வெள்ளி, 28 மே, 2010

பகுதி 15 - இயற்கை மருத்துவம் (தத்துவங்களும் செயல்முறைகளும்) மகரிஷி க.அருணாசலம்.
15
இயற்கை மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்யாமல் உடம்பிலுள்ள பிராணசக்தியை அதிகப்படுத்தி மலத்தை வெளியேற்றும் தந்திரங்களைக் கையாளுகின்றனர். உடம்பில் போதுமான பிராணசக்தி அதாவது உயிராற்றல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தானியங்கி இயந்திரம். அதற்கு ஒரு வாய்ப்புகொடுத்தால் தானே சூழ்நிலையுடனும் இயற்கையுடனும் சமநிலை எய்தும் ஆற்றல் பெறும். எண்ணங்களின் கோளாறுகளினாலோ, உணவென்று வேண்டாதவைகளை ருசி கருதி உட்கொள்வதினாலோ உண்டாகும் துன்பங்களை அறிவறிந்து மாற்றி அமைத்துக் கொண்டால் இப்போது நடைபெறுகின்ற வேண்டாத வேலைகள் பலவற்றை இல்லாமலே செய்து விடலாம்.

கோடானகோடி ரூபாய்கள் செலவிட்டு ஆராய்ச்சியாளர்களைத் தயார் செய்து மருந்தகங்களின் மூலம் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்து அவற்றிற்கு சந்தை தேட முயற்சிக்கும் வேலைகளின் பெரும்பகுதியைக் குறைத்து, அதனால் எஞ்சும் ஆற்றலையும், வேறு பல வசதிகளையும் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். இதனால் நவீன மருத்துவம் தவறானது என்ற அர்த்தமில்லை. அறிவியல் துறை வளர்ச்சியை உள்ளறிவுகொண்டு உகந்த அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

(இயற்கை இன்னும் வளரும்)

4 கருத்துகள்:

Ananya Mahadevan சொன்னது…

// எண்ணங்களின் கோளாறுகளினாலோ, உணவென்று வேண்டாதவைகளை ருசி கருதி உட்கொள்வதினாலோ உண்டாகும் துன்பங்களை அறிவறிந்து மாற்றி அமைத்துக் கொண்டால் இப்போது நடைபெறுகின்ற வேண்டாத வேலைகள் பலவற்றை இல்லாமலே செய்து விடலா// ரொம்ப சரி! ரொம்ப சின்ன பதிவா ஆயிடுத்தே.
அஷ்வின் ஜி, எண்ணெய்க்குளியலைப் பத்தி ஒரு போஸ்டு போடுங்க. அப்புறம் வயித்தை சுத்தப்படுத்தற முறைகளைப்பத்தியும். எத்தனை நாளுக்கு ஒரு வாட்டி பண்ணணும், வழிமுறைகள் என்ன? சுத்தப்படுத்தின பின்னர் என்னென்ன வழிமுறைகள்ன்னு தெளிவா சொன்னீங்கன்னா ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

Ashwin Ji சொன்னது…

நமஸ்தே அநன்யாஜி
நேரமின்மை காரணமாக வாரம் இரு இடுகை என்கிற நியதியை மீறாமல் இருக்க சின்ன பதிவாக போட வேண்டியதாயிற்று. நீங்கள் கேட்டவை பற்றி ஜூன் முதல் வாரத்துக்கு மேல் பதிவிடுகிறேன். வருகைக்கும், ஆர்வத்தும், அன்பான கருத்துரைக்கும் இதய நன்றி.
வாழி நலம் சூழ...

மதுரையம்பதி சொன்னது…

அஷ்வின் ஜி, பயனுள்ள குறிப்புக்கள், இயற்கையாகவே உடல் தன்னைத் தானே சமனம் செய்துகொள்ள இடமளித்தால் மருந்துகள் வேண்டியதில்லை என்பதை கண்கூடாகப் பார்க்கிறேன்.

Ashwin Ji சொன்னது…

வாங்க மௌலிஜி, தங்களின் கருத்துப் பகிர்வுக்கு என் இதய நன்றி.

கருத்துரையிடுக