வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

தர்ப்பூசணி

குறைந்த விலையில் தாகம் தணிக்க பயன்படும் தர்ப்பூசணிக்கு நீரிழப்பை தடுக்கும் சக்தியும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் சாலையோரத்தில் தர்ப்பூசணிக் கடைகள் வரிசையாக முளைத்து வருகின்றன. வெப்பம் தணிக்க வேறுபானங்களை பருகுவதை விட தர்ப்பூசணி சாப்பிடுவதையே மாணவர்களும், தொழிலாளர்களும் விரும்புகின்றனர். மற்ற பானங்களை விட விலை குறைவு என்பதால் இதன் விற்பனை சூடு பிடித்து வருகிறது. விலைக் குறைவு என்றாலும் இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தர்ப்பூசணியில் பொட்டாசியம், சோடியம் போன்ற எலக்ட்ரோலைட் பொருள்கள் அதிகம்.
இதில் இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
இதனைச் சாப்பிடுவதால் உடலில் சூரியக் கதிர்களின் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
நீரிழப்பும் தடுக்கப்படும்.
மேலும் இது உடலில் உப்பு கலவையை சமநிலைப்படுத்துவதால் சோர்வு ஏற்படாது.

நன்றி தினமணி

3 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

தர்ப்பூசணி சர்பத், தர்ப்பூசணி சாலட், கூட்டு, சாம்பார் என்று செய்முறைகளும் சேர்த்திருக்கலாம்! :)))))))))))

Ashwin Ji சொன்னது…

நன்றி. அம்மா. இந்த பதிவில் சமைக்காத உணவு வகைகளை உண்ணுவதின் பயன்கள் குறித்து மட்டுமே வெளியிடுகிறேன். வார்த்தை வெரிபிகேஷன் எப்படி வந்தது என்று எனக்கும் தெரியவில்லை. சரி செய்து விடுகிறேன்.

--
அன்பே சிவம்
அஷ்வின்ஜி
www.vedantavaibhavam.blogspot.com
www.frutarians.blogspot.com
-----------------------------------------------------
ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
------------------------------------------------------

Ashwin Ji சொன்னது…

Word Verification requirement removed.

கருத்துரையிடுக