இம்மாதிரியே விட்டமின்களையும், என்சைம்களையும், தாதுப் பொருட்களையும் இழக்க நேரிடலாம். ஆகவே இம்மாதிரி இழப்புகள் நேராமல் இருக்கும் பொருட்டு நம் சமையல் சம்மந்தமான சில முக்கிய விதிமுறைகளை பார்ப்பது நல்லது.

காய்கறிகளை அதிக வெப்பத்தில் வேக வைக்கும் பொழுது அவற்றில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பிகாம்ளக்ஸ் விட்டமின்கள் 30 % அளவிற்கு வீணாகின்றன. கொதிக்க வைத்தால் 75 % அளவிற்கு விட்டமின்கள் பறிபோகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கிவிடாத அளவிற்கு மட்டத்தைக் குறைத்துக் கொண்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நிறம் மாறி வலுவிழந்து குழம்புபோல் மாறியிருந்தால் அவை வீணாகிவிட்டன என்று அர்த்தம். பாத்திரத்திலிருந்து எடுக்கும் பொழுது அவற்றின் இயற்கையான நிறத்துடன் நொறுங்காமல் இருந்தால்தான் அவை முறையாக சமைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம்.

எண்ணெயை போட்டு சமைக்கும் பொழுது, எண்ணை மிகவும் சூடு ஏறினாலும் சமையலை அது பாதிக்கும். வேகவைத்த காய்கறிகளின் மேல் பச்சை எண்ணெயை விட்டுக் கொள்வது நல்லது. சமையலுக்கு ஆலிவ் ஆயிலை பயன் படுத்துவது எப்பொழுதும் நல்லது. அதே எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தி சூடு ஏற்றிக் கொண்டு இருந்தால், அந்த எண்ணெயின் தன்மையே மாறி புற்று நோயை உண்டாக்கக்கூடிய வேண்டாத எண்ணெயாக மாறிவிடுகின்றது. ஆகவே எண்ணெயில் சமைக்கும் பொழுது சூட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. சோயாபீன் எண்ணெய் சூடேறினால் கெட்டுப் போகும் தன்மைக் கொண்டது. ஆகவே அதற்குப் பதிலாக சூட்டைத் தாங்கக் கூடிய தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.

மைக்ரோவேவ்: குளிர்ந்து போன பண்டங்களை சூடேற்றுவதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமையலுக்கு அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அந்த மைக்ரோவேவ் கதிர்கள் முக்கியமான என்சைம்களை அழித்துவிடக் கூடியவை.

பழச்சாறு: தினமும் 6 முதல் 9 கப் காய்கறிகளையும் பழங்களையும் பச்சையாக சாப்பிடுவது பிடிக்கவில்லை என்றால் பழச்சாறாக மாற்றி சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழச்சாற்றைவிட காய்கறிகள் சாற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. பழச்சாறுகள் நம் உடம்பில் காரத்தன்மையை சேர்க்கக் கூடியவை. இப்படி உடம்பில் காரத்தன்மை சேரும் பொழுது அமிலத்தன்மை சேருவது குறைக்கப்படுகின்றது. பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோபில் நம்முடைய சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றது. ஊட்டச்சத்து பொடிகளை மாத்திரைகளாக உட்கொள்ளாமல் நாம் காய்கறிச் சாற்றோடு கலந்து உட்கொள்ளும் பொழுது அவை வேகமாக ஜீரணிக்கப்படுகின்றன.

பழச்சாறுகளில் ஜீரணத்திற்கு உதவக்கூடிய என்சைம்கள் நிறைய உள்ளன. இதன் பலனாக, பழச்சாறுகளை நம் உடம்பு சிரமமில்லாமல் ஜீரணித்துக் கொள்கின்றது. மேலும் பழச்சாற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். உதாரணமாக நாம் இரண்டு கப் கேரட் ஜீஸ் சாப்பிடும் பொழுது அது ஒரு பவுண்ட் பச்சை கேரட் சாப்பிடுவதற்குச் சமமாகின்றது.

பச்சைக் காய்கறிச் சாறுகள் ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் ஆன்டிபயோடிக் போன்ற மருத்துவச் சக்தி வாய்ந்த ஊட்டச் சத்துக்கள் கொண்டுள்ளன. கேரட், செலரி, லெட்டூஸ் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடியவை. ப்ராக்கோலியில் உள்ள குரோமியம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியிலிருந்து பெறப்படும் பழச்சாறுகள் ஆன்டிபயோடிக் தன்மைக் கொண்டவை. வெள்ளரிக்காய் மற்றும் முட்டைக் கோஸிலிருந்து எடுக்கப்படும் சாறு ரத்த அழுத்தம் மற்றும் அசிடிடி(Acidity)யை குறைக்கும் தன்மை கொண்டவை.

(நலம் தொடரும்..)

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு... பகுதி 5

பகுதி 5

பயனுள்ளவைகளாகக் கருதப்படும் உணவு வகைகள் எல்லாம் ஆல்காலிக் எனப்படும் காரத்தன்மை கொண்டவை. அதே சமயத்தில் நம் உடம்பை சுத்தப்படுத்தி நம்முடைய எடையை குறைக்கும் தன்மை கொண்டவை. பயனற்ற உணவுகளாக கருதப்படுபவை எல்லாம் அமிலத்தன்மை கொண்டிருப்பவை. அதே சமயத்தில் நம்முடம்பில் வேண்டாத கழிவுகள் சேகரமாவதற்கும் எடை கூடுவதற்கும் காரணமாக இருப்பவை. நம்முடைய உடம்பின் செல்களுக்குள் சேகரமாகும் அமிலக் கழிவுகள் நம்முடைய செல்களின் சுவர்களை இறுக வைக்கின்றது. இப்படி இறுகிப் போவதால் செல்களால் ஊட்டச் சத்துக்களை ரத்த ஓட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாமல் போகின்றது. இதனால் நம் உடம்பின் செல்கள் ஊட்டமின்றி பட்டினி கிடக்க நேரிடுகின்றது. இப்படி அமிலக் கழிவுகள் செல்களுக்குள் அதிகமாகச் சேர்வதால் நம்முடைய ஈரல், சிறுநீரகம் போன்றவைகள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கின்றது.

பெரும்பாலானவர்கள் 80% அமிலத்தன்மை கொண்ட உணவுகளையும், 20% தான் காரத்தன்மைக் கொண்ட உணவுகளையும் சாப்பிடுகின்றார்கள். இதன் விளைவாக நம் உடம்பின் செயல்படும் திறன் நாளடைவில் குறைந்து கொண்டே போகின்றது. இந்த விகிதங்களை மாற்றி காரத்தன்மை கொண்ட உணவுகளை 80%ஆகவும், அமிலத் தன்மை கொண்ட உணவை 20%ஆகவும் நாம் மாற்ற வேண்டும். மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை குறைக்கும் பொழுது அமில உணவுகளை உட்கொள்ளுவது குறைகின்றது. பச்சை காய்கறிகளை நிறைய உண்ணும் பொழுது காரத்தன்மை கொண்ட உணவுகள் நம் உடம்பில் அதிகம் சேருகின்றது.

நார்ச்சத்து: நார்ச்சத்து ஒரு பிரதான ஊட்டச்சத்தாகக் கருதப்படவில்லை. என்றாலும், 7முக்கியமான ஊட்டச்சத்துக்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும் குளுக்கோஸ் லெவலை குறைப்பதற்கு நார்ச்சத்து மிகவும் உதவுகின்றது.

நார்ச்சத்து கரைவது, கரையாதது என்று இரு வகைப்படும்.

கரைகின்ற நார்ச்சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஏனென்றால் நம் உடம்பில் நிகழும் செரிமானத்தை அது நிதானப்படுத்துகின்றது. செரிமானம் நிதானப்படுவதால் சர்க்கரை நம் ரத்த ஓட்டத்தில் கலப்பதும் சீராக இருக்கின்றது. நம்முடைய சிறு குடலில் சேருகின்ற கெமிக்கல்களை இந்த நார்ச்சத்துக்கள் உறிஞ்சிக் கொள்வதால் இந்த கெமிக்கல்களிலிருந்து கொலஸ்ட்ரால் தயாரிக்கப்படுவது குறைகின்றது. கரைகின்ற நார்ச்சத்து வயிறு நிரம்பிவிட்ட உணர்வைக் கொடுப்பதால் நம்முடைய பசியும் அந்த அளவிற்கு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஓட்ஸ், தவிடு மற்றும் சைலியம் தவிடு கரையும் நார்ச்சத்திற்கு சிறந்த மூலப்பொருட்கள் ஆகும். கரையாத நார்ச்சத்து சிறுகுடலில் உள்ள உணவுப் பிண்டத்திற்கு பருமன் சேர்க்கின்றது. அப்படிப் பருமன் சேர்ப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எளிதாக மலம் கழிக்க முடிகின்றது. முழுத்தானியங்கள், ஆப்பிள் தோல், மற்றும் அரிசித் தவிடு ஆகியவை கரையாத நார்ச்சத்திற்கு சிறந்த மூலப் பொருட்கள் ஆகும்.

சர்க்கரை, உப்பு, சாக்லேட் மற்றும் காபிக்கான மாற்றுப் பொருட்கள்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை,உப்பு, சாக்லேட் ஆகியவற்றிற்கான மாற்றுப் பொருட்கள் என்ன உட்கொள்வது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சர்க்கரை:
இருபதாம் நூற்றாண்டின் பாதியிலேயே சர்க்கரையின் உபயோகம் ஏராளமாக அதிகரித்து விட்து. இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் 5 பவுண்டு சர்க்கரைதான் ஓராண்டிற்கு உபயோகித்து வந்தார். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் பாதியில் இத்தனி நபர் சர்க்கரை உபயோகம் 130 பவுண்டாக அதிகரித்து விட்டது. இது 26 மடங்கு உபயோகம் அதிகரிப்பதைக் காட்டுகின்றது. பால் மற்றும் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆனால் உணவு தயாரிப்பாளர்கள் செயற்கையாக தாங்கள் தயாரிக்கும் எல்லா உணவுகளிலும் சர்க்கரையை சேர்க்கின்றார்கள். கார்ன் சிரப், குளுக்கோஸ், புருக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை எல்லாம் சர்க்கரையின் பல்வேறு வடிவங்களாகும்.

பதப்படுத்தபட்ட சர்க்கரை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை விரைவில் ஏற்றுவதால், உணவு தயாரிப்பாளர்கள் இப்படி விரைவில் குளுக்கோஸின் அளவை ஏற்றாத செயற்கை இனிப்புகளைத் தயாரித்துள்ளார்கள். இந்த மாற்று இனிப்புப் பொருட்களால் உடல் நலத்திற்கு கெடுதல் வர வாய்ப்புள்ளது. இவற்றிற்கு பதிலாக நாம் சின்னமன், வனிலா, மிண்ட் ஆகியவற்றை சாப்பிடலாம். இவைகளில் இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் அதே சமயத்தில் இவை நம் உடம்பில் சர்க்கரையையோ, அல்லது கூடுதல் கலோரிகளையோ சேர்க்காது.

உப்பு:
உப்பு என்று நாம் அழைக்கும் சோடியம் குளோரைடு என்பது நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான ஒரு கெமிக்கல் ஆகும். நம்முடைய தற்போதைய உணவுப் பழக்க வழக்கங்கள் தேவைக்கதிகமாக நம்மை உப்பை சாப்பிட வைக்கின்றன. அதே சமயத்தில் தேவையான பொட்டாஸியம் போன்ற கெமிக்கல்களை உட்கொள்ளுவதையும் குறைக்கின்றன. நாம் உப்பு உட்கொள்வதைக் குறைத்து, பொட்டாசியம் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும். நம் உடம்பில் ஒரு முறையான உப்பு மற்றும் பொட்டாசியம் விகிதம் இருக்க வேண்டும். விகிதம் அதிகமாக இருந்தால் செல்லுக்குள் உப்பு அதிகமாகத் தங்கிவிடும். அப்படித் தங்கும் பொழுது தண்ணீரும் அதிகமாக செல்லுக்குள் வந்து விடும். இதனால் செல் வீக்கமடைந்து வெடிக்க நேரிடும். கடலில் தயாராகும் உப்பு, இந்த உப்பு மற்றும் பொட்டாசியத்திற்கிடையே உள்ள விகிதத்தை சரியாகக் கொடுக்கின்றது. ஆகவே, நாம் கடல் உப்பை பயன்படுத்துவது நல்லது. அதே சமயத்தில் நாம் கேனில் விற்கப்படும் ஜுஸ் மற்றும் சூப் வகையறாக்களை உட்கொள்ளுவதைக் குறைப்பது நல்லது.

(நலம் தொடரும்)

தர்ப்பூசணி

குறைந்த விலையில் தாகம் தணிக்க பயன்படும் தர்ப்பூசணிக்கு நீரிழப்பை தடுக்கும் சக்தியும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் சாலையோரத்தில் தர்ப்பூசணிக் கடைகள் வரிசையாக முளைத்து வருகின்றன. வெப்பம் தணிக்க வேறுபானங்களை பருகுவதை விட தர்ப்பூசணி சாப்பிடுவதையே மாணவர்களும், தொழிலாளர்களும் விரும்புகின்றனர். மற்ற பானங்களை விட விலை குறைவு என்பதால் இதன் விற்பனை சூடு பிடித்து வருகிறது. விலைக் குறைவு என்றாலும் இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தர்ப்பூசணியில் பொட்டாசியம், சோடியம் போன்ற எலக்ட்ரோலைட் பொருள்கள் அதிகம்.
இதில் இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
இதனைச் சாப்பிடுவதால் உடலில் சூரியக் கதிர்களின் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
நீரிழப்பும் தடுக்கப்படும்.
மேலும் இது உடலில் உப்பு கலவையை சமநிலைப்படுத்துவதால் சோர்வு ஏற்படாது.

நன்றி தினமணி

புதன், 24 பிப்ரவரி, 2010

ஆறுவகை 'ஹார்ட் அட்டாக்!' 2010ன் புதிய கண்டுபிடிப்புகள்

மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

கோல்டன் ஹவர்
முதல் 2 மணி நேரம் "கோல்டன் ஹவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

ஆறு வகை மாரடைப்பு

மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது;

இவற்றில், ஐந்து, ஆறாவது வகை மாரடைப்புகளுக்கு காரணம், ஸ்டென்ட்டையும், பைபாஸ் கிரங்குகளையும் சரியாக பாதுகாக்காததால் தான். பெரும்பாலான சர்ஜன்களும், மருத்துவர்களும் வேறு மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவோர் தான்; இவர்களுக்கு மொழி சரியாக தெரியாது, நோயாளிகளிடம் பேசும் நேரம் குறைவு, நிறைய நோயாளிகளை ஸ்டென்ட், பைபாஸ் செய்து நிறைய எண்ணிக்கையைக் கட்டி பெரும் பணம் பார்க்கும் நோக்கமாகிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை போல மருத்துவர், நோயாளி இவர்களின் ஆலோசனை பல மணி நேரம் ஆகிறது. இதனால், நோயாளிகள் எது எப்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர்.

முதல் வகை மாரடைப்பு
முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்டக்கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது; இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.

இரண்டாவது வகை
இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.

மூன்றாவது வகை
நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.

நான்காவது வகை
மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக்கும் வசதிகளும் உள்ளன.

ஐந்தாவது வகை
ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்ட் வைத்த டாக்டர் அல்லது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகவும் தெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை. அதில், கொழுப்பு படிந்துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணிப்பில் பரிசோதனைகள் செய்து காத்துக் கொள்ள வேண்டும். ஸ்டென்ட் சிகிச்சை செய்து, இருபது ஆண்டுகள் என்னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு. இரண்டு ஆண்டுகளில் ஸ்டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலாமவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன்றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.

ஆறாவது வகை
மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.
என்ன செய்யணும்?
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித ஒழுக்கம், மது மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்கநெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

"பளீச்' அறிகுறிகள்
* மார்பின் மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும்; அல்லது, இடது பக்கம் வலி ஏற்படும். அந்த வலி, இடது கையில் பரவலாம்.
* வயிற்றின் மேல் பகுதியில் ஒரு வித எரிச்சல் இருக்கும். இதைத்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றனர்.
* திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும்; திணறலும் இருக்கும். புழுக்கம் தெரியும்.
* உடலில் வியர்வை பெருக்கெடுக்கும்; அதுவும் குளிர்ந்த வியர்வையாக இருக்கும்.

தவிர்க்கலாம் நிச்சயம்
என்ன தான் அறிகுறிகள் இருந்தாலும், அதை நோயாளியால் தான் கண்டுபிடிக்க முடியும். சில சமயம் இந்த அறிகுறிகள் இல்லாமல் கூட பிரச்னை வரலாம்.
அதை தவிர்க்க முடியும்... அதற்கு...
* சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.
* உடல் எடையை அதிகரிக்க விடக்கூடாது.
* சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.

டென்ஷன் "நோ'
டென்ஷன் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்; யோகா, தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போயேபோச்சு தான். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும் மிகவும் நல்லது; கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் "ஸ்லிம்'மாக இருக்கும்.

நன்றி தினமலர்!

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

இதயம் ஆரோக்கியமாக இருக்க...

‘‘ஹர்ரி (அவசரம்), கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்!’

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

உலகை அழிக்கும் மின்னணுக் கழிவு (ஈ-வேஸ்ட்)

புற்றீசல் போல என்பார்களே அப்படித் தான் இருக்கிறது இன்றைய நவீன உலகில் எலக்ட்ரானிக் பொருட்களின் வளர்ச்சி. இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கிய கணினி இன்றைக்கு அதரப் பழசு என பெயர் சூட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வாங்கிய கைப்பேசியைக் கைகளில் வைத்திருப்பதே அவமானம் என கருதுகிறது இளைஞர் பட்டாளம். இளசுகளின் கேலிகளும் கிண்டலும் பழைய கைப்பேசிகளை நோக்கி எழுந்து கொண்டே இருப்பதனால் ஆறுமாதம் அல்லது வருடத்துக்கு ஒரு முறை கைப்பேசியை மாற்றுவது என்பதை பிறவிப் பெருங்கடன் போல வழுவாது நிறைவேற்றுகிறது இளைஞர் குழாம்.

கைப்பேசி கணினி என்றில்லை, வீட்டில் பயன்படுத்தும் தொலைக்காட்சிகள் நான்கைந்து வருடமானாலே புதுசாய் வாங்கலாமே என ஒரு உந்துதலும், விவாதமும் வீடுகளில் எழுவதும் வாடிக்கையே. இதே நிலையை குளிர்சாதனப் பெட்டி, குளிர் சாதனக் கருவிகள் என அனைத்திற்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

எங்கேனும் பழசைக் கொடுத்து புதுசு வாங்க முடிந்தால் இவற்றை அவர்கள் தலையில் கட்டிவிடலாம். இல்லையேல் முடிந்த மட்டும் பயன்படுத்திப் பார்த்துவிட்டு என்ன செய்வது ? குப்பையில் தான் போடவேண்டும் என்கிறீர்கள் தானே ? இது தான் இன்றைக்கு உலகையே உலுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாய் உருவெடுத்துள்ளது.

என்னிடமிருக்கும் ஒரு பழைய கைப்பேசியை அல்லது கணினியை குப்பையில் எறிந்தால் என்ன ? அதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது என நீங்கள் நினைக்கக் கூடும் ? அப்படி உலகிலுள்ள எல்லோரும் நினைக்கத் துவங்கியதால் தான் பீலி பெய் சாகாடும் கணக்காக உலகில் இன்றைக்கு மின்னணுக் கழிவு (e-waste) எனப்படும் எலக்ட்ரானிக் கழிவு மாபெரும் அச்சுறுத்தலாய் எழுந்துள்ளது.

இப்படிப் போடப்படும் மின்னணுக் கழிவு மட்கி மண்ணோடு மண்ணாகப் போய்விடும் என நினைத்தால் அது தவறு. இத்தகைய கழிவுகள் மண்ணை மிகப்பெருமளவில் மாசுபடுத்துவதுடன் உடலுக்கும், வாழ்க்கைக்கும் பல்வேறு சிக்கல்களையும் தந்து செல்கிறது. இதற்குக் காரணம் இந்த எலக்ட்ரானிக் பொருட்களில் காணப்படும் விஷத் தன்மையுள்ள பொருட்கள்.

சுமார் ஆயிரம் விஷத்தன்மையுள்ள பொருட்கள் இந்த ஒட்டு மொத்த இ-கழிவில் காணப்படுகின்றன. இதன் மூலம் ஒவ்வாமை நோய் முதல் புற்று நோய் வரையிலான பல்வேறு நோய்கள் மனிதனை ஆக்கிரமிக்கும் என்பதே என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். இந்த மின்னணுக் கழிவை சரியான முறையில் மறு சுழற்சி செய்வதற்கோ அல்லது அழிக்கவோ பரவலான சிறப்பான நடைமுறைகள் இல்லை என்பதால் உலகம் இந்த சிக்கலை உலக வெப்பமாதலுக்கு அடுத்த இடத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக முன் வைத்துள்ளது.

பாதரசம், காட்மியம், ஈயம், பைபேனால் போன்றவை இத்தகைய மின்னணுக் கழிவு களில் பரவலாகக் காணப்படும் விஷத் தன்மையுள்ள பொருட்களாகும். இவற்றை எரித்தால் அதிலிருந்து எழும் புகை காற்றை மாசுபடுத்துவதுடன், சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு விதமான நீண்ட கால நோய்களையும் தந்து செல்கிறது.

இவற்றைப் புதைத்தால் பூமி மாசுபடுகிறது. மண்ணின் வளமும், மண் சார்ந்த நீரும் மாசுக்குள் தள்ளப்படுகின்றன. இவை மனிதனுக்கு பல்வேறு விதமான வடிவங்களில் உபாதையைத் தந்து செல்கின்றன.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்ப அந்த நாடுகளிலுள்ள மின்னணுக் கழிவுகளை அப்பாவி நாடுகளான இந்தியா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளின் தலையில் கொட்டி விட்டுச் செல்கின்றன. வெளிநாட்டுப் பணத்துக்குக் கையேந்தும் நிலையில் பின் தங்கிய நாடுகள் இருப்பதை சாதகமாக்கிக் கொண்டு சுயநலத்தின் முழு உருவான வளர்ந்த நாடுகள் தங்கள் நாடுகளின் விஷத்தை நமது முதுகில் கொட்டும் விஷமத் தனத்தைச் செய்கின்றன.

தினசரி வாழ்க்கையை எப்படியேனும் ஓட்டவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கும் நமது வறுமை வயிறுகளுக்கு மின்னணுக் கழிவு என்ன என்பதே தெரிவதில்லை. அவர்கள் நாட்டின் பல்வேறு மூலைகளில் அமர்ந்து கொண்டு இந்த எலக்டானிக் பொருட்களை பிரித்து, நல்ல பாகங்களை தனியே எடுத்து, தேவையற்ற பாகங்களை எரியூட்டுகின்றனர். இப்படி உயிருக்கே உலை வைக்கும் வேலையைச் செய்யும் பாட்டாளி மக்களுக்குக் கிடைப்பது பசியாற்றுமளவுக்கான பணம் மட்டுமே.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்கள் நாடுகளில் இந்தக் கழிவை அழிக்கச் செலவிடுவதில் 20 விழுக்காடு பணத்தை மட்டுமே செலவிட்டு பிற நாடுகளுக்குக் கழிவுகளை அனுப்புகின்றனர். எண்பது விழுக்காடு லாபம் பெறும் இந்த வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை உலகின் பொதுக் குப்பைத் தொட்டியாக்கி விட்டன என்பது தான் உண்மை.

பல வளரும் நாடுகளும், பின் தங்கிய நாடுகளும் இத்தகைய கழிவுகளால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் இன்னலைக் கருத்தில் கொள்ளாமல் இதை வருமானத்துக்கான வழியாய் பார்ப்பதும் மேலை நாடுகளுக்கு சாதகமாகிப் போய் விட்டது.

இந்த மின்னணுக் கழிவுகளை சரியான முறையில் மறு சுழற்சி செய்வது மட்டுமே இந்த இ-கழிவுகளின் பிரச்சனையிலிருந்து உலகைக் காக்கும் வழியாகும். ஆனால் இதிலுள்ள மிகப்பெரிய சிக்கல் மின்னணுக் கழிவுகள் மற்ற கழிவுகளோடு சேர்த்து குப்பைத் தொட்டிகளிலும், குப்பை மேடுகளிலும் தேங்குவது தான்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில், கைப்பேசிகளிலுள்ள அனைத்துப் பாகங்களையும் தனித் தனியே எடுத்து மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் சுற்றுச் சூழலையும் காப்பாற்றி, லாபத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இதிலுள்ள தங்கம், வெள்ளி, செம்பு, பிளாஸ்டிக் போன்றவற்றை பல்வேறு விதங்களில் மீண்டும் பயன்படுத்த முடியும்.

சுமார் பத்து கோடிக் கைப்பேசிகளை மறு சுழற்சி செய்தால் அதிலிருந்து சுமார் 3400 கிலோ தங்கம், 16 இலட்சம் கிலோ செம்பு, முப்பத்து ஐயாயிரம் கிலோ வெள்ளி 1500 கிலோ பலாடியம் போன்றவை கிடைக்குமாம். அமெரிக்காவிலுள்ள முன்னணி கைப்பேசி நிறுவனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமெரிக்க சுற்றுப் புற சூழல் பாதுகாப்பு குழுவுடன் இந்த இ-கழிவு முறைப்படுத்தல் பணியில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் சராசரியாக ஆண்டுக்கு ஐந்து கோடி டன் எனுமளவில் மின்னணுக் கழிவுகள் சேர வாய்ப்பு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவற்றில் பத்தோ இருபதோ விழுக்காடு மட்டுமே மறு சுழற்சிக்குள் செல்கின்றன. மிச்சமுள்ள சுமார் எண்பது விழுக்காடு மின்னணுக் கழிவுகள் மற்ற குப்பைகளோடு சேர்ந்து பூமியையும், சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தும் பணியில் இறங்கிவிடுகின்றன என்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.

இன்றைய உலகின் விஞ்ஞான வளர்ச்சி இந்த மின்னணுக் கழிவுகளின் அளவை ஆண்டு தோறும் அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. கூடவே கடுமையான சந்தைப் போட்டியினால் நாளொரு புது வகை என அறிமுகமாகிக் கொண்டே இருக்கும் கைபேசி, கணினி போன்ற நவீனப் பொருட்கள் இந்த மின்னணுக் கழிவினை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. சுமார் நானூறு விழுக்காடு வரை இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை ஆண்டு தோறும் அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் இரண்டே ஆண்டுகளில் இப்போது இருக்கும் மின்னணுக் கழிவைப் போல மூன்று மடங்கு கழிவுகளால் அப்பாவி நாடுகள் மூச்சுத் திணற வேண்டியிருக்கும் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். எத்தனை மடங்கு விற்பனை அதிகரித்தாலும், கழிவுகள் அதிகரித்தாலும் உலகிலேயே அதிக எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் கழிவுகளை கப்பல்களில் ஏற்றி ஆசியாவுக்கு அனுப்பி விட்டு நிம்மதியாகக் குறட்டை விடுகின்றன.

இப்படிப் பட்ட கழிவுகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில் இவற்றைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களே அதன் ஆயுள் காலம் முடிந்தபின் மறு சுழற்சிக்கான வழிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் இத்தகைய அச்சுறுத்தல்களைத் தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த மார்ட்டின் ஹோசிக் என்பவர்.

விற்பனை செய்யும் போதே அதன் மறுசுழற்சிக்கான விலையையும் அந்தப் பொருளில் சேர்த்து விடலாம் என்றும், அந்த பொருளின் ஆயுள் காலம் முடிந்தபின் அவற்றை அந்தந்த நிறுவனங்களே பெற்று மறு சுழற்சி செய்யலாம் எனவும் இந்த அமைப்பு அறிவுறுத்துகிறது.

இதன் மூலம் மின்னணுக் கழிவுகளிலிருந்து பெருமளவுக்கு உலகைக் காக்க முடியும். கூடவே நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் ஆயுளையும் அதிகப்படுத்தி நல்ல தரமான பொருட்களைத் தயாரிக்க முன்வரும். டெல், ஹைச்.பி, ஆப்பிள், கேட்வே போன்ற நிறுவனங்கள் பல நாடுகளில் தங்கள் தயாரிப்புகளை அவற்றின் ஆயுள் முடிந்தபின் பெற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கின்றன என்பது ஒரு நல்ல முன்னுதாரணமாகும்.

நல்ல நிலையிலுள்ள பொருட்களை குப்பைகளில் எறிவதை விட அவற்றை கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளிக்கலாம், இதன் மூலம் கழிவிலிருந்து உலகையும் காக்கலாம். சில ஏழைகளில் தேவையையும் நிறைவேற்றலாம் என்பது இன்னொரு பார்வையாகும்.

மின்னணுக் கழிவுகளை எப்படி அழிப்பது, எங்கே கொடுத்து அவற்றை மறு சுழற்சிக்கு உட்படுத்துவது என்பன போன்ற அடிப்படை விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. தெளிவான வரை முறைகளை வகுத்து, அவற்றின் படி நடக்க மக்களை அறிவுறுத்துவதும் மிகவும் இன்றியமையாததாகும். இல்லையேல் நவீனத்தின் வளர்ச்சி உடலில் ஊனத்தை உருவாக்கும் என்பது திண்ணம்.

நன்றி: திரு சேவியர் - http://xavi.wordpress.com

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்...

தன் குறைகளை அறிதல்..


என்னுடைய குறைகளை நான் உணராமல் இல்லை. நன்றாகவே உணர்வேன். உணர்ந்து அதற்காக வருத்தமும் படுகிறேன். ஒருவன் தன் குறைகளைக் கண்டுகொண்டு விட்டால் அதுவே ஒரு பெரும் பாக்கியம். எனக்கு ஏதேனும் விசேஷ சக்தி இருப்பின் அதன் ரகசியம் என்னவென்றால் நான் என் குறைகளை நன்றாக அறிந்திருப்பதே ஆகும்.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ- பக்:3 )

சனி, 13 பிப்ரவரி, 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு - 4


பகுதி 4

ஐந்து பயனுள்ள உணவுப் பண்டங்கள்:

நம் உடம்பிற்கு ஏற்ற கெமிக்கல் பாலன்ஸை உண்டுபண்ணி நம் உடம்பை நன்றாகப் பராமரித்து நோய் நொடியிலிருந்து காப்பாற்றும் சக்தி படைத்த உணவுப் பண்டங்கள் ஐந்து உள்ளன. 

அவையாவன. காய்கறிகள் மற்றும் பழவகைகள், வடிகட்டப்பட்ட தண்ணீர், மெலிந்த புரதச் சத்து, தனிப்பட்ட கலப்பில்லாத ஒமேகா-3 கொழுப்புச் சத்து மற்றும் முழு தானிய வகைகள்.

1. காய்கறிகள், பழவகைகள்: பயனுள்ள காய்கறிகள் மற்றும் பழவகைகள் என்று நாம் நிறைய சொல்லலாம். பெரும்பாலான பயனுள்ள காய்கறிகளும், பழவகைகளும் நல்ல பிரகாசமான நிறம் கொண்டவைகளாக இருக்கும். முட்டைக்கோஸ், காலிபிளவர், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ் வகைகள் மற்றும் டர்னிப் ஆகியவைகளை உதாரணமாகச் சொல்லலாம். பீட்ரூட், கேரட், தக்காளி ஆகியவைகளும் இவற்றில் அடங்கும். ஆப்பிள், திராட்சை, ஏப்ரிகாட், எலுமிச்சை, ஆரஞ்ச், பப்பாளி, மாதுளம்பழம் போன்ற பழங்களும் இவற்றில் சேரும்.

உடல்நலத் தாக்கம்: முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற காய்கறிகள் நிறைய நார்சத்து கொண்டவைகளாக இருப்பதால் உணவை நிதானமாக ஜீரணம் செய்ய உதவுகின்றது. அப்படி நிதானமாக ஜீரணம் செய்யும் பொழுது சர்க்கரை ரத்தத்தில் கலப்பதும் நிதானமாக நடக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழவகைகளும் இதேமாதிரியே செயல்படுகின்றன. இப்பழங்களிலும், காய்கறிகளிலும் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்திற்கும் கொலஸ்ட்ராலையும் அகற்றவும் உதவுகின்றது.

அதிக நார்ச்சத்து கிடைப்பது மட்டுமில்லாமல், மேற்கண்ட பழங்களும் காய்கறிகளும் புரதச்சத்து, என்சைம்கள் மற்றும் விட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றையும் உடலுக்கு வழங்குகின்றன. மேலும் இவற்றில் காணப்படுகின்ற பொட்டாசீயம், மக்னிசீயம். ஃபாலிக் ஆசிட் மற்றும் என்சைம்கள் நம்முடைய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களை விரிவுபடுத்தி உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமலும் வழி செய்கின்றது. பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகள் நம் உடம்பிற்கு நல்ல கொலஸ்ட்ராலை வழங்குகின்றன. ரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன. ஏப்ரிகாட் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் உள்ள அமிலங்கள் புற்றுநோயை தடுக்க உதவுகின்றன. மேலும் ஈரலின் பாதுகாப்பிற்கு உதவுகின்றன. எலுமிச்சம் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உபயோகமான ஒன்று. ஏனென்றால், உடம்பில் சர்க்கரை அதிகமாக சேரும் பொழுது ஏற்படக் கூடிய கூடுதல் அமிலத்தன்மையை எலுமிச்சம்பழம் குறைக்கின்றது. மேலும் மற்ற பழங்களைவிட, எலுமிச்சம் பழத்தில் சர்க்கரை குறைவு. மேலும் நமது பற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்தவும் எலுமிச்சம் பழம் உதவுகின்றது. எலுமிச்சம் பழம் புளிப்பாக இருந்தாலும் உடம்பில் அதனுடைய செயல்பாடு காரத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. அமிலத்தன்மை உடம்பில் அதிகரிப்பதால் விளைகின்ற மூட்டுவலிக்கு இது ஓர் எதிர்ப்பாக அமையும். ஆங்கிலத்தில் கிரேப் புரூட் என்றழைக்கப்படும் பம்பளிமாஸ் பழம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றது. பம்பளிமாஸ் விதைகள் மலச்சிக்கல், வாயு தொந்திரவு ஆகியவற்றைத் தடுக்கின்றன. இந்த நார்ச்சத்து மிகுந்த மேற்கண்ட காய்கறிகள் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று வருகின்ற ஆர்வத்தையும் குறைக்கின்றது. இருந்தாலும் வாழைப்பழம், பைன் ஆப்பிள், வாட்டர் மெலன் போன்ற பழங்களில் நிறைய சர்க்கரை சத்து இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

2. வடிகட்டிய தண்ணீர்: முனிசிபல் குழாய்களிலிருந்து கிடைக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் என்று சொல்ல முடியாது. அதில் குளோரின், மற்றும் தேவையில்லாத தாதுக்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே முனிசிபல் குழாய்களில் வரும் தண்ணீரை வடிகட்டுவதற்காக வீட்டில் வடிகட்டும் மெஷினை வைத்துக் கொள்வது நல்லது. பழம் மற்றும் காய்கறிகளில் இருக்கின்ற நீர் குழாய்களில் வரும் நீரைவிடத் தூய்மையானது. காய்கறிகளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் சாறை அப்படியே சாப்பிட்டால், அது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. குடிநீரில் குளோரின் அதிகமாக இருந்தால் அதுவே சிறுநீரை சேகரிக்கும் பிளாடரில் (சிறுநீர்ப்பை) புற்றுநோய் வருதற்கு காரணமாக அமையும். ஃபில்டர் மூலம் குளோரினை அகற்றி விட்டு அக்குடி நீரை உபயோகப்படுத்தினால், அக்குடி நீர் நம்மை பாதிக்காது.

உடல் நலத்தாக்கம்: தண்ணீரின் மூலமாகத்தான் நம் உடலிலுள்ள செல்களுக்கெல்லாம் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் செல்களுக்குள் தண்ணீர் இருப்பதால்தான் செல்களும் மென்மையாக இருக்கின்றன. நம் உடம்பின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் தண்ணீர் உதவுகின்றது. இப்படித் தண்ணீருக்கு பல உபயோகங்கள் இருப்பதால், இருப்பதிலேயே மிகச் சிறந்த தண்ணீரான வடிகட்டிய தண்ணீரை நம் உடம்பிற்கு வழங்குவது நல்லது. தண்ணீர் உடம்பிற்கு நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் தவறுதான். நாம் அளவிற்கு அதிகமாக குடிக்கும் பொழுது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதன் விளைவாக நம் உடம்பிற்கு தேவையான பல வகை தாதுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறுவதால் இவற்றை யெல்லாம் உடம்பு இழக்க நேரிடும்.

3. மெலிந்த புரதச்சத்து: இந்தப் பிரிவின் கீழ் கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், ஆட்டுப் பால், கொழுப்புச்சத்து குறைந்த தயிர், ஆகியவை இவற்றில் அடங்கும்.

உடல் நலத்தாக்கம்: மேற்கண்ட உணவு வகைகள் நம்முடம்பிற்குத் தேவையான அமினோ ஆசிடுகளை வழங்குகின்றன.மேலும் இந்த உணவு வகைகள் நம் ஈரலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் க்ளோககான் என்ற சர்க்கரை பொருளை திறம்பட உபயோகிப்பதற்கு நம் உடம்பிற்கு உதவுகின்றன. திறம்பட உபயோகிப்பதால் இன்சுலின் சுரப்பதும் குறைகின்றது. இன்சுலின் சுரப்பு குறைவதால், கொழுப்புச்சத்து மற்றும் கொலஸ்ட்ரால் சத்து நம் உடம்பில் கூடுவதும் குறைகின்றது. புளிப்படைந்த தயிர் சாப்பிடுவதால் நம் சிறுகுடலில் உள்ள ஜீரணத்திற்கு உதவுகின்ற நுண்ணுயிர்கள் வளர்கின்றன. இயற்கை முறையில் நம்முடம்பிற்கு ஃபாலிக் ஆசிட், கோலின் மற்றும் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கிடைக்கின்றன. இவை மூன்றும் நம்முடைய இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்புகளுக்கு உதவுகின்றன.

4. ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள்: இப்பிரிவின் கீழ் தனித்த ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, ஒமேகா-3 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, மற்றும் ஒமேகா-6 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து ஆகியவை அடங்கும். தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயிலும், முந்திரி கொட்டைகளிலும், மணிலா கொட்டைகளிலும், ஆல்மண்ட் கொட்டைகளிலும் நிறைய இருக்கின்றது. மேலும் இந்தக் கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயில் 75 % அளவிற்கு இருக்கின்றது. மேலும் ஹைட்ரஜன் சேராத இந்த தனித்த கொழுப்புச்சத்தை உண்ணும் பொழுது, ஹைட்ரஜன் சேர்ந்த கொழுப்புச் சத்துக்கள், மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகியவற்றினால் விளைகின்ற உடல் நல பாதிப்புகள் இருப்பதில்லை. ஆகவே நாம் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு சிறந்த எண்ணெயாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒமேகா-3 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச்சத்தும் ஓர் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தாகும். இந்தக் கொழுப்புச் சத்து பூசணி விதைகள், வால்நட் கொட்டைகளில்  இருக்கின்றது. ஒமெகா-3 கொழுப்பு அமிலங்கள் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி மற்றும் பார்ஸ்லி போன்ற தாவரங்களில் இருந்து கிடைக்கும். ஒமேகா-6 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் வால்நட் கொட்டைகளிலும் மற்றும் சூரியகாந்தி விதைகளிலும் கிடைக்கின்றன.

உடல் நலத்தாக்கம்: தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களும் அத்தியாவசிமான கொழுப்பு அமிலங்களும் நம்முடைய இதயம் மற்றும் ரத்த ஓட்ட ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகின்றன. உடம்பு இவற்றை தானே தயார் செய்து கொள்ள முடியாதபட்சத்தில் தாவர பொருட்கள் மற்றும் காய்கறிப் பொருட்களிலிருந்து இவற்றை நம் உடம்பு சேகரிக்கின்றது. இவை நம்முடைய இதயம் மற்றும் மூளையின் செயல்பாடு  மற்றும் தசை வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கெல்லாம் உதவுகின்றன. அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் பிராணிகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்தை போல் நம் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது இல்லை.

5. முழுதானியங்கள்: இப்பிரிவின் கீழ் பார்லி, ஓட்ஸ் மற்றும் பதப்படுத்தப்படாத முழு அரிசி ஆகியவை அடங்கும். இவைகளிலிருந்து நமக்கு பி காம்பளக்ஸ் விட்டமின்கள், விட்டமின் உ, குரோமியம், மக்னீஷியம் போன்ற தாதுக்களும், செல்லுலோஸ் என்ற கரையாத நார்ச்சத்தும் கிடைக்கின்றன.

உடல் நலத்தாக்கம்: முழு ஓட்ஸ் தானியங்களில், 55 % கரைகின்ற நார்ச்சத்தும், 45 % கரையாத நார்ச்சத்தும் அடங்கி இருக்கின்றன. இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது. மேலும் நமக்கு ரத்த அழுத்தமும் குறைகின்றது. வெள்ளை ரொட்டியில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் நீக்கப்படுவதால், முழு தானியத்திலிருந்து செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் அந்த ரொட்டியில் நமக்கு வேண்டிய புரதச்சத்து மற்றும் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து எல்லாம் அப்படியே இருக்கும். 

மேற்கூறிய ஐந்து பயனுள்ள உணவு வகைகளும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியவை. ஆகவே இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ஜீரண சிஸ்டம் அதிக சிரமப்படாமல் வேலை செய்கின்றது.


(நலம் தொடரும்)

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு - 3


பகுதி-3

மேற்சொன்ன ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமற்ற என்ற இரு பிரிவுகளின் கீழ் நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளையும் பயனற்றது, பயனுள்ளது என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

பயனற்ற உணவு வகைகள்: பயனற்ற உணவு வகைகள் என்பவை நம் உடம்பை வியாதிக்கு உள்ளாக்கி நம்முடைய ஆயுளை குறைக்கக் கூடியவை. செயற்கையாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும். உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இவற்றில் இருக்காது. மேலும் இந்த பயனற்ற உணவுப் பண்டங்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடியவை.

பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
இந்தப் பண்டங்கள் நம்முடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. இவ்வுணவுப் பண்டங்கள் பெரும்பாலும் மிதமாக சமைக்கப்படுகின்றன என்பதால் நம்முடம்பிற்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச் சத்துக்கள் வீணாகாமல் காப்பாற்றப்படுகின்றன. இந்த உணவுப் பண்டங்கள் சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளிலிருந்து மீட்கக் கூடியவை.

ஐந்து பயனற்ற உணவுகள்:
ஐந்து பிரதான உணவுப் பண்டங்களை நாம் பயனற்ற உணவுகள் எனலாம். இவைகளை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் பொழுது இவை நம் உடம்பை பலஹீனப்படுத்தி புற்று நோய், சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாக்கிவிடுகின்றன. இந்த ஐந்து பிரதான உணவுப் பண்டங்கள் வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாவு, மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு, ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட கொழுப்பு மற்றும் நம் உடல் நலத்தைப் பாதிக்கும் கெமிக்கல்ஸ் ஆகும்.

1. வெள்ளை சர்க்கரை: இந்தப் பிரிவின் கீழ் கார்ன்சிரப், சுக்ரோஸ், மால்டோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை கலந்து செய்யப்பட்ட உணவுகள் எல்லாம் அடங்கும். மேலும், குளிர்பானங்கள், பாட்டிலில் போடப்படும் பழச்சாறுகள், ஜாம், மற்றும் கேக் வகைகளும் அடங்கும்.

உடல் நலத்தாக்கம்: மேற்கூறிய சர்க்கரை அதிகமான இந்தப் பண்டங்கள் எல்லாம் நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை உடனே அதிகப்படுத்தி அதன் விளைவாக இன்சுலின்களையும் நம் உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த சர்க்கரைமயமான உணவுப் பண்டங்களில் இருக்கின்ற கூடுதல் மாவுச் சத்து எல்லாம் உடம்பில் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. மேலும் இந்தச் சர்க்கரை மயமான உணவுப் பண்டங்கள் நம் உடம்பிலுள்ள பயனுள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்களை குறையச் செய்கின்றன. சர்க்கரைக்கு மாற்றாக விற்கப்படுகின்ற செயற்கை இனிப்பு வகைகளில் சர்க்கரை இல்லாவிட்டாலும் இவை நம்மை அதிகமாகச் சாப்பிடச் செய்கின்றன. அப்படி நாம் அதிகமாகச் சாப்பிடும் பொழுது அதன்மூலம் நம் உடல் நலத்தை அவை பாதிக்கின்றன.

2. பதப்படுத்தப்பட்ட வெள்ளை மாவு: இந்தப் பிரிவின் கீழ் வெள்ளை மாவால் செய்யப்படுகின்ற வெள்ளை ரொட்டி, வெள்ளை சாதம், நூடுல்ஸ் மற்றும் கேக் வகைகள், மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் அடங்கும்.

உடல் நலத்தாக்கம்: மேற்கண்ட ஸ்டார்ச் சத்துமிகுந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் சர்க்கரைப் பண்டங்கள் போலவே குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளை ஏற்றிவிடுகின்றன. இன்சுலினை உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த கூடுதலான ஸ்டார்ச் சத்தும் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. இப்படி வெள்ளை மாவை சாப்பிடுவதற்குப் பதிலாக முழு கோதுமை மற்றும் அரிசியிலிருந்து செய்யப்படுகின்ற உணவுப் பண்டங்களை சாப்பிட்டால் மேற்கண்ட பாதிப்புகளை நாம் தவிர்க்கலாம்.

3. மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்து: இப்பிரிவின் கீழ் ஹைட்ரஜன் கலந்த எண்ணெயால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களான மார்ஜரின், உருளைகிழங்கு வறுவல் மற்றும் பேக்கரிப் பண்டங்கள் எல்லாம் அடங்கும். ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் பண்டங்களை பயன்படுத்தும் பொழுது இந்த எண்ணெயில் இருக்கின்ற கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்பட்டு குறைபாடுள்ள மாற்றம் செய்யப்பட்டுள்ள கொழுப்புச் சத்துக்கள் வந்துவிடுகின்றன.

உடல் நலத் தாக்கம்: இப்படி மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் நம் உடல் நலத்திற்கு ஒத்துவருவதில்லை. நம்முடைய ரத்தக் குழாய்களில் இவை அடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் நம் உடம்பிலுள்ள செல்களில் இன்சுலினுக்கு வழிவிடும் கதவுகளை மூடுகின்றன.

4. ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள்: இந்தக் கொழுப்புச் சத்து மாமிச உணவிலும், வறுவல் செய்யப்பட்ட உணவிலும், வெண்ணெய், ஐஸ்கிரீம், மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயிலிலும் இந்தக் கொழுப்புச் சத்து இருக்கின்றது.

உடல் நலத் தாக்கம்: ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், இவற்றை சாப்பிடும் பொழுது தேவையில்லாத கொழுப்புச் சத்து நம் உடம்பில் சேருகின்றது மற்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றது. இன்சுலின் உபயோகம் குறைகின்றது. தேங்காய் எண்ணெயில் இந்தக் கொழுப்புச்சத்து மிகுந்து உள்ளது இருந்தாலும் பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மிக நல்லதாகும்.  தேங்காய் எண்ணையில் உள்ள நடுத்தரமான கொழுப்பு அமிலங்கள் நம் ரத்த ஓட்டத்தில் சேராமல் ஈரலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே ஈரலில் அவை நேரடியாக எனர்ஜியாக மாற்றப்படு கின்றன.

5. கெமிக்கல்ஸ்: இந்தப் பிரிவின் கீழ் தாது வகைகள், புகையிலை, காபி மற்றும் தேநீரில் உள்ள கஃபின் என்ற கெமிக்கல் ஆகியவை அடங்கும்.

உடல் நலத்தாக்கம்: மதுபானங்களும், புகையிலையும் நம்முடைய ஈரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காபியில் இருக்கும் கஃபின் கெமிக்கல் நம் நரம்புகளைத் தூண்டி விடுகின்றது. கஃபினால் நமக்கு இன்சுலின் சுரப்பது அதிகரிக்கலாம். கார்ன்சிரப் மற்றும் வெள்ளை சர்க்கரை மற்றும் ஹைட்ரஜன் கலந்த சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் எல்லாம் ஜீரணமாவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதால் அந்த அளவிற்கு நம்முடைய உடம்பிலுள்ள எனர்ஜி விரயமாகின்றது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்கப்படும் பல மருந்துகளால் நம்முடைய ஈரல் மற்றும் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகின்றது.

(நலம் தொடரும்)

புதன், 10 பிப்ரவரி, 2010

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு - 2


ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற மாவுச்சத்துக்கள்

பிரகாசமான நிறம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழவகைகள் மேற்கண்ட ஏழு ஊட்டச் சத்துக்கள் கொண்டு இருப்பதால் இவையும் ஆரோக்கியமான மாவுச்சத்துகள் என்று பெயர் பெறுகின்றன. பார்லி மற்றும் ஓட்ஸ் தானிய வகைகளும், விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, எண்ணெய் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் இவையும் ஆரோக்கியம் உள்ள மாவுச் சத்துகளாக கருதப்படுகின்றன. செயற்கையாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் விட்டமின்கள், தாதுக்கள், என்ஸைம்கள் ஆகியவை இல்லாதிருப்பதால் ஆரோக்கியமற்ற மாவுச் சத்துக்களாக கருதப்படுகின்றன. 

மேலும் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுப்பண்டங்கள் நம்முடைய ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை வேகமாக ஏற்றுவதால், ஆரோக்கியமான உணவு என்ற தகுதியை இழக்கின்றன. இப்படித் தகுதி இழக்கும் உணவு பண்டங்களில் பாட்டில் செய்யப்பட்ட பழச்சாறுகள், உருளைக்கிழங்கு வறுவல்கள், வெள்ளை சாதம், வெள்ளை ரொட்டி, மற்றும் தக்காளி கெட்சப்  ஆகியவை அடங்கும். இவையெல்லாம் நம் உடம்பிற்கு ஊட்டம் தருவதில்லை,  பாதுகாப்பதில்லை, சுத்தப்படுத்துவதும் இல்லை.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற புரதச் சத்துக்கள்
கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள்,சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இவை எல்லாம் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும் பாலானவற்றை கொண்டு இருப்பதால் ஆரோக்கியமான புரதச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. மேலும் ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்து இவைகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை என்பதும் ஒரு நல்ல விஷயமாகும். மேலை நாடுகளில் சோளம் சாப்பிட்டு வளரும் கால்நடைகளுக்கு நிறைய வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் அன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதால் இக்கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி ஆரோக்கியமற்ற புரதமாக கருதப்படுகின்றது. இந்தக் கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி புற்று நோயைத் தூண்டும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். 

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள்
ஆலிவ் எண்ணெயிலுள்ள தனி கலப்பில்லாத கொழுப்புச் சத்து நம்முடைய ரத்தக் குழாய்கள் மற்றும் உடம்பிலுள்ள மூட்டுக்கள் ஆகியவற்றிற்கு நல்லதொரு உராய்வில்லாத இயக்கத்தை கொடுப்பதால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றது.வால்நட் கொட்டைகளில் காணப்படுகின்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் நம் உடம்பிற்கு மிகவும் தேவையான ஒமேகா3என்றழைக்கப்படும் அவசியமான கொழுப்பு அமிலத்தை கொண்டிருக்கின்றன. இவை நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் அடர்த்தி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் நல்ல கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றன.

மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள், பிராணிகளிடம் காணப்படும் சில ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள், ஒமேகா6  கொழுப்பு அமிலம் போன்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் ஆகியவை ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மார்ஜரின், உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் வறுவல் செய்யப்படுகின்ற பதார்த்தங்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகும். மேலும் பதப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் ஆயில் ஆகியவை இரண்டும் ஆரோக்கியமற்ற ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பருத்திக் கொட்டை எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவை ஆரோக்கியமற்ற கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படுகின்றது. மேற்கூறிய ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள் எல்லாம் நம்முடம்பில் கொலஸ்ட்ராலை அதிகரித்து அதன் காரணமாக ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியன.

(தொடரும்)