வியாழன், 2 பிப்ரவரி, 2012

விகடனின் வரவேற்பறையில் 'வாழி நலம் சூழ...'

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்.

உங்களால் நாள்தோறும் உயர்வு பெற்று வரும் உங்கள் வலைப்பூ ''வாழி நலம் சூழ.." விகடனின் வரவேற்பறையில் இடம் பெற்று இருக்கிறது. 

04-01-2012 தேதியிட்ட ஆனந்த விகடன் பத்திரிக்கையின் வரவேற்பறை பக்கத்தில் வந்திருக்கும் செய்தியின் ஸ்னாப்ஷாட் இதோ.


இந்தச் செய்தி வெளியாக பெரிதும் உறுதுணையாக இருந்த திருநீலக்குடி திரு.மா.உலகநாதன், துணைத் தலைவர், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் அவர்களுக்கு என் இதய நிறை நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். 

கடந்த ஜனவரி_2012இல் மட்டும் 6422 பார்வையாளர்களை வாழி நலம் சூழ..வலைப்பூ கவர்ந்திருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பதிவு வெளியிடும் வரை இந்த வலைப்பூ பெற்றிருக்கும் மொத்த ஹிட்ஸ் 26758.

உலகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களது இதயங்களைக் கவர்ந்திருக்கும் வாழி நலம் சூழ... வலைப்பூவின் இந்த எளிய வெற்றி உங்கள் ஆர்வத்தின் வெளிப்பாடு என்பதில் எந்த ஐயமும் இல்லை. உங்கள் எதிர்பார்ப்புக்களும், வலைப்பதிவர் என்கிற முறையில் எனது எதிர்பார்ப்பும் ஒரே திசையில் பயணிக்கின்றன என்பது ஐயமின்றி உங்கள் தொடர் வருகையால் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

மருந்தில்லா மரு(க)தத்துவமான இயற்கை நலவாழ்வியல் தத்துவத்தினை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கான நேரடிப் பயிற்சிக் களங்களை அமைத்துத் தருவது, அவர்களுக்குத் தேவையான செய்திகளைப் பகிர்வது போன்ற இயற்கை நலவாழ்வியல் சேவைகளை லாப நோக்கமின்றித் தொடர்ந்து செய்ய எனக்குத் தந்து வரும் ஆதரவுக்கு உங்கள் எல்லாரையும் பணிந்து வணங்குகிறேன்.
வாழி நலம் சூழ...

அன்புடன்,
அஷ்வின்ஜி.
இயற்கை நலவாழ்வியல் ஆர்வலர்.
சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக