திங்கள், 26 அக்டோபர், 2015

இயற்கை நலவாழ்வியல் நூல் : உயிர் காக்கும் உணவு மருத்துவம்

சமீபத்தில் நான் படித்து பயன் பெற்ற இயற்கை நலவாழ்வியல் நூல் பற்றிய அறிமுகத்தினை நீங்களும் படித்து பயன் பெற இங்கே தருகிறேன்.

உயிர் காக்கும் உணவு மருத்துவம்
(பஞ்ச பூத சிகிச்சையுடன்)ஆசிரியர்: திரு அ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G. Dip in Yoga

இந்த நூல் 304 பக்கங்களைக் கொண்டது. Rs.266/- விலை மதிப்புள்ள இந்த அழகிய நூல், பதிப்பாளரின் சிறப்பு அறிமுகச் சலுகை விலையாக ரூ.194/- விலையில் கிடைக்கிறது.



ஆரோக்கியமும், ஆனந்தமும் தரும் இயற்கை உணவின் பெருமையை விளக்கும் நூல். ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் தூண்களாக விளங்கும், திரு.இர.இராமலிங்கம், திரு.ச.குஞ்சிதபாதம், மற்றும் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளான திருமூலர் யோகா இயற்கை உணவு ஆய்வு அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் யோகி தி.ஆ.கிருஷ்ணன், தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க இணைச் செயலர் திரு.மு.சி.தேவதாஸ் காந்தி, பவித்ரா இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை, மருதமலை, டாக்டர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் டாக்டர் சுமதி குணசாகரன், பிரம்மா ஸ்ரீ கொ.எத்திராஜ் (சித்த வித்தை தவமையம்) ஆகியோரின் கூட்டு முயற்சியால் வெளி வந்துள்ள நூல் இது.

பல ஆண்டுகளாக இவர்கள் நடத்திய இயற்கை நலவாழ்வு முகாம்களில் வழங்கப் பெற்ற செய்திகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிரேது.

இந்த நூலினை மிக அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார் பதிப்பாசிரியர் திரு.பாபா வள்ளுவன்.

உங்களது சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிப் படிப்பது மட்டுமின்றி, உற்றார் உறவினர்களுக்கு, திருமண/பிறந்த நாள் பரிசாக வழங்கி மகிழ இந்த அழகிய பயன்மிகு நூலை மொத்தமாக வாங்கிப் பரிசளித்து மகிழ பதிப்பாளரின் முகவரியினை கீழே தந்துள்ளோம்.
,
பதிப்பாளர் முகவரி:
பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்,
10/3, எத்திராஜ் தெரு,பத்மநாப நகர், 
சூளை மேடு, சென்னை 94

தொடர்புக்கு: 97875 55182, 95660 63452

வாழி நலம் சூழ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக