செவ்வாய், 1 ஜூன், 2010சேவை செய்திகள்.....

ஒரு நாள் இயற்கை நல வாழ்வு பயிற்சி முகாம்.

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் வசிக்கும் 
அன்பர்களுக்கு ஒரு இனிய வாய்ப்பு..

வருகின்ற ஆறாம் தேதி ஜூன் மாதம் (ஞாயிற்றுக்கிழமை) அன்று குரோம்பேட்டை ந்யூ காலனியில் ஒரு நாள் இயற்கை நல வாழ்வுப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

இந்தப் பயிற்சி முகாமில் இயற்கை நலவாழ்வு பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.

இயற்கை உணவு தயாரிக்கும் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். காலை மூலிகைச் சாறு, யோகப் பயிற்சி, மதிய இயற்கை உணவு, மற்றும் மாலை பழச்சாறு வழங்கப் படும்.

முகவரி: 
திரு.முத்துகிருஷ்ணன்,
மகாத்மா காந்தி இயற்கை உணவு மற்றும் யோகா நலவாழ்வு மையம்,
21,  சிவானந்தா லேன், 
எட்டாவது கிராஸ் தெரு,
ந்யூ காலனி, குரோம்பேட்டை, சென்னை - 600044
(குரோம்பேட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடக்கும் தூரம் அல்லது ஆட்டோவில் வர ரூபாய் முப்பது வரை செலவாகலாம்.)


தொடர்புக்கான தொலைபேசி:- 044-22386208
பயிற்சி காலம்: காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை.


கட்டணம்: நூற்று இருபத்தைந்து ரூபாய் மட்டும்.
யோகா பயிற்சி செய்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ற (இறுக்கமில்லாத பருத்தியினால் ஆன) உடைகளுடன் செல்வது நலம். 


இயற்கை உணவின் முழு பயன் பெறவேண்டும் எனில் காலையில் முகாமுக்கு வரும் முன்னர் சமைத்த உணவை தவிர்த்து விட்டு ஏதாவது ஒரு பழச் சாறு அல்லது இளநீர் அருந்தி விட்டு முகாமுக்கு வருதல் நலம். 


(குறிப்பு:வாழை இலைக் குளியல் தேவைப்படுபவர்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ளவும். வாழை இலைக்குளியல் வேண்டுவோர் தனி கட்டணம் ரூ.ஐம்பது செலுத்த வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்னதாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளவும்.)

அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

3 கருத்துகள்:

geethasmbsvm6 சொன்னது…

தொடர

geethasmbsvm6 சொன்னது…

வாழை இலைக்குளியல்னா என்னனு விளக்கிச் சொல்லி இருக்கலாமோ?

Ashwin Ji சொன்னது…

நமஸ்தே கீதாஜி.
அனந்யாவுக்கு இப்பத்தான் பஸ்ஸில வாழை இலைக் குளியல் பத்தி விவரம் சொல்லிருக்கேன். அங்கே படிச்சிடுங்க.
தனி பதிவு போடவேண்டிய சங்கதி அது. வருகைக்கு நன்றி.

கருத்துரையிடுக