எல்லோருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நேற்று சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இருந்து ஒரு நலவாழ்வியல் தொடர்பான புத்தகம் பற்றி இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆயுர்வேத அடிப்படையிலான உணவு மற்றும் பானம் பற்றிய தொகுப்பாக திரு.சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரி அவர்களால் எழுதப்பட்டு அகஸ்தியர் பதிப்பகம், தெப்பக்குளம், திருச்சி-20 ல் இருந்து பதிக்கப்பட்ட இந்நூல் ஒரு அரியதொரு நலவாழ்வியல் வழிகாட்டி நூலாகும்.
நூலைப் பற்றிய அறிமுகம்:
நலமிக்க வாழ்க்கை முறை - உணவும் பானமும் (ஆயுர்வேதம் கண்டது) - பாகம் ஒன்று & இரண்டு. (ஒரே நூலாக)
220 பக்கங்கள் கொண்ட இந்நூலின் நோக்கம் என்ன என்பதை நூலாசிரியரின் முன்னுரையில் இருந்தே காணலாம்.
சென்ற தலைமுறையினர் காலதேசச் சூழ்நிலைகளில் பரபரப்பின்றி கடமையுணர்ச்சியும், நல்வழியில் ஆர்வமும் கடும்பயிற்சியும் கொள்வதில் தயங்காமல் ஒரே சீராக வாழ்த்தனர். அவர்கள் ஏற்ற நடைமுறை இன்றைய விஞ்ஞான அவசரகால நடைமுறைக்கு ஒத்துவருமா என்று சிந்திக்கத் தூண்டியுள்ள இன்றைய சூழ்நிலையில், அவர்கள் நடைமுறையில் இருந்த ஏற்புடைமை பற்றி அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம். உணவும், பானமும், பத்தியமும், அபத்தியமும், மக்களின் நோயற்ற நல்வாழ்வு பற்றிய சிந்தனையைத் தூண்ட உதவுமென்ற நல்லெண்ணத்துடன் இந்நூலை தமிழ் மக்கள் முன் ஸமர்ப்பணம் செய்கிறோம்.
சுமார் அறுபது தலைப்புக்களில் வாழ்க்கை முறையை எவ்வாறு நோயின்றி அமைத்துக் கொள்ளலாம் என்று அழகாக இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இயற்கைத் தேவை மூன்று, உடலைத் தாங்கும் மூன்று என வாழ்க்கைத் தேவைகளை இனம் பிரித்து தெளிவான தமிழில் ஆங்காங்கே தேவைப்பட்ட இடங்களில் சமஸ்கிருத மேற்கோள்களுடன் சுவாரசியம் குன்றாமல் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.நலவாழ்வு பற்றி அக்கறை கொண்டோர் ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.
நூலின் விலை ரூ.190/-
2 கருத்துகள்:
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் இப்படி பல் வகைப் புத்தகங்கள் வாங்க நல்ல வசதியுண்டு. நல்ல மதிப்புரை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
வணக்கம் அம்மா. உங்களுக்கு புத்தகங்கள் தேவை என்றால் என்னை எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். வாங்கி அனுப்பித் தர உதவுகிறேன். பின்னூட்டத்துக்கு எனது இதய நிறை நன்றி.
கருத்துரையிடுக