வியாழன், 26 ஜனவரி, 2012

19. பழனி இயற்கை நலவாழ்வியல் முகாம் - இனியனின் அனுபவப் பகிர்வுகள்

இனியனின் இனிய அனுபவப் பகிர்தல் தொடர்கிறது......


இரண்டாம் நாள் 27-12-2011, அதிகாலை யோக உடற்பயிற்சி. பின்னர் உரையாடல் ஆரம்பம். இயற்கைப் பிரியன் திரு இரத்தினசக்திவேல் அவர்களின் நகைச்சுவை சொற்பொழிவு. பாராட்டுதல்” பற்றித் தொடங்கி, “விரும்பிச் செய்தால் விருந்துஅஃதன்றேல் மருந்து” எனப் பகர்ந்து, “வணக்கம் செய்யும் விதங்கள்” பட்டியலிட்டுப் பின் உணவு வகைகளைப் பலவாறு பகுத்தறிவித்தார். கார/அமிலசூட்சும/உருவதிட/திரவ, +/-, பகல்/இரவுஆரோக்கிய/அல்லாத, ... உணவுகள் (சிரித்ததால் அனைத்தையும் குறிப்பெடுக்க இயலவில்லை) என்றும்அடுத்து கீரைகளின் வகைகளையும் விளக்கிப் பின்னர் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலையும் அளித்தார். கடைசியாய் சுற்றுப்புறமும் இயற்கையும்நாம் பயின்றதைத் தொடர விடாது” என்றும் நகையாடினார்.

இவ்விடம் கற்றது: மீதூண் விரும்பேல்”. ஓர் இயந்திரவியல் வல்லுனர், “குறைவற்ற செல்வத்தோடு”, மற்றவருக்கும் இரகசியத்தைத் தெரிவிக்க விழைந்துபுத்தகங்கள் வெளியிடுவது. உளர் எனினும் இல்லாரோடொப்பர் .. கற்ற செல சொல்லாதார்” என்பதை உணர்த்தியது. நாமும் தொடர்வோம்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: புத்தகங்கள்-உரைக்கு விளம்பரமாஉரை-புத்தகங்களுக்கு விளம்பரமாஇல்லை அறுசுவையில் இல்லாத நகைச்சுவைதான் அவருக்கு விளம்பரமா?

அடுத்துதிரு திருச்செந்தில் அடிகளின் உரை. தலைப்பு மன அழுத்தம் கட்டுப்படுத்துதல்”. சில உலகளாவிய நிறுவனங்கள்அடிகளின் உரை கேட்டுள்ளதை அறிந்தோம். உடன்தன் தாடி குறித்தும் விளக்கம் அளித்தார். அவர், “மன அழுத்தத்திற்கான” முக்கியக் காரணங்கள் எனக் குறிப்பிட்டவை:

அடிப்படை வசதிகளை குறைவறப் பெற்றாலும்மனிதனின் விருப்பங்கள் மேன்மேலும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. எல்லோரும் எல்லாவற்றையும் வாங்குவதையே விரும்புகின்றனர்கொடுப்பதை வெறுக்கின்றனர். விருப்புவெறுப்பு இல்லாததடைகளற்றகட்டுப்பாடற்ற அன்பு”, இன்று யாரும் செலுத்துவதில்லை. சரியான விருந்தோம்பல் இல்லை. இன்பமோதுன்பமோபகுத்தனுபவித்தல் இல்லை. அழுத்தத்தை வெளியிடத் தயக்கம். வெளியிடங்களில் இயல்பாயிருப்பதில்லை. சிரிப்புஅழுகை, (சாமியாட்டம்!) போன்ற செயல்கள் நன்மைக்கென்ற உணர்வில்லை. மன்னித்து மறக்கும் குழந்தைத் தனம் இல்லை. சினத்தை செல்லாவிடத்து அடக்கி அல்லிடத்துக் காண்பித்தல்,... உள பிற.

இவ்விடம் கற்றது: உருவகப்படுத்தப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட துயரமே மன அழுத்தம்” வரக் காரணம். சரியே! இதுவே மிக முக்கியக் காரணம்என்றுணர்ந்தேன். மன அழுத்தம்” வராமலிருக்கப் பழக வேண்டுவன: சிறு பதிலிறுத்தல் (தேவையற்ற/இணையான விளக்கங்கள் அல்லது எதிர் வினையேற்றும் சொற்கள் தவிர்த்தல்). ஆம். இதுவே மிகச் சரியான வழியென்றும் உணர்ந்தேன்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: ஒவ்வொரு வினைக்கும் சம அளவுள்ள எதிர்வினை உண்டு என்பது உலகறிந்த உண்மை. ஆனால்ஒருவர் நமக்குச் செய்த வினையை விட, நாம் செய்யும் எதிர்வினை எப்படி அதிகச் சக்தி பெறுகின்றது?

அடுத்துமருத்துவர் திரு பேச்சிமுத்து அவர்களின் அனுபவங்களும்புது வருடத்தில் இருந்து (2012) செய்யவிருக்கும் விவசாயப் பணிகளும். ஆம்மருத்துவர் ஒருவர் தன் சிறப்பான (பணம் கொழிக்கும்) தொழிலைத் தன் கொள்கைக்காகத் துறந்துமீண்டும் ஒரு விவசாயியாக செய்யவிருக்கும் ஓர் அவதாரம். அவர் கூறியவற்றில் சில: உடல் நலம் தரும் பண பலம்”; மனிதனின் வாழ் நாளில் 500 நாள்கள் தலைவலியில்(யால்) கழிந்து விடும்சாதாரண மருந்துகள் போதுமென்றாலும் நிறைய மருந்தெழுதாவிட்டால் நோயுற்றோர்க்குச் சந்தேகம் வரும் வைத்தியர் மீது; (நடநீர் அருந்து என்று) மருந்தே எழுதாதிருந்தால் அவ்வளவுதான் திரும்ப வரவே மாட்டார்கள்.

இவ்விடம் கற்றது: மலச்சிக்கலும் தலைவலிக்குக் காரணமாகும். ஜலதோஷமல்லாத இரண்டு நாள் காய்ச்சல் உடலுக்கு மிக நன்றுஏனெனில்உடல்தான் நலம் பெற தற்காப்பு நடவடிக்கையில் உள்ளது என்பதுணர வேண்டும்நல்ல காய்ச்சல் மருந்தென்றால் வெப்ப நிலை 99ல் இருந்து 100க்கு அதிகரிக்க வேண்டும்! சிறு உபாதைகளுக்கு உண்மையான மருத்துவச் செலவு 40 பைசா தான்சிறுநீரகக் கற்களுக்கு நீரும்சிறுநெருஞ்சி முள் அல்லது வாழைத் தண்டுவாழைப்பூவும் போதும்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: இந்தப் பணி (மன) மாற்றம் சுழன்றும் ஏர் பின்னதுலகம்” என்பதால் மற்றெல்லாம் தொழுதுண்டு” பின் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பா அல்லது நிலமென்னும் நல்லாள்” நகுவாளென்றா?

பின்னர்வாழையிலைக் குளியல் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடமும்சென்றடையும் வழியும்செய்த முறைகளும் மற்ற நண்பர்கள் விரிவாக விவரித்துள்ளார்கள். ஆகவேஅதற்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குத் திரும்பிசிறிது நேர விளையாட்டிற்குப் பின்ஆரம்பித்தது திரு சின்னசாமி அவர்களின் நூறு சதவிகித இயல்பான தன்னிலை விளக்கம். வெகு சிலருக்கேசிறு(குருவருள்/இறையருள்)பொறி கொண்டுதன் மெய்யையே நெய்யாக்கிஅதைப் பெரிய நெருப்பாக மாற்றிகற்றறிந்துகடைப்பிடித்து (தனியாளாய் மூச்சடக்கல் பயிற்சி செய்வது)உதாரணமாய் விளங்குவதுசெய்தும் காண்பிப்பது சாத்தியமாகும். பஞ்ச சுத்தி” என்ற தலைப்பில் பேசத் தொடங்கினார். ஐந்து பூதங்களின் (நிலம்நீர்நெருப்புகாற்றுவான்) சுத்திகரிப்பு மற்றும் அவற்றின் சாரமாகவே அமைந்திருக்கும் உடலினைச் சுத்தம் செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினார். கந்தர் அனுபூதிபிராணயாமம் பற்றியும் விளக்கமளித்தார். நமக்குள் இருக்கும் இறை (இறைசக்தி)தனை நாம் காணஅதன் மேல் மூடியிருக்கும் மலமாசுகளை அகற்ற வேண்டும் என்றார். கிடைத்தற்கரிதான இம்மானிடப் பிறப்பின் பெருமையையும்ஞானமும் கல்வியும் நயந்து பின் தானமும் (மெய்த்) தவமும் செய்யத் தூண்டினார். கூட வருவது பாவமும் புண்ணியமும் என்றிருந்தோம்ஆனால்விரதமும் ஞானமும் கூடகூட வருமென்றார். குல தெய்வ வழிபாடு நன்றென்றார்.

இவ்விடம் கற்றது: திண்ணியர் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர். பிராணயாமம் செய்யும் முறை. பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக்கால்” என்பதற்கேற்ப உடலை மண்ணாக்காமல்பொன்னாக்க செய்ய வேண்டிய முயற்சி.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: ஒரு எம்.பி.ஏ உதவியாளர் இவருடன் இருந்திருந்தால்இவர் இணரூழ்த்தும் மலர்” ஆகியிருப்பாரோகுலதெய்வம் இருக்கமும்மூர்த்திகள்மும்மூர்த்திகளின் குடும்பங்கள்அவர்களின் அன்புப் பணியாளர்கள்குறுந்தெய்வங்கள் என்று எண்ணற்ற தெய்வங்களும்பல சித்தர்களும்குருக்களும் தம் சக்திகளை வெளியிட்டுப் பிரிவினைகளுக்கு வித்திடுகின்றனராரமணரை வியந்த சங்கராச்சாரியார்கள் இப்பொழுது உண்டானால்நன்றாயிருக்கும் அல்லவா?

இப்பொழுது நேரம் மாலை சுமார் 7:00மணி. நாங்கள் அமர்த்தப்பட்டது வேலன் விகாஸ் பள்ளியின் ஒரு வகுப்பறை. திரு திருச்செந்தில் அடிகள் எடுத்துக் கொண்ட தலைப்பு பிரபஞ்சம்”. இவ்வுலகம்இறையின் திருவிளையாடலா என்று ஆரம்பித்த அடிகளார் இன்பம்/துன்பம் குறித்து விளக்கினார். இறை சக்தியை தோற்றமும் முடிவும் இல்லாததென்றார். அறிவும் அத்தகையதே என்றார். உயிர் உடலோடு சேர்ந்து அறிவு என்று அறியாமை கொள்கின்றது”, “உயிர் உடலோடு சேர்ந்தவுடன்உடலைத் தானென்று எண்ணும்” என்றார். அறிவு எங்கும் வியாபிக்கும் வல்லமை பெற்றது. உதாரணமும் அளித்தார்: ஒரு பேருந்து இயக்குனரின் அறிவுமுழு பேருந்தின் அளவிற்கும்மற்ற வாகன ஓட்டிகளின் அறிவு அவ்வவ்வாகனத்தின் அளவையும் ஒத்திருக்கும் அல்லவாபின்னர் அறிவிற்கும் உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிட்டார். அறிவு நிரந்தரமானதானாலும் வலிதில்லை. உணர்ச்சி வலிதானாலும் நிரந்தரமில்லை”. தவம் என்பதுநம்முடைய சுகதுக்க உணர்ச்சிகளை நம்முள் புக அனுமதித்துப் பின் நம்மைக் கடந்து செல்லவும் அனுமதிப்பதாகும் என்றார். தன்னைத் தானே மூன்றாம் நபராய்ப் பார்க்கும் முறையை அறிவித்தார். நம் இயக்கமும் அறிவின்இறைசக்தியின் பதிவுகள் என்றார்.

இவ்விடம் கற்றது: தோன்றி மறையும் தன்மை இறைசக்திக்கும்அறிவுக்கும் இல்லை என்பது. ஆற்றல் மாறாக் கோட்பாட்டிற்கு ஒரு மறு பார்வை.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: கூட வருவதென்றால்மறுபிறப்பும்/மறப்பும் ஏன். புல்லாகிப் பூடாய்,... எல்லாப் பிறப்பும் வரக் காரணங்கள் பதிவுகள் மட்டும் தானா அல்லது அறிவின் பெருக்கமா? “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்பது தமிழிலக்கணம். ஐ மற்றும் ஔ விதி விலக்காஈருடல் மேல் ஓருயிர் ஒன்றும் பிற மொழியிலக்கணம் தவறாஉயிரணுவும் (உடலோடு?) மற்ற உயிரணுவும் (உடலோடு) சேர்ந்து புதிய உயிர்மெய் கொடுக்கும் விதம்தமிழிற்கில்லையா?
(பகிர்தல் தொடர்கிறது...)

4 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\ஒவ்வொரு வினைக்கும் சம அளவுள்ள எதிர்வினை உண்டு என்பது உலகறிந்த உண்மை. ஆனால், ஒருவர் நமக்குச் செய்த வினையை விட, நாம் செய்யும் எதிர்வினை எப்படி அதிகச் சக்தி பெறுகின்றது?\\

உலகறிந்த உண்மை பொருள் உலகிற்கு சரி, அருள் உலகிற்கு பொருந்தா., காரணம் வேதாத்திரி மகானின் கவியை பகிர ஆசைப்படுகிறேன்.

கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி
உடல்வலிவு, சுகம், செல்வம்,மனிதர்கட்கு
வரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப
வாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.

எதிர்வினை மேற்கண்ட முக்கிய காரணங்களின் தன்மைக்கேற்ப மாறுபட்டே இருக்கும்.,

Ashwin Ji சொன்னது…

தக்க தருணத்தில் வேதாத்திரியத்தில் இருந்து ஒரு அருமையான கருத்தை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி சிவா சார்.
இதன் மூலம் இனியனின் கேள்விக்கு விடை கிடைத்திருந்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
தொடர் ஆதரவுக்கு என் இதய நிறை நன்றி.

Iniyan சொன்னது…

என் தாழ்மையான கருத்துக்களைப் பதிவு செய்த திரு ஹரிஹரன் அவர்களுக்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரு சிவா அவர்களுக்கு, தங்களுடைய (இக்குறிப்புகளைப் படித்த மற்றும் பதிலிறுத்த) நேரத்திற்கும், பகிர்ந்து கொண்ட பாடலுக்கும் நன்றி. எதிர்வினைக்கான காரணங்கள் அறிந்தேன். இன்னும் தெளிவு பெற வேண்டி என்னுடைய சந்தேகத்தை மேலும் விரிவாக எழுதியுள்ளேன். நான் குறிப்பிட்ட வினை மற்றும் எதிர்வினை வேறு வேறு செயல்கள் அன்று. உதாரணம், ஒருவரை பாராட்டுகின்றேன் அல்லது இழிசொல் உமிழ்கின்றேன் என வைத்துக் கொள்ளுங்கள். அதே ஒரு சொல், நானாக முதலில் செய்யும்பொழுதைவிட, அவர் செய்த ஒரு செயலுக்காகத் திரும்பிச் செய்யும், எதிர்வினையாகும் பொழுது அதிக வலுப்பெறுகின்றதே. அதைத்தான் எண்ணி வியக்கின்றேன். அதற்கும் காரணங்கள் சில அப்பாடலில் கிடைக்கப் பெற்றேன்.

Ashwin Ji சொன்னது…

வணக்கம் இனியன்.
தங்கள் எண்ணங்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்பமைக்கு நன்றி.
அன்போடு,
அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக