திங்கள், 2 ஜனவரி, 2012

2. பழனி யோகா-இயற்கை வாழ்வியல் முகாம் அனுபவப் பகிர்வுகள்.

பகுதி இரண்டு: பழனி யோகா-இயற்கை வாழ்வியல் முகாம் அனுபவப் பகிர்வுகள்.

யோகா, ஆன்மிகம் இணைந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் ஒன்றினை கடந்த வாரம் (26-12-2011 to 30-12-02011) பழனியில் வெற்றிகரமாக நிகழ்ந்தது.  இந்த முகாமில் பங்கேற்ற அன்பர்கள் பெரிதும் பயன்பெற்று மகிழ்ந்தார்கள். 

பழனியை சேர்ந்த யோகாசார்யா திரு.ஆர்.முருகன்(யோக பூரண வித்யா)அவர்களும், தவத்திரு.திருச்செந்தில் அடிகள் (மெய்த்தவம்) அவர்களும், அருட்கொடையாளர் திரு.மணி (தமிழ்நாடு இரும்பு வணிக உரிமையாளர்) அவர்களும், இந்த முகாம் வெற்றிகரமாக நடைபெற   பெரிதும் உதவினர். 

இந்த முகாமில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து: 
 1. திரு.A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), இயற்கை நலவாழ்வியல் ஆர்வலர் மற்றும் முகாம் அமைப்பாளர்.
 2. திரு.B..பிரேம்குமார், P.G.Dip(Yoga), யோகா ஆசிரியர், இயற்கை நலவாழ்வியல் ஆர்வலர் மற்றும் தொழிலதிபர்.
 3. திரு.V..பன்னீர்செல்வம், (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்)
 4. திரு.K. நாகராஜன், ஆன்மீக செல்வர்.
 5. திரு.N.பாஸ்கர், (ஐ.டி.நுட்பவியல்,சோலாரிஸ் குழுமம், சென்னை)
பெங்களூருவில் இருந்து:
 1. திரு.K. நச்சினார்க்கினியன், மென்பொருள் பொறியாளர்.
 2. திருமதி ராதா இனியன்
 3. அவர்களது மகள் செல்வி. நவீனா (பள்ளி மாணவி)
 4. அவர்களது உறவினர் செல்வி. எஸ்.அபிதா. (CA பயிலுனர்)
கோவையில் இருந்து:
 1. திருமதி.பரிமளாதேவி (இல்லத்தரசி)
பழனியில் இருந்து 
 1. திரு.B.பாஸ்கரன், (BSNL), பழனி
 2. செல்வன்.ஹரி பிரசாத், (பள்ளி மாணவர்)
 3. திருமதி.செல்லத்தாயி, தலைமை ஆசிரியை, பழனி,
 4. திருமதி.யோகமணி (இல்லத்தரசி)
ஈரோடு சிவகிரியில் இருந்து:
 1. திருமதி.M.தமிழ்ச்செல்வி, யோகா ஆசிரியர்.
மற்றும் பழனி நகரில் இருந்து பல அன்பர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள்.

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் பன்னிரண்டாவது கி.மீ தொலைவில் புளியமரத்து ஷெட் என்கிற ஊரில் தமிழ்நாடு இரும்பு வணிகம் நிறுவன அதிபர் திரு.மணி அவர்களுக்கு சொந்தமான தோப்பில் இருக்கும் உள்ள ஒரு ஆன்மீக மையத்தில் முகாம் அமைக்கப்பட்டது. தோட்ட உரிமையாளர் திரு.மணி அவர்கள் நேரடியாக வந்திருந்து அனைத்து வசதிகளும் சரியாக செய்யப்படிருக்கிறதா என்று மேற்பார்வை இட்டார்கள்.

டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி அன்றே அன்பர்கள் ஒவ்வொருவராக பழனிக்கு வந்து சேர்ந்த வண்ணம் இருந்தார்கள். அவர்களை யோகாச்சார்யா முருகன் அவர்கள் வரவேற்று லட்சுமிபுரத்தில் உள்ள அவரது யோகா பயிற்சி மையத்தில் தங்க வைத்தார்கள். 

நானும், பிரேமும் இயற்கை உணவு தயாரிப்பாளர் திரு.ஆ.சா.ரமேஷ் (கும்பகோணம்) உடன் சேர்ந்து கொண்டு ஐந்து நாட்கள் முகாமுக்குத் தேவையான பொருட்களை ஞாயிற்றுக்கிழமை அன்று திரட்டினோம். சென்னை அன்பர் திரு.பன்னீர்செல்வம் எங்களுடன் உதவியாக சேர்ந்து கொண்டார்.

அனைத்து பொருட்களையும், ஒரு மினி லாரியில் ஏற்றிக் கொண்டு இரவு சுமார் ஒன்பது அளவில் முகாமுக்கு கொண்டு சென்றோம். அன்றைய இரவு முகாமில் தங்கினோம். நாங்கள் தங்கி இருந்த இடம் யானைகள் கடக்கும் பாதையை ஒட்டி இருப்பதினால் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தது.

கொடைக்கானல் மலைச்சாரலில் அமைந்த இந்தத் தோட்டத்தில் ஒரு எளிமையான அமைதியான தவக்குடில் அமைந்துள்ளது. பல தவ சிரேஷ்டர்கள் இங்கே ஆண்டுக் கணக்கில் தங்கி தவம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, எங்களுக்கும் இங்கே தங்க வாய்ப்பு கிடைத்திருப்பதே பெரிய பாக்கியம் என்று எண்ணி மகிழ்ந்தோம்.

கீழே பல ஜமுக்காளங்களை விரித்தும், அதில் படுத்து பல போர்வைகளைப் போர்த்திக் கொண்டும் உறங்க முயற்சித்த எங்களை தூங்க விடாமல் சிலிர்க்க வைக்கும் குளிரில் நாங்கள் அன்று இரவுப் பொழுதினைக் கழித்தோம்.  நள்ளிரவு நேரத்தில் யானைகளின் பிளிறல்கள் எங்கள் காதில் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தன. அது மட்டுமின்றி நள்ளிரவின் அமைதியை குலைக்கும் இரவுப் பூச்சிகளின் பல்வேறுவிதமான சப்தங்களின் மத்தியில் நாங்கள் அந்த ஞாயிற்றுக் கிழமையின் இரவுப் பொழுது ஒருவாறாகாக்  கரைந்தது.  
(பகிர்வுகள் தொடரும்)


அடுத்த பதிவுக்கு 

4 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

முகாம் அனுபவங்கள் கண்முன்னே காட்சியாக விரிகின்றது..தொடர்ந்து விவரமாகவே எழுதுங்கள் அஷ்வின்ஜி..

Ashwin Ji சொன்னது…

ஆக்கபூர்வமான முறையில் தொடர்ந்து ஆதரித்து வருபமைக்கு நன்றி ஐயா. சிவனருட்செல்வர் சிவாவின் அன்பில் சிவத்தைக் காண்கிறேன். முகாம் அனுபவப் பகிர்வுகள் தொடருகின்றன. ஓம் நமசிவாய.

Geetha Sambasivam சொன்னது…

யானையோடயே தூங்கின உங்கள் தைரியம் மெச்சத்தக்கது. அப்படியே ஒரு யானையை ஓட்டிட்டு வந்திருக்கக் கூடாதோ? வீட்டில் வைச்சு வளர்த்திருப்பேனே!

Ashwin Ji சொன்னது…

ஹா.ஹா. கீதாஜி.
யானையை கட்டி தீனி போட முடியுமா? அதுவும் போயும் போயும் ஒரு காட்டு யானையை.! உங்கள் ஆர்வத்தை மெச்சுகிறேன். :)))

கருத்துரையிடுக