திங்கள், 28 மார்ச், 2011

2. கனி இருப்ப...


கடந்த பதிவு ஒரு முன்னறிவிப்பாக வந்ததை நிறையப் பதிவுலக அன்பர்கள் பார்வை இட்டிருக்கிறார்கள் என்பதை கண்டேன். அனைவருக்கும் என் இதய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

நாட்டில் மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கான வசதிகள் உட்கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? அரசு சார்பான மக்கள் நலத்துக்கான முனைப்புக்கள் என்ன? தனியார் துறையின் ஈடுபாடும், முதலீடும், நோக்கமும் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
இன்றைய அளவில் நமது நாட்டில் மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் இல்லாத ஊரே இல்லை என்ற நிலை வந்து விட்டது. ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யூனானி, இயற்கை மருத்துவம் என்று பல பலவிதமான பாரம்பரிய மாற்று மருத்துவ முறைகள் இருப்பினும், அலோபதி என்னும் ஆங்கில முறை மருத்துவமே மிகவும் பிரபலமாகவும், மக்களால் விரும்பிச் சென்று எடுத்துக் கொள்ள கூடிய மருத்துவ முறையாகவும் இருக்கிறது.
ஆனால் தற்போது மருத்துவம் என்பது மிகப் பெரும் செலவுகளை உண்டாக்கக் கூடிய, தொடர் பக்க விளைவுகளை உண்டாக்கக் கூடிய, எப்போதுமே மருந்துகளை சாப்பிட வேண்டிய, மருத்துவர்களை தேடி ஓடக் கூடியதான ஒரு சாத்தானின் சங்கிலித் தொடராக மாறிவிட்டது. இதற்கான காரணங்கள் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளையும், நம் முன்னோர்கள் வாழ்கை முறையாக விட்டுச் சென்ற எளிமையான அருமையான, பின்பற்றுவதற்கு எளிதான இயற்கை நல வாழ்வியல் தத்துவங்களை கடைப் பிடிக்க மறந்து போனதே ஆகும்.
நச்சத் தன்மை கொண்ட மருந்துகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட விரும்புகிறீர்களா?
நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா?
மருத்துவ மனைகளில் நேரத்தையும் பணத்தையும், உற்றார் உறவினர்களின் உதவிகளை எதிர்பார்த்து, வைத்தியம் பார்த்துக் கொள்வதை தவிர்க்க விரும்புகிறீர்களா?
இதற்கான தீர்வு.
இயற்கை உணவுகளை தினமும் உண்பது.
யோகாசனங்கள் பயில்வது, அவற்றை தினமும் செய்வது.
தியான முறை ஒன்றினை கற்றறிந்து தினமும் தவறாமல் செய்வது.
பிராணாயாம முறைகளை தினமும் பின்பற்றுதல்.
நல்லோருடன் அடிக்கடி சந்தித்து அவர்களுடன் உரையாடி நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வது; நாம் கற்றுக் கொண்டவற்றை பற்றி மற்ற நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு சொல்லி அவர்களையும், இயற்கை நலவாழ்வியல் முறைகளைப் பின் பற்றச் சொல்லி ஆலோசனைகள் சொல்வது.
சரியான நபர்களிடம் மேற்கண்ட முறைகளை கற்றுக் கொள்வது.
அஷ்வின்ஜி.

தொடரும்.....

அடுத்த பகுதியை படிக்க: கனி இருப்ப. பகுதி மூன்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக