ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கொழுப்பைக் குறைத்தால், இதய வலியைத் தவிர்க்கலாம்.

கொழுப்பைக் குறைத்தால், 
இதய வலியைத் தவிர்க்கலாம்.

சொல்கிறார் பிரபல இதய நோய் மருத்துவர் பிமல் சாஜர்.

(இணைப்பினைச் சொடுக்குக)


இதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.

இதய அடைப்பு நோய்க்கு, பைபாஸ், ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவற்றை மேற்கொள்வது சரியல்ல என்கிறார், பிரபல இதய நோய் மருத்துவர் பிமல் சாஜர்  அதற்கு என்ன காரணம் என்றும், இதய நோய் வராமல் தடுப்பது எப்படி என்றும் அவர் விளக்குகிறார். 

அது தொடர்பான கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும்:

*நம் உடலை, எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. இயற்கையின் அற்புதப் படைப்பு அது. கம்ப்யூட்டர், பிரிஜ், "டிவி' போன்றவற்றை, மனிதனால் உருவாக்க முடியும். ஆனால், செடி, பூ, காய், கனி ஆகியவற்றை, மனிதனால் உருவாக்க முடியாது; அவை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவை. கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டாலோ, அது உடைந்து விட்டாலோ, நம்மால் சரி செய்ய முடியும். 

ஆனால், ஒரு பழம், மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பின், அதை மீண்டும், மரத்தோடு சேர்த்து வைக்க முடியுமா? முடியாது. இயற்கையைத் தொந்தரவு செய்வது நல்லதல்ல; அது, கேட்டை விளைவிக்கும். அது போல், கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதை தொந்தரவு செய்வது நல்லதல்ல. இயற்கையாக உருவான உபாதை, இயற்கையாகவே சரியாக அனுமதிக்க வேண்டும்.

* உடலை ஊடுருவிப் பார்க்கும் சிகிச்சை முறையை விட, உபாதைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதை சரி செய்வதே சிறந்தது. ஒரு பிரச்னை உருவானால், அதை இடைமறித்துச் செல்வது தவறு. பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து, காரணத்தைச் சரி செய்ய வேண்டும். மனிதன் கண்டுபிடித்த, கருவிகள் செய்வதை விட, நம் உடல், தானாகவே, தன் பிரச்னைகளைச் சரி செய்து கொள்ளும். ஒரு மெர்சிடெஸ் பென்ஸ் காரின் பெயின்டை சுரண்டுங்கள்; உங்கள் உடலையும் கீறிக் கொள்ளுங்கள். 

பென்ஸ் கார் தானாக தன் கீறலை சரி செய்து கொள்ளாது; ஆனால், உடல் செய்து கொள்ளும். எனவே, இதயத்தில் அடைப்பு இருந்தால், அதை இயற்கை முறையில் நீக்க வேண்டுமே தவிர, உடலில் அறுத்து சிகிச்சை மேற்கொள்வது நல்லதல்ல.

* காரணம் அறிந்து கொண்டால் நோயை தவிர்க்கலாம். இதய நோய் இருப்பது கண்டறியப்பட்ட பின், அது குறித்து பயமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. இதற்காகச் செய்யப்படும் ஆஞ்சியோபிளாஸ்டியோ, பைபாஸ் சிகிச்சையோ, இந்த பயத்தை முதலீட்டாகக் கொண்டே செய்யப்படுபவை. இதய அடைப்பு என்றால் என்ன, இது ஏன் ஏற்படுகிறது, இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை, அறிந்து கொண்டால், நோயைத் தவிர்த்து விடலாம். 

இதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.


* இதய நோய் என்றால் என்ன?
இதய தசைக்கு, ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் கொழுப்பு படிந்து, ரத்தம் செல்வது தாமதமானாலோ, முற்றிலும் தடைபட்டாலோ, அடைபட்ட இடத்தைத் தாண்டி உள்ள தசைகள் இறந்து போகும் நிலைக்குத் தள்ளப்படும். அந்த சமயத்தில் தான், மார்பில் கடுமையான வலி, உடல் முழுதும் வியர்த்தல், மூச்சு உள்ளிழுக்க முடியாமல், திணறல் ஆகியவை ஏற்படும். நடக்கும்போதோ, ஓடும்போதோ இது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்தியாவில், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 80 சதவீதத்தினர், இத்தகைய பாதிப்புகளையே சந்திக்கின்றனர். மீதமுள்ளவர்கள் தான், இதய தமனியிலேயே குறைபாடு, ஓட்டை ஆகியவற்றால் பாதிப்படைகின்றனர்.

* நெஞ்சு வலி எவ்வாறு ஏற்படுகிறது?
இதய தசைகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில், 100 சதவீத அடைப்பு ஏற்படும்போது தான், இதய வலி ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், இது, எந்த முன் அறிகுறியையும் காட்டாமல், திடீரெனவே ஏற்படுகிறது. இதய தசைகளுக்கான குழாயில் கொழுப்பு படியும்போது, நாளடைவில், அதன் மீது மெல்லிய சவ்வு உருவாகும். இந்த இடத்தில் மேலும், மேலும் கொழுப்பு சேரும்போது, ஒரு நாள், சவ்வு கிழிந்து, ரசாயனம் வெளியேறும்.  இது இரண்டே நிமிடங்களில், அந்த இடத்தை, முழுவதுமாக அடைத்து விடும். அந்த நேரத்தில் தான், குழாயில் ரத்த ஓட்டம் முழுதும் தடைபடுகிறது. அப்போது, நெஞ்சு வலி ஏற்படுகிறது. ரத்தம் கிடைக்காத நிலையில், இதய தசை இறக்க நேரிடுகிறது. அடைப்பு ஏற்பட்ட பாதை, பெரிதாக இருந்தால், மனித உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. இந்தியாவில், 40 முதல் 50 லட்சம் மக்கள் வரை, ஆண்டுதோறும், இத்தகைய இதய நோயால் இறக்கின்றனர்.

* நெஞ்சு வலி ஏற்பட காரணம் என்ன?
ரத்தக் குழாயில் சேரும் கொழுப்பு மீது, மெல்லிய சவ்வு உருவாகிறது. இது, "இன்டிமா' என்ற மருத்துவப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த சவ்வின் தடிமனைப் பொறுத்தே, அது கிழியும் அல்லது வெடிக்கும் நாள் நிர்ணயிக்கப்படுகிறது. 

சிலருக்கு, 50 சதவீத அடைப்பு ஏற்பட்டாலே, சவ்வு கிழியும்; சிலருக்கு, 100 சதவீத அடைப்பு ஏற்பட்டு, சவ்வு புஷ்டியான நிலைக்குத் தள்ளப்படும்போது வெடிக்கிறது. அதனால் தான், உடலில் கொழுப்பு சேரக் கூடாது என்று கூறப்படுகிறது.

* நெஞ்சு வலி ஏற்படாமல் தவிர்க்க முடியுமா?
அடைப்பு மேலும் ஏற்படாமல் தவிர்த்தால், நெஞ்சு வலியையும் தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு என்ற இரு விதக் கொழுப்புகள் தான், ரத்த நாளங்களில் படிகின்றன. ஒருவருக்கு, ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில், 130 மிலி கிராம் அளவில் கொலஸ்ட்ராலும், 100 மிலி கிராம் டிரைகிளிசரைடும் இருக்கலாம். அதற்கு மேலான அளவில் இவை இருந்தால், கொழுப்பு படிமானம் அதிகரிக்கும்.

* நெஞ்சு வலி ஏற்படுகிறது என்பதை, நோயாளி எப்போது உணர முடியும்?
இதய தசைகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்கள், இதயத்திற்குத் தேவையான ரத்தத்தை விட, 70 முதல் 80 சதவீதம் அதிகமாகவே ரத்தத்தை எடுத்துக் கொள்கின்றன. ஆனால், இதயம் இயங்க, 30 சதவீத ரத்தமே போதும். அதிகப்படியான, 70 சதவீத ரத்த சப்ளையில் குறைபாடு ஏற்படும்போது தான், நோயாளி, தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதை உணர முடியும். 

ரத்த குழாய்கள் முழுதுமாய் அடைக்க, 30 முதல் 40 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், சிலருக்கு, 15 ஆண்டுகளிலேயே தெரிந்து விடுகிறது. 80 சதவீத அடைப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் வலி, "ஆஞ்ஜைனா' என்றழைக்கப்படுகிறது. நெஞ்சின் இடது புறத்தில் வலி அல்லது பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். ஓய்வு எடுத்தால், சரியாகி விடும். 

சிலருக்கு வலி இல்லாமல், மூச்சுத் திணறல், மூச்சு விட முடியாமை, நடு மார்பில் எரிச்சல் ஆகியவை உருவாகலாம். 100 சதவீத அடைப்பு ஏற்பட்டு, சவ்வு கிழிந்த நிலைக்குத் தள்ளப்படுவோர், கடுமையான வலியை உணருவர். அதிகமாய் வியர்த்து, உயிர் பிரியும் நிலை ஏற்பட்டு விடும்.

டாக்டர் பிமல் சாஜர், 
சாஓல் மருத்துவமனை, சென்னை.

For more details click:  www.saaolheartcenter.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக