கனி இருப்ப...
(பகுதி ஏழு தொடர்கிறது)
பதிவுலக அன்பர்களுக்கு வணக்கம். கடந்த மூன்றாம் தேதி மாலை மூன்றரை மணி முதல் எட்டாம் தேதி பகல் ஒன்றே கால் மணி வரை பெருகமணி (திருச்சி)யில் நடைபெற்ற இயற்கை நலவாழ்வியல் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றேன். அந்த அனுபவங்களை விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் எழுதி கொண்டிருக்கும் கனி இருப்ப.... தொடரிலேயே இந்த அனுபவப் பதிவுகள் தொடரும்.
பெருகமணி முகாம் பற்றிய ஒரு முன்னோட்டம்.
காலை நான்கரை மணிக்கு துவங்கி இரவு பத்தரை வரை (மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு தவிர்த்து )நீடித்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருந்தன. சுமார் 75 பேர்கள் முகாமில் கலந்து கொண்டனர். எண்பத்தைந்து வயது பெண்மணியில் இருந்து துவங்கி ஆறு வயது சிறுமிகள் உட்பட பலர் ஒரு குடும்பமாக சங்கமித்து இருந்தனர்.
காலை நான்கரை மணிக்கு துவங்கி இரவு பத்தரை வரை (மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு தவிர்த்து )நீடித்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருந்தன. சுமார் 75 பேர்கள் முகாமில் கலந்து கொண்டனர். எண்பத்தைந்து வயது பெண்மணியில் இருந்து துவங்கி ஆறு வயது சிறுமிகள் உட்பட பலர் ஒரு குடும்பமாக சங்கமித்து இருந்தனர்.
வாழி நலம் சூழ வலைப்பூவில் நான் தந்திருந்த செய்தியைப் பார்த்துவிட்டு பட்டுக்கோட்டை டி.மணிகண்டன் அவரது நண்பர்களுடன் வந்து கலந்து கொண்டு மகிழ்வோடு பயன் பெற்றார்.
சென்னையில் இருந்து சுமார் இருபது பேர் கலந்து கொண்டனர். அதில் பத்து பேர் யோகி தி.ஆ.கிருஷ்ணன் அவர்களின் திருமூலர் யோகா டிரஸ்டில் யோகா பயிலும் மாணவியர்கள். இவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பலகலைக் கழகத்தில் Diploma in Yoga, PG Diploma in Yoga, பயிலுபவர்கள். இவர்களோடு கூட M.Sc(Yoga) பயிலும் நான்கு மாணவர்கள் (என்னையும் சேர்த்து) கலந்து கொண்டனர்.
ஐந்து நாள் முகாமில் அனைவரும் சேர்ந்து சில ஆயிரம் புகைப்படங்கள், மற்றும் காணொளிகள் எடுத்தனர். எனது காமிரா மூலம் (காமிரா இரவல் தந்த நண்பர் ஜி.கே.சுவாமிக்கு நன்றி) நான் சுமார் 350 படங்களை எடுத்தேன்.
அவற்றில் இருந்து சில புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு.
அவற்றில் இருந்து சில புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு.
பெருகமணி முகாம் - புகைப்படத் தொகுப்பு.
சங்கமம் நுழை வாயிலில்..
குடில் (நான்கைந்து பேர்கள் தங்கலாம்)
அழகிய சோலை
மற்றும் ஒரு குடில்...
காணும் இடங்களில் எல்லாம் பசுமை.
வாழை மரங்கள்..
வாழை மரங்களின் பின்னணியில் கப்புசின் இல்லம்.
கோடை வெப்பம் தெரியாத அளவுக்கு நிழல் தரும் மரங்கள்.
மூங்கில் காடுகள்..
காய்கள் காய்த்து குலுங்கும் மாமரங்கள்
பசுமை. பசுமை. பசுமை.
கண்ணுக்கு விருந்து..
தென்னந் தோப்பு..
நுழையு முன்னர் உள்ள பாலம்.
குளிர்ந்த நீரோடை..
காவிரி ஆற்றில் இருந்து வரும் நீரோடை..
மூன்று வேளையும் இயற்கை உணவு..
நாக்கில் சுவை நீர் ஊற வைக்கும் உணவுகள்..
ஆஹா. தினம் தோறும எத்தனை வகைகள் ?
பரிமாறத் தயாராக..
மதிய உணவு வகைகள்.
உணவு தயாரிக்கும் குழுவினர்...
முகாமின் பதிவு பகுதி.
எங்கள் யோகா ஆசான் யோகி டாக்டர் தி.ஆ. கிருஷ்ணன் அவர்கள்.
இயற்கை நலவாழ்வியல் பற்றிய மிகவும் அரிய செய்திகளை ஒரே இடத்தில் நாங்கள் பெற்றிட உதவியாக மின் பொறியாளர் திரு.அ.மெய்யப்பன் (சென்னை) அவர்கள் முழு நிகழ்ச்சியையும் நெறிப்படுத்தினார். தமிழகத்தின் சிறந்த இயற்கை நலவாழ்வியல் அறிஞர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழே சந்திக்க நல்வாய்ப்பாக இந்த முகாம் அமைந்தது.
சங்கமம் இயற்கை நலவாழ்வியல் மையத்தின் டைரக்டர், அருட்தந்தை திரு.ஜேகப் அவர்களது ஆர்வமான ஒத்துழைப்பும் அவரது இல்லத்தின் அனைத்துப் பணியாளர்களும் மிக அன்புடன் செய்த சேவைகளும் நெஞ்சை நிறைக்கின்றன.
முகாம் நிகழ்ச்சிகளைப் பற்றிய அனைத்து செய்திகளையும் வரும் தொடர் பதிவுகளில் விவரமாக பார்க்கலாம்.
நன்றி.
(தொடரும்)
வாழி நலம் சூழ...
அஷ்வின்ஜி
@A.T.ஹரிஹரன், MSc-Yoga Final.
11 கருத்துகள்:
அண்ணே! ஊருக்கு போன வேகத்திலேயே இவ்வளவு வேகத்தில் ஒரு பதிவா???
எனக்கு முகாமை தெரியபடுத்திய உங்களுக்குதான் எனது முதல் நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்,
மதுமணி,
மதுக்கூர்
வணக்கம் மணி அவர்களே.
சில விஷயங்களை சூடு ஆறுவதற்கு முன்னரே பரிமாற வேண்டும். மேலும் இயற்கை உணவுகளை தயாரித்த உடனே பரிமாற வேண்டும் என்பதால் முதல் வேலையாக அலுவலகம் செல்லும் முன்பே எழுதி விட்டேன். நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் எவரும் காமிரா கொண்டு வந்தீர்களா? ஏதேனும் படங்கள் எடுத்திருந்தால் அவற்றை மின்னஞ்சலில் அனுப்பவும்.நானும் சில படங்களை உங்களுக்கு விரைவில் அனுப்புகிறேன். நன்றி.
நன்றி.
அன்பிற்கினிய அஸ்வின் ஜி,
இயற்கை உணவும், யோக முறைகளும் கொண்ட உங்கள் வாழ்முறை மிக அழகாக இருக்கிறது..
நாங்கள் மென்மேலும் தெரிந்து கொள்ள ஒரு வாசலாக இந்தத் தொடர் அமையும் என்று நம்புகிறோம்.,
மதிப்பிற்குரிய திருமால்ஜி.
உங்கள் பாராட்டுக்கும், ஆர்வத்துக்கும் என் இதய நன்றி. இயற்கை நலவாழ்வியலின் மூலம் உடல், உள்ளம், ஆன்மாவை தூய்மைப் படுத்த இயலும்.இயற்கையின் வழியாக இறைவைனை அடைவதே எளிமையானது. அதுதான் இறைவைனின் விருப்பமும் கூட. மேலும் அறிய தொடர்ந்து வாருங்கள்.
ஓம் நமசிவாய.
இயந்தரதன்மையான வாழ்கை. மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் புது புது நோயின் தாக்கத்தால் அவதி படும் காலத்தில் "உணவே மருந்து" என்னும் மேலான கருத்தை உள்ளிருத்தியது மட்டும் இல்லாமல் பூமிக்கும் பாதுகாப்பு அளிக்கும் இயற்கை விவசாயத்தின் அருமை பற்றி படங்களோடு தந்தது அருமை .. அடியவனுக்கும் இங்கே வர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு உள்ளது .. வாழ்க உங்க சேவை ..
என்றென்றும் அடியவன்
----------------------
கண்ணன்
அன்புத் தம்பி, கண்ணன்.
வாழ்த்துக்கு நன்றி. இளைஞர்கள் இயற்கை நலவாழ்வியல் கருத்துக்களை பின்பற்றவேண்டும் என்ற எண்ணத்தில் தான் உங்களது பின்னூட்டத்தை வலைப்பூவில் தரச் சொல்லி வேண்டினேன். உங்களது வாழ்க்கைத் தரத்தை, செயல்பாடுகளை, எண்ணங்களை மேம்படுத்தி வெற்றி காண இயற்கை நலவாழ்வியல் கருத்துக்களை பின்பற்றுங்கள், பிறருக்கும் சொல்லித் தாருங்கள்.
வாழி நலம் சூழ...
அஷ்வின்ஜி.
இயற்கை போற்றுதும்
இயற்கை போற்றுதும்.
வணக்கம் புதுகை அப்துல்லா அவர்களே.
தங்கள் மேலான வருகைக்கு மகிழ்ச்சி.
தங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு இதய நன்றி.
தொடர்ந்து வாருங்கள்.
வாழி நலம் சூழ...
அஷ்வின்ஜி.
KINDLY ADVISE ME THE DETAILS MORE - THE PLACE AND ALSO YOUR CONTACT DETAILS SOTHAT I CAN COME OVER THERE AND LEARN MORE AND BE A NATURAL MAN BY EATING NATURAL FOOD. AWTG THE DETAILS.
KALYANARAMAN
98406-81328
Dear Kalyan,
I have sent my phone number to your email id.
Sir,
I am Jayalakshmi, I am much interested about your natural food and would like to know more about it. Please send me the contact details.
Thanks
jayoob4u@gmail.com
9962565674
கருத்துரையிடுக