புதன், 19 ஜனவரி, 2011

ஆரோக்கிய ஆத்திச்சூடி...
அதிக உணவு ஆபத்து உயிர்க்கு
ஆற்றாப் பசிக்கு அரைவயிறே புசி..
இனிப்பை ஒதுக்கி இன்னலைக் குறை
ஈடில்லா வாழ்விற்கு இயற்கை நலவழி நோக்கு
உடலைக் குறைத்து உடல் நலம் பெருக்கு.
ஊண் பெருக்கம் வாழ்நாளை குறைக்கும்
எளிமை உணவு இனிமை உயிர்க்கு
ஏறி விட்ட எடையை இறக்குவது கடினம்
ஐம்புலன் கவனம் ஆற்றலை பெருக்கும்
ஒருபோது உண்பான் யோகி; மூன்றுபோது உண்பான் ரோகி
ஓடி உழைக்க உணவு செரிக்கும்; உடல் நலன் செழிக்கும்
ஔவைக்கு மட்டுமல்ல
நெல்லிக்கனி. 
அஃதே அனைவருக்குமாம் கல்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக