திங்கள், 1 பிப்ரவரி, 2010

நோயின்றி வாழ (To Live Without Diseases)


மனிதனுடைய அனைத்து உடல்-உள நோய்கட்கும் காரணம், 'தவறான உணவுப் பழக்கமும்', 'போதிய உடல் உழைப்பு இல்லாமையும்', 'சுற்றுச் சூழல் கேடுமே' ஆகும்.

மனிதனுக்கு மட்டும் எண்ணற்ற மருத்துவ முறைகள், மருத்துவ மனைகள், மருத்துவ வல்லுனர்கள், மருந்துகள். இருந்தும், உலகில் நோயில்லாத மனிதரைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகி வருகிறது. காரணம் மனிதன் மட்டும் தனது உணவை நெருப்பிலிட்டு உண்கிறான். மனிதனை விடக் கீழான உயிரினங்களான பறவைகளோ, விலங்குகளோ தனது உணவை நெருப்பிலிடாது இயற்கையாகவே உண்ணுகின்றன. அவைகட்கு எந்த நோயுமே இல்லை என்றே கூறலாம்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது, நாமும் நமது உணவை நெருப்பிலிடாது, இயற்கையாகத் தேங்காய், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, வால்நட், பழவகைகள், பச்சையாக உண்ணக் கூடிய பச்சைக் காய்கறிகள், முளை வந்த தானியங்கள், அவல் என நமது உணவ்ப் பழக்கத்தை சமைப்பதைத் தவிர்த்து, சமைக்காது இயற்கையாக உண்ண ஆரம்பித்தால், நாமும் நோயற்ற வாழ்வு வாழ்ந்திடலாம்; நமக்கும் மருத்துவம் அவசியம் இல்லாது, ஆகிவிடும். இதுவே சீரோ பட்ஜெட் மருத்துவம் (Zero Budget Medication) ஆகும். தனக்குத் தானே மருத்துவம் - எளிய மருத்துவம் - பக்க விளைவில்லா மருத்துவம் - பணம் விரையமில்லா மருத்துவம் - எவ்வித மருத்துவ சோதனைக்கும் பெரும் பொருள் செலவிட்டு ஒருவர் தன்னை ஆட்படுத்திக் கொள்ளத் தேவையில்லாத மருத்துவமும் இதுவே ஆகும்.

இத்தகைய மருத்துவம் செய்வதற்காகவும், இத்தகைய மருத்துவத்தை உலக மாந்தரிடையே பரப்புவதற்காகவும் இந்தியாவில், தமிழ் நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூருக்கருகே, குலசேகரன்பட்டினம் என்ற ஊரில் மன்னார் வளைகுடா கடற்கரையருகில், மூன்று ஏக்கர் இயற்கை வேளாண்மையில் உருவாகி வரும் பழமுதிர்சோலையில், 'இயற்கை நலவாழ்வு நிலையம்' 2000-ம் ஆண்டில் நிறுவி செயல்பட்டு வருகிறது.

இதன் நிறுவனர், மூ.ஆனையப்பன் எனும் மூ.ஆ.அப்பன், 'இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து', 'நோயின்றி வாழ' எனும் இரு நூல்களை எழுதி, அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அவ்விரு நூல்களும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளன. அவரது செல்போன் எண்கள்: 9944042986, 930808873645 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு இயற்கை நல வாழ்வு நிலையத்திற்கு வந்து இயற்கை நல வாழ்வு ஆலோசனைகள் மற்றும் நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளையும் பெறலாம்.

இந்நிறுவனத்தின் நோக்கம், உலக மாந்தர்களை படிப்படியாக மருந்தின்றி, அறுவைச் சிகிச்சையின்றி, மாற்று உறுப்புப் பொருத்துதலின்றி, அனைத்து உடல்-உளப் பிணிகளையும் சீரோ பட்ஜெட் மருத்துவமான, 'இயற்கையுணவு மருத்துவம்' (NATURAL FOOD THERAPY) மூலம் தனக்குத் தானே, பக்க விளைவில்லாது, எளிய முறையில், செலவில்லாது, எவ்வித சோதனையுமில்லாது, உயர்ந்த அளவில் குணப்படுத்தி, இயற்கை நலவாழ்வு வாழச் செய்வதாகும். மேலும், 'நோய்க்கு இடங்கொடேல்' எனும் முதுமொழிக்கேற்ப, வருமுன் காத்து, நோயின்றி வாழச் செய்வதாகும். சாதி, மத, மொழி, நாடு வேறுபாடின்றி 'பழ உணவு உண்போர் சமுதாயம்' (FRUTARIAN CIVILIZATION) ஒன்றினை உருவாக்கச் செய்வதாகும்.

இதன் மூலம், உலக மானிடரை மாமனிதர்-இறைமனிதராக்கச் செய்வதாகும். அதன் மூலம், உலகில் நிலவும் அமைதியின்மை, பொருளாதாரச் சிக்கல், இயற்கை சீற்றங்கள், வறட்சி, வெள்ளத்தால் அழிவு மற்றும் பிற சிக்கல்களிலிருந்து மனித குலத்தை விடுவிக்க ஏதுவாகும். இயற்கை நல வாழ்விற்கு வழி வகுக்கும்.

உலகெங்கிலும் இத்தகைய இயற்கை நலவாழ்வு நிலையைங்களை ஆங்காங்கே  தோற்றுவித்து, 'இயற்கை வாழ்வியல் இயக்கம்' இயங்கத் தூண்டுகோலாக இன்றைய  நாளில் செயல்படும் குலசேகரன்பட்டினம் இயற்கை நலவாழ்வு நிலையம் வளர்ச்சி பெறவும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதை மகிழ்ச்சி கலந்த நன்றியுடன் ஏற்றுக் கொள்வோம்.

நன்றி: 
டாக்டர் மூ.ஆனையப்பன், N.D.,
இயற்கை நலவாழ்வு நிலையம்
குலசேகரன்பட்டினம்
திருச்செந்தூர் மாவட்டம்
தமிழ்நாடு (இந்தியா). 

2 கருத்துகள்:

Ravikumar சொன்னது…

மூ ஆ அப்பன் அவர்களே,
என் பெயர் இரவிக்குமார், மதுரை எனது சொந்த ஊர். இந்நாளில் இயற்கை உணவுகளைப்பற்றி வலையில் தேடும் பொழுது, நான் உங்களை பற்றி நிறைய படிக்கும் வாய்ப்பை பெற்று கொண்டேஇருக்கிறேன். இத்துறையில் உங்களுடைய புலமை நன்றாக விளங்குகிறது. இந்த மே மாத ஒரு வார இயற்கை முத்துவமுகாமைபற்றி தாமதமாகவே அறிந்ததால் மிகவும் வருந்துகிறேன். புத்தகத்தில் படிப்பதை விட நேரில் இம்மாதிரி முகாமில் கலந்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன். அனால் இது போன்ற முகாமில் கலந்து கொள்வதற்கு ஆவலாக உள்ளேன். எந்த வலையில் எனது பெயரை பதிவுசெய்து வைத்தல், முகாமின் விவரங்கள் எனக்கு தெரிய வரும். அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்.

Ashwin Ji சொன்னது…

அன்பு நண்பர் மதுரை இரவிக்குமார் அவர்களுக்கு, வணக்கம்.
தங்கள் ஆர்வத்துக்கு நன்றி.
நானும் திரு அப்பனின் முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெற்றவன்தான். அதனால் அவரது கருத்துக்களை வலைப்பூவில் பரப்பி வருகிறேன்.
திரு மூ.ஆ. ஆப்பன் அவர்களது முகவரி இதோ:
டாக்டர் மூ.ஆனையப்பன், N.D.,
இயற்கை நலவாழ்வு நிலையம்
குலசேகரன்பட்டினம்
திருச்செந்தூர் மாவட்டம்
தமிழ்நாடு (இந்தியா).
PIN:628206.
திரு.மூ.ஆ.அப்பனைத் தொடர்பு கொண்டு மேல் விவரங்கள் பெற: 9380873645 & 9944042986 என்னும் எங்களை குறித்துக் கொள்ளவும்.

இந்த வலைப்பூவிலும் முகாம் பற்றிய விவரங்கள் வெளியிடப் படும். எனவே எனது வலைப்பூவில் உள்ள விவரங்களை தொடர்ந்து படியுங்கள். தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வையுங்கள்.
நன்றி.

கருத்துரையிடுக