செவ்வாய், 24 ஜனவரி, 2012

18 பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம். அனுபவப் பகிர்வுகள்.


கடந்த பதிவில் முன்னுரை. இப்போது இனியனின் அனுபவ உரை..
பழனி பயிற்றுலா(25-12-2011 முதல் 30-12-2011)குறிப்புகள். -கி.நச்சினார்க்கினியன்
அனுபவ உரை..

நாம் அறிவோம், “கற்றது கைம்மண் அளவுகல்லாதது உலகளவு” என்று. அனைத்தும் கற்றிட ஆசையிருந்தாலும், “கல்வி கரையிலகற்பவர் நாள் சில”. இந்தப் புதிருக்குச் சரியான விடை கற்றிலன் ஆயினும் கேட்க”. ஆம்இதுவே சிறந்த குறுக்கு வழி, “கற்றலின் கேட்டலே நன்று”. கேட்டோம்கற்றிராதனவும்கற்றவைக்கு மற்றப் பொருளுரைகளும்.
பழனியில் 25-12-2011 மாலையில்முதலில் நாம் கண்டவர்திரு.ஹரிஹரன்(அஷ்வின்ஜி) அவர்கள். சந்தித்தவிடம் ஓர் உணவகம். ஆம்இரவுக்கு என்ன கிடைக்குமோவென்ற எண்ணத்தில் நாங்கள் சிற்றுண்டி முடித்திருந்தோம். இவருடன் வந்திருந்தவர் திரு.பிரேம். எங்களை அழைத்துக் கொண்டு சென்ற இடம் யோகாச்சார்யா திரு.முருகன் அவர்களின் இல்லம். பெங்களூரிலிருந்து காட்டிற்கு எனக் கூட்டி வந்து திரு.முருகன் அவர்களின் வீட்டிலேயே உறங்கி ஓய்வெடுக்க வைத்தனர். வீட்டின் உள்ளேயும்வெளியேயும் நாங்கள் கண்டது இறைவடிவங்கள். திசை நோக்கி கால் நீட்டும் பழக்கம்இங்கு பழனி மலை நோக்கி சிரம் வைத்து உறங்கினோம்.

இவ்விடம் கற்றது: தமிழில் உரையாட விழையும் உள்ளங்கள் உறைந்திருக்கக் கண்டதும்பாரதியின் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்கும்..இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் மெல்லத்தமிழினிச் சாகும் என்ற பேதையின்’ பெரும்பழி தீரும்” என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: தமிழில் இறைவணக்கம்யோகம் உண்டா?

முதல் நாள் 26-12-2011அதிகாலை குளித்தவுடன் எங்களுக்கு அன்புடன் வழங்கப்பட்டது உண்மையான தேனீர் (தேன்+நீர்). அங்கு அறிமுகமானோர் திரு நாகராஜன் மற்றும் திரு பாஸ்கர். கிளம்பிச்சென்ற இடம்பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு புளியமரத்துக் கொட்டகை. மின்சார வேலியுடன் கூடிய ஒரு பெரியத் தோட்டம். இங்கு நாம் அறிமுகம் உற்றது மெய்த்தவ திரு திருச்செந்தில் அவர்களுடன். இவரும் திரு முருகனைப் போல் வெள்ளையாடையுடன். (வெள்ளைக்கில்லைக் கள்ளச்சிந்தை!). பின்னர் இயற்கை உணவு தயாரிப்பதில் வல்லுனரான திரு ரமேஷ் அவர்களுடன் அறிமுகம். மற்றும் சில பயிலுனர்கள் (திருவாளர்கள் பன்னீர்செல்வம்பரிமளாதேவிபாஸ்கரன் மற்றும் செல்வன் ஹரி) அறிமுகம். திரு திருச்செந்தில் அடிகள் செய்த வேள்வியுடன் துவங்கியது இயற்கை உணவு முகாம்.

இவ்விடம் கற்றது: எந்த ஒரு செயலும் இறைவணக்கத்தோடு செய்தல் நலம் பயக்கும்,  வேள்வியென்றாலும் சரிஉணவுட்கொண்டாலும் சரி.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: உலகம் பழித்ததையொழித்த திரு திருச்செந்தில் அடிகள் முகச்சவரம் செய்யாதது ஏன்?


பின்னர்நாங்கள் சென்ற இடம் பழனியில் உள்ள சாய்சதன் அரங்கம். இங்கே திரு.கோ.சித்தர் அவர்களின் அருமையான உரை. முயற்சி திருவினையாக்கும் என்பதறிவோம். எதுவரை முயற்சிக்க வேண்டும் என்பதை எளிமையாய் விளக்கினார் முயற்சி: நம்மால் முடியும் வரை அன்றுநினைத்த குறிக்கோள் முடியும் வரை” என்று. உணவுக்கும் திணை கொடுத்தார் (உயர்திணைஅஃறிணை போல்)உயர் நிலைதாழ் நிலைநடுநிலை என்று. பயனளித்துத் தானாக வெளியேறும் நீர்காற்று உயர் நிலையாம். சிறு முயற்சியோடு செரிப்பவைகளான பழங்கள்கீரைகள் நடு நிலையாம். பெரு முயற்சி வேண்டுபவை மற்ற சமைத்த/சமைக்காத சைவ/அசைவ உணவுகள் எல்லாம் தாழ் நிலையாம். நாடிய நோய் தீரநோய் முதல் நாடுவோம்ஆம் தாழ் நிலை உணவு தான் அதுஎன்பதறிந்தோம்.

இறைவன் உயிர்களைப் படைத்த பொழுதே அவற்றிற்கான உணவையும் படைத்து முடித்திட்டான். அரிசி-எலிக்கும்கிளிக்கும் என்றார்பால்-(செரிக்கும் உறுப்புகள் முழு வளர்ச்சியுறாத) குழந்தைக்கென்றார்காய்கள்-குரங்குக்கும்தாவரங்கள்-ஆடு மாடுகளுக்கும்கிழங்கு-பன்றிக்கும்மாமிசம்-மற்ற விலங்குகளுக்கும் என்றார்ஆனால் மனிதன் மட்டும் செயற்கைச் சுவைக்கு (சமைத்த உணவிற்கு) மாற்றம் பெற்றதற்கு வருந்தினார். மனிதனுக்கேற்ற நடுநிலை உணவுகளுக்குப் பட்டியலிட்டார். ஒற்றைஇரட்டைகூட்டுச் சர்க்கரைக்கு விளக்கம் தந்துநீரிழிவு நோய்க்குக் காரணமும் கூறினார். கைக்குத்தல் அரிசிக்கும்நாட்டுச் சர்க்கரைக்கும் நன்றி பாராட்டினார். பெற்றோர் உணர்ந்திட்டப் பெயருக்கேற்றார் போல்பயனீந்தார். உரை கேட்டோர் சிலர் கேள்விகளுக்கும் விடை தந்தார். மறதிக்கும்உடல் சூட்டிற்கும்,  வாயுத்தொந்தரவுகளுக்கும்உடல் துர்நாற்றத்திற்கும்வேர்க்கடலை முதல் மற்ற பருப்புகள் உண்ணும் முறைக்கும் விளக்கமளித்ததும் பாராட்டத்தக்கது. படிக்கச் சொன்னது ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் புத்தகம். முயல்வோம்!

இவ்விடம் கற்றது: பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் உணவுகளைத் தவிர்க்க ஒரு பொறி. பனையடியில் பாலுண்டாலும்கள்ளுண்டாலும் ஒன்று என்பதற்கு மாற்றுப் பார்வை. (இரண்டு பேரும் குடிப்பழக்கத்திற்கு அடிமைகள் தான்).

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: குளிர் சாதனப் பெட்டியைப் பிணவறை என்றார். உபயோகிப்போர் மனம் வருந்தத்தான் செய்யும். உயிருள்ள அணுக்களையும் (இரத்தம் முதல்செல்கள் வரை) பல்லாண்டு பாதுகாக்கும் பெட்டிவிரைவில் அழியும்அழியப் போகும் பொருள்களையும் பாதுகாக்கும். அழிந்தவற்றையும் அதனுள் வைப்பதால்அதற்கு மட்டும் தான் (அழிந்த பொருள்களுக்கு மட்டும் தான்) என்றில்லை என்பதுஎன் எளிய கருத்து.

பின்னர் நாங்கள் கொட்டகைக்கு(தோட்டத்துக்கு)த் திரும்பினோம். மதிய இயற்கையுணவிற்குப் பின் சிறு ஓய்வு. நான்கு மணியளவில்யோகாச்சார்யா திரு முருகன் அவர்கள்நலம் தரும் யோகம் பயிற்றுவித்தார். யோகாவிற்குத் தயாராகும் முறைகள்ஆசனங்கள் செய்வித்துப் பின்னர் சூரிய நமஸ்காரம் செய்யும் முறையையும் சொல்லிக் கொடுத்தார். சிறுவன் ஹரிபிரகாஷ் அருமையாகச் செய்ததுடன்பெரியவர் கேட்கத் தயங்கும் (ஆனால் கேட்க விரும்பும்) சந்தேகங்களை எழுப்பியதும் பாராட்டத்தக்கது.

இவ்விடம் கற்றது: நோய்க்கு இடம் கொடேல்”; “பெருமை பெருமிதம் இன்மை” என்ற வரிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய திரு.முருகன் அவர்களின் எளிமையான தோற்றமும்நா நயமும்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: பெரும்பான்மையான நேரங்களில் திரு முருகன் அவர்கள் கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு பேசுவது பழக்கத்தினாலாகுறிப்பிட்ட காரணத்திற்காகவா? (அலுவலகத்தில் சில மேல்நாடுகளில் இப்பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டேன்).

சுமார் 4:30 மணியளவில்திரு.திருச்செந்தில் அடிகளின் பதஞ்சலி யோக சாஸ்திரம்” குறித்த விளக்கவுரை தொடங்கியது. துவக்கத்தில்இந்தியர்களின் அறிவைப் பாராட்டும் விதமாய்உயிர் துறந்தோரின் உடலைப் பாதுகாக்க மற்ற நாடுகளில் இருந்த பழக்கங்களைப் படம் பிடித்தார். திருவாசகத்திலேயே கூறப்பட்டக் கருத்துக்கள்இப்பொழுது மேல் நாடுகளில் புதிய வானியலுடன் ஆராய்ச்சி செய்யப்படுவதைத் தெரிவித்தார். சிறு அறிவு பெற்றவுடன் தோன்றும் ஆசைஅகங்காரம் வளரும் விதத்திற்கும்பின்னர் அவற்றை அழிக்கும் சிரமத்திற்கும்காரணங்கள் கூறினார். யமநியம விளக்கம் ஒரு ஆரம்பம். ஒவ்வோர் உடலணுக்களில் (செல்களில்) உயிர்இறை (அற்புத சக்தி) நிறைந்திருப்பதைச் சுட்டினார்.

இவ்விடம் கற்றது: மனதிற்குக் கடிவாளங்கள் அப்பியாஸம் மற்றும் வைராக்கியம். கற்க வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது திருக்கோவையார்” புத்தகத்தை. முயல்வோம்.

இவ்விடம் மனதில் எழுந்த சந்தேகங்கள்: அற்புத சக்தி (இறைவன்) என்பதற்கு மெய்த்தவ விளக்கம் என்ன? “கல்மறமீண்டும் கல்” என்ற சொற்றொடருக்கான விளக்கம் என்ன? “அகங்காரம் அல்லாது தைரியம் தோன்றாது” என்ற புதுமைக் கருத்துக்கு விரோதமா?

பிற நண்பர்கள் குறிப்பிட்டது போல்பழனியாண்டவனின் இரு முகங்களும், “முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்றெண்ணிமுகம் நகநெஞ்சத்தகம் நகஅனைவரும் தங்க எதிரிலுள்ள வேலன் (பழனி முழுதும் முருகன் பெயர் சொல்லும்) விகாஸ் பள்ளி விடுதியில் அனுமதி பெற்றது மிகவும் பாராட்டத்தக்கது. 


விரைவில் அமையவிருக்கும் புதிய பயிலகம் மற்றும் தங்கும் வளாகம்அடுத்துப் பயிலவருவோர்க்கு ஒரு வரப்பிரசாதம்.
(பகிர்தல் தொடரும்)

2 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

நிகழ்வின் பகிர்வுகள் சிந்தனையை தூண்டிய விதமாகவே இங்கு படைக்கப்படுகிறது.,

படிப்பவரையும் அவ்வண்ணமே தூண்டுகிறது., தொடர்க.,

Ashwin Ji சொன்னது…

வணக்கம் சிவா ஜி.
கருத்தூன்றிப் படித்து உடனடியாக கருத்துரைகளை இட்டு ஊக்கப் படுத்தும் தங்களை பணிந்து வணங்குகிறேன்.
இதய நிறை நன்றி.
பகிர்தல் தொடரும்.
வருக.வருக.

அன்போடு

'அன்பே சிவம்' அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக